Monday, February 24, 2014









பள்ளி பாட புத்தகம் - குஜராத் மாடல் !!!



1.அக்டோபர்  30 ம் தேதி காந்தி இறந்தார் !
2. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அமெரிக்காமீது அணுகுண்டை வீசியது !
3.தாதாபாய் நவ்ரோஜி,சுரேந்திரநாத் பானர்ஜி , கோபால கிருஷ்ண கோகலே ஆகியொர் "டெரரிஸ்ட்டு "கள் !
4.1947ம் ஆண்டு இந்தியாவை பிரித்து இந்துகுஷ் மலையடிவாரத்தில் இஸ்லாமாபாத் என்ற நாட்டை இஸ்லாமியர்களுக்காக  உருவாக்கினார்கள் !

எட்டாம் வகுப்பு ஆங்கில வழி கல்விபயிலும்மாணவர்களுக்கான புத்தகத்தில் எழுதப்பாட்டுள்ள சில சாம்பிள்கள் ! social  science english medium )

எல்லாம் அந்த குஜராத் மாநிலத்தில் தான் !

அந்த பள்ளிப்பாட புத்தக போர்டு தலைவரிடம் " ஏல ! அம்புட்டும்தப்பா  இருக்குடா ! புத்தகத்தை வாபஸ் வாங்கிங்கல ! " நு சொன்னா '"இவ்வளவு நளைக்கிபொறவு அது எப்படி முடியும் ! தவறுகள சுட்டிக்காட்டி "இண்டர்னெட்ல  போட்டுவிடுகிறோம் "நு சொல்லிவிட்டாரு ! அந்த கெட்டிக்காரன் பேரு  நிதின் பெதானி !

இப்பமாவதுகுஜராத்தோட   போச்சு அண்ணே !

சவத்துப்பய இந்திய பிரதமரானா நம்ம வூட்டு பிள்ளைகளும் இதத்தான படிக்கணும் !

நாகர்கோவில்ல  நமோ பேரவை ஆரம்பிச்சுருக்கான்களாமே! அவங்க  கிட்ட பிள்ளைகள  டிவிஷன் படிக்க அனுப்பலாம் ! 

ஆனா பயமாயிருக்கு !!

நமோ டிக்கடைல டீ அடிக்க விட்டுருவாங்களோனு !!!
























   




 

Thursday, February 20, 2014

பாவம் ..! அரவிந்த்  கேசரிவால் .......!


"I am not against capitalism ! I am against crony capitalism " என்று அரவிந்த் கெசரிவால் !
அறிவித்துள்ளார் ! 

ஐயா உங்களை முதலாளிகளுக்கு எதிரானவர் என்று எவரும் நினக்கவில்லை  !  உங்கள் உருவாக்கமே அவர்களுடையது தான் ! 

1740 ம் ஆண்டுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டதும் ஐரோப்பாவில் ,குறிப்பாக பிரிட்டனில் மூலதனத்திற்காக அவர்கள் செய்த காரியங்களும் வரலாறு ! 

சுரண்டலின் சுருக்கம் தோய்ந்த முகம் தான் மூலதனம் என்பது வரலாறு !

கிழ்திசை நாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக கப்பல் களில் செல்லும் சரக்கை கொள்ளையடித்து மூலதனம் சேர்த்த கதை தெரியும் !

அப்படி கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களை வரவேற்றதும்தெரியும் !

கொள்ளையர் தலைவன் வால்டர் ஸ்காட் "sir walter scot " ஆனதும் தெரியும் !

அது என்ன crony capitalism ? 

முதலாளித்துவம் வேண்டும் ! சலுகை சார் முதலாளித்துவம் வேண்டாம் !

இந்திய அரசு ஐந்துலட்சம்கொடி சொச்சம் ரூபாய் வரிச்சலுகை அளித்துள்ளது ! முதலாளிமார்களுக்கு !

இந்தவரிகளில் பெரும் தொகை மாநிலங்களுக்கு பங்கிட்டு அவர்களின் நலத்திட்டங்களுக்கு அளிக்கப்பட  வேண்டியவை !

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு போட்டார் சிதம்பரம் !

இந்ததொகையில் காலணாவை உங்களால் திரும்பிப் பெற முடியுமா அரவிந்த்ஜி !   

ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட அந்தக் கிழவரின் சேக்காளி நீங்கள் !

இப்போது தனிக்கடை ஆரம்பித்திருக்கிறிர்கள்  !

அமெரிக்க முலதனம் சட்ட விரோத காரியங்களுக்கு லஞ்சம் கொடுக்கும் ! 

இந்தியாவில் சட்ட பூர்வ  காரியங்களுக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் ! 

