Sunday, December 30, 2012

திலகருக்காக வாதாடிய

ஜனாப் முகமது அலி ஜின்னா .....!!



மகாகவி பாரதி சுதந்திரத்திற்காக படு பட்ட தலைவர்களில் வட இந்திய தலைவர்கள் பற்றி உணர்ச்சி மிக்க பாடல்களை எழுதியுள்ளார் ! நௌரோஜி ,திலகர்,கோகலே ,காந்தி என்று எழுதியுள்ளார்.! ஆனாலும்   திலகர் அவருக்கு மிகவும் நெருக்கமான விருப்பமானவர் !

மாஜிஸ்டிரேட் ,ஜுட்ஜு பதவிக்கு மனு செய்து கொண்டிருந்த
காங்கிரஸ்கரர்கள் மத்தியில் "சுதந்திரம் என்பிறப்புரிமை "என்ற  கோஷத்தை திலகர் வைத்தார்.! பிரிட்டிஷ் காரர்களுக்கு விசுவாசத்தை காட்ட விரும்பியவர்கள் அவரை
தீவிர வாதி என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தனர் ! அவரை ஆதரித்த பாரதி.,வ.உ.சி, சிவா  ஆகியவர்களை  மயிலாப்பூர்  வக்கீல்களால் நடத்தப்பட்ட காங்கிரஸ் ஒதுக்கி, அவர்களை  துன்புறுத்தியது !  

சமயத்திற்காக காத்திருந்த பிரிட்டிஷ் அரசு திலகர் மீது ராஜதுரோக  வழக்கை போட்டது.!
காங்கிரஸ் வக்கில்கள் ஏனோ வரவில்லை.!திலகர் தன்னுடைய சிஷ்யனு ம் ,இளம் வக்கீலுமான முகம்மது அலி ஜின்னாவை தனக்காக வாதடும்படிக்  கேட்டுக் கொண்டார்.! திறமையாக வாதாடிய ஜின்னாவின் வாக்கு சாதுரியத்தை அன்று எல்லாரும்போற்றினர் !

பிரிட்டிஷ் நீதி மன்றமோ அவருக்கு பத்து ஆண்டு தண்டனை விதித்தது.!அதில் ஐந்து ஆண்டுகள், பர்மாவில் உள்ள மண்டலே சிறையில் நாடு கடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று உத்திரவிட்டது.  !

சிறைவாசம் முடிந்து வந்த திலகர் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டார். 1916ல் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். சோவியத் புரட்சி அவருக்கு உத்வேகமளித்தது. தன்பத்திரிகையில் விளாடிமிர் லெனினை புகழ்ந்து கட்டுரைகள் எழுதினார் !

ஹோம் ரூல் இயக்கத்தில்தீவிரமாகப் பங்காற்றினார்.1920ம் ஆண்டு மறைந்தார்
       







ரஸ்       

 2012ம் ஆண்டு பிரசுரமாகாத 

செய்திகள் சில ........!!


கொல்கத்தாவில்  பார்க் தெருவில் ஒரு கற்பழிப்பு நடந்தது . பத்திரிகையில் செய்தியாக வந்தது .
மேற்கு வாங்க முதலமைச்சர் இதற்கு பதில் சொன்னார் ." விலை மாது ஒருவருக்கும்,அவருடைய வாடிக்கையாளர் ஒருவருக்கும் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகறாரினை மார்க்சிஸ்டுகள் கற்பழிப்பு என்று கதைக்கிறார்கள் "என்றார்.

குத்து சண்டை வீரர் மேரி கோம் ஒலிம்பிக் போட்டியில் வென்றார். அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் (லண்டனில் ) கேட்டார்" மணிபூர் வீரர்களுக்காக மத்திய அரசு அனுப்பும் விளையாட்டு பொருட்களை
அதிகாரிகள் டெல்லியில் அமுக்கிவிட்டு, மணிப்பூரில் கள்ள  மார்க்கெட்டில் விற்கிறார்களா  ? என்று கேட்டார் . பின்னல் அமர்ந்திருந்த ஒருவர் "ஆமாம்! இனி ஒலிம்பிக்  போட்டிக்கு செல்லும் ,  நிர்வாகிகள் அதிகாரிகள் ஆகியோரின் எச்சில் தட்டுகளை வீரர்கள்   கழுவும் கேவலத்தையும் நிறுத்துவோம்" என்றார். அவர் விளையாட்டு அமைசகத்தின் சார்பில் வந்தவர்.

