"ராஜாஜி- பெரியார் "
நட்பும் ,அதன் உன்னதமும் ...!!!
"பெரியாரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அவரை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தவர் ராஜாஜி " என்று பேராசிரியர் சுப.வீர பாண்டியன் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பீட்டார். முற்றிலும் உண்மை .
பெரியாரின் மனைவியார் நாகம்மை அவர்கள் இறந்துவிட்டார். பிறப்பும் இறப்பும் யதார்த்தமானது. என்ற பெரியார் அழக்கூட இல்லையாம். ராஜாஜி இறந்து கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் எரியூட்டப்படும் பொது விக்கி விக்கி அந்த தொண்ணுறுவயது தொண்டு கிழம் அழுத்தத்தைப்பார்த்து தலைவர்களே அதிர்ந்து போனார்களாம் .
பெரியார் நாத்திகர் ! ராஜாஜி நம்பிக்கை உள்ளவர் . ஆனால் "பத்தாம்பசலித்தனமான் " நம்பிக்கை கொண்டவர் இல்லை .1930 ஆண்டுகளிலேயே தன மகளுக்கு பிராமனர் அல்லாதவரோடு சாதி மறுப்பு திருமணம் செய்வித்தவர் .
அண்ணல் காந்தி அடிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ராஜாஜி. அவருடைய அரசியல் ஆலோசகரும் கூட . வட்டமேஜை மாநாட்டிற்கு தன்னோடு லண்டன் வரவேண்டும் என்று அண்ணல் ராஜாஜியை வற்புறுத்தினார் ,ராஜாஜியோ மறுத்து விட்டார் . "பாப்பான் கடல் கடந்து செல்லமாட்டான் " என்று பலர் ஏகாதிடியம் பேசினர் . பின்னாளில் 1963 வாக்கில் உலக சாமான இயக்கத்தின் தலைவர் பேட்ரண்ட் ரசல் உடன் இணைந்து அமேரிக்கா சென்று ஜான் கென்னடியை சந்தித்து அணு சோதனைகளை தடுக்க உதவும்படி கேட்டுக்கொண்டார்.
"raajaaji is a bundle of contradiction and a mixer of confusion " என்பார்கள்..
1942ம் ஆண்டு காங்கிரஸ் கடசியிலிருந்து வெளியேறினார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்று தலைவர்களிடையே நம்பிக்கை துளிர் விட்டுக்கொண்டிருந்த நேரம். பாகிஸ்தான் பிரிவினை ஏற்றுக்கொண்டால் கிடைக்கும் .காங்கிரஸ் ஏற்கவில்லை. காங்கிரஸ் மாநாட்டில் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொண்டு , இந்திய சுதந்திரத்தை உடனடியாக பெறவேண்டு என்று ராஜாஜி தீர்மானம் கொண்டுவந்தார்தீர்மானம் தோற்றது .காங்கிரசை விட்டு வெளியேறினார் .
1945ம் ஆண்டு மீண்டு காங்கிரசில் சேர்ந்தார் . மவுண்ட் - பாட்டனுக்கு பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஆனார்.
ராஜாஜியின் பிராமண அடிவருடிகள் அவர் ஒரு சாணக்கியர் என்று பெருமை பேசுவார்கள். பெரியாரின் நாத்திக கடசியின் பெருமையை உடைக்க அவருக்கு இரண்டாவது திருமண ஆசையை வளர்த்து சிதறடித்தவர் ராஜாஜிதான் என்று வக்கனை பேசுவார்கள்.
உண்மை இதற்கு நேர்ர்மாறானது . பெரியார்- மணியம்மை திருமணம் நடந்த பொது ராஜாஜி கவினர் ஜெனரலாக இருந்தார். கவர்னர் ஜெனரல் தனிநபர் விஷயங்களில் தலையிடக்கூடாது என்பது பிரிட்டிஷ் மரபு.
ஆப்த நண்பர் பெரியாரின் இரண்டாவது திருமணம் அவருடைய பெருமையையும், கடசியின் மதிப்பையும் குலைத்துவிடும் என்று ராஜாஜி கருதினார். நண்பரை காப்பாற்ற முடியாமல் " தடுக்கிறதே மரபு " என்று மாய்ந்தார் .மரபா ? நண்பனா? என்ற நிலையில் நன்பன் என்று முடிவெடுத்தார் . "இரண்டாம் திருமணம் வேண்டாம் " என்று குறிப்பிட்டு அதற்காரணங்களையும் சொல்லி ரகசியமாக கடிதம் எழுதினார்.
பெரியார் என்ன காரணத்தாலோ அதனை ஏற்கவில்லை . திருமணம் நடந்ததும், திராவிடர் கழகம் உடைந்தும் வரலாறாயிற்று.
தி ..க , திமுக வினரில் பலர் ராஜாஜியின் சதிதான் என்று மனதார நமபினார்கள். ராஜாஜியும் மவுனம் சாதித்தார்.
பெரியாரும் இதற்கு ராஜாஜி காரணமல்ல என்று தெரிந்துமவுனம் சாதித்தார் .
ஒரு இந்தியன் தன் ஆப்த நன்பன் பெருமைக்கு உரிய பதவியை அலங்கரித்தவன் "மரபை " மீறினான் என்ற அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக பெரியார் ரகசியம் காத்தார்.
இந்த ஒப்பற்ற இரண்டு தலைவர்களிடையே மலர்ந்த நட்பு உன்னதமானதாகும் .
1 comments:
அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு என்பதற்கு முன்னுதாரணமாக இவர்களுடைய நட்பினைக் கூறலாம்.
Post a Comment