(நாடக விழாவை முன் நிறுத்தி )
Friday, August 23, 2019
Thursday, August 22, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
ஜீவ பாரதியின் ,
"இங்கே மாப்பிள்ளை கிடக்கும் "
நாடகம்...!!!
அத்வானியின் ர(த்)த யாத்திரை முடிந்து நாடு குழம்பிப்போயிருந்த நேரம். கலை துறையில் செயலாற்றிக்கொண்டிருந்த இடதுசாரி கலைஞர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.
நாடுமுழுவதும் உள்ள கலைஞர்களை டெல்லிக்கு வரச்செய்து ஆலோசனை நடந்தது. முழுக்க முழுக்க தோழர் சீதாராம் எச்சூரி தலைமையில் கூட்டம் நடந்தது.
'ராமாயணமும் மகாபாரதமும் இந்தியர்களுக்கு சொந்தமானது. அறிவார்ந்த கருத்துக்கள் நமக்கும் சொந்தமானது தான்> அவற்றை பயன்படுத்தவேண்டும். "சம்பவாமி யுகே யுகே " என்ற நாடகத்தை துக்ள க் சோ போடுகிறார். நாம் என் அப்படி செய்வதில்லை. புராணங்களை மறுவாசிப்பு செய்யவேண்டும்." என்று அவர் கருத்துக்களை சொன்னார்.
இந்த கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து பண்பாடு செய்லபாட்டாளர்களான கலைஞர்கள் அருணன்,காஸ்யபன், டாக்டர்.செல்வராஜ், பிரளயன்,ஜீவபாரதி ஆகியோர் சென்றிருந்தோம்.
அந்த ஜீவ பாரதி எழுதிய நாடகம் தான் "இங்கே மாப்பிள்ளை கிடைக்கும்." என்ற நாடகம்.
கும்பகோணம் பாத்திரத்தொழிலாளர்கள் இடையே தொழிற்சங்க பணியாற்றிக்கொண்டிருந்தவர் தோழர் ஜீவ பாரதி.
பஜாரில் உள்ள கடை அது.முகப்பில் "இங்கே மாப்பிள்ளை கிடை க்கும் " என்ற போர்டு தொங்கும். உள்ளே பல்வேறு ஷோ கேசுகளில் விதம் விதமான மாப்பிள்ளைகள் உயிரோடு அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். ஒரு ஏழை விவசாயி மகளை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை வாங்க வருவான்>.ஷோ கேசில் உள்ள மாப்பிளை ஒருவன் பார்த்து அந்த பெண் தேர்ந்த்டுப்பாள் .அழகான டாக்டர் மாப்பிள்ளை . விவசாயி விலை கேட்ப்பான். அவனால் கொடுக்க முடியாது. அவனுடைய தகுதிக்கு கால் முடமான ஒரு மாப்பிள்ளையை வாங்கிக்கொண்டு மகளை அழைத்துக்கொண்டு செல்வான்.
சிறிது நேரத்தில் விலை உயர்ந்தகாரில் செல்வந்தர் ஒருவர் வருவார். அவரோடு அவருடைய மகளும் வருவார்.ஷோ கேசில் தேடி அலை ந்து ஒரு ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளையை தேர்ந்த்டுப்பாள் . செல்வந்தர் கடைக்காரர் சொன்ன விலைக்கு செக்கை கொடுத்துவிட்டு "சரி ! பாக் பண்ணி கார் டிக்கில போடும் " என்று உத்திரவிடுவார்.நாடகம் முடியும்.
ஷோ கேசில் உள்ளமாப்பிள்ளிகள் தங்கள் தகுதி,விலை ஆகியவற்றை கிளிப்பிள்ளைகள்போலசொல்லிக்கொண்டிருப்பார்கள்.
பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.
"உஷ் ! சத்தம் போடாதீர்கள்.நீங்களும் உங்கள் மகளுக்காக என்கடக்குதான் வரவேண்டும் என்பார் கடைக்காரர்.
கடை க்காரராக ஜீவ பாரதி நடிப்பார் . செல்வந்தராக மிடுக்கான நடையும் கம்பிரமும்கலந்து எல்ஐசி ஊழியர் ரகுபதி அவர்கள் நடிப்பார்கள்.
