Tuesday, October 19, 2010

மனித உரிமை (அமெரிக்க மாதிரி)---2

மனித உரிமை (அமெரிக்க மாதிரி)


ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து காக்கா,குருவிகளை வேடர்கள் வலைவீசுப்பிடிபார்களே அப்படி ஸ்பானிய வியாபாரிகளால் கருப்பு இனத்தைச்ச்செர்ந்த மக்கள் பிடிக்கப்பட்டு அடிமைகாளாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட வம்சத்தை சார்ந்தவர் பால் ராப்சன்.(1898-1976)

தன்வாழ்நாள் பூராவும் அந்தமக்களின் விடுதலைகாக பாடுபட்டவர்.மிகச்சிறந்த படிப்பாளி,விளையாட்டுவீரர், வழைக்குரைஞர்,தொழிற்சங்கவாதி,நடிகர், உலகப்புகழ் பெற்ற பாடகர்..கருப்பின  மக்களின் விடுதலை என்பது அமெரிக்காவில் சோசலிசம் வந்தால் தான் கிடக்கும் என்று மனதார நம்பியவர்.

இவர் வாழ்ந்த காலத்தில் தான் வலதுசாரி அரசியல்வாதிகளான மக்கார்த்தி,எட்கார் ஹூவர்,டல்லாஸ் ஆகியோர் அமெரிக்க அரசியலில் செல்வாக்கோடு இருந்தனர்.உலகம் பூராவும் சென்று இசைநிகழ்ச்சி நடத்திவந்தார். இங்கிலாந்து சென்று தொழிலாலர்களுக்காக நிகழ்ச்சிகள் நடத்துவார்.சுரங்கத்தோழர்களோடு அவர்கள் வாழும்பகுதியல் வழ்வார். அவர்களோடு சுரங்கத்திற்குள் இறங்கி அவர்கள் கொடுக்கும் ரொட்டியை உண்பார்.ஐரோப்பாமுழுவதுமுள்ள அடக்கப்பட்ட மனிதர்களுக்காக குரல் கொடுத்தார்.ஆப்பிரிக்கமானவர்களுக்கான அமைப்பைத்தோற்றுவித்தார்.1934 ம் ஆண்டுவாக்கில் சொவியத் யூனியன் சென்றார்.

அங்குள்ள பல்வேறு இனமக்கள் ஒன்று பட்டு வாழ்வதிப் பார்த்து வெள்ளையரும் கருப்பர்களும் தன்நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று நம்பினார்.

ஸ்டாலின் அமைதிப்பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க அரசு அவருடைய பாஸ்போர்ட்டைப் பறித்தது. அவர் மேடைகளில் பாடக்கூடது என்று தடைசெய்தது..அவர் பாடும் நிகழ்ச்சிகளில் கலாட்டா செய்தது.20000 தொழிலாலார்கள் முன்னால் பாடவரும்பொது நிறவெறியர்கள் அவரைத்தாக்க முற்பட்டனர்.நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தயங்கி ரத்து செய்தனர். தொழிலாளர்கள் அதே இடத்தில் நான்கு நாட்களுக்குப் பிறகு நடத்த முடிவு செய்தனர்.

20000 தொழிலாலர்கள் கைகோர்த்து உலகப  புகழ் பெற்ற அந்த்ப்பாடலைப்பாடினர்.

We shal not move ( நாங்கள் நகர மாட்டோம்) என்று பாடினர்.

பால் ராப்சனை நாடாளூ மன்ற கமிட்டி விசாரித்தது. ."இவ்வளவு பெசும் நீ ரஷ்யாவுக்குப் போய்விட வேண்டியதுதானே? என்று கமிட்டி தலைவர் கேட்டார்." அமெரிக்க தோட்டங்களிலும்,வயல்வெளிகளிலும் அடிஉரமாக இருப்பது ஒருகோடி கருப்பர்களின் ரத்தமும் சதையும்.அவர்களின் வாரீசுகள் நாங்கள் நாங்கள் ஏண்பொகவெண்டும் என்ரூ  கெட்டார். வயதான காலத்தில் ஓய்வுக்காகவும் மருத்துவத்திற்காகவும் மாஸ்கோ சென்றார். அங்கு சி.ஐ.ஏ உளவாளிகள் அவருக்கு விஷம் கொடுத்தனர். நல்லவேளை பிழைத்துவிட்டார்.

மார்டின் லூதர் கிங் கருப்பின மக்களின் உரிமைகளுக்கக உயிரைவிட்டார். அவரை மேலை நாடுகள் போற்றிப்புகழ் கின்றன.மிகச்சிறந்த மனித நேய மாண்பு அது.

பால் ராப்சன் தன் வாழ்வை அந்த அடிமை மக்களுக்காக அர்ப்பணித்தார். அதோடு சோசலிசம் வேண்டும் என்றும் கூறினார்.

2 comments:

அப்பாதுரை said...

கபில மக்களுக்குச் செய்த அனீதிகளை எந்த மனிதநேய நம்பிக்கையுள்ளவராலும் புறக்கணிக்கவோ மறக்கவோ முடியாது/கூடாது. மனிதநேயம் இத்தனைக்கிடையிலும் அமெரிக்காவில் தான் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது, நம்பப் படுகிறது, வளர்க்கப்படுகிறது. அறுபதுகளுக்குப் பிறகு நிறவேற்றுமை காரணமான பாகுபாடுகள் குறைந்தன என்றாலும் இப்பொழுதும் அங்கங்கே பார்க்க முடிகிறது. தொண்ணூறுகளில் ராட்னி கிங் (கிங் ஊதாரி, சுயனலககாரன், பொறுப்பில்லாத குடும்பஸ்தன் என்பதெல்லாம் போக) விவகாரம் அமெரிக்க மனிதநேய சார்பாளர்களை ஒரு கலக்கி கலக்கியது. போன மாத ஒபாமா ஆட்சி ஆட்குறைப்பு விவகாரத்தில் கூட ஒரு கபிலரை முறையில்லாமல் ஆட்குறைப்பு செய்ததற்காக அல்லோலகல்லோலப் பட்டது. தவறுகளை உணர்ந்து வருந்தித் திருந்துவது முதிர்ச்சியின் அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு உரமாகிறது. மார்க்சீய/கம்யூனிச/சோசலிச விரும்பிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். சமுதாய முன்னேற்றத்துக்கான அறிவு முதிர்ச்சியின் அடிப்படையிலான உரம் அமெரிக்காவில் தான் தயாராகிறது. தலை தலையாய் முட்டிக்கொண்டாலும் இது தான் நிதர்சனம். அமெரிக்காவை விட்டால் ஓரளவுக்கு ஜெர்மனி, இங்கிலாந்து. பிரான்சு முற்போக்கை நிலைப்படுத்துவதில் முன்னணியில் இருந்து வருகிறது. கிழக்கு நாடுகளில் இன்னும் பழைய குருடி கதை தான் என்பது - அதுவும் உலக படிப்பறிவு கணக்கில் வேகமாக மேலேறி வரும் இந்தியாவில் இன்னும் கம்யூனிச மார்க்சிச சோசலிச வேர்கள் தலைதூக்குவது - வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஒருஆறுதல - அறுபதுகளில் நம்ம ஊரில் கம்யூனிஸ்ட் என்றால் ரௌடி என்றிருந்த நிலைமாறி இப்பொழுது வதங்கின அரசியல்வாதி மட்டுமே என்ற நிலைக்கு வந்திருக்கிறது. அரசியல்வாதி பரவாயில்லையா ரௌடி பரவாயில்லையா தெரியவில்லை :).

ஸ்டாலின் பெயரில் அமைதிப்பரிசு வழங்குவது grin worthy.

சிவகுமாரன் said...

அப்பாத்துரையின் கருத்துக்களுக்கு அய்யா அவர்களின் விளக்கம் என்ன?