தமிழ் "நாவல் "களும்
தமிழ் "திரைப்படங்களும்".....!!!
"பரதேசி படம் வந்தாலும் வந்தது பாவம் இயக்குனர் பாலாவை திட்டிபோட்டியில் வாருகிறார்கள் ! அப்படியானால் தமிழில் நாவல்கள் படமாக்கப் பட்டதேயில்லையா!
என் நினைவிற்ற்கு பிரம் சந்தின் "சேவா சதனம்" கே.சுப்பிரமணியம் அவர்களால் படமாக்கப்பட்டது!
"லா மிசரபிள் " என்ற பிரஞ்சு நாவல் "ஏழை படும்பாடு" என்று படமாக்கப்பட்டது! சித்தூர் வீ நாகையா அற்புதமாக நடித்த படமாகும்! ஜாவர் என்ற போலிஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சீதாராமன் என்ற நடிகர் அவர் மரணமாகும் வரை "ஜாவர்"சீதாராமன் என்றே அழைக்கப்பட்டார் !
"கல்கி"யின் "கள்வனின் காதலி"சிவாஜி -பானுமதி நடிக்க வெளிவந்தது ! அவரின் "பொய்மான கரடு " டி .ஆர்.ராமச்சந்திரன்,அஞ்சலிதேவி நடிக்க "பொன்வயல் "என்று வந்தது !பார்த்திபன் கனவு " வந்தது ! அந்தமான் கைதிஎன்றபடம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வந்தது!
அந்தக்கலத்தில்வடுவூர் துரைசாமி ஐயங்கார் ,ஆரணிகுப்புசாமி முதலியார் ஆகியோர் ஆங்கில துப்பறியும் நாவல்களை தமிழில் தந்துள்ளார்கள் .
அவையும்படமாக்கப்பட்டன! இவையெல்லாம் பொதுவானவரவேற்பை பெற்றன !
இவற்றில் சக்கை போடு போட்ட படங்களும் உண்டு !
பட்சி ராஜா ஸ்டுடியோவின் தயாரிப்பான "மலைக்கள்ளன் " ஒரு வெற்றிப்படம்! மு.கருணாநிதி முதல்முதலாக தன்னுடைய அடுக்கு மொழியை விட்டு விட்டு யதார்த்தமான வசனங்களோடு வசனம் எழுதினார்! இந்த படம்தமிழ்,தெலுங்கு,கன்னடம் ,இந்தி ,சிங்களம் (தமிழ் தேசீயம் கவனிக்க) வந்து மிக அதிகமான மொழியிலேடுக்கப்பட்ட படம் என்று புகழ் பட்டது! எம்.ஜி.ஆர்,,பானுமதினடித்தபடம் அது!
விகடனில் வெளிவந்த தொடர் நாவல் தான் "தில்லானா மோகனாம்பாள் "!
படமாக எடுக்கப்பட்டு இன்றும் நிலைத்து நிற்கிறது ! துணப்பாத்திரங்களின் கம்பிராமான நடிப்பற்றலால் மிளிர்ந்த படமாகும்! நாகேஷின் வைத்தி,ஆச்சிமனோரமாவின் ஜில் ஜில் ரமாமணி ,பாலையா, சாரங்கபாணி ஆகியோரின் மேளம், தங்கவேலு டி ஆர் ராமசந்திரன் ,ஒத்து ஊதும் ஏ கருணாநிதி மறக்கமுடியாத சித்திரங்கள்! இன்றும் திரைக்கதைக்காக பாடமாக உள்ள படம்! நாவலைவிட மேன்மையாக இன்றும் பேசப்படும் படம் !
சில படங்கள் ஊத்திக் கொண்டதும் உண்டு!
ஞான ராஜசேகரன் எடுத்த "மோகமுள்" அப்படிப் பட்ட ஒன்று! கதை மாந்தரை குழப்பி விடடதுனால் வந்தவினை
கடந்த நூறு வருடங்களில் நவீன தமிழ் இலக்கியத்தி வந்த பத்து நாவல்கள் என்று பணக்கெடுத்தோமானால் அதில் ஒன்று கு.சின்னப்பா பாரதியின் "தாகம்" ஒன்றாகும் என்று டாக்டர் கைலாசபதி குறிப்பிடுவார்! திரைப்படமாக எடுக்க முயற்சிகள்னடந்தன ! இயக்குனர் ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் தொடங்கியது! ஒருகட்டத்தில் அது செல்வராஜின் படமாக மாறி "புதிய அடிமைகள்" என்று பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்படாமல் இருக்கிறது !
டி.செல்வராஜின் "தேநீர் " குற்றுயிரும் குலை உயிருமாக " ஊமை ஜனங்கள்"
என்று வெளி வந்து மூண்றாம் நாள் டப்பவிற்குள் பதுங்கியது!
நல்ல இலக்கியங்கள் படமாக்கப்பட வேண்டும்!
பாலா எந்த இடத்திலும் "redtea " படமாக்கப் போவதாக சொல்லவில்லை ! அதன் உந்துதலால் "பரதேசி " என்ற படத்தை தந்தார்!
இன்றுள்ள இயக்குனர்கள் காட்சிபடுத்தலில் மிகவும் யதார்த்தமாக இருக்கிறார்கள்! கருத்தியலில் கவனமில்லாமல்,அல்லது தங்களுக்கு பிடிக்காத கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுக்காமலிருக்கிறார்கள்!
கடையில்போய் பிள்ளையார் பொம்மையை வாங்கலாம்! அதில் வில்லும் அம்புமாக ராமர்,சீதை அனுமன் இல்லையே என்று அழுவது சிறுபிள்ளைத்தனம்!
பாலா படைத்ததை விமரிசிக்கலாம்!
எப்படி எடுத்திருக்க வேண்டும் என்று கூற வேண்டாம்!
முடியுமானால் நீங்கள் எடுங்களேன் !
உங்களால் முடியாது !!
பாலா முயற்சித்தாவது இருக்கிறார்!!!
அதனை திரைப்படமாக எடுக்க