Tuesday, September 30, 2014

மத்திய அமைச்சர் செல்வி உமா பாரதியும் 

நீதிபதியும் .......!!!





மத்திய அமைச்சர் செல்வி உமாபாரதி 2003 ம் ஆண்டு மத்திய பிரதேச முதல் அமைசராக இருந்தார் ! ஆனால்  அடுத்த வருடம் அதாவது 2004ம் வருடம் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று ! 

1994  ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் ஒரு மதக் கலவரம் நடந்தது ! அங்கு" ஈத்கா மைதான் " என்ற இடத்தில் மூஸ்ளிமகள்  தங்கள் பண்டிகை காலத்தில் "நமாஸ் " செய்வது வழக்கம் !

இதனைப் பொறுக்காத பா ஜ.க வினர் இதனைபஜரங் தளத்தின் மூலம் தடுக்க முனைந்தனர் ! குடியரசு தினத்தன்று அந்த மைதானத்தின் நடுவில் கொடிக்கம்பம் நட்டு தேசீயக் கொடியை ஏற்றினர் ! இதில் ஏற்பட்ட "தள்ளு முள்ளில் "கலவரம் உருவாகியது ! ஒரு பத்து பேராவது இறந்திருப்பார்கள் !

அப்போதிருந்த காங்கிரஸ் அரசு வழக்கு போட்டது ! கலவரத்தை தூண்டியவர்களில் ஒருவராக செல்வி உமா பாரதியின் பெயரும் அதில் இருந்தது !

வழக்கை நடத்துவதில் காங்கிரசுக்கு தயக்கம் இருந்ததூ ! அந்த" ஈத்கா மைதான் " அஞ்சுமான் அறக்கட்டளையின் வசம் இருந்தது ! அறக்கட்டளையின் தலைவர் கர்நாடக அமைசரவையில் தொழிலாளர் நல அமைசராக இருந்தார் !

வழக்கை நடத்த காங்கிரசுக்கு நிர்பந்தம் இருந்தது ! அதேசமயம் இந்துக்களை பகைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை !

பத்து வருடம் இழுத்தடித்தார்கள் ! ஒரு கட்டத்தில்  பா.ஜ .க ஆட்சியைப்பிடித்தது ! அவர்களும் இந்த வழக்கை எப்படி நடத்துவது என்பதை வாக்குகளை மனதில்கொண்டு முடிவு செய்ய முன்றார்கள் ! ஒரு கட்டத்தில் இந்த வழக்கை திரும்பப் பெறுவது என்று முடிவு செய்தார்கள் ! வழக்கு "அஞ்சுமான் அறக்கட்டளை" க்கு சாதகமாகிவிடலாம் என்று சட்ட நிபுணர்கள் கருதியதும் ஒரு காரணம் !

வாழ்க்கை திரும்பப்பெற பா .ஜ.க மாநில அரசு மாவட்ட நீதிமன்றத்தை நாடியது !

மாவட்ட நீதிபதி வழக்கை ஆராய்ந்தார் ! இந்தவழக்கை ஏன் திரும்பப் பெற  வேண்டும் என்று கேட்டார் ! பதில் இல்லை ! குற்றவாளிகள் ஆஜராக வில்லை   என்று அறிந்தார் ! சட்டத்தை விட அரசியல் தான் மாநில அரசுகளால் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது என்று புலப்பட்டது ! கலவரத்தில் மாண்ட வர்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமே !

கலவரத்தை தூண்டிவிட்டவர்களை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு எடுத்து உத்தரவிட்டார் !

1994 ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்றது !

கலவரத்தைத்தூண்டியவர்களில் ஒருவர் செல்வி உமா பாரதி ! அவர் மத்திய பிரதேச  முதலமைச்சராக பதவிஏற்று ஒருவருடம்   தான் ஆகியிருந்தது !

"முதலமைச்சராக இருந்தால் என்ன ? கைது செய்து நீதி மன்றத்தின் முன் நிறுத்துங்கள் "என்று உத்திரவிட்டார் நீதிபதி !  

