உணவு,உரம், எரிவாயு மானியம் .....?
ஏழை மக்களின் உணவுப்பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியம்,ஏழை விவசாயிகளுக்காக உரத்திற்கு அளிக்கப்பட்டு வரும்மனியம்,சமையல் எரிவாயுவுக்கான மானியம் நமது பொருளாதார நிபுனர்களின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்த ஒன்று !
பர்மா ஷெல், ஸ்டாண்டர்டு வாக்குவம்,ஈஸ்டர்ன் ஆயிலென்று பன்னாட்டுகம்பெனிகளை இந்தியமயமாக்கி இறுதியில் இந்தியன் ஆயில்கம்பெனியை ஒரு பிரும்மாண்டமான நிருவனமாக்கினார்கள் ! இதற்காக உழைத்தவர் இந்திராகாந்தி அமையாரின் கணவர் ஃ பெரோஸ் காந்தியாகும் !
பொதுத்துறையில் இருந்ததை தனியாரிடம் கொடுத்தார்கள் ! இதில் முன் நின்று செயல்பட்டது \பா.ஜ.க.. குறிப்பாக அம்பானி குழுமம்! தனியார் எண் ணை கம்பெனிகளுக்கு நட்டம்வரக்கூடாது என்பதற்காக எண்ணை விலையை உயர்த்தினார்கள் ! எரிவாயு விலையை உயர்த்தினார்கள் !
எளியமக்களின் நலம்காக்க என்று கூறி எரிவாயுவுக்கு மானியம் கொடுத்தார்கள் !
அரசு செலவினத்தைக் குறைக்க இப்போது மானியத்தில் கை வைத்துள்ளார்கள் !
வரும் தேர்தல மனதில் கொண்டு இப்போது அதுபற்றி மறு பரிசிலனை செய்து மாற்றங்களை செய்துள்ளார்கள் !
மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு கொடுப்போம் என்ற பொய் சொல்லி அதனை தடுத்துநிறுத்தும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள் !
இது பொறுக்க முடியாதரிசர்வ் வங்கி அம்பி ரகுராமன் கோவிந்தராஜன் குதியாய் குதிக்கிறார் !
எரிவாயு ஒரு சிலிண்டர் 1200/- ரூ சொச்சம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் .அவர்களுக்கு ஏன் மானியம் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய வாதம் !
இந்த அறிவுக் கொழுந்தை நாடுகடத்தலாம் !
ஆனால் அவர் ஏற்கனவே அமெரிக்க பிரஜையாக தான் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது !
இது எப்படி இருக்கு ???
0 comments:
Post a Comment