Monday, May 27, 2013

"இந்திய " (?) திரைப்படத்தின் 

நூற்றாண்டு விழா ......!!!


இந்தியாவில் முதல் திரைப்படம் என்பது வெளியாகி நூறாண்டுகள் ஆகிவிட்டன! தாதா சாகேப் பல்கே தயாரித்த "ராஜா ஹரிசந்திரா " வை முன்னிட்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது !

கலகத்தாவில் 1907ம் ஆண்டு "சென்"என்பவர் ஒரு கதைப்படத்தை தயாரித்ததாகவும் அதனை படகிலிருந்து கப்பலுக்கு கொண்டு போகும்போது கடலில் விழுந்து விட்டத்தாக்கவுமொரு செய்தி உண்டு! சித்தார்த்த கார்க் என்று திரையுலக வரலாற்றாளர் ஆசிரியராக   இருந்த cine India என்ற பத்திரிகையில் படித்தநினைவும் வருகிறது ! 

"இந்திய " திரைப்படம் எனும் போது பல கேள்விகள் எழுகின்றன!

இந்திய கலாசாரத்தை புலப்படுத்தும்படம்தானா?

"பிடிட்டிஷ்" படம் என்கிறோம் !"பிரஞ்சு"படம் என்கிறோம்! " ஜப்பானிய "படமேன்கிறோம்! அது போன்று இந்தியாவிற்கு என்று தனித்த அடையாளத்தைக் கொண்ட  "இந்திய" படம் உள்ளதா?

சத்தியஜித் ரே ,மிருணால் சென்,ரித்விக் காடக்,பிப்லவ தாஸ்,
என்று வாங்க மொழி திரைப்படங்கள் சர்வ தேச அங்கீகாரத்தை பெற்றுள்ளன!

ஜப்பார் படேலும்,ஸ்ரீராம் லாகுவும்,மோகன் அகாஷே ,விஜய் டெண்டுல்கர், என்று மராட்டிய சினிமாவின் நெஞ்சை உயர்த்திக காட்டியவர்களும் உண்டு!

பட்டபிராமைய, கிரீஷ் கர்னாட்,கராந்த் ,சங்கர் நாக் ,கிரீஷ் காசரவள்ளி என்று கன்னட திரைலகை ஆட்டிப்படைத்தவர்கள் உண்டு!

நரசிம்ம ராவ்,ஏகே.பீர் ,என்று தெலுங்கில் வலம் தந்தவர்கள் உண்டு !

கோபலகிருஷ்ணண் ,எம்.டி வி ,ஷாஜி,மலையாள சினிமாவை வளர்த்தவர்கள் உண்டு !

மகபூபும்,ஆசிபும் ,பால்ராஜ் ஸாஹாணீயும்.ராஜ் கபூரும்,அப்பாசும் இந்தி-உருது மொழி    பெசும்படங்களை துடைத்து குத்து விளக்காக்கி வைத்தார்கள்!  

வாங்க,மராத்திய ,கன்னட,தெலுங்கு,மலையாள இந்தி மொழிப்படங்களான இவை அந்தந்த பகுதிமக்களின் கலாசார,பண்பாட்டு உன்னதங்களை சித்தரிதவை யாகும்!
இவற்றில் எது" இந்திய" திரைப்படம்?

1984 வாக்கில் சென்னையில் த.மு.எ.ச நாவல்பயிற்சி முகாம்   நடத்தியது! நாவலசிரியர்களை வரவழைத்து,அவர்களின் நாவல்கள்  பற்றி விமரிசித்து அவர்களின் விளக்கங்களை பெறும் மேடையாக திகழ்ந்தது! அதில் அசோக மித்திரனின்," தண்ணீர் " நாவலை விமரிசிக்கும் வாய்ப்பு அடியேனுக்கு 
கிடைத்தது! அசோகமித்திரன் அவர்கள் வந்திருந்து கௌரவித்தார்கள்!

அந்த முகாமுக்கு திரு பாலுமஹேந்திரா அவர்களும் வந்திருந்தார்கள் !

மதிய இடைவேளையின்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் !

"ஐயா! பிரிட்டிஷ் சினிமா,பிரஞ்சு சினிமா என்பது போல இந்திய சினிமா என்று ஒன்று இருக்கிறதா ?" என்று கேட்டேன்! 