அந்த இளம்  நீதிபதியின் பெயர் 

ஜாண் மைக்கேல் த குன்ஹா !!!





Saturday, September 27, 2014

நெஞ்சில் புரளும் சிலுவையையும் ,

கையில் உள்ள பைபிளையும் ,தூக்கி எறிவேன் -

நீதிபதி ஆவேசம் !


அன்று ஞாயிற்றுக் கிழமை ! அந்த வேதக் கோவிலில் ஜப கூட்ட  நேரம்   பாதிரியார் ஜபம்  முடிந்ததும் , பிரமுகர்களை இருக்கச் சொன்னார் ! சிறப்பு ஜபம்  இருக்கிறது என்றார் !

சில பிரமுகர்கள் இருந்தனர் ! சிறப்பு ஜபம் முடிந்ததும் எல்லாரும் கிளம்பினர் ! பாதிரியார் ஒருவரை தனியாக  பேச அழைத்தார் ! 

"தமிகத்திலும் , கர்நாடகத்திலும் திரு ச்சபைகளுக்கான பணிகள் சிறப்பாக நடை பெறுகின்றன ! நீங்கள் அந்த வழக்கில் கொஞ்சம் "இலகுவாக " இருக்கலாமே " என்று  பேச்சை ஆரம்பித்தார் !

"ஐயா ! உங்கள் உரையினை  இந்த திருச்சபை கட்டிடத்தின் நான்கு சுவருக்குள் நடத்துங்கள் ! இல்லை என்றால் நான் என் நெஞ்சில் புரளும்  சிலுவையையும்,,கையில் இருக்கும் பைபிளையும் உங்கள் மீது எறிய நேரிடும் !" என்று ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறினார் !

அந்த பாதிரியாரின் பெயர் தெரியவில்ல ! 

நீதிபதியின் பெயர்  ஜாண் மைக்கேல் டி குன்ஹா !!!






Monday, September 22, 2014

பிரதமர் மோடி ஐநா பொதுசபையில் 

பேசுகிறார் ...............!!!



ஐக்கிய நாடுகளின் சபை அமெரிக்காவிலிருக்கிறது ! ஆண்டுதோறும் அதன் பொது சபை கூடும் !ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் அதில் கலந்து கொண்டு பேசுவது வழக்கம் !

இந்த ஆண்டு வரும் சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதில் பேச ஏற்பாடாகி இருக்கிறது ! அதற்காக அவர் அமேரிக்கா செல்கிறார் !

ஆளும் பா.ஜ.க வின் ஊதுகுழல்கள் இப்போதே "மேளம்கொட்ட "  ஆரம்பித்து விட்டன !

ஐநா சபை கட்டிடம் நியுயார்க்கில் இருக்கிறது ! உள்ளெ மோடி பேசுகிறார் ! கட்டிடத்தின் வெளியே அவருக்கு பிரும்மாண்ட மான வரவேற்பு அளிக்கப்படுகிறது என்று இந்த ஊதுகுழல்கள் விவரித்துள்ளன ! 

லட்சக்கணக்கான வர்கள் கூடிவரவேற்பு அளிக்கப்படுவது போல் சித்தரித்துள்ளன !

அமேரிக்கா பூராவிலும் இருந்து அமிரிக்கா இந்தியர்கள்வருகிறார்கள் என்றும்குறிபிட்டுள்ளது !

இதற்காக "இந்திய அமெரிக்க அறிவு ஜீவிகள்சங்கம்" என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது ! அவர்கள் சனிக்கிழமை கூடி விருந்து உண்ண விருக்கிறார்கள் ! சுமார் 900 பேர் இந்த"பிரும்மாண்டவரவேற்பில்  "கலந்து கொள்கிறார்கள் ! அரசு முறையில் எந்த  விதமான வரவேற்பும் இருப்பதாக தெரியவில்லை ! 

அமெரிக்காவரை  வந்து விட்டு அதிபர் ஒபாமாவை சந்திக்காமலிருக்க முடியுமா ?

வாஷின்டன் சென்று ஒபாமாவை சந்திக்கிறார் ! அங்கு வெள்ளை மாளிகையில் எல்லாரையும் சந்திக்கும் "ஓவல் ஆபிசில்" ஒபாமாவை  பார்க்க இருக்கிறார் ! 

 சந்திக்கும் பொது பிரும்மாண்டமான பேரணி   நடக்கும் என்று  US -India democrcy forum  என்ற புதிய அமைப்பு அறிவித்துள்ளது !

ஐநா அலுவலகம் முன்பு மோடியின் இரண்டு cutout  வைக்கப்படுமாம் ! அதன் அருகில் நின்று கொண்டு யார் வேண்டுமானாலும் படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது !

நியுயார்க் விருந்தில் கலந்து கொள்பவர்களுக்கு "America  welcomes " என்ற "பனியன் சட்டை " வழங்கவும் ஏற்பாடாகியுள்ளது !

விருந்துக்கு நன்கொடை உண்டா என்பது தெரியவில்லை !

நியுயார்க்கில் வந்து இறங்கும் மோடியை வரவேற்க  அரசு அதிகாரிகள் வருவார்களா என்பது பற்றி தெரியவில்லை !

வருவதாக இருந்தால் இவர்கள் "மேளம் " கூடுதல் சத்தம் போடும் என்பதால் அரசு முறை வரவேற்பு இருக்காது என்றே தோன்றுகிறது !

என்னதான் இருந்தாலும் மோடி நமக்கும் பிரதமர் தானே !

Bonvoyage !!!





 







Friday, September 19, 2014

" கால் முளைத்த  ஆசை "



"தண்ணி கொடம்மா !  வள்ள்ளீ ... ! தண்ண்ணி  கொடும்மா !  தண்ணி  கொடும்ம்மா ! "

வே ! பாட்டையா ...! நேத்து ராத்திரி பூறா காதுல றீங்கரிச்சுக்கிட்டிருந்தது வே !

என்ன modulation ! என்ன  dexterous delivery ! what an experience ! 

"கால் முளைத்த ஆசை " என்ற தொலைக்காட்சி தோடர் ஒன்றை முழுமையாக எந்த  தடங்கலு மின்றி you tube மூலம் பார்த்தேன் ! குறைந்தது ஒளி  பரப்பாகி  ஏழு வருடமாவது இருக்கும் !

மறைந்த பாலகைலாசம் தயாரிப்பு ! M . E . சொர்ணவேல்  இயக்கம் ! S .ராமகிருஷ்ணன் கதை ,திரைக்கதை,வசனம் !

பாரதி மணி ,வனிதா ,விஷ்ணுனாத் , வேறு  சிலர் நடிப்பு !

ஆற்றோட்டம் போன்ற திரைக்கதை அமைப்பு ! நறுக்குத்தெரித்தாற்  போன்ற  வசனம் !

காட்சிகளின் takings ,அதில் உள்ள clarity , அமுக்கிவிடாத பின்னணி இசை கோர்வை - ஒரு தொலைக்காட்சி தொடர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சாட்சியாக அமைந்திருந்தது !

பாரதி மணி சாருக்கு (எங்க பாட்டையா ) running role ! வைரவன் செட்டியாராக ! அவர் நடித்தார் என்று சொல்ல மாட்டேன் ! நடிப்பு சொல்லிக் கொடுத்தார் !

லண்டன்ல போய் voice  culture  படிச்சவரு !

என்ன tonal domination ! என்ன restrained emotional buildup ! சாமி ! கொன்னு புட்டேர் ஓய் ! 

குறிப்பாக சாகும் முன் "தண்ணி  கொடம்மா " என்று கேட்கும்போது அது கதறலாகவும் இல்லாமல் , வேண்டுகோளாகவும் இல்லாமல் ,இங்கு பாரதி மணி, s .ராமகிருஷ்ணன் ,சொர்ணவேல் மூவரும் புதிய உயரத்தை தொட்டுநிற்கிறார்கள் !