2ஜி  அலைக்கற்றை ஊழலில் சிறையிலிருந்தவர் பானட் என்ற அதிகாரி. இவர் இந்திய ஒலிம்பிக் கமிட்டிபோட்டியில்    வெற்றி பெற்றார். "அடுத்து நான்  சர்வ   தேச   ஒலிம்பிக் கமிட்டிக்கு  போட்டி இடுவேன். இந்தியாவை ஒதுக்கி வைத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியையே ஒதுக்கி வைப்பேன் " என்றார் . 

என்.டி . திவாரி என்பவர் மத்திய அமைச்சராக இருந்தார். உ.பி ,மற்றும் உத்தராஞசல் மாநிலத்தில் முதல் அமைசராக இருந்தார். ஆந்திராவின்
கவர்னராகவுமிருந்தார்.வயது.80 . மனுஷன் ஒரு மாதிரி. விடியோ எடுத்துட்டாணுக . கவர்னர் பதவியை ராஜினாமா  செய்தார்.அவர்மேல  டெல்லி வக்கீல் கேசு போட்டார். திவாரி தானென் தந்தை என்று. திவாரி மறுத்தார். நீதி மன்றம் டி என்.  எ பரிசோதனைக்கு உத்திரவிட்டது .பத்திரிகைல இதெல்லாம் வந்தது..ஒரு நிருபர் ஏன் பரிசோதனைக்கு மாட்டென்கரீங்க ? நுகேட்டார்.  "ஒரு ஆளுக்கு சரின்னேன அப்புறம் வர்றவனுக்கு என்ன பதில்சொல்ல ? என்று அவர் திருப்பிகேட்டது பத்திரிகைல வரவில்லை.


பரிசோதனை நடந்தது. திவாரி தான் டெல்லி வக்கீலோட உண்மையான தந்தை என்று தீர்ப்பு வந்தது. அந்த அம்மா காங்கிரஸ் கட்சியின் குட்டிதலவரின் மனைவி .

குடியரசுதலவர் பிரணாப் முகர்ஜியின் மகன் "தெள்ளுமணி" !பேரு  அபிஜித் முகர்ஜி . டெல்லியில் ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு  வீசி  எறியப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு  பெண்கள் போராடினார்கள். :'இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அழகாக இருந்தார்கள், நான் வாலிபனா இருந்த போது இப்படி அழகான பெண்கள் போராட
 வரூவதில்லை . எங்கப்பாவுக்கு என்னதான் அவசரமோ " என்றான் !
 பத்திரிகைகள் மூச்சுவிடவில்லை .


ஆதாரம் : டைம்ஸ் ஆப் இந்தியா ( 30 -12 -12 )









ஞ்சல் ஆகிய

Monday, December 24, 2012

ஒரு  ஊறுகாய் தாத்தா .....!!!



"தீக்கதிர் " பத்திரிகைக்கு மதுரையில் கட்டிடம் கட்ட முடிவாகியது  . "ஜனசக்தி"  பத்திரிகைக்காக வாங்கிய இடம் கைவந்துவிட்டது. மதுரை பை-பாஸ் சாலைக்கும்,கொன்னவாயன் சாலைக்கும் இடையே அரைகுறையாக கட்டப்பட்டிருந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு வேலை  ஆரம்பமாகியது. இந்த கட்டிட வேலையை கண்காணிக்க "ஆர்.ஆர் " என்று அன்போடு அழைக்கப்பட்டமுது பெரும் தோழர் ராமராஜ்  பொறுபளிக்கப்பட்டார்

விவசாயிகளின் தலைவர் ராமராஜ் .கட்சி பிரிநதபோது பலதலைவர்கள்  ,மற்றும் தொண்டர்கள் சிறையிலிருந்தனர்.. மேலும் பலர் தலைமறைவாக செயல்பட்டனர். தன்னந்தனியாக கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை ஒன்று திரட்டி மார்க்சிஸ்டு கட்சிக்கு கொண்டுவந்த மகத்தான பணியைச் செய்தவர் ராமராஜ்.. அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வந்தார்.

மதுரை  1ம் நம்பர் சந்தில் அப்போது தீக்கதிர் பத்திரிக்கை செயல்பட்டு வந்தது. ஆர்.ஆர் அங்க் அடிக்கடி வருவார் என் வீடும் கொன்னவாயன் சாலைக்கு அருகிலிருந்தது வெறும் சோறும் தயிரும் சாப்பிடும் அவருக்கு வெஞசனமாக பள்ளியில் படிக்கும் என்  மகன் அல்லது மகள்மூலமாக  ஊறு காய் கொடுத்து அனுப்புவேன்.அவர்களைப் பொருத்தவரை அந்த மாபெரும் தலைவர் "ஊறுகாய் தத்தா".