தமிழ்நாடு முழுவதும் வலம் வந்த நாடகமாகும் இது. பல மொழிகளில் சென்றதும் ஆகும்.
மறக்க முடியாத நாடகங்களில் ஒன்றும் கூட ...!!!
Wednesday, August 21, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
கோவில்பட்டி "தர்சனா " குழுவும் ,
"கோணங்கியின்"
மறுபக்கமும் ...!!!
தமு எ ச வின் செயல் வீரர்களில் கோவில்பட்டி தோழர்களுக்கு சிறப்பான பங்கு உண்டு.
சிறந்த படிப்பாளிகள் ! அதேசமயம் ஈவு இரக்கமற்ற விமர்சகர்களும் கூட !!
பால் வண்ணம் தலைமையில் ஒரு குழு செயல்பட்டுவந்தது. Dr .மனோகர்,துரை பாரதி, கிருஷி, தமிழ்ச்செல்வன் ,ராமசுப்பு, மணி , கோணங்கி.உதய சங்கர் ,நாறும்பூ என்று அதில் பலர் உண்டு.
இவர்கள் அமைத்ததுதான் தர்சனா கலை குழு. பல அற்புதமான நாடகங்களை இவர்கள் படைத்துள்ளார்கள் . அதில் "பச்சோந்தி" என்ற நாடகம் முதன்மையானது.
தெரு நாய் ஒன்று வழிப்போக்கனை கடித்து விடுகிறது.அவன் நகராட்ச்சி அதிகாரியிடம் புகார் அளிக்கிறான். அதிகாரி நாயை பவுண்டில் அடைக்க உத்தரவிடுகிறார். காவல்காரன் "ஐயா ! இது பட்டாளத்து அதிகாரி விட்டு நாய் போல் தெறிக்கிறது தெரு நாயல்ல " என்கிறான்.
அதிகாரி புகார் கடுத்தவன பார்த்து " ஏன்யா ! நாய் வாயுள்ள கைய கொடுத்த கடிக்காம என்ன செய்யும். இவனை பிடிச்சு சிறையிலே அடையுங்கள் என்று உத்தரவிடுகிறார்.
காவலாளி " ஐயா ! இந்த நாய் பட்டாளத்துக்காரர் விட்டுநாய் போல் தெரியவில்லை ! தெரு நாய் போலும் இல்லை. அவர்விட்டுக்கு அவர் தம்பி வந்திருக்கிறர் .அவர்கள் நாய் போல்தெரிகிறது." என்கிறான் .
அதிகாரி தன் உத்திரவை மாற்றுகிறார்.
ஜார் மன்னர் ஆட்ச்சிக்காலத்தில் அதிகாரிகள் எப்படி பச்சொந்திகளாக இருந்தார்கள் என்பதை கிழித்துக்காட்டும் ஆண்டன் செகாவின் நாடகம் இது. இதில் மனோகர் நடித்திருப்பார் .இன்றய குணசித்திரனடிகர் "சார்லி" தான் அன்றைய மனோகர்.
சம்ஸ்கிருத மொழியில் "ஆதிசங்கரர் " என்று பல விருதுகளை பெற்ற படம் வந்தது. அதன் தயாரித்து இயக்கியவர் ஜி .வி .அய்யர்.அந்த படத்தில் அய்யருக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் இன்றைய துரை பாரதி.
இவர்களின் மாற்றோரு நாடகம் " ஜப்தி " என்பதாகும். கூட்டுறவு வங்கியில் கடன்வாங்கி செலுத்தமுடியாமல் தவிக்கும் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் நாடகம். ஜப்தி அதிகாரியாக கோணங்கி நடிப்பார்.மிகவும் soft ஆன முகம்கொண்ட கோணங்கி அதிகாரியின் ஆணவத்தோடு கூடிய கோரமுகத்தை காட்டி அருமையாக நடிப்பார். கடன்வாங்கிய விவசாயி ஜப்தி நடவடிக்கையால் கதறி அழும் காட் சியில் விவசாயின் நடிப்பில் பார்வையாளர்களும் அழுவார்கள் .விவசாயியாக தமிழ்ச்செல்வன் நடிப்பார்.