சொர்ணவேல் புனே திரைப்பட கல்லூரியில் பயின்றவர் ! தங்கப்பதக்கம் வென்றவர் !

நல்லகாலம் ! அமெரிக்க போய் அங்குள்பல்கலையில்திரைப்படம்கற்றுக் கொடுக்கும் பேராசிரியராக பணியாற்றுகிறார் ! இங்க இருந்தாரு -சீரளிசிருப்பானுக !

வைரவன் செட்டியார் வீட்டில் மருமக வள்ளி காலைலசாம்பிராணி போடும்போது சமஸ்கிருத ஸ்லோகம் சொல்வது தவித்திருக்கலாமோ !

தவறு  திரைக்கதையிலா ? இயக்கத்திலா ?

தென்றல், வாணி ராணி ,நு பார்த்து சலித்த கண்களுக்கு தகுதியான திறமையான நண்பர்களின் படைப்பு காலாகாலத்திற்கும் மனதில் நிற்கும் ஒன்றாகும் !








Thursday, September 18, 2014

d .R . நாகராஜ் அவர்களும்,

U .R .அனந்த மூர்த்தியும் ......!!!


அவசரநிளைக்கலத்தில்  ரகசியமாக இலக்கிய பயிற்சி முகாமை த.மு எச நாமக்கல்லில் நடத்தியது ! இந்த முகாமுக்கு ஆந்திரா,கேரளா,கர்நாடகா மாநிலங்களிலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர் ! 

பங்களுருவிலிருந்து கே.சுப்பிரமணியம், சேக்கிழார், d .r .நாகராஜ் ,சித்தலிங்கையா ஆகியொர் வந்திருந்தனர் !

சித்தலிங்கய்யா பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தார் ! அவருடைய புகழ் பெற்ற "நன்ன ஜனங்களு " என்ற பாடலை அவர் அந்த நிகழ்ச்சியில் பாடினார் !

நாகராஜ் அவர்களொடு எனக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது ! கடிதங்களை சிவப்பு மையிலேழுதுவார் ! தீவிரமானஅரசியல் நிலை பாடுகளைக் கொண்டவர் ! 

அனந்த மூர்த்தியின் மாணவர் !

"நாகராஜ் என்னுடைய ஆசிரியன் ! எனக்கு மாணவனும் கூட " என்று நாகராஜைப் பற்றி  வர்ணிப்பார் அனந்த மூர்த்தி !

எந்த ஒரு மாணவனுக்கும் கிடைக்காத பேறு நாகராஜுக்கு கிடைத்தது !

மரணம் அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டது !









Saturday, September 13, 2014

கேரள கவர்னர் நீதிபதி சதாசிவம் ,

பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் ,

கொலைகாரன் தரா சிங் ............!



பழங்குடி மக்கள் வாழும் பகுதி மொகின்பூர்  !  ஓடிஸா மாநிலத்தில் இருக்கிறது ! இந்தமக்களுக்கு சேவை செய்து வந்தவர் பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ்சும் அவர் மனைவியும்!

பழங்குடி பெண்கள் மார்பக புற்று நோயால் அவதிப்பட்டனர் ! தங்களுக்கு வந்துள்ளது புற்று நோய் என்பது தெரியாமல் வாழ்ந்தவர்கள் அவர்கள் ! அவ்ர்களுக்கு கச்சை அணிய சொல்லிக்கொடுத்து (Bra ) உதவியவர் கிரஹாம் அவர்களின் மனைவி ! மாதாமாதம் படும் துன்பத்திலிருந்து விடுபட ,சுகாதாரம் கற்றுக் கொடுத்து அவர்களுக்கு நாப்கின் (napkin ) வழங்கி பழக்கினார் !

கிரஹாம் குஷ்ட ரோகிகளுக்காக மருத்துவமனை கட்டி அவர்களுக்கு  உதவியாக இருந்தார் !

