Thursday, March 07, 2013

"துரோகமே "உன் பெயர் .......?


(தென் அமெரிக்கநாடுகளின் முகப்பையே மாற்றி அமைத்த மாமனிதர் சாவேஸின் மரணம் பற்றி முகனூலில் தமிழ் தேசிய குஞ்சுகள் எழுதிய பின்னுட்டங்கள் மனதை நோகடிப்பதாக  இருந்தது ! அவர்கள் திருந்தவும் போவதில்லை !  அப்பாவி இலங்கை தமிழர்களின் பெயரைச் சொல்லிவயிறு வளர்க்கும் தலைவர்களின் தொண்டரடிபொடிகள் அவர்கள் ! ஆனாலு ம்
நினைவிலிருப்பதை சொல்லித்தானே ஆகவேண்டும் ! இதோ .....)

தமிழ் ஐக்கிய விடுதலை இயக்கம் (tamil united liberation front )  என்ற அமைப்பு (1989)செயல்பட்டு வந்த காலம்! நீலம்திருச்செல்வன் ,அமிர்தலிங்கம், யோகேஸ்வரன்,சிவசிதம்பரம் என்று பலதலைவர்கள் தமிழர்களின் உரிமைக்காகபோறாடி வந்தார்கள். 
மலேசியா எப்படி சிங்கப்பூரை தனி நாடாகசம்மதித்ததோ அதேபோல் தமிழர் களுக்கும்தனிநாடு அளிக்க இலங்கை அரசுசம்மதிக்க வேண்டும் என்று கோரியவர்கள் அவர்கள்! பின்னர் அது சர்வதேச அங்கீகாரம் பெறாதுஎன்று  உணர்ந்து  அதன கைவிட்டவர்கள் இவர்கள்!

இவர்களின் தலைவர் நீலம் திருச்செல்வன் கொல்லப்பட்டார்! 

Tulf  ன் போதுச்செயலாளராக அமிர்தலிங்கம் வந்தார்! அதன் அரசியல்தலமை க்குழு உறுப்பினரில் ஒருவர் யோகேஸ்வரன் !

போராளிகளுக்கும்,tulf க்கும் இடையேயுள்ள கருத்து வித்தியாசத்தை களைந்து விட முயற்சிகள் நடந்தது! இதில்மிகவும் ஆர்வத்தோடு செயல்பட்டவர்  யோகேஸ்வரன்!  தமிழ் இளைஞர்கள் விசு,என்பவரும்,அலோசியஸ் என்பவரும் இதில்  யோகேஸ்வரனோடு ஒத்துழைத்தார்கள்!யோகேஸ்வரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்கள்! அவர்வீட்டுக்கு எப்போது வேண்டுமானலுமவர்கள்போகமுடியும் ! அப்போது tulf  தலவர்கள் கொழும்பு நகரத்திலிருந்தனர்!

யோகேஸ்வரன் அமிர்தலிங்கத்தோடு பேச விரும்பினார்! அப்போது அவரோடு விசு,அலோசியஸ் ஆகிய இருவரோடு விஞ்ஞான் என்பவரும் இணந்து கொண்டார்! மற்றொரு தலைவரான் சிவசிதம்பரமும் இருந்தார்! அவர்கள் உள்ளெ செல்லும் போது செக்யுரிட்டி சோதன இட வந்தார்! விசுவும்,அலோசியஸும் என் நண்பர்கள் அவர்களை சோதன இட வேண்டாம் என்று யோகேஸ்வரன் கூறி  தடுத்து விட்டார்!
விஞ்ஞான் வாசலிலேயே நின்றுவிட்டார்! மற்றவர்கள் விட்டினுள்ளே சென்று விட்டனர்!
வரவேற்பறையில் அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன்,சிவசிதம்பரம் விசு ,அலோசியஸ் ஆகியோருக்கு யோகேஸ்வரனின் மனைவி சரீஜினி அவர்கள் தேனீர் அளித்தார் ! அவர் வீட்டினுள்  சென்றதும் விசுவும் அளொசியஸும் துப்பாக்கியால் சுட்டனர் ! அமிர்தலிங்கம்,யிகேஸ்வரன்  ,அந்த  இடத்திலேயே இறந்தனர்! சிவா சிதம்பரம் காயங்களோடுதப்பினார்! 