கொஞசம் யோசித்தார் ! மெதுவாக,உறுதியாக "இல்லை! உருவாக்க வேண்டும்! உருவாக்குவோம்! " என்றார்!

உருவாக்கி விட்டோமா?

பின் எப்படி !!!.







Sunday, May 26, 2013

"என்  நோற்றான் கொல்  "

எனும் "தாத்தா ".........!!!

எனது மகன் சத்திய மூர்த்தி  நாகபுரியில் என்னோடு வசிக்கிறான்! அவனுடைய ஒரே மகன் நிகால் காஷ்யப்! நன்றாகப் படிப்பான்! எட்டாவது வகுப்பில் படிக்கும் போதே  I .I .T ,மும்பையிலோ , டெல்லியிலோ படிக்க தன்னை தயார்படுத்திக் கொண்டு வருபவன்! 

C .B .S .E   பள்ளியில் படித்து வந்தான்! சென்ற ஆண்டு 10 வகுப்பு தேர்வு எழுதினான் !  எங்கள் குடும்பத்தில் ஆதர்சமாக இருந்த தலைவர்களில் ஒருவர்  மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தலைவர் 
தோழர் சித்தாராம் எச்சூரி! அவர் C .B S .E  தேசிய அளவில் முதல் மாணவனாக வெற்றிபெற்றவர்! number one in the national merit list ! அவரைமாதிரி வரவேண்டும் என்று என் பேரன் காஷ்யப் இடம் சொல்லுவேன்! அவனும் "செஞசுடுவன் தாத்தா " என்று சொல்லுவான் !

சென்ற ஆண்டு 10th தேர்வில் 8.6/ 10 வாங்கி வெற்றிபெற்றான் ! என்னை வந்துபார்க்கும்போது அவன் கைகளில் ஒருகவரைக் கொடுத்தேன்! 
அதில் பத்து ஆயிரம் ரூ நோட்டுக்களை வைத்திருந்தேன்!

எனது மகள் ஹன்ஸா  காஷ்யப்! அவளுடைய கணவர் Dr .ராமன் திருச்சியில் N .I .T ல் பேராசிரியராக  இருக்கிறார்! அவர்களுடைய ஒரே மகன் அபினவ் H .R .

திருச்சியில் அபினவ் 10 th தேர்வு எழுதியுள்ளான்! அவனிடமும் எச்சூரி பற்றி கூறி அவர் மாதிரி merit ல் வரவேண்டும் என்று  சொல்லுவேன் ! "கண்டிப்பாக தாத்தா " என்பான்! 

கோடை ஆதலால் அவனும் அவன் தாயாரும் பங்களூரு,ஊட்டி என்று சுற்றுலா போயிருக்கிறார்கள்!

நேற்று மாலை தொலை பேசியில் அபினவ் 9.8 /10 மதிப்பெண் எடுத்து வேற்றி பெற்றுள்ளதாக என்மகள் கூறினாள் !
அவனுக்கும் ஒரு கவர் காத்திருக்கிறது! 
இரண்டு பேரன்களும் சமூக அக்கரையும்,ஆரோக்கியமான, மன 
அமைதியான, நீண்ட ஆயுளோடு வாழ, நண்பர்களும்,பதிவர்களும்,தோழர்களும் வாழ்த்தி அருள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்!
















Thursday, May 23, 2013

அந்த போராளிக்குள் இருந்த 

கலைஞனை தரிசித்தேன் .......!!!

அப்போது நாங்கள் பிப்பிள்ஸ் தியேட்டர் என்ற் நாடகக் குழுவில் செயலாற் றிக்கொண்டிருந்தோம்! "நெஞ்சில் ஒரு கனல் " என்ற நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்திக் கொண்டிருந்தோம்!

தஞ்சையில் உழைக்கும் பெண்களுக்கான மாநாட்டு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! அப்போது மாவட்டத்தலவர் கே..ஆர்  ஞானசம்பந்தம் எங்கள் நாடகத்தை போட விரும்பினார் ! விவசாயிகள் ,மாணவர்கள், தொழிலாளர்கள் ஒற்றுமையை சித்தரிக்கும் நாடகம் ! எ. பாலசுப்பிரமணியம், ராமராஜ்,என்.சங்கரய்யா என்று மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் வருகிறார்கள் ! அவர்கள் முன்னால் நாடகம் என்பது எங்களை சிலிர்க்கச் 
செய்தது!
 நாடகத்தில் விவசாயிகள் தலைவராக வரும் இளைஞருக்கு  சந்திரன் என்று பெயர் வைத்தோம்! மற்றவர்கள் அவரை கூப்பிடும் போதெல்லாம் "சந்திரய்யா! சந்திரய்யா!" என்று கூப்பிடச்செய்தோம் ! அப்பொது சங்கரய்யா அவர்கள் விவசிகளிடையெ  செயலாற்றி வந்தார்! அந்தப் பெயரைச் சொல்லும் போதேல்லாம் கைதட்டல் விழும்!