பஜ்ரங் தளத்திச் சேர்ந்தவன் தாரா சிங் ! இவன் வேறு  மாநிலத்தவன் ! இஸ்லாமியர் என்றால் வெறுப்பவன் ! தற்போது கிறிஸ்துவர்களையும் வெறுக்கக் கற்றுக்கொடுத்துள்ளார்கள் !

பாதிரியார் கிரஹாம் ஒருநாளிரவு ஜீப்வண்டியில் (van ) தன 11வயது 7 வயது மகன்களோடு தூங்கிக் கொண்டு இருந்தார் ! தாராசிங் அவனது கூட்டாளிகள் 12 போரோடு வந்து வண்டிய பெற்றோல் ஊற்றி தீவைத்து பாதிரியார் ,அவர் மகன்கள் ஆகியோரை  கொளுத்தி கொன்றான் !

சி.பி.ஐ விசாரித்து வழக்கு போட்டது ! நீதிமன்றம் தாராசிங் குக்கு மரண தன்டனை விதித்தது !

அவன் உயர் நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்தான் ! உயர் நீதி மன்றம் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது! சி.பி ஐ இதனை எதிர்த்து உச்ச நிதிமன்றம் சென்றது !

"கிரஹாம் பாதிரியார் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுகிறார் ! அவருக்கு பாடம் கற்பிப்பது தான் என்நோக்கம் ! அவரை  கொல்வது என் நோக்கமல்ல ! " என்பது தான் தாராசிங் வாதம் ! 

உச்ச நீதி மன்றம் இதனை விசாரித்தது !" பாதிரியாருக்கு பாடம் கற்பிக்கவே தாராசிங் முயன்றிருக்கிறார் ! இதனை தீர விசாரித்து உயர் நீதி மன்றம் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது சரியே  ! நாங்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பி னோடு  உடன் படுகிறோம் " என்று தீர்பளித்தது !

உச்ச  நீதி மன்ற நிதிபதியாக இருந்தவர் தற்போதைய கேரள கவர்னர் பழனிச்சாமி சதாசிவம் அவர்கள் 1!!







Tuesday, September 09, 2014

ஜனாப் ஹாஜி முகம்மது பக்கீர் செட்  அவர்களை 

உங்களுக்குத் தெரியுமா ........?


ஜனாப் ஹாஜி முகம்மது பக்கீர் செட் அவர்களை உங்களுக்கு தெரியுமா ? இந்தக்க் கேள்வி இக்கான விடை எனக்கு இன்று காலைதான் தெரிந்தது !

அது மட்டுமல்ல ! செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களைப்பற்றிய குறிப்புகளை படித்துக் கொண்டிருந்த போது அவர் பற்றிய இடுகை ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன் ! 

அந்த இடுகைக்கான பின்னூட்டத்தில் ஒரு நண்பர் மிகுந்த வருத்ததோடு "வ.உ.சி அவர்களோடு பணியாற்றிய முகம்மதியர்களைப் பற்றி ஒரு வார்த்தை எழுத மாட்டென் என்று சாதிக்கிறீர்களே! " என்று மிகுந்த ஆதங்கத்தோடு எழுதியிருந்தார் !

அவரும் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை !    

எனக்குத் தெரிந்த வரலாற்றுத் தரவுகளை தேடினேன் ! எதுவொன்றிலும் குறிப்பு எதுவும் கிடைக்கவில்ல !

இணையத்தை புரட்டிப் பார்த்தேன் ! சில குறிப்புகள் கிடைத்தன !

வ.உ.சி அவர்கள் தாலூகா அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி  உள்ளார் ! பின்னர் அவர் தந்தை உலகநாத பிள்ளை அவரை சட்டப்படிபிற்காக திருச்சிக்கு அனுப்பியுள்ளார் ! வஉசி அவ்ர்களுக்கு விவேகானந்தர்   மீது அளவு கடந்த பக்தி உண்டு ! ஒருமுறை சென்னை சென்றிருக்கிறார் ! ராமகிருஷ்ணா மடத்தில் அப்போது பொறுப்பில் இருந்த ராமகிருஷ்ணானந்தர் என்ற துறவியைச் சந்தித்து இருக்கிறார் !

