Wednesday, February 22, 2017





மதுரை "கும்பாபிஷேகத்திற்கு "


குடியரசு  தலைவர் வரவில்லை ....!!!




மதுரை மேனாடசி அம்மன் கோவிலில்  " கும்பாபிக்ஷேகம் " நடந்தது. அதற்கான ஏற்பாடுகள் PT ராஜன் அவர்கள் தலைமையில்நடந்தது.
அப்போது குடியரசு தலைவராக இருந்தவர் Dr சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் . உலகப்புகழ்  பெற்ற தத்துவ பேராசிரியர்.சீக்கிய மத தத்துவத்திலிருந்து தர்க்கவியல் பொருள்முதல் வாதம் வரை விவாதிக்கும் திறமை உடையவர். சோவியத் ஒன்றியத்தில் இந்திய தூதராக இருந்த பொது ஸ்டாலினை  சந்தித்து விவாதித்த ஒரே  தூதுவர். இருவரும் தர்க்கவியல் பற்றி அடிக்கடி விவாதிப்பார்களாம்..
பி.டி .ராஜன் குடியரசுத்தலைவரை சந்தித்து,மதுரை குமபாபிஷேகத்திற்கு வரும்படி அழைத்திருக்கிறார். அவரும் தேதி கொடுத்திருக்கிறார்.
மதுரை நகரமே விழாக்க்கோலம் பூண்டு இருந்தது சர்வபள்ளி யின் வருகை கூடுதல் முக்கியத்துவத்தை அளித்தது.
இந்த சமயத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில்" அவர்  இந்துக்களுக்கு மட்டும் அல்ல .கிறிஸ்தவ ,இசுலாமிய ,பௌத்த இந்துக்களுக்கும் குடியரசுத்தலைவர். மதசார்பின்மையை அரசுகொளகையாகக் கொண்டவர் . அவர் எப்படி இந்து கோவில் விஷேகத்திற்கு அதிகாரப்பூர்வமாக வரலாம் "என்று வாசகர் கடிதம் பிரசுரமாகி இருந்தது .
முந்திய குடியரசு தலைவர்ராஜேந்திர பிரசாத்  சோமநாதர் ஆலய விழா வில் கலந்து கொண்டார்.அதுபெரிய சர்சசையை கிளப்பி இருந்தது.

பத்திரிகையில் வந்திருந்த கடிதம் சர்வபள்ளி அவர்களின் கவனத்திற்கு சென்றது.

உலகமே அவர் என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க காத்திருந்தது


Dr .Sarvapalli Rathakrishnan President Of India cancels his official visit to Madurai  என்று மறுநாள் காலை பத்திரிகைகளில் செய்தி வந்தது.




Monday, February 20, 2017







தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியும் ,

ராவ்,ரெட்டி ,ஆகியோரின்  பங்கும் ....!!!



இந்திய சுதந்திர போராட்டத்தில் தெலுங்கானா விவசாயிகள் எழுச்சி காவியத்தன்மை வாய்ந்தது . அப்போது தெலுங்கானா நிஜாம் அரசரின் ஆடசியில் தனி சமஸ்தானமாகஇருந்தது . இந்தியாவோடு சேராமல் தனி சுதந்திர நாடாக இருக்கவே நிஜாம் விரும்பினார் .பிரிட்டிஷ்,அமெரிக்க ஏகாதிபத்தியங்களும்  மறைமுகமாக இதை விரும்பின.

அமெரிக்காவின் கையாளா ன சவூதி அரேபியா நேரடியாகவே நிஜாமை ஆதரித்தது .தெலுங்கானாவில் நடைபெறும் சுதந்திரப்போராட்டத்தை நசுக்க காசிம்  ரஜ்வி தலைமையில் ஒரு கூலிப்படையை அனுப்பி உதவியது.

நிஜாமின் ஆடசி ஜமீன்தாரி முறையில் நடந்து வந்த காலம் அது.கமீன்தார்களுக்கும்,ஜாகிர்தார்களுக்கும், நிலம்  மட்டுமல்ல ,அதில்வாழு ம்மக்களும் சொந்தம் .அந்த விவசாயிகளை அவர்கள் சித்திரவதை செய்து வரிவசூலித்து வந்தனர்.