விசு,அலோசியஸ்,விஞஞன் மூவரும்  போராளி குழுவைச்  சேர்ந்தவர்கள்! யோகேஸ்வரனின் நம்பிக்கையை பெற நடித்தவர்களென்று பின்னர் தெரியவந்தது! 
 

8 comments:

சிவகுமாரன் said...

\\முகனூலில் தமிழ் தேசிய குஞ்சுகள் எழுதிய பின்னுட்டங்கள் மனதை நோகடிப்பதாக இருந்தது///

என்ன எழுதினார்கள் ?

kashyapan said...

உரக்கப் பேசுவோரில் உத்தமர்கள் யாருமில்லை!
உன் படதைப் போட்டு ஓட்டு வாங்க எண்ணும்
சின்ன புத்தி கூட்டம் சிலிர்க்கிறது வேடமிட்டு!!!
சிவகுமாரா! நீ சொல்லலாம்! நான் என் பாணியில் சொல்லக்கூடாதா?
---காஸ்யபன்

”தளிர் சுரேஷ்” said...

பச்சை துரோகம்! பகிர்வுக்கு நன்றி! அமெரிக்காவுக்கு காவடி தூக்காமல் தனி மனிதராய் திறம்பட ஆட்சி செய்த பாவேஸ் ஆத்மா சாந்தியடையட்டும்!

ஓலை said...

1985 - மைதிலி சிவராமன் தலைமையில் TULF அமிர்தலிங்கம் (Secy), சிவசிதம்பரம்(ப்ரெசிடெண்ட்) ஆகியோர்களை அழைத்து சென்னையில் science forum LIC யில் ஒரு கருத்தரங்கம் நடத்தியது. பேப்பரில் செய்தி பார்த்து ஏர்போர்ட் லிருந்து நேராக retd justice VR கிருஷ்ண iyer வந்து கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார். பாதி கூட்டத்தில் அவரை கண்டு கொண்ட NRam அவரையும் மேடைக்கு அழைத்து பேசச் சொன்னார்.

TULF தலைவர்கள் பேசியது: தனி நாடு சரி வருமா? அரசுக்குள் மாநில சுயாட்சி கேட்பது சரியாக இருக்குமா? பிற இயக்கங்களுடன் எத்தகைய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்? ஆயுதப் போர் தேவையா? பாராளும் மன்றத்தில் ஒட்டு மொத்த தமிழர்களுந்து சேர்ந்து எத்தகைய ஒரு தீர்மானத்தை முன் வைப்பது, இன்னும் சில இந்த வகையில்.

சில வருடங்களில் இவர்களும் படுகொலை செய்யப் பட்டதை அறிந்த போது ....

சிவகுமாரன் said...

என்னவென்று தெரியாமல் தான் கேட்டேன் அய்யா.

kashyapan said...

சிவகுமரன் அவர்களே! நீங்கள் முகனூல் பார்ப்பதில்லை என்று கருதுகிறெண்! சாவோஸ் பற்றி சாக்காக கொண்டு இடது சாரிகளை அவதூறு செய்கிறார்கள்! இன்று வட இலங்கையில் இடது சாரிகள் மிகவும் மெலிதாக சிங்கள-தமிழர்கள் ஒற்றுமையைப் பிரச்சாரம் செய்து மக்களின் மனதிலிடம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்! இதற்கு சிங்கள பகுதியிலும் ஆதரவு பெருகி வருகிறது! சமாதான சகவாழ்வு என்ற கோஷம் வேர் பிடிக்க ஆரம்பிக்கிறது! ---காஸ்யபன்.

சிவகுமாரன் said...

சரியாப் போச்சு . ராஜப்பிச்சையை நம்ப சொல்கிறீர்களா ?

Vetirmagal said...

A lovely thought provoking blog. What I have not known or failed to know, I am understanding from here. Thanks sir.