Monday, May 27, 2013

"இந்திய " (?) திரைப்படத்தின் 

நூற்றாண்டு விழா ......!!!


இந்தியாவில் முதல் திரைப்படம் என்பது வெளியாகி நூறாண்டுகள் ஆகிவிட்டன! தாதா சாகேப் பல்கே தயாரித்த "ராஜா ஹரிசந்திரா " வை முன்னிட்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது !

கலகத்தாவில் 1907ம் ஆண்டு "சென்"என்பவர் ஒரு கதைப்படத்தை தயாரித்ததாகவும் அதனை படகிலிருந்து கப்பலுக்கு கொண்டு போகும்போது கடலில் விழுந்து விட்டத்தாக்கவுமொரு செய்தி உண்டு! சித்தார்த்த கார்க் என்று திரையுலக வரலாற்றாளர் ஆசிரியராக   இருந்த cine India என்ற பத்திரிகையில் படித்தநினைவும் வருகிறது ! 

"இந்திய " திரைப்படம் எனும் போது பல கேள்விகள் எழுகின்றன!

இந்திய கலாசாரத்தை புலப்படுத்தும்படம்தானா?

"பிடிட்டிஷ்" படம் என்கிறோம் !"பிரஞ்சு"படம் என்கிறோம்! " ஜப்பானிய "படமேன்கிறோம்! அது போன்று இந்தியாவிற்கு என்று தனித்த அடையாளத்தைக் கொண்ட  "இந்திய" படம் உள்ளதா?

சத்தியஜித் ரே ,மிருணால் சென்,ரித்விக் காடக்,பிப்லவ தாஸ்,
என்று வாங்க மொழி திரைப்படங்கள் சர்வ தேச அங்கீகாரத்தை பெற்றுள்ளன!

ஜப்பார் படேலும்,ஸ்ரீராம் லாகுவும்,மோகன் அகாஷே ,விஜய் டெண்டுல்கர், என்று மராட்டிய சினிமாவின் நெஞ்சை உயர்த்திக காட்டியவர்களும் உண்டு!

பட்டபிராமைய, கிரீஷ் கர்னாட்,கராந்த் ,சங்கர் நாக் ,கிரீஷ் காசரவள்ளி என்று கன்னட திரைலகை ஆட்டிப்படைத்தவர்கள் உண்டு!

நரசிம்ம ராவ்,ஏகே.பீர் ,என்று தெலுங்கில் வலம் தந்தவர்கள் உண்டு !

கோபலகிருஷ்ணண் ,எம்.டி வி ,ஷாஜி,மலையாள சினிமாவை வளர்த்தவர்கள் உண்டு !

மகபூபும்,ஆசிபும் ,பால்ராஜ் ஸாஹாணீயும்.ராஜ் கபூரும்,அப்பாசும் இந்தி-உருது மொழி    பெசும்படங்களை துடைத்து குத்து விளக்காக்கி வைத்தார்கள்!  

வாங்க,மராத்திய ,கன்னட,தெலுங்கு,மலையாள இந்தி மொழிப்படங்களான இவை அந்தந்த பகுதிமக்களின் கலாசார,பண்பாட்டு உன்னதங்களை சித்தரிதவை யாகும்!
இவற்றில் எது" இந்திய" திரைப்படம்?

1984 வாக்கில் சென்னையில் த.மு.எ.ச நாவல்பயிற்சி முகாம்   நடத்தியது! நாவலசிரியர்களை வரவழைத்து,அவர்களின் நாவல்கள்  பற்றி விமரிசித்து அவர்களின் விளக்கங்களை பெறும் மேடையாக திகழ்ந்தது! அதில் அசோக மித்திரனின்," தண்ணீர் " நாவலை விமரிசிக்கும் வாய்ப்பு அடியேனுக்கு 
கிடைத்தது! அசோகமித்திரன் அவர்கள் வந்திருந்து கௌரவித்தார்கள்!

அந்த முகாமுக்கு திரு பாலுமஹேந்திரா அவர்களும் வந்திருந்தார்கள் !

மதிய இடைவேளையின்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் !

"ஐயா! பிரிட்டிஷ் சினிமா,பிரஞ்சு சினிமா என்பது போல இந்திய சினிமா என்று ஒன்று இருக்கிறதா ?" என்று கேட்டேன்! 

கொஞசம் யோசித்தார் ! மெதுவாக,உறுதியாக "இல்லை! உருவாக்க வேண்டும்! உருவாக்குவோம்! " என்றார்!

உருவாக்கி விட்டோமா?

பின் எப்படி !!!.







2 comments:

அப்பாதுரை said...

'தண்ணீர்' நான் மிகவும் விரும்பிப் படித்த புத்தகம். நாலைந்து முறை படித்திருக்கிறேன். (சில 'நடை' டெக்னிக்குகளை மோசமாக காப்பி அடித்திருக்கிறேன்)

ஹாலிவுட்டில் இந்தியச் சினிமாவுக்கு நிறைய மதிப்பு இருக்கிறது. 'we make movies, you make films' என்று இந்தியர்களைப் பற்றி அடிக்கடி சொல்கிறார்கள். பேச்சுக்காகச் சொல்கிறார்களோ?

இந்திய சினிமாவில் தமிழ் கொஞ்சம் கூட தலைகாட்டவில்லையா?! இந்திய அளவில் கூட தமிழ் சினிமா உருப்படாமல் போனதற்கும் தொடர்ந்து உருப்படாமலே இருப்பதற்கும் என்ன காரணம்? உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ஆசை.

சிவகுமாரன் said...

தெலுங்கு சினிமாவை விட தமிழ் சினிமா உருப்படாமல் போய் விட்டதா? வன்மையாக கண்டிக்கிறேன்.