ஒரு நடிகர் வேண்டு மென்றே " சந்திரய்யா"என்பதற்குப் பதிலாக "சங்கரய்யா "
என்பார்!" எப்பா! சங்கரய்ய இல்லை! சந்திரய்யா !" என்று திருத்துவார்! " அடுத்தவர் "ரெண்டுமொண்ணுதான்பா " என்பார்!(இயக்குனரின் சாமர்த்தியம்)

திருவாரூரா ,திருவையாரா பெயர் நினைவில் இல்லை ! நிகழ்ச்சிக்கு தெலுங்கானா போராட்ட வீராங்கனை சுயராஜ்யம் தலைமையில் பெண் போராளிகள் வந்திருந்தனர்!

இவர்கள் முன்னாள் நடிக்கும் வாய்ப்பு ! நடிகர்கள் உற்சாகமாக இருந்தனர்! நாடகம் முடிந்ததம் தலைவர்களின் விமரிசனத்தைக் கேட்க துடித்துக் கொண்டிருந்தோம்!

நாடகம் முடிந்தது ! என்.எஸ் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார் ! அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்! என்னை கவனித்த அவர் " தோழர் ! நாம பேசுவோம்! நாளைக்கு காலைல 8 மணிக்கு நாம ரெண்டு பேரும் ஒருத்தர பாககபோறோம்! தயாரா இருங்க! "என்றார்.  

நாடகத்தை பார்த்த விவசாய பெருங்குடி மக்கள் எங்கள் நடிகர்களை சூழ்ந்து கொண்டனர்! பண்ணையாராக நடித்த துரைராஜை சுற்றி " தோழர்கள் " புகழ்ந்துகோண்டிருந்தனர்! "டேய் ! சாதி ஒழிஞ்சு போச்சு ! சாதிஒழிஞ்சு போச்சு நு ! சினிமால ஸ்லைடு போடலாம்! அவனவன் அவன்சாதிய வைச்சு போழக்கிறான் " என்று கூறுவதை பெசிப்பேசி புகழ்ந்தனர்!  எல்.ஐ சி தோழர் சூரியபோஸ் சந்திரய்யவாக நடிப்பார்கள்! அவர ஆண்களும் பெண்களுமாக தோட்டுப்பார்த்து மகிழ்வார்கள்!

மாநாடும் நாடகமும் ராமநாதன் செட்டியார் தோட்டத்திஉள்ள பள்ளிக்கூடத்தில்நடந்தது!  
 இடம் கொடுத்து உதவிய ராமநாதன் அவர்களைச் சந்தித்து நன்றி சொல்ல என்னையும் அழைத்துச்சென்றார்! 

நாற்பது ஐம்பது வயதிருக்கும்! தும்ப்பைப்பு வெண்மையில் உயர்ரக கதர் துணியில் சட்டையும் வேட்டியுமணிந்திருந்தார்! ஒழுங்காக மழிக்கப்பட்ட முகம் மின்னியது! நல்ல ஆங்கிலமும் தமிழும் பேசினார்!  
அவர்கள் தோட்டத்தில் இரண்டு டிராக்டர்கள் இருந்தன! காகி கால்சட்டையும்  முண்டாபனியனுமணிந்த இரன்டு பேர் கொடுவாள் மீசையுடன் அதன் அருகில் துடைத்துக்கொண்டு இருந்தனர்! 
நாங்கள் திரும்பினோம்!    