"அடுத்து என்ன செய்யப் போகிறாய் " துறவி  அவரிடம் கேட்டிருக்கிறார்  !

"உன் தந்தை பணக்காரகளுக்காக வாதாடுபவர் ! நிறைய வசதியை உருவாக்கி கொண்டவர் ! நீ ஏழை எளியவர்களுக்காக வாதாடு ! இந்த தேசத்திற்காக எதாவது செய் ! " என்று ஆலோசனை கூறியுள்ளார் ! 

இந்த சமயத்தில் தான் சுப்பிரமணிய சிவா ,சுப்பிரமணிய பாரதி ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டது !

இதன் பிறகு தான் பொது வாழ்க்கையில் வ.உ.சி ஈடுபட ஆரம்பித்துள்ளார் !

பிரிட்டிஷ் ஸ்டீம் நாவிகேஷன் கமபெனி  செய்யும் அக்கிரமத்தை எதிர்த்து கம்பெனி ஆரம்பிக்க சிந்தித்ததும் இதன் பிறகு தான் ! 

கப்பல் கம்பெனி ஆரம்பிக்க முடிவு செய்தார் ! வசதி மிக்க குடும்பம் ! தன சொத்துக்களை விற்று முதலாக்கினார் ! 

கம்பெனிக்கு என்று தனி கப்பல்வாங்க மிகுந்த பணம் தேவை ! இந்திய கம்பெனி பயன்  படுத்தும் வாடகை கப்பலை திடிரென்றுபிடிட்டிஷாரின் நிர்ப்பந்தத்தால்   தர மறுத்தனர் ! கம்பெனி பங்குகளை அறிவித்து மூலதனம் சேர்க்க முடிவு செய்தார் ! பங்கு 25 /​ - ரூ வீதம் 40 ,000 பங்குகளை அறிவித்தார் ! 10,00,000 ரூ பாய்க்கான் பங்குகளை விற்க வேண்டும் ! இன்றய மதிப்பில் இது சில ஆயிரம்கோடிகளாகும் !

பிரிட்டிஷாருக்கு பயந்து வாங்குவாரில்லாமல் போய்விடலாம் ! இந்தியா பூராவும் சுற்றி விற்கவேண்டு ! initial capital வேண்டும் !

இந்த இக்கட்டான நிலையில் வந்தார் ஒருவர் !" 8000 பங்குகளை நான் வாங்கிக் கொள்கிறேன் ! இந்தாருங்கள் ரூ 2,00,000 /-இரண்டுலட்சம் ! " என்றார் !

அவர்தான் ஜனாப் ஹாஜி முகம்மது பக்கீர் சேட்  !

ஜனாப் சேட் அவர்கள் பற்றி தகவல்கள் எதுவும்கிடைக்கவில்லை  !   












Monday, September 08, 2014

தலைமை நீதிபதியும் 

கவர்னரும் ........!!!

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து சிலமாதங்களுக்கு மூன் ஒய்வு பெற்றவர் நீதிபதி ப . சதாசிவம் ! 

தமிழகத்தைச் சேர்ந்த இவரை கேரள மாநில கவர்னராக நியமித்திருக்கிறார்கள் !

இந்த நியமனம் சரியில்லை என்று காங்கிரஸ்  கட்சி எதிர்க்கிறது ! வழ்க்குரைஞர்கள்  சங்கமும் எதிர்க்கின்றது !

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் சில முக்கியமான பதவிகள் உறுதி செய்யப்பட்டவைகளாகும் !

இந்தியாவின் தலைமை நிதிபதி , கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் தலைமை தணிக்கையாளர் , தேர்தல் தலைமை அதிகாரி இந்த மூன்றும் அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் உருவானதாகும் !

அப்பழுக்கற்றவர்களை இந்த பதவிகளில் அமர்த்துவத்தின் மூலம் சார்பற்ற நிர்வாகத்தை இந்திய மக்களுக்கு கொடுப்பது தான் இதன் நோக்கம் ! குடியரசுத்தலவர் கூட இவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது !

இப்படிப்பட்டவர்களை ஒய்வு பெற்றபிறகு அரசியல் ரீதியான பதவி களில் அமர்த்தாமலி ருப்பது மரபு !

!950 ஆண்டு உச்ச மன்ற நீதிபதியாக இருந்த சையது ப்ஃசல் அலி அவர்களை பண்டித ஜவர்கர்லால் நேரு அசாம் மாநில கவர்னராக நியமித்தார் !

நேருவின் சர்வதேச பிம்பம், ப்ஃசல் அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கை காரணமாக எந்த எதிர்ப்பும் எழுப்பப் படவில்லை ! ப்ஃசல் உச்ச நீதிமனற தலைமை நீதிபதியாக இருக்கவில்ல ! அப்போதும் சிலர் "பிரதமர் இதனைத் தவிர்த்திருக்கலாம் " என்ற மெலிதான குரலில் விமரிசித்தனர் !

தலமைதணிக்கை அதிகாரியாக இருந்தவர் டி .என் .சதுர்வேதி ! அவரை அடல் பிஹாரி வாஜ்பாய் கேரளாவின் கவர்னராக நியமித்தார் ! "போப்ஃர்ஸ் " ஊழலை உன்னிப்பாக கையாண்டார் என்று அவருக்கு சான்று அளித்தனர் ! ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தணிக்கை அதிகாரி என்றமுறையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் காரர்கள் கலகம் செய்தனர் ! அரசியல் சாசன பதவி  என்பதால் காங்கிரஸ் காரர்கள் அடக்கி வாசித்தனர் ! அவரை நீக்க முடியவில்லை  !   

தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் எம். எஸ்.கில் . ஒய்வு பெற்றதும் அவரை மேலவை உறுப்பினராக ஆகினார்கள் காங்கிரஸ் காரார்கள் ! அது மட்டுமல்ல ! அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தனர் காங்கிரஸ் காராரகள் !

1967 ம் ஆண்டு ஜாகிர் ஹுசைன் குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் ! அப்போது உச்ச  நீதி மன் ற  தலைமை நீதிபதியாக இருந்தவர் கே. சுப்பாராவ். அவர் தன பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடியரசுத்தலவர் பதவிக்கு போட்டியிட்டார் ! எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ! தோற்றார் என்பது வேறு சங்கதி !

ஆகப்பெரிய டி .என் சேஷன்  சிவசேனை கட்சியின் சார்பாக குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மண்ணைகவ்விய கதை அனைவரும் அறிந்ததே !

இது சரி என்றால் அத்தனை கட்சிகளும் சரியே !

தவறு என்றால் எல்லாரும் தவறு செய்துள்ளனர் !

எல்லாரும் அமர்ந்து விவாதியுங்கள் !

கோட்பாடு ரீதியான முடிவினை எடுங்கள் !

மீறாமல் இருங்கள் !  



       

Thursday, September 04, 2014

(இது ஒரு மீள் பதிவு )


 

HOME

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Monday, May 03, 2010


my teacher......

