Thursday, May 09, 2013

வடக்கே  புத்தன் சிந்தன்

V P C.....!!!

அப்பபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மதுரையில் செயல் பட்டு வந்தது !அங்கு சென்று சிறு சிறு பணிகளை ச் செய்வது உண்டு !
மாநில அளவில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கான எற்பாடுகளைச் செய்ய தலைவர்கள் வந்திருந்தார்கள் !தீர்மானங்கள் ,அறிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சொல்லச்சொல்ல எழுதி கொடுக்க வேண்டும் .

சென்னையிலிருந்து வந்த அவர் சொல்லிக்கொண்டு வந்தார்! நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் ! "சரி ! எங்க போய் சாப்பிடப் போற ?" என்று கேட்டார் !
என் பையில் நான் கொண்டுவந்த தை சொன்னேன்! "நானும் சாப்பிடலாமா ?" 
நடுத்தர குடும்பம் ! நான் என்ன பஞ்ச பரமான்னமா கொண்டு வந்திருப்பேன் ! வெட்கமாக இருந்தது ! அவர் எவ்வளவு பெரியதலைவர்! 
பிரித்தேன் ! நான்கு கோதுமை பரோட்டா ! வெஞசனமாக தேங்காய் கலந்த கீரைக் கடைசல் !
 அவருக்கு இரண்டு,எனக்கு இரண்டு என்று பகிர்ந்தோம் ! 
"உன்மனைவி என்ன மலையாளப் பக்கமா?"என்று கேட்டார் !
"இல்லை தோழர் ! நான் நெல்லை மாவட்டம் ! ஆழ்வார்குறிச்சி ! திருவனந்தபுரத்து தொடர்பு உண்டு "என்றேன்!
"எங்கள் ஊர் காரர்கள் செய்வது மாதிரியே கீரை இருந்தது அதனால் தான் கேட்டேன்!"என்றார் !
நான் காப்பி குடிக்க சென்றேன்! அவர் காப்பி குடிக்க மாட்டார்! என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார்! மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம்! அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது ! பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் ! எனக்கு பெருமை தாங்கவில்லை ! முக்கில் உள்ள கோபி ஐயங்கார் கடைஅருகில்  காபி அருந்தினேன்  ! அவர் எதுவும் சாப்பிட மறுத்து விட்டார்! 
"ஆமா ! நீ என்ன பண்ற ?"
சொன்னேன் !
"கட்சில மேம்பராயிட்டயா?"
"இல்ல "  
"ஏன் ?"
என் வாய்க் கொழுப்பு ! 
"I  don't have any objection " என்றேன்!
கனமான கண்ணாடிக்குள் இருந்து  with a sharp look and broad smile 
"நீ பாதி உறுப்பினராகத்தான்முடியும் " என்றார்!
"ஏன் ?" 
"மறு பாதி கட்சிக்கு உன்னை உறுப்பினராக்க objection இருக்கக் கூடாதல்லவா!"  
எழுந்து செல்லமாக என்தலையில் குட்டி" வா! போகலாம் " என்றார்!
அவர் குட்ட வில்லை !
என்னை ஆசீர்வதித்தார் !என் கொழுப்பு கரைய !!
 இந்த ஆண்டும் என் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து விட்டேன் தோழா!

என்னை ஆசீர்வதியும்!!!

vpc 

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நிச்சயம் ஆசிர்வதிப்பார்

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

வி பி சிந்தனா? செய்தியைச் சொன்ன பண்பும்.. அதைப் புரிந்து கொண்ட உங்கள் பெருந்தன்மையும்.. சுவாரசிமான நினைவு.

தேங்காய் கீரை கடைசல் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன்.

hariharan said...

அருமையான நினைவுகள்..