"'காஸ்யபன்!நாம பார்த்தது தான் ராமநாதன்!பெரிய மிராசுதார்! எப்படீருக்கிறார் பார்த்தீர்களா ? உங்கள் நாடகப் பண்ணையார்,கொடுவாள் மிசையும்,உடம்பு பூரா சந்தானம் பூசி இருந்தார் ! பண்ணைக் கூலி ட்ராக்டர் ஓட்டறான்! டிக்டர்னால  அவன் பத்து பேர் கூலி போகுதேன்னு தெரியாதவன் அவன் ! சின்னப்புள்ளைங்க சிலேட்டுல ஒண்ணும் ஒண்ணுமிரண்டு எழுதி அழிக்கும்! அப்புரம்ரெண்டும்ரெண்டும் நாலுன்னு எழுதும்!அதுமாதிரி இல்ல இது! கூலி விவசாயின்ன அப்பாவி ங்கரதுமில்ல! பண்ணையார்னா முரடன்னும் இல்ல !  இரண்டு பேருக்கும் அனுபவம் கத்துக்கொடுக்குது!  யதார்த்தம் உருவத்தையும்மாத்துது ! பண்ணையார்  உள்ளம் மாறியிருக்கா ! தெரியாது! ஆனா    உருவம் மாறியிருக்கு! எல்லாமே  நவீனப்படுத்தப் படுகிறது !"
கொஞ்சம் இடை வெளி  விட்டார்! 
"நல்லாருந்தது! நாடகம் நல்லாருந்தது ! " என்று கூறி புறப்பட்டார்!

நான் அந்த போராளிக்குள் இருந்த கலைஞனை தரிசித்தேன்! 
































  

  








Tuesday, May 21, 2013

கிரிகெட் சூதட்டமா .......!!!

ஒரு பயல ஒண்ணும் செய்ய  முடியாது ....!!!


எங்க ஊருல இருந்து மாமா வந்திருந்தாரு! தேக்க   "திநேலி  " தான் சொந்த ஊரு! தாசில்தாரா இருந்து ரிடையர் ஆனவரு! ஒரு ஆள  மதிக்க மாட்டாரு ! ஒரு ஆள்ட பேசினா நாலு பெர்கூட சண்டைவரும்! 

"என்ன வெக்கை டே உன்கூர்ல? "
"இன்னக்கி  47.5 மாமா!"
மாமாவை இன்னிக்கு ராத்திரி பங்களுருக்கு விமானத்துல அனுப்பணம்! அங்கேருந்து திருவனந்தபுரம் போய் அம்பை போய்டுவாரு!

"ஏம்பா! எ.சி ரூம்புலயெ இந்தப்பாடா இருக்கே! சனங்க என்ன பாடுபடும் " என்றார் மாமா! "ஒருசவுகரியம் டே இங்க! கரண்ட் கட்டு இல்ல! எங்கவூருன  எப்ப சொல்லமுடியாது ! வள்ளிசா கரண்டுஇல்லனுதான் வச்சுக்கணும் "

"நீரு விரவனல்லுர்ல சிம்னி விளக்குல தானவே படிச்சேரூ "

"சின்னபுள்ளய இருக்கும் பொது தெருவுல "டங் டங் "நு ஆட்டிகிட்டுபோன! இப்ப எனத்துக்குல கோமணம் கட்டுத!"

மேல பேசினா அசிங்கமசிங்கமா  போசுவாரு !

"நாங்க 46ம் ஆண்டுல இங்க இருந்த போது கரண்டு கிடையாது ! எப்படீருந்தோம்னே தெரியல!"

"இப்பவும் என்ன கிழிச்சிப் புட்டணுவ! சைக்கில் ரிக்சா இழுக்கன்! செருப்பு தைக்காண்! ஜீஸ் விக்கான் !அவனுக்கு மட்டும் வெக்கைஇல்லயா !"
மாமா எழுந்து குளிர்ந்த தண்ணிரைகுடித்தார் !" பேப்பர்ல என்னடே போட்டுருக்கான் ?"
"ஸ்ரீசாந்தை  கைது பண்ணியிருக்காங்க ?

"அவன் ஒரு அகராதி புடிச்ச பயல்லா"

"சூதாட்டம் ஆடியிருக்கான்!?"

"ஷாருக்கான் என்ன ஆட்டமாடுதான்! சீனிவாசன் என்ன ஆட்டம் ஆடுதான் !" மாமா சூடானார்!
"அம்ம்புட்டு பயலும் திருட்டு பயலுக ! ஒரே அமுக்க அமுக்கிடுவான் பாரு! "

"யாரை? ஸ்ரீசாந்தையா!"

"ம - - சாந்தை ! தேர்தல்ல தோத்துப் போனான் ! அறிவிச்சாங்க! அப்புறம் ஜெயிச்சாநாக ! மந்திரி  ஆயிடான்னாக !"