இந்தியா சுதந்திரமடையும்போது எனக்கு பதினொரு வயது முடிவடையவில்லை.ப ள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போதெல்லாம் ஆரம்பப்பள்ளீ,நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி என்றுதானிருக்கும்.காலையில் இறைவணக்கம் உண்டு. "God save our king"என்று பாடிவிட்டுத்தான் "பொன்னார் மேனியனே" பாடவேண்டும் வாரத்தில் மூன்றுவகுப்புகள் ஓவியம்,கைவினை,நல்லொழுக்கம் என்று உண்டு. அழகேசன் சார் தான் மூன்று வகுப்புகளையும் நடத்துவார்.நீராவி,மேகம்,மழை பற்றி விளக்குவார் ஏழாம் வகுப்பில் பல நாவல்களை படித்துக்காட்டுவார்.".le miserable" என்ற பிரஞ்சு நவலின் மொழிபெயர்ப்பை ப்படித்துக்காட்டுவா.ர்.சிலசமையம் அவர் குரல் தழுதழுக்கும்.கண்ணீர்முட்டும்."uncle Toms cabin" ஐ கதையாகச்சொல்லும்போது எங்களுக்கு அழுகை வரும்.எட்டாவது படிக்கும் போது சிறு புத்தகங்களை கொடுத்து மவுனமாக படிக் கச்சொல்வார்..ஐரோப்பிய தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் அவை.அப்படித்தான் ரூ சோ,சமுதாய ஒப்பந்தம்,வால்டயர்,கரிபால்டி,மாஜினி,கிராம்வெல்.என்று படித்துதெரிந்தோம்." வீட்டிற்கு கொண்டுபொகாதே.வகுப்பிலேயே படி என்று கூறி ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.கருநீல அட்டையில் தாடி வைத்த ஒரு படம் இருந்தது."காரல்மார்க்ஸ்" என்றும் எழுதியிருந்தது.அது 48-49ம் ஆண்டாக இருக்கலாம். .இன்றய என் புரிதலோடு பார்க்கும்போது அழகேசன் சார் பிரும்மாண்டமாகத்தெரிகிறார்.கதரில் ,,குட்டையாய்,கருப்பாய்,தங்கநிற மூக்குக்கண்ணாடியோடு,அந்த அழகேசன் சாரை இனி பார்க்க முடியாது. ஆனாலும் மார்க்ஸையும், அழகேசன் சாரையும் என்னால் மறக்க முடியாது.

    


"குரு " வேறு ! ஆசிரியர் வேறு டா !

பைத்தாரப் பயலுகளா ......!!!!


செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் ! Teachers day ! சரியாப்போச்சு ! அத   எதுக்குடா "குரு  உத்சவ் "  நு மாத்தரீங்க ! 

ஆசிரியர் என்பவர் யார் ? ஐந்தாம் கிளாஸ் வாத்தியாரு " நியூடன்  மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதப்பார்த்தான் ! பூமியின் ஈர்ப்பு சக்தியால் ஆப்பிள் கீழே விழுவதை கண்டுபிடித்தான் ! " என்று சொல்லித்தருவார் !

12 ம் வகுப்பு வாத்தியார் " newtons three laws of Motion "  நு ஆரம்பிப்பார் !

பிசிக்ஸ் Msc  பேராசிரியர் நியூடன் விதிகளையும் ஐன்ஸ்டின் விதிகளையும் ஒப்பிட்டு வகுப்பினை நடத்துவார் !

ஆசிரியர் அந்தந்த வகுப்பிற்கான பாடத்திட்டங்களுக்கு (Sylabus ) உட்பட்டு வகுப்புகளை நடத்துவார் !

மாணவர்களின் வளர்ச்சிக்கு தகுந்தபடி பாடத்திட்டங்களை உருவாக்குவார்கள் ! அதன் அடிப்படையில் பாடம் நடத்துபவர் ஆசிரியர் !

சரிங்கப்பா !   உங்க கணக்குக்கே வாரேன் ! உங்க சம்ஸ்கிருதத்தில  teacher ங்கருதுக்கு  என்ன வார்த்தை ? "குரு"வா ?  இல்லயே ! "ஆச்சாரியர்" நு தானே சொல்லுதீங்க !

பாண்டவர்களுக்கும் ,கௌரவர்களுக்கும் போர்க் கலை  சொல்லிக் கொடுத்தவர் பேர் என்ன ? துரோணர் ! "குரு  துரோணர்"னா சொன்னாங்க! "துரோணாச்சாரியார்" னுதான் சொன்னாங்க ! "கிருபாச்சாரியார்" நு தான் சொன்னங்க ! "குரு  கிருபர்" நா சொன்னங்க!   

"குரு " வேறு ! "ஆசிரியர்" வேறுடா !

பைத்தாரப் பயலுகளா !!!