Saturday, December 04, 2010

"ஞான்... அ..மரிக்கான் பொகுன்னு..."

"ஞான்... அ...மரிகான்  பொகுன்னு".......


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதாவது 1905லிருந்து 1908 வரை தென் தமிழகத்தில் புரட்சிகரமான சுதந்திர இயக்கங்கள் அதிகமாகவும் ரகசியமாகவும் செயல்பட்டுக்கொண்டிருந்தன.கலேக்டர் வின்ச்துரை அனுப்பிய ரகசிய குறிப்பில் திருநெல்வெலி மாவட்டத்தில் குறப்பாக தூத்துக்குடியில் கூடுதலாக இருப்பத்தாக தெ.ரிவித்தது.அதற்குக் காரனமுமிருந்த்தது.

வங்க மக்களிடயே தேசீய தாகம் கூடுதலாக இருந்தது.1905ம் ஆண்டு கர்சான் பிரபு வங்கத்தை இரண்டாகப்பிரித்தான்.இதனை எதிர்த்து.இளைஞர்கள் வீருகொண்டு எழுந்தனர்.ஆங்காங்கே புரட்சிகரக் குழுக்க.ளாக செயல்பட்டு வெள்ளையர்களை ஆயுத்மேந்தி விரட்ட முடிவு செய்தனர்.இந்த இயக்கம் கசிந்து வங்கக்கடலோரம் பரவி தூத்துக்குடி வரை பற்றியது

அதே சமயம் பரொடா கங்கிரஸ் பொய்விட்டு வந்த வ .உ.சிதீவிரமாக செயல்பட்டார்.தினம் ஒரு பொதுக் கூட்டம்,என்று நெல்லை மாவட்டம் முழுவதும் சுற்றிவந்தார்.தூத்துக்குடி மில்லில் தொழிற்சங்கம் தோன்றியது.கப்பல் கம்பெனி உருவானது.தூத்துக்குடிக்கு என்று தனியாக ஆஷ் என்பவன் சப்கலெக்டராக நியமிக்கப்பட்டான். பிரிட்டிஷாரின் பிடி இறுகி கொடூரமாகியது.

1911ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தெதி. ஆஷ் துரை நெல்லை வந்து கலெக்டரைப் பர்த்துவிட்டு தூத்து க்குடி செல்ல ரயிலேருகிறான். சிலோன் பொட் மெயிலுக்காக மணியாச்சி சந்திப்பில் ரயில் காத்திருக்கிறது.ஆஷ் இருந்த பெட்டி முன் வெள்ளை வேட்டி.கோட்டு, உச்சிக்குடுமியோடு ஒருவன் நிற்கிறான். அவனுடன் வெள்ளை வேட்டி, சட்டையில் வந்தவன் சற்று தள்ளி நிற்கிறான்.உச்சிக்குடுமி ரயில் பெட்டிக்குள் ஏறுகிறான். துப்பாக்கி வெடிக்கும்சத்தம் கெட்கிறது.ஆஷ் மனைவி மேரியின் மடியில் செத்துவிழுகிறான்.பெட்டிக்கு வெளியே நின்றவன் ஓடிவிடுகிறான்.உச்சிக் குடுமி பெட்டியிலிருந்து வெளியேறி கழிவரைக்குள் செல்கிறான்.துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

போலீசார் கழிவரையில் பார்க்கும்போது உச்சிக்குடுமி பிணமாக கிடக்கிறான் அவன் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருக்கிறது.அதில்"எங்கள் ராஜா வெள்ளைக்காரர்கள் அல்ல. 5ம் ஜார்ஜ் எங்கள் அரசன் அல்ல. அவன் இந்தியாவந்தால் சுட்டுத்தள்ளப்படுவான்.வெள்ளையர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ள மதறாஸ் மாகாணத்தில் 3000 பெர் ரத்தக்கயெழுத்திட்டு காளி மேல் சத்தியம் செய்திருக்கிறோம்.---R.வாஞ்சி ஐயர்

போலிசார் விசாரணையில் தெரியவந்தது.செங்கோட்டையில் வசிப்பவர் ரகுபதி ஐயர். தெவஸ்வம் பொர்டில் காரியம் செய்துவந்து ஓய்வு பெற்றவர்.அவர் மகன் வாஞ்சி நாதன்.புனலூரில் ஃபாரஸ்ட் வாச்சராக இருக்கிறான்.மனைவி பெயர் பொன்னம்மாள். சமிபத்தில் தான் பெண் குழந்தை இறந்துள்ளது. அடிக்கடி பரோடா,மற்றும் வடமாநிலங்களுக்கு செல்வான்.அவனுக்கும் தந்தைக்கும் இதனால் சுமுக உறவு கிடையாது

சம்பவம் நடந்த முன் தினம் மனைவி பொன்னம்மாளிடம் பேசியிருக்கிறான். அவன் சார்ந்த இயக்கத்தில் பொய் சொல்லக்கூடாது. அதனால் தான் ஆஷ் துரையைக் கொன்றுவிட்டு கழிவரைக்குள் ஓடி வாயில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சுட்டு மரணமடந்திருக்கிறான்.

"நாளை எங்கே பொகிறீர்கள்? என்று பொன்னம்மாள் கேட்டாள். வாஞ்சி யோசித்தான்.கொஞ்சம் இழுத்தான். "அ..மரிக்கான் பொகுன்னு".(சாகப்பொகிறேன்)மலையாளத்தில் உண்மையைச் சொல்லிவிட்டான். பேதை பொன்னம்மாள் கணவன் அமேரிக்கா செல்வதாக மகிழ்ந்தாள்.

( ஃப்ரண்ட் லைன் பத்திரிகையில் ஏ.ஆர். வெங்கடாசலபதி கட்டுரை,தினமணி காதிரில் ரகமி எழுதியது.ஆகியவற்றை ஆதரமாகக் கொண்டது,அடுத்த ஆன்டு வாஞ்சியின் நூற்றாண்டு நினவு .தினம்.ஆஷ் துரையின் மகன் ராபர்ட் என்பவர் வருவதாகக் சொன்னதாக வெங்கடாசலபதி கூறிருக்கிறார்.நல்லது..நமக்கு நினைவிருக்குமா?)

9 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமையான பதிவு ஐயா. ஏற்கனவே அறிந்த செய்தி முற்றிலும் புதிய கோணத்தில்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வாஞ்சியின் சாதுர்யமான பதில் அமெரிக்காவிற்குப் பதில் அகில உலகமெங்கும் அவன் நினைவை எடுத்துச் செல்லும் ஒரு செயலுக்கான பதிலாகவும் மாறியது.

இதில் ஆச்சர்யம் ஆஷின் மகன் ராபர்ட் அடுத்த ஆண்டு வாஞ்சியின் நினைவு பாராட்டி வரும் பெருந்தன்மை.

இந்த நாள் வாழ்வின் இன்னுமொரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தது ராபர்ட்டிடமிருந்து.

நன்றி ராபர்ட் வாஞ்சியின் சார்பில்.

நன்றி காஸ்யபன்.

காமராஜ் said...

வாஞ்சி என்கிற பேர் ரத்ததில் சூடேற்றுகிற பேர்.
உத்தம் சிங் என்கிற பேர் போல.
நாடு அடிமைப்பட்டுக்கிடக்கும் போது உயிர் சமானமென்று குதித்த போராளிகள்.
இதை இந்த மொழியில் கேட்க நல்லாயிருக்கு தோழர்.

எஸ்.கே said...

அருமையான பதிவு!

அப்பாதுரை said...

ரொம்ப உறுத்துது சார்.. இது வரைக்கும் எனக்கு இது தெரியாது.

ஏமாந்தது அந்தப் பொண்ணில்லையா? வாஞ்சிநாதனுக்கு வணக்கம் சொல்ல நினைக்கும் போதெல்லாம் இனி அந்தப் பொண் நினைவும் வரும்.

பொதுநலத்தையும் சுதந்திரத்தையும் தன்னலத்தை விட பத்து படி மேலே வச்ச இவங்கள்ளாம் இருந்த நாடா இப்படி இருக்குனு கேக்காம இருக்க முடியலை.

'மரிக்கான்' பதிலில் தெய்வத்தன்மை பொதிந்திருப்பது போல் படுகிறது - அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது சாயல்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என் பதிவில் காஸ்யபன் ஐயா என்றிருக்கவேண்டியது கவனக்குறைவால் தவறியிருக்கிறது.அதைத் திருத்தும் நோக்கில் இது.

hariharan said...

நல்ல தகவல்...

நான் விடுமுறையில் செல்லும்போது வாஞ்சிமணியாச்சியில் இறங்கி தான் எனது ஊருக்கு செல்வேன்.

தலைப்பை நானும் “ஞான் அமெரிக்கா போகுன்னு“ என்று தான் வாசித்தேன்.

வாஞ்சிநாதன் சார்ந்த இயக்கம் ஏதோ தீவிர மதம் சார்ந்த இயக்கமா?

S.Raman, Vellore said...

அன்பான தோழர் காஷ்யபன்,

உங்களை நாக்பூரில் நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஏற்கனவே ஒரு விபத்தில் காலில் அடிபட்டு முழுமையாக குணமாகாத நிலையில்தான் டெல்லி மாநாட்டிற்கு வந்திருந்தேன். பேரணியில் நடக்க வேண்டாம் என்று எங்கள் கோட்டத்தோழர்களும் சொல்லி இருந்தார்கள். நானும் அப்படித்தான் யோசித்திருந்தேன். ஆனாலும் ஒரு உற்சாகத்தில் பேரணியில் நடந்ததும் புது டெல்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஏறி இறங்கியதும் மீண்டும்
கால்வலி கொடுத்ததால் அன்று உங்களோடு அதிகமாக பேச முடியவில்லை. அது இன்னமும் வருத்தமாகவே உள்ளது. பார்ப்போம்,
அடுத்த வாய்ப்பு கிடைக்காதா என்ன? பிறகு உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள உங்களின் படம் உங்களை மேலும் வயதானவராகக் காண்பிக்கிறதாய் தோன்றுகிறது.


உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அமானுல்லாகான் அவர்கள் எழுதிய
புத்தகத்தை தமிழாக்கம் செய்யும் பணியை துவக்கியுள்ளேன். எல்.ஐ.சி தமிழ் மாநில ஐந்தாவது மகளிர் மாநாடு ஜனவரி முப்பது அன்று
வேலூரில் நடைபெறவுள்ளது. ஆகவே தற்காலிகமாக சுனாமி நினைவலைகளுக்கு விடுப்பு அளித்துள்ளேன். நெஞ்சில் பதிவானதை
என்று வேண்டுமானாலும் எழுத முடியுமல்லவா?

மற்றபடி உங்கள் பதிவுகள் மீண்டும் மீண்டும் பல அரிய செய்திகளை அள்ளித் தரும் பொக்கிஷமாகவே அமைந்து வருகின்றது.

தொடரட்டும் உங்கள் பணி!

வாழ்த்துக்களுடன்

kashyapan said...

ஒரு சிறு திருத்தம்: வரலாற்றளர் வெங்கடாசல சந்தித்தது ஆஷ்துரையின் பேரன் ராபர்ட் அவர்களை.ஆஷ்துரையின் மகன் ஆர்தரின் மகன் தான் ராபர்ட். நூற்றாண்டு விழாவுக்கு வருகிறேன் என்றது பேரன் ராபர்ட்---காஸ்யபன்.