"மாமா இது அப்படி இல்லை மாமா!கையும் களவுமா பிடிச்சு இருக்காங்க !"

"ஜாடேஜா  என்னால ஆச்சு ?

"அது...!"நான் இழுத்தேன்

"அசாருதீன்  என்ன ஆச்சு! காங்கிரஸ்ல சேர்ந்தான் !  எம்பிஆனான்! " 

"அப்பம்"

"ஒரு பயல ஒண்ணும் பண்ணமுடியாது!" மாமா முடிவா சொன்னார் !!!








Saturday, May 18, 2013

விளையாட்டில் சூதாட்டம் !

1919ம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பம் ...!!!


இந்திய கிரிகேட் விளையாட்டில்சூதாட்டம் என்று ஊடகங்கள் கோட்டிமுழக்குகிண்றன! இதில் நிபுணர்கள் விவாதம் என்ற பெயரில் முன்னாள் கிரிகெட் வீரர்களும் வருகிறார்கள்! வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த டாலர்களை பதுக்கி "லாக்கர்"களில் வைத்தவர்களும், வரி கொடுக்காமல்  ஏமாற்றி வாகனங்களைக் கொண்டுவந்த  கிரிகேட் வீரர்களும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்!

இந்த விளையாட்டு சூதாட்டம் பற்றிய முதல் சிக்கல் 1919ம் ஆஅண்டு அமெரிக்காவில்தோடங்கியது! அந்த நாட்டில்   "பேஸ்பால் " மிகவும் முக்கியமான விளையாட்டு! 

குறிப்பாக சிகாகோவில் சர்வதேச ஆளவில் பந்தயம்  நடக்கும்! ஆயிரக் காணக்கில் சூதாட்டம் இடம் பெரும்!

1919ம் ஆண்டு சிகாகோவில் மிகவும் பிரசித்தமான சிகாகோ வைட் சாக்ஸ் (chicoko white sox ) என்ற அணிவிளையாட விருந்தது! அதனை எதிர்த்து ரெட் சாக்ஸ் என்ற அணி இறுதிப் போட்டியில் விளையாடியது!

சூதாட்டக் காரர்கள் வைட் அணியில் உள்ள ஆர்னால்டு காந்தில் என்ற வீரரை பிடித்தனர்! அவர் தன அணியில்மேலுமெட்டுபேரை பிடித்தார்!  இந்த உள் குத்து வேலை தெரிந்ததும் அதிகாரிகள் அவர்களை வேளியேற்றினார்கள் 

ரெட் சாக்ஸ் அணி வென்றதாக அறிவித்தார்கள் !

அமெரிக்காவின் மிகப் பெரிய தாதாக்கள்  இதில் பங்கெடுத்தார்கள்!



விளையாட்டு அரங்கில் chicoko white sox  scandel  என்பது முக்கியமானது !

சிலர் அதனை black sox scandel என்றும் கூறுவர்!















Friday, May 17, 2013

யார் அந்த கிருஷ்ணன் .......?

சிவந்தி பட்டி என்ற சிறு கிராமம் திருநெல்வேலியிலிருந்து 13 கி.மீ தூரத்தில உள்ளது! தினம் அந்த கிராமத்து மக்கள் திருனெல்வேலி வந்து போவார்கள் கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் தான் அங்கு செல்ல்கிறது!

பாளையங்கோட்டை பள்ளிகள்,கல்லூரிகள் ,தவிர மக்களும் தங்கள் விளை பொருட்களான  காய்கறி போன்றவைகளையும் கொண்டு செல்வார்கள் !

பேருந்து முதலில் பாஞ்சாயத்து அலுவலகம் முன் நிற்கும்! அடுத்து அம்மன் கோயில்! கடைசியாக அரிசி மில் நிறுத்தம் ! அதேபோல் அரிசிமில்லிருந்து  புறப்படும்! 

அந்த பஞசாயத்து தலைவராக இருந்தவர் கொலை  செய்யப்படுகிறார்! அவர் மேல்சாதி! அதனால் கலவரம் வந்தது!பேருந்து சேவை நிறுத்தப்பட்டது!

பல முறையிட்டுக்குப் பிறகு மீண்டும் சேவை வந்தது! ஆனால் பேருந்து  
அரிசிமில் வராமல் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தது ! அரசி மில் பகுதியில் வாழ்ந்த மக்கள் சமார் இரண்டு கி.மீ நடந்துந்தான் பேருந்தை பிடிக்கவேண்டும் !

