Friday, October 20, 2017







மக்களவை தேர்தலும் ,



நாட்டு  நடப்பும் ...!!!









மக்களவை தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் உள்ளன .ஆளும் பாஜக அதற்கான காய்களை இப்போழுதே நகர்த்த ஆரம்பித்து விட்டது . குஜராத் தேர்தல் அதன் அடிவயிற்றில் பயத்தை கிளப்பியுள்ளது. 

வளர்சசி வளர்சசி என்று முழம் போடும் பிரதமர் அங்கு வளர்ச்சி பற்றி பேசவில்லைஇதுவரைஎந்தபிரதமரும்பேசாதஇனமோதல்களை தேர்ந்தெடுத்து பேசுகிறார் . "காங்கிரஸ் கடசி குஜராத்திகளுக்கு விரோதமானது.சர்தார் படேல், மொரார்ஜி தேசாய் ஆகிய குஜராத்திகளை அகிலஇந்தி அளவில் வரவிடாமல் தவிர்த்தவர்கள் நேருவும் இந்திராகாந்தியும்" என்று வக்கணை  பேசுகிறார்.

குஜராத் மக்கள் குறிப்பாக ,படேல் வகுப்பினர், தலித்துகள், மற்றும் சிறு பான்மையினர் பா.ஜ .க வின் மோசடியான பேச்சினை  நம்பத்தயாராகயில்லை . 20 ஆண்டு பா.ஜ.க  ஆடசி யில் 2லட்சம் கோடி கடன் என்று ஆனது தவிர மக்கள்நல திட்டங்கள் எதுவும் வரவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர் .சமீபத்திய வரி ஏற்றம் , பணமதிப்பு , ஆகியவை சிறு குறு தொழில்களை பாதித்து சாதாரண  மக்களை ஓட்டாண்டியாக்கி உள்ளது . இந்த சந்தர்ப்பத்தில்  வளர்ச்சி பற்றி பேசுவது எடுக்காது என்பதை மோடி அவர்கள் உணர்ந்தே இருக்கிறார் . அதனால் தான் குஜராத்மாக்களின் இன  உணர்வை தூண்டும் வகையில் பேச ஆரம்பித்துள்ளார்.



பொது வாக குஜராத் தேர்தல் முடிவுகள் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் முன்னோடி என்றே அரசியல் பார்வை யார்கள் கருதுகிறார்கள்.

வட கிழக்குமாநிலங்களில் கவர்னரின் உதவியோடு ஆட்சியை பிடித்த பா.ஜ.க காங்கிரஸ் எம் எல்  ஏ க்களை விழு ங்கியது செரிமானம் ஆகாமல்   வயிறு பொருமி தவித்துக்கொண்டு இருக்கிறது .

பஞ்சாப், கையை விட்டு போய்விட்டது . பசு வட்டம் என்ற  பகுதியில் ராஜஸ்தான்.ம பி , உபி  ன் நிலைமை எங்கு சாயும் என்று தெரியாமல் "வியாபம் " ஊழல் தலை விரித்து பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.



அமித் பாய் ஷா பா.ஜ.கவின் தலைவராக்கினதை  ஏற்க முடியாதவர்கள் "அமித் பாய் இந்து அல்ல " ."அவரை ஏன் தலைவராக்கினாய் " என்று முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் .அவர்மகன் ஜெய் ஷாவின் ஊழலை  வெளிக்கொண்டு வந்ததே இவர்கள் தான்.

இந்த லட்சணத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பு ஏடாகூடமாக எதுவுமாகிவிடக்கூடாது என்பது மோடி-ஷா இருவரின் பொது கவலை .

அவர்கள் கடசிக்குள் எந்தவித சமரசத்திற்கு தயாராகி விட்டனர். மோடி ஷாவை கைகழுவ தயார் .ஆர்.எஸ்.எஸ் தலைமை ஜெய் பற்றி விசாரணை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது இதன்  எதிரொலி தான் .

இவ்வளவு  சோதனைகள் இருந்தும் எதிர்க்கட்ச்சிகளால் மோடியையோ,பா.ஜ.க வையோ 2019 ஆண்டு மக்களவைதேர்தலில்  சந்திக்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.



"முடியாது " என்றுதான் நடு நிலையாளர்கள் கருது கிறார்கள்.



எதிர்க்கட்ச்சிகளுக்கு அகில  இந்திய அளவில் மோடிபோன்று அறிமுகமான தலைமை இல்லை ! அவர்களிடையே அப்படி ஒரு தலைமையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை . முலாயமும்  அகிலேஷும், லல்லுவும், சரத்தும்  , என்று ஒன்றாக சிந்திப்பது என்று ஒருசக்தியாக மாறுவது என்று திகைக்கிறார்கள்.

எதிர்க்கட்ச்சிகளின் பலவீனம் தான் மோடிக்கு உள்ள வாய்ப்பு !!!