என்ரானிலிருந்து, வேதாந்தா வரை அப்படித்தான் நுழைந்தார்கள் ! 

இன்று அவர்கள் கைகள் ஓங்கி இருக்கிறது 1

எதற்காக கொடுக்கவேண்டும் ?

நீங்கள் voice கொடுக்கிறிர்கள் !

அதில்பிசிரடித்தால் .....!

டெல்லியில் நடந்தது நடக்கும் !

அரவிந்தஜி ! உங்களைப்  பார்த்தால் பாவமாக இருக்கிறது !!!
































  








Thursday, February 13, 2014

அந்த காமிரா கலைஞனின் நினைவாக ........

சென்னையில் காமராஜர் அரங்கில் ரேவதி கிருஷ்ணன் வாசி த்துக்  கொண்டிருக்கிறார் ! எம். எஸ்.வி ,இளையராஜா , ஆகியோரின் மெலடிகளை பொழிந்து கொண்டிருக்கிறார் ! கண்களை முடிக் கொண்டு கேட்டால் உயிரும் சதையுமாக  ஒருவர் பாடிக் கொண்துடிருப்பது போல் தோன்றும் !

ஜேசுதாசின் "செந்தாழம் பூவில் " என்ற படலை வாசித்தார் ! அந்த "ஹம்மிங் " வாசித்த பொது அசுர சாகித்யம் என்று கத்தினேன் !

என் அருகி ல் இருந்தவர் "நான் நினைத்தேன் ! நீங்கள் வெளிப்படுத்தி விட்டிர்கள் " என்றார்! ! திரும்பிப்பார்த்தென் ! பாலு மகேந்திரா !!!

"சார்!  "  என்று ஆச்சரியத்தோடு கூறினேன் ! தளர்ந்த உருவம் ! அருகில் இருந்தவர் ஒரு டம்ளரை நிட்டினார் ! அதனை வாங்கிக் கொண்டே " மருத்துவ மனையில் இருந்தன் !அசதி   அதிகம் ! ரிலாக்ஸ் ஆக  கச்சேரிக்கு வந்தேன் !"என்றார்
இடையிடையே  பேசிக்கொண்டோம் ! "கலையை தன் வசப்படுத்திக் கொள்ளும்  கலை ஞர்களை பிடிக்கும் ! ரேவதி அப்படிப்பட்டவர் " என்றார்
"அப்படியானால் குன்னக்குடி ?"

"மகா கலைஞனாச்சே "
"அவருடைய காவேரி  ஆல்பம்  கெட்டிருக்கிறிர்களா? "
வாஞசையோடு என்கைகளை  அழுத்தினார் ! தலையை ஆட்டினார் !
 ஆடு தாண்டும் காவிரியிலிருந்து ,அகண்ட காவிரி, கல்லணை, சங்கமிக்குமிடம் வரை தன்  வில் முலம்   காட்சிப் படுத்துவார் குன்னக்குடி !

---------------------------------------------------------------------------------------------

சூப்பர் தனிக்கைஎதிர்த்து தா.மு.,எ.ச. போராட்டம் நடத்தியது ! திரைப்பட காமிரா ஒன்றை ஆக்டோபஸ் தன பல கரங்களை  நீட்டி அமுக்குவது போன்ற  படம் போட்டு இருந்தோம் ! கலைவாணர்  சிலையிலிருந்து ஊர்வலம் !
கமலா ஹாசன் தப்படித்து ஆரம்பித்து வைத்தார் ! அந்தகூட்டத்தில் உணர்ச்சி மிக்க உரையாற்றினார் பாலு ! ' என்வாழ்க்கையில் நான் உயிராகக் கருதுவது திரைப்பட காமிராவை ! அதனை ஆக்டோபஸ் கவ்வ கொடுக்க மாட்டேன் " என்று உணர்ச்சி பொங்க பேசினார் !

------------------------------------------------------------------------------------------------------

முள்ளும் மலரும் படத்தில் ஒரு காட்சி !  ஷோபா துரத்தில் தெரிவார் ! மேலே வானவில் தோன்ற பார்வையாளர்கள் கைதட்டி வரவெற்பார்கள் ! பிரமித்து கைதட்டியவர்களில் நானும் ஒருவன் !.
பின் நாளில் அது slide shot என்று தெரிந்து கொண்டேன் !
"பாலுசார் ! நீங்கள் இப்படிச் செய்யலாமா ?" என்று கேட்டேன் !
"அந்த பாராட்டை நான் ஏற்றுக் கொள்ளவில்லையே !"
"இருந்தாலும் "
"உங்களுக்கு எப்படி தெரியும் ?
"திரைப்பட ரசனை வகுப்பின் முலம் "
"யார் யார் வந்தார்கள் "
"dr சியாமளா வனரசே ,கவுல்,pk நாயர் "
"அப்புறம் ?"
"சதீஷ் பகதூர் !"
"என்னைப் பற்றி சொன்னாரா ? "
"சொன்னார் "
"என்ன சொன்னார் ?"
"he is a creative genius என்றார் !"
"அவ்வளவுதானா ?"
"மேலும் சொன்னார் !"
"என்ன சொன்னார் ?"
"சொல்லமாட்டேன் "
"என்ன சொல்லியிருப்பார் என்று தெரியும் !"
"பின் ஏன் கேட்கிறிர்கள் ?"