இதனை  மாற்றி அரிசிமில் வரை வர பலமுறை மனு கொடுத்தும்  பயனில்லை !

விவசாயப் பெருங்குடி மக்கள் அதனால் அவதிக்குள்ளாகினர் ! புறப்படும் இடம் மாற்றப்பட்டதற்கான காரணமும் அதிகாரிகள் சொல்லவில்லை!

திருநெல்வேலியில் வழக்கறிக்ணராக இருந்த வக்கீல் கிருஷ்ணன் பொதுநல வழக்கினை போட்டர்! உயர்  நீதி மன்றம் விசாரித்தது!கோப்புகளை வரவழைத்து பரிசிலித்தது!

அப்போதுதான் அந்த உண்மை தெரியவந்தது! "அரிசிமில் அருகில்தான் தலித் காலனி உள்ளது! பேருந்து அங்கிருந்து புறப்பட்டால் தலித் பயணிகள் இருக்கைகள்  முழவதும் அமர்ந்து கொள்கிறார்கள்! பஞ்சாயத்து  , அம்மன் கோவில் நிறுத்தத்திலிருந்து ஏறும் மேல்சாதி பயணிகள் நிற்க வேண்டி வருகிறது! அதனால் பேருந்து பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து புறப்பட வேண்டும் என்று காவல் துறை ஆணையர் போக்குவரத்துக்கு கழகத்திற்கு உத்திரவிட்டிருந்தார்!

இந்த நவீன தீண்டாமையை அனுமதிக்க மறுத்த உயர் நீதி மன்றம் மறுபடியும் அரிசி ஆலையிலிருந்து புறப்பட வேண்டும் என்று உத்திரவிட்டது! 




வக்கீல் கிருஷ்ணன் வசுதேவ நல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ! நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் ஆவார்!
















Tuesday, May 14, 2013

"பக்த  ராமதாசும் "

நவாபும்......!!!

 பதிவுலக நண்பர் மோகன் ஜீ  அவர்களின் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டம் போட்ட  போது "பக்த ராமதாஸ் பற்றி குறிப்பிட்டிருந்தேன்! அதை யோட்டி என்னுடைய நினைவுகள் பின்னோக்கி சென்றது!

நான் சிறுவனாக இருந்த போது நாடகங்கள்பார்க்க கல்லிடைக் குறிச்சி செல்வோம்!  அப்போது கல்லிடை ரயில் நிலையம் முன்பு ஒரு நாடகக்கொட்டகை இருந்த நினைவு இருக்கிறது! அங்கு மதுரை தேவி பாலசங்கீத நாடக சபா குழுவினர் நாடகம் போடுவார்கள் ! "கிருஷ்ண லீலா ",,"சுவாமி ஐயப்பன் " பக்த ராமதாஸ் " என்று நாடகங்கள் நடக்கும்!

அந்த நாடகக்கம்பெனியின் முதலாளி ராஜமாணிக்கம்பிள்ளை  ! மிகச்சிறந்த நடிகர்! நுற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள்,தோழிலாளர்களை வைத்து நாடகம் போடுவார்! சிறந்த தேசபக்தர்! சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்!

அவர் "பக்த ராமதாஸ் " நாடகம் போட்டால் கூட்டம் மொய்க்கும்!  
அவர்தான் நவாபாக நடிப்பார்! இந்தியா பூராவும் சென்று நாடகங்களை போட்டுள்ளார்! 
 ஒருமுறை மைசூரில் "பக்த ராமதாஸ்" நாடகத்தை மைசூர் மகாராஜா ஜெய சாமராஜ்முன்னிலையில் போட்டார்!

நவாபாக அவர்  நடித்ததைக் கண்டு சொக்கிப்போன  மகாராஜா தன அரண்மனையிலிருந்து தன்னுடைய ராஜ உடை ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்து "இனி   இந்தக்காட்சியில் இந்த உடையப் போட்டுக்கொண்டு நடிக்கவேண்டும் " என்று கூறி "இன்றிலிருந்து உமக்கு "நவாப்" "என்ற பட்டத்தை அளிப்பதாக அறிவித்தார்!
    
அன்றிலிருந்து ராஜமாணிக்கம் பிள்ளை "நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை " 
ஆனார்!









