Saturday, February 07, 2015

வெள்ளை துரையும், 

ஜி.வி. அய்யரும் ......!!!



1983 அல்லது 84 ஆக இருக்கலாம் ! கோவில்பட்டியில் த.மு.எ.ச சார்பில் திரைப்படம் பற்றி பேச அழைத்திருந்தார்கள் !

கூட்டத்தில் பெரியவர் கி.ரா அமர்ந்திருந்தார் ! கைகால் உதரலெடுத்து விட்டது !

கூட்டத்திற்கு தலைமை வகித்தது வெள்ளை துரை !  ஒடிசலான உருவம் ! மிகவும் சிறு வயது ! ஜி.வி.அய்யரின் "ஆதி சங்கரா " திரைப்பட ம் எடுக்கும் பொது அவருக்கு உதவியாளராக இருந்தவர் என்று கூறி னார்கள் !இவர்கள் முன்னால் நான் சினிமா பற்றி பேச வேண்டும் ! நினைப்பே பயமுறுத்தியது !

"ஆதி சங்கரா " சம்ஸ்கிருத மொழியில் எடுக்கப்பட்ட படம் ! பல விருதுகளை பெற்றபடம் ! இந்தியாவின் திரை உலக ஆளுமைகள் பலர் பங்கு பெற்ற படம் ! சர்வதாமன் பானர்ஜி சங்கராசாரியாக வாழ்ந்திருந்த படம் 1 மது அம்பட் காமிரா ! மது எப்பொதுமே படம் எடுக்க மாட்டார் ! ராஜா ரவிவர்மாவின் வண்ண ஓவியங்களைப் பார்த்திருபீர்கள் இல்லையா! அது போல ஒவ்வொரு "ப்ஃரெமையும் " வரைந்திருப்பார் !குறிப்பாக உஜ்ஜைனி. இமய மலைச்சாரல் ,சுடுகாட்டு காட்சிகள் இன்றும் மனதில் ஆடுகின்றான் !

இந்த படத்திற்கு இசை அமைத்தவர் dr . பாலமுரளி கிருஷ்ணா ! பின்னணி இசை b .v. கராந்த் ! கலை  இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ! (நாடக பயிற்சி பள்ளியில் குறும் பயிற்சி  பெற்றபோது என்னோடு பயிற்சிபெற்றவர் !) சமஸ்கிருதத்தில் வசனம்  கோவிந்தாசார்யா ! இதன் சம்ஸ்கிருத வடிவத்தை மேற்பார்வை இட்டவர்  தமிழ் நாட்டைச் சேர்ந்த t .m .p . மகாதேவன் ! 

மிகச்சிறந்த திரைக்கதை ,மிகச்சிறந்த படப்பிடிப்பு , என்று பல விருதுகளை பெற்ற படம் !

தேசீய திரைப்பட வளர்ச்சிக் கழக்த்தின் நிதி உதவியோடு படம் தயாரானது ! மிகக்குறைந்த வசதிகள் ! கடும் குளிரில் இமயமலைச் சாரலில் படப்பிடிப்பு ! காலில் "பூட்ஸ் " போடக்கூட வழியில்லாதநிலை ! 

வெள்ளைத்துரை  இந்தபடப்பிடிப்பில் தான் ஜி.வி ஐயரோடு பணியாற்றியுள்ளார் !

அவரைப் பார்த்து பிரமிப்பும்,மரியாதை கலந்த பயமும் இருந்தது !

இரவு கூட்டம் முடிந்து கோவில்பட்டி பேரு ந்து நிலையத்தில் தமிழ்செல்வன் பஸ் ஏற்றி விடும்வர பயம் நீங்கவில்லை !

வெள்ளைத்துரை பத்திரிகை  துறைக்கு சென்று விட்டாராம் !

திரைத்துறைக்கு நட்டம் தான் !!!


 




1 comments:

'பரிவை' சே.குமார் said...

தாங்கள் படம் குறித்து அருமையாகப் பேசியிருப்பீர்கள்தானே...