Thursday, February 14, 2013
காதலர் தினம் முடிந்து விட்டது !!!
காதலர் தினம்
முடிந்து விட்டது !
பெண்ணே !
மயக்கம் தெளி !
முட்டையிடும் கோழிக்கு
வலிக்குமா?
தினம் முட்டையிடுகிறதே !
மனிதனுக்காக !
விழித்துக் கொள் !!!
Friday, February 08, 2013
சூரியனெல்லி வழக்கும்
மாநிலங்கள் அவையும் .....!!!
சூரியனெல்லி என்ற ஊர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது ! அங்குள்ள 16 வயது பெண் ஒருவரை பஸ் கண்டக்டர் ஒருவர் ஏமாற்றி கடத்தி வேறோரு பெண்ணிடம் விற்று விட்டான் .
அந்தப்பெண் அவளுடைய கூட்டாளியான தர்மராஜன்னோடு சேர்ந்து விபசார விடுதிகளுக்குபெண்களை சப்ளை செய்பவள்.தர்மராஜன் வக்கீலுக்கு படித்த்வன் .
இது 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது ! அந்தப்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விபசாரத்தில் ஈடுபத்தியுள்ளனர் ! பெரியமுதலாளிகள் ,அதிகாரிகள், அரசியல் வாதிகள் என்று இதில்சம்மந்தப்பட்டுள்ளனர் ! சுமார் 40 நாட்களுக்குப்பிறகு, 42 பேர் அந்தப்பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய பின் அவளை அனுப்பிவிட்டனர் !
அந்தபெரியமனிதர்களில் ஒருவர் தன காங்கிரஸ் தலைவர் பி.ஜே குரியன் .
இதற்கிடையில் சென்ற டிசம்பர் மாதம் டெல்லியில் மருத்துவ மாணவி ஒடும் பஸ்ஸில்கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்தது .இதனை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின் காரண மாக அரசு பெண்களுக்குஎதிரான குற்றங்களை தடுக்க ஒரு அவசர சாட்டம் கொண்டுவந்துள்ளது .இந்தச்சட்டம் மானிலங்கள் அவையில் விவாதிக்கப்பட இருக்கிறது.
மாநிலங்கள் அவையின் துணைத்தலைவராக இருப்பவர் பி.ஜே குரியன்.1996ம் ஆண்டு சூரியன்ல்லி பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட அதே குரியன் .
இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 42 பெரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இதனை எதிர்த்து உச்ச நீதி மனரத்தில்மெல்முறையேடு நடந்தது. உயர்னிதிமன்ற தீர்ப்பு தவறு என்று உச்ச நீதிமன்றம்கூறவிட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சட்ட த்தை விவாதிக்கபி.ஜே குரியன் தலைமையில் கூடாது. அவரை பதவி விலகச் சொல்லவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கூறுகின்றன ..
அமைசர்கள் குறிப்பாக உலக உத்தமர் அந்தோணீ,வயலார் ரவி ஆகியொர் வாயை முடிக்கொண்டு மௌனம் சாதிக்கின்றனர
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சோனியா , மற்றும் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார் !
Tuesday, February 05, 2013
"விஸ்வரூபம்"
படமும் -பாடமும் .....!!!
நாளை மறு நாள் "விஸ்வருபம் " திரைப்படம் தமிழகத்தில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்துள்ளது ! நேற்று இரவு 11மணி வரை இந்திய அமைதிமையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர்.ஜாண் செல்லத்துரை அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்! "விஸ்வரூபம்" பற்றியும்பேச்சு வந்தது !
நாகபுரியில் நான்குநாட்களாக ஐந்து அரங்குகளில் ஐந்து காட்சிகள் அரங்கு நிறந்த காட்சிகளாக ஒடுகிறது !
":கோடிகணக்கில் சிலவு செய்தாலும் கமலுக்கு இவ்வளவு விளம்பரம் கிடைக்காது "என்றார் டாக்டர்
"தமிழகம் தவிர மற்ற மாநிலங்களிலும் ,மற்ற நாடுகளிலும் ஓடுகிறதே "-நான்
"பாவம்! 90 கோடி சிலவாமே "
"இருக்குமா ?"
"சந்தேகமா?"