Thursday, May 09, 2013

வடக்கே  புத்தன் சிந்தன்

V P C.....!!!

அப்பபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மதுரையில் செயல் பட்டு வந்தது !அங்கு சென்று சிறு சிறு பணிகளை ச் செய்வது உண்டு !
மாநில அளவில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கான எற்பாடுகளைச் செய்ய தலைவர்கள் வந்திருந்தார்கள் !தீர்மானங்கள் ,அறிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சொல்லச்சொல்ல எழுதி கொடுக்க வேண்டும் .

சென்னையிலிருந்து வந்த அவர் சொல்லிக்கொண்டு வந்தார்! நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் ! "சரி ! எங்க போய் சாப்பிடப் போற ?" என்று கேட்டார் !
என் பையில் நான் கொண்டுவந்த தை சொன்னேன்! "நானும் சாப்பிடலாமா ?" 
நடுத்தர குடும்பம் ! நான் என்ன பஞ்ச பரமான்னமா கொண்டு வந்திருப்பேன் ! வெட்கமாக இருந்தது ! அவர் எவ்வளவு பெரியதலைவர்! 
பிரித்தேன் ! நான்கு கோதுமை பரோட்டா ! வெஞசனமாக தேங்காய் கலந்த கீரைக் கடைசல் !
 அவருக்கு இரண்டு,எனக்கு இரண்டு என்று பகிர்ந்தோம் ! 
"உன்மனைவி என்ன மலையாளப் பக்கமா?"என்று கேட்டார் !
"இல்லை தோழர் ! நான் நெல்லை மாவட்டம் ! ஆழ்வார்குறிச்சி ! திருவனந்தபுரத்து தொடர்பு உண்டு "என்றேன்!
"எங்கள் ஊர் காரர்கள் செய்வது மாதிரியே கீரை இருந்தது அதனால் தான் கேட்டேன்!"என்றார் !
நான் காப்பி குடிக்க சென்றேன்! அவர் காப்பி குடிக்க மாட்டார்! என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார்! மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம்! அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது ! பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் ! எனக்கு பெருமை தாங்கவில்லை ! முக்கில் உள்ள கோபி ஐயங்கார் கடைஅருகில்  காபி அருந்தினேன்  ! அவர் எதுவும் சாப்பிட மறுத்து விட்டார்! 
"ஆமா ! நீ என்ன பண்ற ?"
சொன்னேன் !
"கட்சில மேம்பராயிட்டயா?"
"இல்ல "  
"ஏன் ?"
என் வாய்க் கொழுப்பு ! 
"I  don't have any objection " என்றேன்!
கனமான கண்ணாடிக்குள் இருந்து  with a sharp look and broad smile 
"நீ பாதி உறுப்பினராகத்தான்முடியும் " என்றார்!
"ஏன் ?" 
"மறு பாதி கட்சிக்கு உன்னை உறுப்பினராக்க objection இருக்கக் கூடாதல்லவா!"  
எழுந்து செல்லமாக என்தலையில் குட்டி" வா! போகலாம் " என்றார்!
அவர் குட்ட வில்லை !
என்னை ஆசீர்வதித்தார் !என் கொழுப்பு கரைய !!
 இந்த ஆண்டும் என் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து விட்டேன் தோழா!

என்னை ஆசீர்வதியும்!!!





vpc 

Saturday, May 04, 2013

"ஜனாதிபதி"யின் முன்னால் 

நடித்தேன் .........!!!


1957-62 ம் ஆண்டுகளில் ஹைதிராபாத்தில்பணியாற்றிக் கொண்டிருந்தேன்  ! அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் திராவிடக் குஞ்சுகள் "வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது  என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள் ! இதற்கு மாற்றாக ராஜாஜி "தட்சிணப் பிரதேசம் " என்று பூச்சாண்டி 
காட்டிக்கொண்டிருந்தார்!

இந்த இரண்டையும்முறியடிக்க காங்கிரஸ் ஒரு வழி பண்ணியது ! அதன் படி  டெல்லியில் இருக்கும் ஜனாதிபதி தென் இந்திய மக்களுக்கு அருகில் ஆண்டுக்கு ஒரு மாதம் தங்க வேண்டும் என்றும் ஒவ்வோரு ஆண்டும்  
ஆகஸ்டுமாத வாக்கில் ஹைதிராபாத்தில் தங்க  வேண்டும் என்றும்முடிவு செய்தது !