-----------------------------------------------------------------------------------------------------

பாலு சார் தா,மு,எ,ச,வின் மாநிலக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக
பணியாற்றினார் ! பின்னளில் தொடர்பு விட்டுப்போனது !

அவரிடம் காரணம் கேட்டேன் ! " தா.மு.எ .ச திரைப்பட விருது அளிக்கிறது! அது (விருது)பற்றி எனக்கு அழைப்போ .தெரிவிப்பதோ கிடையாது ! எதற்கு embrasment  என்று ஒதுங்கிவிட்டேன் "என்றார் !
---------------​​---------------------------------------------------------------------------------------------பாலு மகேந்திரா காமிரா கவிஞர் ! எழுத்தாளர் ! இயக்குனர் ! இசைஞர் !

எல்லாவற்றுக்கும் மேலாக திரை உலகின் அறிவார்ந்த பெரியோரில் ஒருவர் !

Red salute ! comrade !!!
































பிடிக்கும் ?

Sunday, February 09, 2014

"நீயா நானா "

"சபாஷ் ! கொபி நாத்  அவர்களே! "


தனி நபர்களிடம் கடன் வாங்கி சீரழிந்தவர்களின் பாடுகளையும், தேவையற்ற ஆடம்பர செலவிற்காக கடன்கொடுக்கும் கந்து வட்டிக்காரர்களையும் வைத்து ஒரு talk show கடந்த ஞாயிறு விஜய் டி .வி யில் நடந்தது !

இதில் வங்கி அதிகாரிகளும் பங்கு பெற்றனர் !

தனிநபர்களுக்கு வங்கிகள்  கடன் கொடுப்பதில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது !

"தனி நபர்களை நெரடியாகச் சந்தித்து தனியார்கள் கடன் கொடுக்கிறார்கள் ! நாங்கள் வெறும் பேப்பரையும், அதில் ஒட்டியிருக்கும் புகைப்படத்தையும் மட்டுமெ பார்க்கிறோம் ! முழுக்க முழுக்க கடன் அளிக்கும் அதிகாரியின் விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டே அளிக்கப்படுகிறது ! அவருடைய பொறுப்பில் கடன் வசுலும் வந்து விடு கிறது ! அதனால் அதிகாரிகள் அதில் அதிகம் சிரத்தை காட்டுவதில்லை " என்று அதிகாரிகள்  தரப்பில் விளக்கம் கூறப்பட்டது !!

கோவையிலிருந்து வந்த ஒரு அதிகாரி பேசினார் ! 

"பொதுவாக சில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடன் அளிக்கப் 
படுவதில்லை என்பது உண்மையா ? என்று கோபிநாத் கேட்டார் !

"ஆம்"

"கோவையில் அப்படிப்பட்ட பகுதிகள் உண்டா ?"

"உண்டு"

"எந்தப்பகுதி?"

"உக்கடம்"  


"ஏன் ?"

(மௌனம் )

"சொல்லுங்கள் ஏன் ?"

"எல்லாருக்கும் தெரியும் ?"

கோபி கன்னம் புடைக்க,கண்கள் சிவக்க உரத்த குரலில்
"அவர்கள்  முஸ்லிம்கள் ! தினக்கூலியில் வாழ்பவர்கள்"
அரங்கம் திகைத்து நின்றது !

"இது தவறில்லையா ?"

"தவறுதான் "

"உங்கள் மேல் அதிகாரிகளிடம் இதை சொல்லியிருக்கிறிர்களா ?'

தன்னந்தனியாக நிகழ்ச்சியைப்ப் பார்த்துக் கொண்டிருந்த நான் கைதட்டி
கோபியை  பாராட்டினேன்!

விஜய் டிவியைப்பார்க்கும் தமிழ் தெரிந்த நூத்துச் சொச்சம் நாட்டிலும் பார்த்திருப்பார்கள் ! ஏன் ? அலைக்கற்றை விச்சிர்குள்  வரும் சந்திரன்,செவ்வாய் கிரகத்தில் வாழும் மனிதர்கள்  இருந்தால் அவர்களும்
  பார்த்திருப்பார்கள் !

என்ன கேவலம் !

நமது நிதி அமைச்சர் அந்த "சிவகங்கை சின்னப்பையன் " அடுத்த ஆண்டில் ஆயிரத்துக்கும் அதிக மான  வங்கி கிளைகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் !!

" புடுங்கவால ?"














Saturday, February 08, 2014


பாவம் நரெந்திர மோடி !!!


சரித்திரம் தெரியாது ! சரி ! நல்லயிருக்கட்டும் ! 

உப்பு சத்யக்ரகம் பத்தி ஓளரிக் கொட்டினாரு !


போகட்டும ! 


பூகோளம் தெரியாது !


மத்திய பிரதேசத்துல பொய் துறை முகம் கட்டுவேன்பாரு !


புராணமும் தெரியாது !


அசாமில போய் ருக்மணி பொறந்த ஊறு நு புகழ்ந்திருக்காறு !


நாக்பூரை செர்ந்த சின்ன பையன் ட்விட்டர்ல அண்ணன கிளிச்சு எறிஞ்சு புட்டன் !


பையன் பேரு ஆகாஷ் தவ்டே !


விதர்ப்பா தெசத்து இளவரசி தான் கிருஷ்ணனின் மனைவி ருக்மணி !


தற்பொது விதர்பா வின் தலைநகரம் நாகபுரி !


நாகபுரி இந்தியாவில தான் இருக்கு சார்வாள் ! நு கிண்டலடிச்சு இருக்கான் !

Like ·  · Share · 36 minutes ago · 


Friday, February 07, 2014

கடலை வித்தவனும் ,

தேநீர் வித்தவனும் .....!!!

"கடலை வித்தவன் ஜனாதிபதியானான் " என்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வந்தது ! அமெரிக்காவின் 39 வது  ஜனாதிபதியாக கார்டர் என்பவர் தெர்ந்தெடுக்கப்பட்டபொது  பத்திரிகைகள் இப்படித்தான் செய்திகளைப் போட்டன !

நம்ம  ஊர்ல சினிமா கோட்டைகை \ல கடலை விக்கிறவன் கூட  ஒருநாள்  நமக்கும் நல்லகாலம் பொறக்கும்னு சாமிகும்பிட போனான் ! 

உண்மைல கார்டர் மிகப்பெரிய நிலம் சொந்தமாக வைத்திருப்பவர் ! அவருடைய எஸ்டேட்ல நூற்றுக்கனக்கான ஏக்கர் நிலக்கடலை பயிர் செய்தார்கள். அவற்றை எண்ணை  பிழிய விற்பார்கள் ! அவருடைய எஸ்டேட்டில் அவருக்கு மட்டுமே பாத்தியமான நதியும், அதில் சிறிய அணையும் இருந்ததாகச் சொல்வார்கள் !

பத்திரிகைகள்  கடலை வித்தவன் என்று சொன்னது பாதி சரி  !  ஆனால் அவர மிகப்பெரிய நிலச்சுவான் தார் என்பதை சொல்ல வில்லை ! 

இப்போ புதிதாக தேநீர் வித்தவரை பற்றி பேசுகிறார்கள் !

நம்மூர்ல பாய்லர் முன்னால அழுக்கு துண்ட காட்டிக்கிட்டு "டீ " அடிக்கிறவர நினைச்சுக்கிட்டு ---அவர் வேற ---இந்த மனுஷன் வேற !

டீ அடிக்கிறவர் நாள்பூரா நின்னு அடிச்சா சாயங்காலம் 30 ரூ கூலி வாங்குவார் !

காலேஜ் போற பையன் சாயங்காலமா அண்ணன் டீ  கடைக்கு காலாற நடந்து ஒரு டீ குடிப்பான் ! அப்போ அண்ணன் "தம்பி ! கடைய பாத்துக்கோ ! ஒதுங்கிட்டு வரேன் பா !" நு சொன்னா அந்தநேரத்துல கல்லாவை பாத்துக்கிடர முதலாளிதான் இவரு !

அழுக்கு வேட்டி கட்டுன டீ அடிக்கிறவர் இல்ல இவரு !

இவருடைய ஜிப்பா ஸ்பெஷலா டிசைன் பண்ணினது ! குர்தா வும் ஸ்பெஷல் ! பக்கத்துல போய் நின்னா வெளிநாட்டு சென்ட் வாசம் ஜமாய்க்கும் !

"டீ " க்கடைங்கிரது  "டூப்பு" !!!