skip to main |
skip to sidebar
"குரு " வேறு ! ஆசிரியர் வேறு டா !
பைத்தாரப் பயலுகளா ......!!!!
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் ! Teachers day ! சரியாப்போச்சு ! அத எதுக்குடா "குரு உத்சவ் " நு மாத்தரீங்க !
ஆசிரியர் என்பவர் யார் ? ஐந்தாம் கிளாஸ் வாத்தியாரு " நியூடன் மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதப்பார்த்தான் ! பூமியின் ஈர்ப்பு சக்தியால் ஆப்பிள் கீழே விழுவதை கண்டுபிடித்தான் ! " என்று சொல்லித்தருவார் !
12 ம் வகுப்பு வாத்தியார் " newtons three laws of Motion " நு ஆரம்பிப்பார் !
பிசிக்ஸ் Msc பேராசிரியர் நியூடன் விதிகளையும் ஐன்ஸ்டின் விதிகளையும் ஒப்பிட்டு வகுப்பினை நடத்துவார் !
ஆசிரியர் அந்தந்த வகுப்பிற்கான பாடத்திட்டங்களுக்கு (Sylabus ) உட்பட்டு வகுப்புகளை நடத்துவார் !
மாணவர்களின் வளர்ச்சிக்கு தகுந்தபடி பாடத்திட்டங்களை உருவாக்குவார்கள் ! அதன் அடிப்படையில் பாடம் நடத்துபவர் ஆசிரியர் !
சரிங்கப்பா ! உங்க கணக்குக்கே வாரேன் ! உங்க சம்ஸ்கிருதத்தில teacher ங்கருதுக்கு என்ன வார்த்தை ? "குரு"வா ? இல்லயே ! "ஆச்சாரியர்" நு தானே சொல்லுதீங்க !
பாண்டவர்களுக்கும் ,கௌரவர்களுக்கும் போர்க் கலை சொல்லிக் கொடுத்தவர் பேர் என்ன ? துரோணர் ! "குரு துரோணர்"னா சொன்னாங்க! "துரோணாச்சாரியார்" னுதான் சொன்னாங்க ! "கிருபாச்சாரியார்" நு தான் சொன்னங்க ! "குரு கிருபர்" நா சொன்னங்க!
"குரு " வேறு ! "ஆசிரியர்" வேறுடா !
பைத்தாரப் பயலுகளா !!!
0 comments:
Post a Comment