ஆந்திரப்பிரதேசம் உருவாகி  கர்னூலிலிருந்து ஹைதிராபாத் தலைநகராக மாறியது!கடல் கரை  யோர ஆந்திர ரெட்டிகளும், கம்மா நாயுடுகளும் ஹைதிராபாத்தில்  ஆதிக்கம் செய்ய இன்னும்   ஆரம்பிக்கவில்லை! சமஸ்தானத்தின் நல்லதும் பொல்லாததும் மிச்ச சொச்சங்களாக நடைமுறை இருந்தது! 

ஹைதிராபாத்தில் தமிழர்கள்,கன்னடியர்கள்,மலையாளிகள் அரசு பணியில் இருந்த காலம் அது! நிஜாமின் திவான் பகதூராக ஆராவாமுத ஐயங்கார் என்பவர் இருந்த காலத்தில்.தஞ்சை,திருச்சி, திருனெல்வேலி சாமிமார்கள் அரசு வேலைகளில் வந்தார்கள் ! அவர்களுக்காக உருவானது தான் South Indian cultural Association ஆகும்! உயர் நிதிமன்ற நீதிபதி சீனிவாசாசாரியார்  தலைவராக இருந்தார்! A G "s .postal audit ,income tax ஆகிய மத்திய அலுவலகங்கள் பூராவும் நம்மூர் ஆட்கள் தான் ! sica  கொடிகட்டி பரந்த காலம் அது!

நாடகம் போட முடிவாகியது ! ag ஆபிஸ் கணேசன் இயக்குனர்! சீனிவாசன் 
(IRS ),ta நரசிம்மன் நடிப்பு ! என்போன்ற எடு பிடிகளுக்கு சின்ன பாத்திரங்கள்! தேவனின் "மிஸ்.ஜானகி  "நாடகம் !  

அது ஆகஸ்டு மாதம்! ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஹைதிராபாத்தில் தங்கி இருக்கிறார்! பெரியவர்கள் மூலம் அவரை அழை க்க முடிவாகியது !அவரும் எற்றுக் கொண்டார்! ஒரு  நிபந்தன !  நாடகம் ஆரம்பித்து அரைமணி நேரம் கழி த்து கிளம்பி விடுவார்! இது ஏற்பாடு ! நிர்வாகிகள் இதனை வெளியில் சொல்ல வில்லை! தெரிந்ததும்கலாட்ட ஆரம்பித்தது!

கதாநாயகன் ,நாயகி அரை மணி நேரம் கழித்து தான் வருவார்! பலவாறு யோசனை செய்து கதாநாயகனும் கதாநாயகியும் வரும் காட்சியை முதலில் கொண்டுவர முடிவாகியது! நாங்கள் விடுவோமா! நாங்களும் ஜனாதிபதிமுன் நடிக்கக் கூடாதா ? மீண்டும் சிக்கல் !

இறுதியில் ஒரு ஆள் தெரியும் அளவு திரை  திறக்கப்படும்! ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுடைய முக்கிய வசனத்தை ஜனாதிபதி  பார்க்க சொல்லிவிட வேண்டும்! இந்த ஜனநாயக நடைமுறையை உருவாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு! எல்லாரும் என்னையும்பாராட்டினார்கள் !

எனக்கு உள்ள வசனத்தில் "ஐயா ! பக்கத்து சந்தில் இருக்கிறான் " என்று கூவ வேண்டும்!

என் முறை வந்தது! பயமாக வும் டென்ஷனாகவும் இருந்தது!இந்தியாவின் ஜனாதிபதி முன் நடிக்கப் போகிறேன் !

இயக்குனர் சியாமளம்- எல்.ஐ .சி என்று அறிவித்தார்! 1 ஆயிரம் முறை சொல்லிப் பார்த்த வசனம் ! சென்றேன்! நின்றேன் ! போகஸ்\லைட் என்மீது விழுந்தது ! 

"ஐயா ! சக்கத்து பந்தில் இருக்கிறான் " என்று கூவினேன் ! 

அரங்கமே அதிர சிரிப்பொலி !

ஏன் சிரித்தார்கள் ?

சக நடிகர்கள் மேடையில் இருப்பவர்கள் எல்லாருமே கைகொட்டி சிரித்தார்கள் !

ஜனாதிபதி சிரித்தாரா ? 

தெரியவில்லை !

ஏன் சிரிக்கிறார்கள் !!!