"75 லட்ச்ம்கோடி கறுப்புப் பண த்தின் அங்கம் அந்த தொழில் திரைப்படத்துறை "
"அதனால் "
"இரண்டுலட்சம் கொடுத்துவிட்டு ஒருலட்சத்திற்கு ரசீது வாங்கும் துறை "
"பரபரப்பு அதிகம் ! அதில் என்னதான் இருக்கிறது என்ற ஆவல் !"
டாக்டர் பெருமூச்சு விட்டார் !" தேவையற்ற சர்ச்சை! தணிக்கைஆன பிறகும்"
"சட்டம் இருக்கிறதே "
"சட்டம் தனி நபரை மட்டுமே தண்டிக்கும் "
"அரசியல் சட்டம் இருக்கிறதே "
"அரசியல் சட்டம் தான் நீதிமன்றத்தை தந்தது ! அரசியல்சட்டம்தான் நிர்வாகத்தையும் , தணிக்கையையும் தந்தது "
"தணிக்கையை எதிர்த்தது தனி நபர் அல்ல ! 24 இஸ்லாமிய கூட்டமைபு ! தங்கள் தங்கள் ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள one up manship நடந்தது"
"யூ டுயுபில்" பார்த்தேன் ! கமலின் குடும்பத்தினரை இழிவாக பேசினார்கள் "
"நானும் பார்த்தேன் "என்றார் டாக்டர்
பெருமூச்சு விட்டார் !
"இவர்களை தண்டிக்க முடியாதா ? "நான் கேட்டேன்
மெதுவாக நிதானமாக சொன்னார் " வழிபாட்டுத்தலத்திற்குள் ஒருவன் புகுந்து பங்கம் செய்தால் தண்டிக்கலாம் ! பாபர் மசூதிக்குள் புகுந்து இடித்தவர்களை என்ன செய்தோம் ??? "
சட்டம் தனி நபர்களைத்தான் தண்டிக்கும் ! இது தான் "விஸ்வரூபம்" படம் தரும் பாடம் !!!!
Sunday, February 03, 2013
நகையா,பாலய்யா .ராகவன்---
(நகைச்சுவைக்காக மட்டுமே )
பதிவர் ஆர்.வி.எஸ் நாகையா பற்றி ஒருபதிவினைஇட்டிருந்தார் .தந்தையாக நடிப்பதற்காக பிறந்தவர் என்றாலும், டி .எஸ் பாலையாவையும், விஎஸ்.ராகவனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் !
1957ம் ஆண்டிலிருந்து வி எஸ் ராகவன் அவர்களின் நாடகங்கள பார்த்துமகிழ்ந்தவன் நான்! திருவல்லிக்கேணி skt மண்டபத்தில் அவருடைய நாடகங்கள் நடக்கும் ! .வசனங்களை அவர் உச்சரிக்கும் பாணிக்காக அமெச்சூர் கோஷ்டிகளான என்போன்றவர்கள் அவருடைய நாடகங்களுக்குச்செல்வோம் . பின்னர் அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் !
இன்று" மிமிக்ரி " செய்பவர்கள் கூட அவரை மிமிக்ரி செய்து பெயர் வாங்குகிறார்கள் !
நியு ஜெர்சியில் இருக்கும் பதிவர் நண்பர் " பாரதசாரி " இது பற்றி எழுதியிருந்தார் "
" தந்தையாக நடிப்பதென்றால ராகவனை மிஞ்ச முடியாது! ராகவனின் தந்தையே அவரை அப்பா என்றுதான்கூப்பிடு வாராம் ! அந்த அளவுக்கு இயல்பாக நடிப்பாராம்! அவருக்கு மிமிக்ரிசெய்பவர்களை கண்டால் கோபம்வருமம்! " மிமிக்ரிசெய்யுங்கப்பா! யார் வேண்டாங்கறா ! என் குரல்ல
ஏன் செய்யணும் நு தான் நான் கேக்கறேன் "என்பாராம் !
" ஒரு முறை தி.நகர்ல அண்ணா (ராகவன் சார்) ஒரு கல்யாணத்திற்கு போயிருந்தாராம் ! நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ! முகூர்த்த நேரம் வந்திருச்சு ! "ப்ரோகிதர் நேரமாயிடுச்சு ! பொண்ணோட அப்பாவை கூப்பிடுங்கோ ! என்று சத்தமா சொல்லியிருக்கார் ! பாவம் நம்பாளு (ராகவன் சார்) "இதொ வந்துட்டேன் " நு துண்டை இடுப்பில கட்டிண்டு மேடைக்கு ஒடிட்டாராம் "
இது எப்படி இருக்கு !!!