Monday, October 30, 2017







"மேலாண் மறை"  நாட்டிலிருந்து 

வந்த "அற்புதன் ".....!!!




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாடு நெல்லையில் நடந்தது . கேரளம்,மே .வங்கம், புது டில்லி என்று எழுத்தாளர்கள் வந்திருந்தனர்> அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் எனக்கு வந்தது . 


உருது இந்தி எழுத்தாளர் சங்கத்திலிருந்து தோழர் சஞ்ச்சல் சௌஹான் வந்திருந்தார். புது டில்லி பல்கலையில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருபவர் . வங்கம்,இந்தி எழுத்தாளர்களிடையே தமிழ் எழு த்தாளர் களைப்பற்றி  பேச்சு வந்தது> நானும் என்பங்கிற்கு  இளம்    எழு த்தாளர்களை பற்றி கூறினேன்.  


"பூக்காத மாலை " என்ற மேலாண்மையின் கதை பற்றி  விலாவாரியாக சொன்னேன். "தண்ணீர் எடுக்க குடத்துடன் குள த்திற்கு செல்லும் முப்பது வயது பெண் அவள். திருமணமாக வில்லை.. குளக்கரையில் ரௌடி ஒருவன் உட்கார்ந்து இருக்கிறான் .பயந்து கொன்டே அவள் நீறெடுக்க செல்கிறாள் . வரும் பொது கால் தடுக்க........." அந்த ரௌடி அவளை தாங்கி கொள்கிறான் . அவளை மறைவிடத்திற்குதூக்கி  சென்று  கெடுத்துவிடுகிறான். ஊர் பஞ்சாயத்தில் அவர்களுக்கு திருமணம் நடக்கிறது ........ " அவள் மெதுவாக வீடு  செல்கிறாள் 

கால்தடுக்கும் வரை நிஜம் . அதன் பிறகு நடந்ததாக அவள் நினை க்கிறாள்.நினைவோடை யுக்தியில் .எதுவும் நடக்க வில்லை. அப்படியாவது -ஒரு ரௌடியுடனாவது -தன திருமணம் நடக்காதா ? என்றார் அ ந்த கிராமத்து அபலையின் ஏக்கத்தை சித்தரித்த இந்த கதையை சொன்னதும் அந்த அகில் இந்திய எழுத்தாளர்கள் பேச்சு மூச்சின்றி   நின்றனர். அந்த எழுத்தாளர் வந்திருக்கிறாரா ?நாங்கள் பார்க்க வேண்டுமே என்று ஒரே குரலில் கூவினர் .


மேலாண்மைக்கு அடிக்கடி தலைவலி வரும். மேடைக்கு பின்னல் இருக்கும் திரை மறைவில் துண்டை விரித்து படுத்திருப்பார் . உணவு இடை  வேளை யின் பொது வந்த அந்த சின்னஞ்சிறு உருவத்தை காட்டி இவர் தான் அந்த "பூக்காத மாலை " கதையை எழு த்திய வர்  என்றேன். சஞ்சல் சவுகான் ஓடிச்சென்று அவரைத்தூக்கி எடுத்து முத்தமழை போழிந்தார் . அருகில் இருந்து இந்திவங்காளி,மலையாள  ஏன் இந்தியாவே அவரை மெசசி  கொஞ்சியது .

கல்கத்தாவில் இந்தி உருது எழுத்தாளர் அமைப்பின் மாநாடு. சங்கம் மேலாண்மையும் நானும் செல்ல வேண்டும் என்று பணித்தது .

மேலாண்மையின் கதைகள்,குறுநாவல்கள் பற்றி அவர்களோடு பேசினேன். பாவம் ! மேலாண்மை மொழி தெரியாதலால் " வே இத சொன்னேறா ! அதுசோன்னி ரா  ! " என்று கேட்டுக்கோ ண்டிருந்தார் . போபால்,குஜராத், ராஜஸ்தான்,டில்லி பிஹார் என்று இந்திய இடது சாரி எழுத்தாளர்கள் முன் மேலாண்மை ஜொலித்து நின்ற காட்ச்சியை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.

செம்மலர் ஆசிரியர் குழுவில் அவர் பணியாற்றிய பொது அவரோடு நானும் பணியாற்றினேன் என்பது என் பாக்கியம்.


சாகும் வயதில்லையே ! பொன்னுசாமி !


என்ன அவசரம் !


அஞ்சலிகள் !!! !


1 comments:

'பரிவை' சே.குமார் said...

சிறந்ததொரு எழுத்தாளரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.