கடலை வித்தவனும் ,
தேநீர் வித்தவனும் .....!!!
"கடலை வித்தவன் ஜனாதிபதியானான் " என்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வந்தது ! அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியாக கார்டர் என்பவர் தெர்ந்தெடுக்கப்பட்டபொது பத்திரிகைகள் இப்படித்தான் செய்திகளைப் போட்டன !
நம்ம ஊர்ல சினிமா கோட்டைகை \ல கடலை விக்கிறவன் கூட ஒருநாள் நமக்கும் நல்லகாலம் பொறக்கும்னு சாமிகும்பிட போனான் !
உண்மைல கார்டர் மிகப்பெரிய நிலம் சொந்தமாக வைத்திருப்பவர் ! அவருடைய எஸ்டேட்ல நூற்றுக்கனக்கான ஏக்கர் நிலக்கடலை பயிர் செய்தார்கள். அவற்றை எண்ணை பிழிய விற்பார்கள் ! அவருடைய எஸ்டேட்டில் அவருக்கு மட்டுமே பாத்தியமான நதியும், அதில் சிறிய அணையும் இருந்ததாகச் சொல்வார்கள் !
பத்திரிகைகள் கடலை வித்தவன் என்று சொன்னது பாதி சரி ! ஆனால் அவர மிகப்பெரிய நிலச்சுவான் தார் என்பதை சொல்ல வில்லை !
இப்போ புதிதாக தேநீர் வித்தவரை பற்றி பேசுகிறார்கள் !
நம்மூர்ல பாய்லர் முன்னால அழுக்கு துண்ட காட்டிக்கிட்டு "டீ " அடிக்கிறவர நினைச்சுக்கிட்டு ---அவர் வேற ---இந்த மனுஷன் வேற !
டீ அடிக்கிறவர் நாள்பூரா நின்னு அடிச்சா சாயங்காலம் 30 ரூ கூலி வாங்குவார் !
காலேஜ் போற பையன் சாயங்காலமா அண்ணன் டீ கடைக்கு காலாற நடந்து ஒரு டீ குடிப்பான் ! அப்போ அண்ணன் "தம்பி ! கடைய பாத்துக்கோ ! ஒதுங்கிட்டு வரேன் பா !" நு சொன்னா அந்தநேரத்துல கல்லாவை பாத்துக்கிடர முதலாளிதான் இவரு !
அழுக்கு வேட்டி கட்டுன டீ அடிக்கிறவர் இல்ல இவரு !
இவருடைய ஜிப்பா ஸ்பெஷலா டிசைன் பண்ணினது ! குர்தா வும் ஸ்பெஷல் ! பக்கத்துல போய் நின்னா வெளிநாட்டு சென்ட் வாசம் ஜமாய்க்கும் !
"டீ " க்கடைங்கிரது "டூப்பு" !!!
1 comments:
அரசியல் எப்படியெல்லாம் பேச வைக்கிறது ஐயா
Post a Comment