1979ம் ஆண்டு மதுர நாடக விழாவில் இவர்கள் "தேரோட்டிமகன்" நாடகத்திலிருந்து ஒருகாட்ச்சிய மட்டும்நடித்துக்காட்டினார். கோணங்கி, நாறும்பூ ஆகியோர் கிரீடம் தரித்து பஞ்ச பாண்டவர்களாக வந்தனர்.
"ஜப்தி " நாடகத்தின் பொது கோணங்கி கூட்டுறவுத்துரையில் அதிகாரியாக பணியார்க்கொண்டிருந்தார் .அதுவும் கடன் வசூல் அதிகாரியாக. ஜப்தியால் விவசாயிகள் படும் அவதியை சித்தரிக்கும் நாடகத்தை போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நான் ஜப்தி செய்யும் அதிகாரியாக பணியாற்றுவது அநியாயம் என்று கருதி
கோணன்ங்கி அந்த பதவியிலிருந்து விலகிவிட்டார்.
கோணங்கியின் மறுபக்கம் இதுதான்.
அவரை வாழ்த்துவோம் ...!!!
Tuesday, August 20, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
திருப்பூர் நாடக குழுவும் ,
"விழிப்பு" நடராசன் ,
அவர்களும்...!!!
127 நாட்கள் நடந்த போராட்டம். பின்னலாடைநகரமே துடித்து எழுந்தது. திருப்பூர் தொழிலாளர்களின் ஒரே கோரிக்கை "பஞ்சப்படி ".
பஞ்சப்படி எனறால் என்ன வென்றே தெரியாத அந் தொழிலாளர்களுக்கு போதமுட்டிஅவர்களை போராளிகளாக்கும் பணியை செய்தவர் தான் "விழிப்பு "நடராசன்.
வசதி யுள்ள குடும்பம். textile engineering ல் பட்ட மேற்படிப்பு. ஆயிர க்கணக்கில் ஊதியம் கிடைக்கும் பதவிகளை வேண்டாம் என்று கூறிவிட்டு, பின்னலாடை தொழிலாளர்களின் பாடுகளை களைய வந்தவர்தான் விழிப்பு நடராசன்.
அவர்களோடு பேசினார் விவாதித்தார் பஞ்சப்படி பற்றி விளக்கினார்.அவர்களே அத கதையாக்கினார்கள்.அந்தக்கதையை நாடகமாக்கினார். திருப்பூர் நாடக குழு பிறந்தது.
மணி க்குமார் ,பாவல்,நாகராஜ் என்று ஒரு ஜமா சேர்ந்தது.போராட்டம் நடந்த அத்துணை நாட்களும் நாடகம் நடந்தது.தமிழகம் முழுவதும் வியப்பையோடு பார்த்த நிகழ்வாகும் அது.
நாடகக்குழு அதோடு நின்றுவிடவில்லை. தமிழகத்தில் நகராட்ச்சி தேர்தல் வந்தது. திருப்பூர் நகராட்ச்சி தேர்தலில் பிரசாரநாடகம் நடத்தினார்கள். "முனிசிபாலிட்டி -முனிசிபாலிட்டி "என்ற நாடகத்தை உருவாக்கினார்கள் .அதில் நடிக்க நடிகை -தொழில்முறை நடிகை வேண்டியதிருந்தது. விழிப்பு, மணிக்குமார் , ராசமணி ஆகியோர் மதுரையில் என் வீட்டுக்கு வந்து ஏற்பாடு செய்ய சொன்னார்கள்.மதுரையிலிருந்து இரண்டு நடிகைகளை ஏற்பாடு செய்தே ன்.ஒருமாதம் திருப்பூரில் பணியாற்ற முடிந்ததுஅவர்களுக்கு,தங்குமிடம்,உணவுத்தவிர சம்பளமும் கொடுத்து நாடகக்குழுவினர் கவனித்து கொண்டனர்.
இந்த குழுவினர் வட்டங்கள் என்ற நாடகத்தினையும் நடத்தினார்கள். அசுவகோஷ் எழுதிய இந்த நாடகம் பரவலாக பேசப்பட்ட ஒன்றாகும்.
திருப்புர் கட்டக் குழுவினரின் "பஞ்சப்படி" நாடகமும், விழிப்பு நடரசனும் அந்த நகரத்தின் முன்னோடிகள் என்றால் அது மிகை அல்ல ....!!!
Sunday, August 18, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )