Wednesday, February 22, 2017





மதுரை "கும்பாபிஷேகத்திற்கு "


குடியரசு  தலைவர் வரவில்லை ....!!!




மதுரை மேனாடசி அம்மன் கோவிலில்  " கும்பாபிக்ஷேகம் " நடந்தது. அதற்கான ஏற்பாடுகள் PT ராஜன் அவர்கள் தலைமையில்நடந்தது.
அப்போது குடியரசு தலைவராக இருந்தவர் Dr சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் . உலகப்புகழ்  பெற்ற தத்துவ பேராசிரியர்.சீக்கிய மத தத்துவத்திலிருந்து தர்க்கவியல் பொருள்முதல் வாதம் வரை விவாதிக்கும் திறமை உடையவர். சோவியத் ஒன்றியத்தில் இந்திய தூதராக இருந்த பொது ஸ்டாலினை  சந்தித்து விவாதித்த ஒரே  தூதுவர். இருவரும் தர்க்கவியல் பற்றி அடிக்கடி விவாதிப்பார்களாம்..
பி.டி .ராஜன் குடியரசுத்தலைவரை சந்தித்து,மதுரை குமபாபிஷேகத்திற்கு வரும்படி அழைத்திருக்கிறார். அவரும் தேதி கொடுத்திருக்கிறார்.
மதுரை நகரமே விழாக்க்கோலம் பூண்டு இருந்தது சர்வபள்ளி யின் வருகை கூடுதல் முக்கியத்துவத்தை அளித்தது.
இந்த சமயத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில்" அவர்  இந்துக்களுக்கு மட்டும் அல்ல .கிறிஸ்தவ ,இசுலாமிய ,பௌத்த இந்துக்களுக்கும் குடியரசுத்தலைவர். மதசார்பின்மையை அரசுகொளகையாகக் கொண்டவர் . அவர் எப்படி இந்து கோவில் விஷேகத்திற்கு அதிகாரப்பூர்வமாக வரலாம் "என்று வாசகர் கடிதம் பிரசுரமாகி இருந்தது .
முந்திய குடியரசு தலைவர்ராஜேந்திர பிரசாத்  சோமநாதர் ஆலய விழா வில் கலந்து கொண்டார்.அதுபெரிய சர்சசையை கிளப்பி இருந்தது.

பத்திரிகையில் வந்திருந்த கடிதம் சர்வபள்ளி அவர்களின் கவனத்திற்கு சென்றது.

உலகமே அவர் என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க காத்திருந்தது


Dr .Sarvapalli Rathakrishnan President Of India cancels his official visit to Madurai  என்று மறுநாள் காலை பத்திரிகைகளில் செய்தி வந்தது.




0 comments: