பாவம் ..! அரவிந்த் கேசரிவால் .......!
"I am not against capitalism ! I am against crony capitalism " என்று அரவிந்த் கெசரிவால் !
அறிவித்துள்ளார் !
ஐயா உங்களை முதலாளிகளுக்கு எதிரானவர் என்று எவரும் நினக்கவில்லை ! உங்கள் உருவாக்கமே அவர்களுடையது தான் !
1740 ம் ஆண்டுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டதும் ஐரோப்பாவில் ,குறிப்பாக பிரிட்டனில் மூலதனத்திற்காக அவர்கள் செய்த காரியங்களும் வரலாறு !
சுரண்டலின் சுருக்கம் தோய்ந்த முகம் தான் மூலதனம் என்பது வரலாறு !
கிழ்திசை நாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக கப்பல் களில் செல்லும் சரக்கை கொள்ளையடித்து மூலதனம் சேர்த்த கதை தெரியும் !
அப்படி கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களை வரவேற்றதும்தெரியும் !
கொள்ளையர் தலைவன் வால்டர் ஸ்காட் "sir walter scot " ஆனதும் தெரியும் !
அது என்ன crony capitalism ?
முதலாளித்துவம் வேண்டும் ! சலுகை சார் முதலாளித்துவம் வேண்டாம் !
இந்திய அரசு ஐந்துலட்சம்கொடி சொச்சம் ரூபாய் வரிச்சலுகை அளித்துள்ளது ! முதலாளிமார்களுக்கு !
இந்தவரிகளில் பெரும் தொகை மாநிலங்களுக்கு பங்கிட்டு அவர்களின் நலத்திட்டங்களுக்கு அளிக்கப்பட வேண்டியவை !
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு போட்டார் சிதம்பரம் !
இந்ததொகையில் காலணாவை உங்களால் திரும்பிப் பெற முடியுமா அரவிந்த்ஜி !
ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட அந்தக் கிழவரின் சேக்காளி நீங்கள் !
இப்போது தனிக்கடை ஆரம்பித்திருக்கிறிர்கள் !
அமெரிக்க முலதனம் சட்ட விரோத காரியங்களுக்கு லஞ்சம் கொடுக்கும் !
இந்தியாவில் சட்ட பூர்வ காரியங்களுக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் !
என்ரானிலிருந்து, வேதாந்தா வரை அப்படித்தான் நுழைந்தார்கள் !
இன்று அவர்கள் கைகள் ஓங்கி இருக்கிறது 1
எதற்காக கொடுக்கவேண்டும் ?
நீங்கள் voice கொடுக்கிறிர்கள் !
அதில்பிசிரடித்தால் .....!
டெல்லியில் நடந்தது நடக்கும் !
அரவிந்தஜி ! உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது !!!
2 comments:
வணக்கம் அய்யா . பாவமாகத தான் இருக்கிறது எனக்கும். வேறு சிலரைப் பார்த்தும்.
ஆகா ! சிவகுமரன் ! எப்படி இருக்கிறீர்கள் ? பையன் எப்படி படிக்கிறான் ! வாழ்த்துக்கள் !---காஸ்யபன்.
Post a Comment