Tuesday, September 30, 2014

மத்திய அமைச்சர் செல்வி உமா பாரதியும் 

நீதிபதியும் .......!!!





மத்திய அமைச்சர் செல்வி உமாபாரதி 2003 ம் ஆண்டு மத்திய பிரதேச முதல் அமைசராக இருந்தார் ! ஆனால்  அடுத்த வருடம் அதாவது 2004ம் வருடம் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று ! 

1994  ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் ஒரு மதக் கலவரம் நடந்தது ! அங்கு" ஈத்கா மைதான் " என்ற இடத்தில் மூஸ்ளிமகள்  தங்கள் பண்டிகை காலத்தில் "நமாஸ் " செய்வது வழக்கம் !

இதனைப் பொறுக்காத பா ஜ.க வினர் இதனைபஜரங் தளத்தின் மூலம் தடுக்க முனைந்தனர் ! குடியரசு தினத்தன்று அந்த மைதானத்தின் நடுவில் கொடிக்கம்பம் நட்டு தேசீயக் கொடியை ஏற்றினர் ! இதில் ஏற்பட்ட "தள்ளு முள்ளில் "கலவரம் உருவாகியது ! ஒரு பத்து பேராவது இறந்திருப்பார்கள் !

அப்போதிருந்த காங்கிரஸ் அரசு வழக்கு போட்டது ! கலவரத்தை தூண்டியவர்களில் ஒருவராக செல்வி உமா பாரதியின் பெயரும் அதில் இருந்தது !

வழக்கை நடத்துவதில் காங்கிரசுக்கு தயக்கம் இருந்ததூ ! அந்த" ஈத்கா மைதான் " அஞ்சுமான் அறக்கட்டளையின் வசம் இருந்தது ! அறக்கட்டளையின் தலைவர் கர்நாடக அமைசரவையில் தொழிலாளர் நல அமைசராக இருந்தார் !

வழக்கை நடத்த காங்கிரசுக்கு நிர்பந்தம் இருந்தது ! அதேசமயம் இந்துக்களை பகைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை !

பத்து வருடம் இழுத்தடித்தார்கள் ! ஒரு கட்டத்தில்  பா.ஜ .க ஆட்சியைப்பிடித்தது ! அவர்களும் இந்த வழக்கை எப்படி நடத்துவது என்பதை வாக்குகளை மனதில்கொண்டு முடிவு செய்ய முன்றார்கள் ! ஒரு கட்டத்தில் இந்த வழக்கை திரும்பப் பெறுவது என்று முடிவு செய்தார்கள் ! வழக்கு "அஞ்சுமான் அறக்கட்டளை" க்கு சாதகமாகிவிடலாம் என்று சட்ட நிபுணர்கள் கருதியதும் ஒரு காரணம் !

வாழ்க்கை திரும்பப்பெற பா .ஜ.க மாநில அரசு மாவட்ட நீதிமன்றத்தை நாடியது !

மாவட்ட நீதிபதி வழக்கை ஆராய்ந்தார் ! இந்தவழக்கை ஏன் திரும்பப் பெற  வேண்டும் என்று கேட்டார் ! பதில் இல்லை ! குற்றவாளிகள் ஆஜராக வில்லை   என்று அறிந்தார் ! சட்டத்தை விட அரசியல் தான் மாநில அரசுகளால் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது என்று புலப்பட்டது ! கலவரத்தில் மாண்ட வர்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமே !

கலவரத்தை தூண்டிவிட்டவர்களை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு எடுத்து உத்தரவிட்டார் !

1994 ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்றது !

கலவரத்தைத்தூண்டியவர்களில் ஒருவர் செல்வி உமா பாரதி ! அவர் மத்திய பிரதேச  முதலமைச்சராக பதவிஏற்று ