Sunday, December 12, 2010

ஜரிகைப் பட்டு...

ஜரிகைப் பட்டு...


தங்கம்,வெள்ளி,பட்டுநூல் ஆகியவற்றின் விலை குலைநடுங்க வைக்கும் நிலையில் ஜரிகைப் பட்டு பற்றி எழுதுவது அராஜகம்தான்.காஞ்சியிலோ,காசியிலோ பட்டு நெய்பவர்கள் ஜரிகையை "கண்டு " கணக்கில் வாங்கி பயன் படுத்துகிறார்கள்.ஒரு "கண்டு" என்பதுசுமார் 250கிராம் இருக்கும்.ஒரு 20000 மீட்டருக்கு குறைவாக நீளமிருக்கும்.ஜரிகை நூலின் கனம் .3 மில்லிமீட்டர் இருக்கும்.

2005ம் ஆண்டு கிராம் 640 ரூ ஆக இருந்த தங்கம் இன்று 1500 ரூ தாண்டியிருக்கிறது.வெள்ளி கிராம் 10ரூ யாக இருந்தது இன்று 40ரூ யாக இருக்கிறது.பட்டுநூல் கிலோ 600ரூ யாக இருந்தது இன்று 2000ரூ ஆகீவிட்டது.ஒருகண்டு ஜரிகை3150ரூயாக இருந்ததுஇன்று7000ரூ ஐ நெருங்குகிறது.

தரமான தங்க ஜரிகை என்றால் 55% வெள்ளி,24% பட்டுநூல்,22% செம்பு, .60 % தங்கமிருக்கவேண்டும்.

சந்தையிலொ பொலிஜரிகை தான் ஆக்கிரமித்துள்ளது.நாம் வங்கும் ஜரிகைப் பட்டு எந்த அளவுய தரமானது? ஒரு ஆய்வின்படி சென்னையில் 80% ,ஹைதிராபாத்தில் 70%, மைசூரில் 50% போலி ..

இந்தியாவில் ஜரிகை சூரத்தில் 55%சதம்,மீதமுள்ளவை வாரணாசி,ஆக்ரா,ஜெய்பூர்,ஆகிய இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. சூரத்தில் கி.பி. 16ம் நூற்றாண்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது.வெள்ளிக்கட்டியிலிருந்து நூலைத்தயாரிக்கும் பணி மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.சூரத்தில் உள்ள ஐந்து ஆறு குடும்பங்களுக்கு மட்டுமே அது தெரியும்.

ஹைதிராபாத்தில் வெள்ளியை கம்பியாக திரிக்கும் ஆரய்ச்சி நடபெருகிறது தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் ஜரிகை தயாரிக்க தானியங்கி தொழிற்சாலை ஒன்று இருக்கிறதுஇந்தியாவில் தமிழ்நாட்டில் "நல்லி" ஒன்ருதான் 60% வெள்ளீ ஜரிகையைப் பயன் படுத்துகிறது.மற்றவை...?

ஜரிகையின் தரத்தை பரிசோதிக்க .இயந்திரம் உள்ளது. ஆனால்ஜவுளிக் கடைகரர்கள் பரிசோதிப்பது அவர்களை அவமதிப்பதற்குச்சமம் என்று கூறி மறுக்கிறார்கள்.

பதிவர்கள் யாராவது நுகர்வோர் நீதிமன்றம் போனாலாவது விடியுமா?

6 comments:

RVS said...

ஜரிகைக் பதிவு நன்றாக இருந்தது. நிறைய தகவல்கள். ;-)

சிவகுமாரன் said...

புதிய தகவல்கள்.
நுகர்வோர் நீதிமன்றம் நேர்மையாய் இயங்குகிறதா? எவ்வளவு நாட்களில் நீதி கிடைக்கிறது? அதிலும் அரசியல் தலையீடு உண்டா? ஒரு பதிவு போடுங்களேன் அய்யா .

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஜரிகை பற்றிய தகவல்கள் பட்டுப் போல இருந்தது சார்.

ஆனா தகவல்கள் இப்போ எல்லா இடத்துலயும் கிடைச்சிடுது சார்.

உங்க கோணம் இதுல மிஸ்ஸிங்.

நீங்க ஜரிகைன்னு பேர் ஏன் வந்தது தெரியுமா?ன்னு எழுதற சுவாரஸ்யமான டிஸ்கவரி சேனல் மாதிரி.

நீங்க போய்?

ஏமாத்திட்டீங்க ஸார் இந்தப் பதிவில.

ஹ ர ணி said...

அன்புள்ள காஷ்யபன் அவர்களுக்கு.
உறரணி வணக்கமுடன். முதன்முறையாக உங்கள் பக்கங்களுக்கு வந்திருக்கிறேன் சுந்தர்ஜி பக்கங்கள் வழியாக. உங்களின் எழுத்துக்களைத் தொடர்ந்து இதழ்களில் பார்த்து வருகிறேன். இப்போது உங்கள் வலைப்பக்கங்களில்.
பட்டுப்புடவை என்பது விழாக் காலங்களில் மட்டுமே பயன்படுத்தும் வசதியுடைய ஆடையாக உள்ளது. எப்போதும் அடிக்கடி உடுத்த இயலாத ஒன்றாகும். இருப்பினும் பெண்கள் இருக்கும்வரைக்கும் பட்டுப்புடவை விருப்பம் இருக்கும். திப்பு சுல்தான் காலத்தில் குதிரைகள், பட்டுப்புடவை குறித்து ஆர்வங் கொண்டதாக வரலாற்றில் படித்ததாக நினைவு. மைசூர் பட்டு எனும்போது திப்புவின் நினைவு வராமலிருக்காது. செய்திகள் கூடுதல் பட்டுப்புடவை குறிதது புள்ளி விவரங்களோடு. தொடர்ந்து வாசிப்பேன் இனி.

மோகன்ஜி said...

சரிகைப் பற்றி பல தகவல்கள்..
'தங்கச் சரிகை சேலை எங்கும் பளபளக்க
... தத்தோம்,தகதோம்' என்று சாவித்திரி நவராத்திரி படத்தில் பாடும் பாட்டு நினைவுக்கு வந்தது." பழைய புடவை சரிகை வாங்குறதேய்!" என்று வியாபாரி தெருவில் அந்நாளில் கூவிக் கொண்டே செல்வதை சிறுவயதில் கண்டதுண்டு.

அப்பாதுரை said...

சட்டம் என்ன செய்ய முடியும்?