இந்த  சமயத்தில் தான் அவசர் நிலை வந்தது. தலைமறைவு தலைவர்களுக்கும், வெளியில் செயல் படும் தலைவர்களுக்கும் தொடர்பாக ஆர்.ஆர் செயல் பட்டு வந்தார்.

நான் வசித்த பகுதியில் "சூரிய போஸ் " என்று ஒரு தோழர் இருந்தார் . அவருடைய தந்தை நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றியவர். இது தவிர என்னோடு பணியாற்றிய தோழர் இப்ராகிம் அவர்களுக்கு "போஸ் " நெருக்கமானவர் .அவர் அடிக்கடி விளாங்குடி பெரிய கருப்பன் கொடுத்தார் 
என்று கூறி   ஒரு கவரை கொடுப்பார். போஸ் கொடுப்பதை .ஆர் ஆர்  இடம் கொடுக்கவேண்டியது என் பொறுப்பு..ஒரு சிறிய எவர்சில்வர் டப்பாவில் அந்த பிளாஸ்டிக் கவரை வைத்து அதன் மீது வாழையிலையினை வைத்து அதில் ஊறுகாயை போட்டு என் குழ்ந்தைகள் மூலம் கொடுத்தனுப்பி விடுவேன்.

என் மகன் MA  மற்றும் IRPM  முடித்து BL படித்து மத்திய உள் துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறான்.

என் மகள் MA , Mphil , ML முடித்து வக்கில் தொழில் செய்கிறாள்.  



வேடிக்கை என்ன வென்றால்  அவர்கள் இருவருக்குமே நான் அவர்களை இப்படி use ( misuse ) பண்ணினேன் என்பது தெரியாது.



இந்த இடுகையை பார்த்து
தெரிந்து கொண்டால் தான் உண்டு.











.  





Thursday, December 20, 2012

செல்வராஜ் தோழா சாகித்ய அகதமி

தன்னை புதுப்பித்துக் கொண்டது !!!

"தேநீர்" செல்வராஜ் ,அதற்கு முன்பு "மலரும் சருகும்" செல்வராஜ், இன்று
"தோல் " செல்வராஜ் என்ன அற்புதமான பரிணாமம்!  தோழா தமிழகத்து முற்போக்கு இயக்கம் காத்திருந்த தருணம் இது!

சாகித்ய அகாதமி தன்னை புதுப்பித்துக் கொண்டது என்று தான் பதிவு
செய்ய வேண்டும்!

உன் கையைப் பிடித்துக் கொண்டு தோழர்  ஜீவா  அவர்கள்  உன்னை  "ஜனசக்தி"  பத்திரிக்கை அலுவலகத்தில் கொண்டு சேர்த்தாரே ! நினைவிருக்கிறதா !

கலை இலக்கிய பெருமன்றத்தை ஆரம்பிக்க காரைக்குடியில் நடந்த கூட்டம்
நினைவு தட்டுமே!

"மலரும் சருகும்" எழுதி தலித் இலக்கியத்தின் முன்னோடிதமிழனாச்சே நீ !

பாம்பனார் எஸ்டேட் சென்று அங்கு உன் "தேநீர்" பற்றி கருத்துரையாற்ற  சென்ற பொது அந்த பாடசாலை வாத்திமார் என்னைச் சுற்றி நின்று உன்னை
புகழ்ந்ததை கேட்டு சொக்கிப் போனவன் நான் !

சுதந்திர போராட்ட வீரர் வாழவிட்டான்- லட்சுமி  அம்மாள்  தம்பதியர்  இருவருமே சிறையில் இருந்தவர்கள்.    லட்சுமி அம்மாளுக்கு சிறையில் பெண் குழ்ந்தை பிறந்தது .அந்தக் குழந்தைக்கு "பாரத புத்திரி " என்று பெயர் வைத்தார்கள்!
தோழா!அந்த பாரதபுத்திரியை சாதி மறுப்புத்திருமனம் செய்து கொண்டவன் நீ ! 

 ஆரம்ப காலத்திலிருந்து தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழி நடத்தினாய் !

" செம்மலரில்" நீ  எழுதிய மூலதனம் நாவல் பெரும் வரவேற்பை பெற்றது!

பார்க்கும் போதெல்லாம் பேகம்பூர் தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றி   பேசுவாய் !
 அவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த எ\.பாலசுப்பிரமணியம் , மதனகோபால்,, தங்கராஜ் ஆகிய கம்யுனிஸ்டுகளை காவிய நாயகர்களாக படைத்தாய்!

இந்திய இலக்கியத்தில் தோல் பதனிடும் தொழிலாளர்களை  ,அவர்களுக்காக ,அவர்களொடு இணைந்து போராட்டம் நடத்திய வரலாற்றை
காவியமாக்கிய  தோழனே !

உனக்கு இந்திய தொழிலாளி வர்க்கத்தின் வாழ்த்துக்கள் !!!
 \







     

Thursday, December 13, 2012

பட்டொளி வீசிப்

பறக்கும் செங்கொடி ......!!!


அறுபதாம் ஆண்டுகளின் முன்பகுதி ! கம்யுனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "ஜனசக்தி" மதுரையிலிருந்து கொண்டு வர முயற்சி நடநதது. அதற்கான இடம் கட்டிடம்  மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்காக கம்பெனி பங்குகளை விற்க முடிவாகியது.  கட்டிட வேலயும் ஆரம்பிக்கப்பட்டது இந்த சமயத்தில்தான் கட்சிக்குள் வலது,இடது என்று ஆரம்பித்து கட்சி பிரிந்தது.

கட்டிட வேல நின்றுவிட்டது. பத்திரிகைக்காக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ரிசீவர் மூலம் நிர்வகிக்க வேண்டியதாயிற்று. பாதி வேலை முடிந்த கட்டிடம் புதர் மண்டி  போயிற்று. ஒருகட்டத்தில் கமபெனியின் இயக்குனர்களாக இருந்தவர்களில்  பெரும்பாலோர்  வலது கோஷ்டியை  சேர்ந்தவர்கள்  .அவர்கள்  அரைகுறை கட்டிடத்தை விற்றுவிட முடிவு செய்தார்கள். மதுரையில் தியாக ராசா செட்டியாரின் தமிழ் நாடு பத்திரிகைக்கு விற்க முயன்றார்கள். அதன் பிறகு தமிழ் முரசு என்ற பத்திரிகைக்கு விற்க பேரம் நடந்தது. 

நீதி மன்றம் நியமித்த "ரிசிவர் " ASR  . chary என்ற பிரபல வக்கீலாவார். இவர் முது பெரும் கம்யூனிஸ்டு தலைவர் ASK ஐயங்காரின் சகோதரர் ஆவார்.
ஏழை தொழிலாளர்களிடம் வசூல் செய்து வர்க்க அரசியலை பிரசாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்டபத்திரிகை அதன் இடத்தை வர்க்க எதிரிகளுக்கு விற்பது அவர் மனதிற்கு உவப்ப இல்லை.விற்க,வாங்க சகல அதிகாரமும் அவருக்குமட்டுமே இருந்தது.

பி.ராமமூர்த்தி அவர்களைச் சந்தித்தார்."  உங்கள் கட்சி சமரசம் இல்லாமல் தொழிலாளர்களுக்காக பணி புரிகிறது.விற்பதற்கான முழு அதிகாரமும் .
எனக்கு இருக்கிறது .என்ன சொல்கிறீர்கள் " என்று கேட்டார்.சகல ஏற்பாடுகளையும் செய்து பத்திரம் பதிவாகும் வரை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று  கூறி  பரிமாற்றம் நடந்தது..

மறு நாள் காலை கொண்ணவாயன் சாலை தோழர்கள், பரவைமில்
தோழர்கள், ஆரப்பாளையம்,மங்ச மேடு தோழர்கள் மர்க்சிஸ்டு   கட்சி கோடியை ஏற்ற சென்றார்கள்.

அங்கு வலது கட்சி தொண்டர்கள், பறவை மில் மண்டை ராமன்.ஆட் டு ராமன்,கோனையன்,மதுர மில் கடப்பறை ஆகியொர் கம்பு கட்டைகளோடு  நின்றார்கள்.

போலீசார் வந்து கட்டிடம் கைமாறிவிட்டது என்று எடுத்த்ச் சொல்லி அவர்களை கலைந்து  போகச் சொன்னார்கள் '

விண்ணதிர கோஷமிட்டு தோழர்கள் செங்கொடியை ஏற்றினார்கள்.

மதுரை-தேனி சாலையில் அரசரடி சதுக்கத்திலிருந்து வடக்கே வைகை ஆற்றுப்பாலத்தைப்  பார்த்தால் மறுகரையில் கம்பிரமாக பட்டொளி வீசி செங்கொடி பறப்பதைப் பர்க்கலாம் .

அந்தச் செங்கொடியின் கீழே தான் "தீக்க்திர் "  அச்சடிக்கப்பட்டு, வெளி வருகிறது

அதன் ஐம்பதாம் ஆண்டு விழா!! தோழர்களே  வாழ்த்துவோம் 111