இதனை எதிர்த்து விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்கட்ச்சியின் தலைமையிலபோராடினார். நிஜாமின் கூலிப்படையை எதிர்க்க அவர்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்க வேண்டியதாயிற்று.

பிரிட்டிஷ் இந்தியாவின் நடுவில் மாட்டிக் கொண்ட விவசாய போராளிகளுக்கு யுத்த தளவாடங்களும், உணவு,உடை ஆகிய உதவிகளும் அப்போதைய மதராஸ் மாகாணத்திலிருந்து செல்ல வேண்டியதாயிற்று.

தெலுங்கானா விவசாயிகளுக்கு அப்போது தலைமை தாங்கியவர்கள் இரண்டு பேர். ஒருவர் பின்னாளில் மார்க்சிஸ்டாகடசியின் பொதுசெயலாளராக  வந்த பி.சுந்தரய்யா.மற்றோருவர்  அவருடைய சீட ரும் பின்னாளில்  இந்திய கம்யூனிஸ்ட் கடசியின் செயலராக வந்தவருமான ch ,ராஜேஸ்வர ராவ்.

தெற்கே சித்தூரில் இருந்து,நெல்லூர்,குண்டூர்,தெனாலி,விஜயவாடா என்று பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைகள் வழியாக போராளிகளுக்கு உதவிகள் சென்று வந்தன> இந்தப்பகுதியில் உள்ள பள்ளிமாணவர்களிலிருந்து, வாலிபர்கள் மாதர்கள், என்று அத்துணை பெரும் இந்த வேள்வியில் ஈடுபட்டனர். அதில் நெல்லுரை சேர்ந்த  ஒருமாணவன் தான் ரெட்டி .

விவசாயிகள் ஜமீன்தார்களை ஹைதிராபாத் நோக்கி விரட்டி அடித்தனர்ஜமின் நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்தனர் . மூன்று ஆண்டுகள் தெலுங்கானாவில் பெரும்பகுதி விடுதலைப்பெற்று கம்யூனிஸ்ட்கதிசயின் தலைமையின் நிர்வாகம் நடந்தது.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம்பெற்ற பொது இந்த விவசாயிகள்  மகிழ் ச்சிக்கு  அளவே இல்லை. சுதந்திர இந்தோயாவோடு சேர்ந்து விட துடித்தனர் .. 

ஆனால் நேருவும், ராஜாகோபாலாசசாரியும் செய்த துரோகத்தின் காரணமாக கர்னல் சௌத்திரியின் தலைமையில் வந்த இந்திய ராணுவம் விவசாயிகளை எதிர்த்து அவர்கள் நிலங்களை பிடுங்கி மீண்டும் ஜமீன்களிடம் ஒப்படைத்தது. தெ லுங்கானாவிலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் இருந்த கம்யூனிஸ்டுகள் நர வேட்டை யாடப்பட்டு விவசாயிகளின் எழுச்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

நெல்லூரில் தங்கமுடியாத சிறுவன் ரெட்டி சென்னை வந்தான்> அங்கு தன படிப்பை தொடர்ந்தான். மருத்துவ கல்லூரியில் இடம்கிடைத்தது. இந்தியாவிண்புகழ் பெற்ற டாக்ட்டரானான். மருத்துவத்துறையில்முதன் முதலாக கார்ப்பரேட் முறையை கொண்டுவந்து பிரும்மாண்டமான மருத்துவ சாம்ராஜ்யத்தை உருவாக்கினான்.

அதன் பெயர் தான் "அப்பல்லோ ஆச்பிடல்ஸ் ".

அந்த நெல்லூர் சிறுவன்தான் பிரதாப் c ரெட்டி .

மாற்றோரு தலைவரான ch ராஜேஸ்வர ராவுக்கு நான்கு தம்பிகள். அவருடைய கடைசி தம்பி ஹைதிராபாத்தில்படித்து சட்டவல்லுநரானான. அவனும் அரசியலுக்கு வந்தான் . ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கில்  சேர்ந்தான் .பாஜகவின் முன்னணித்தலைவர்களில் ஓருவராக ஆகி, இன்று தமிழகத்தின்  கவர்னராக இருக்கும்  வித்யாசாகர் ராவ்.தான் அவர்.

வரலாறு புரட்டிப்போடும் . 

அது உண்மையும்கூட !!!      












Sunday, February 19, 2017





"தஞ்சைக்கு  

வாருங்கள் "





தமிகத்தில் "நாடகவியலில் " விற்பன்னரான      தோழர் பிரளயன்  நம்மை எல்லாம் தஞ்சை நாடகவிழாவிற்கு  வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்.

எவ்வளவுதான் விரும்பினாலும் முதுமையும்,இயலாமையும், என்னை பங்கு பெறவிடாமல் தடுக்கவே செய்கிறது.

தமுஎக சங்கத்தின் நாடகப்பணி பற்றி  விளக்கிய பிரளயன் அதன் ஆரம்பப்புள்ளி  கோவையில் நடந்த இரண்டாவது மாநிலமாநாடாக குறிப்பிடுகிறார்.

நாடு சுதந்திரம்பெற்ற பிறகுஇடது சாரிகள் நாடகப்பணி அதற்குமுன்பே துவங்கிவிட்டது.திருச்சி பொன்மலையில்  ரயில்வே தோழி \லாளர்கள் மாநாடு  நடந்தது. அந்த மாநாட்டில் நாடகம் போட்டார்கள். சாகித்ய அகத்தமிவிருது பெற்ற எழுத்தாளர்  டி.செல்வராஜ் எழு திய  "பாட்டு முடியுமுன்னே " என்ற நாடகம் நடத்தப்பட்டது.தற்போது மாநிலங்கள் அவை உறுப்பினராக இருக்கும் கனிமொழி அம்மையாரின் தாயார் தர்மாம்பாள்    இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார்கதாநாயகனாக அன்றைய பிரபல சினிமா நட்சத்திரம் என்.என். கண்ணப்பா நடித்தார். 

இடது சாரி கலைக்குழுக்கள் அப்போதும்  செயல்பட்டுக்கொண்டிருந்தன.

பொள்ளாச்சியில்  கவிஞர்  வேலுசாமி 'செம்மலர்" கலைக்குழுவை நடத்திவந்தார். பௌனார் ஆசிரமத்து சாமியார் வினோபா வின் பூமிதான் இயக்கத்தை விமரிசித்து " தானம் " என்ற புகழ்  பெற்ற  நாடகத்தை நடத்தினார்.

1971ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கடசியின் அகிலஇந்திய மாநாடு மதுரையில் நடந்தது. அதில் கண்டிப்பாக நாடகம் போட வேண்டும் என்று கே.முத்தையா அவர்கள் சொன்னார்கள்.அப்போது உருவானதுதான் "பீப்பிள்ஸ் தியட்டர் " என்ற குழு .

எழுத்தாளர் ப.ரத்தினம் அவர்கள் எழுதிய "நெஞ்சில் ஒரு கனல் " என்ற   நாடகத்தை "காஸ்யபன் " இயக்கினார். அப்போது வங்கதேச விடுதலை போர் நடந்ததால் மாநாடு 1972ம் ஆண்டு ஏப்ரலில் நடந்தது. பீப்பிள்ஸ் தியேட்டர்ஸ் நாடகத்தை நடத்தினார்கள். இதில் காலம்சென்ற மதுரை  மருத்துவர்.ராஜாமணி ஐயா நடித்தார்கள். மற்றோரு முக்கியமான நடிகர் , நமது அன்புத் தோழர் நன்மாறன் அவர்கள். 

இடது சாரி இயக்க கலைஞர்கள்   பற்றி ய குறிப்புகளை தேடி ஆவண ப்படுத்தவேண்டிய தருணம் இது.. தஞ்சை விழா இதனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் .

தஞ்சை விழா வெற்றிபெற வாழ்த்துக்கள் !!!





Wednesday, February 15, 2017







"சசிகலா 

டர்வல் தோஷி "

நேற்று (14-2-17 ) காலை பத்துமணிக்கு தொலைக்காட்ச்சி பேட்டி முன் அமர்ந்து விட்டேன். சன் ,கலைஞர் , என்று யாருக்கும் ஜெயலலிதா என்ற அம்மையார் வாழ்ந்ததும் ,இறந்ததும் பற்றி தெரியாதவர்களாக மாறிப்போய் இருந்தார்கள். தமிழ் அலைவரிசைகள் இந்தியிலிருந்து "டப் " செய்யப்பட உளுத்துப்போன தொடர்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.

இங்கு கேபிள் டிவி யில் இந்தி.மராட்டி,குஜராத்தி ,தெலுங்கு ,அலைவரிசைகள் கிடைக்கும் .மாற்றி மாற்றி சுற்றியும் எதுவும் தகவல் கிடைக்கும் வழி தெரியவில்லை. செய்திகளை பெறமுடியாது என்று ஆகிவிட்டது.

மீண்டும் தமிழ் அலைகளில் தேடினேன்.ஜெயலலிதாவையேமறந்த தமிழ ர்கள் சசியை நினைவில் கொள்வார்களா ? (!)

வேறு வழியில்லாமல் மீண்டும் மாற்று மொழிக்கு தாவினேன். மராட்டி அலையில் " சசிகலா டர்வில் தோஷி " என்று scroll ஓடிக்கொண்டிருந்தது.

அர்த்தம் புரியவில்லை.முத்து மினாடசி கடைக்கு சென்றிருந்தார்.பக்கத்து வீட்டுமனிதரிடம் ஓடினேன்  . 'சசிகலா குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது " என்று கூறினார்.அது மட்டுமல்ல ."கியா ரே துமாரே கஜகம் " என்று ஏளனமாக சொல்லிக் கொண்டே பார்த்தார்.

"மதராசிகள் " செயல் திறனும் ,செய்நேர்த்தியும் கொண்டவர்கள் " என்று வடநாட்டில் நினைப்பவர்கள் அதிகம். என்ன செய்ய ?

இதே மனிதரிடம் பதினைந்துநாட்களுக்குமுன் "காலரை "தூக்கி விட்டுக்கொண்டு ஜம்பமாகப்பேசினேன்.

அது மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம்.இந்தியா முழு மையும், என் உலகமே கண்டு வியந்த போராட்டம்.அந்த "சின்னஞ்சிறுசுகள் "   நடந்து கொண்ட விதம்,மேய் சிலிர்க்க வைத்தது . ஆயிரம் ஆயிரமாய்,லட்சம் லட்சமாய் ஆண்களும்,பெண்களும்,குழந்தை குட்டிகளோடு  வந்து "ஆஜர்" கொடுத்த பொது  நெஞ்சம்  விம்ம உற்சாகம்   கொப்புளிக்க   நின்றேன்.

இன்று 

இது  முடிவல்ல !

ஆரம்பமே !!

புதிதாக ஆரம்பிப்போம் !!!



Tuesday, February 14, 2017





எனக்கு அந்த கிருத்துவரை ,

நிரம்ப பிடிக்கும் .....!!!



அவர் தீவிரமான கிருத்துவர் .காலையில் ஜபம் செய்யாமல் இருந்ததில்லை. பைபிளின் பலப்பகுதிகளை  அப்படியே சொல்லும் ஆற்றல்  படைத்தவர்.

ஒவ்வொரு ஞாயிறு ம் கோவிலுக்கு சென்று ஜபம் .  ஞாயிறு என்றில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்வார்.

அவரை பார்க்கத்தான் தமிழ் நாட்டை  சேர்ந்த அந்த  அழுகிப்போன பாதிரியார்   காத்திருந்தார். ஞாயிறு வழிபாடு முடிந்ததும் கிருத்துவர் ஜபம் செய்ய ஆரம்பித்தார்.

தமிழ் நாட்டு பாதிரியார் காத்திருந்தார்.ஜபம் முடிந்ததும் அந்த கிருத்துவரோடு பேசவிரும்பியதாக கூறினார்.

ஜபம் முடிந்ததும் அவர் கிளம்பினார். உள்ளூர் நண்பர் தமிழ் நாட்டு பாதிரியார் உங்களை பார்த்து பேச விரும்புகிறார் என்று அவரை தனி அறைக்கு அழைத்தார்.

"நான் அவரை பார்க்க விரும்பவில்லை."

"ஏன் ?"

"என் இடதுகையில் இருக்கும் பைபிளையும், வலது கையிலிருக்கும் ஜெபமாலையையு,ம் அவர் முகத்தில் எரிந்து விட்டு நான் கிருத்துவன் இல்லை என்றுகத்திவிடுவேன்அவரைவிரைவில்வெளியேற்றிவிடுங்கள் " என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

அந்த கிருத்துவர் பெயர் தான் ஜாண் மைக்கேல்குன்ஹா !!

எனக்கு அவரை நிரம்ப பிடிக்கும் !!!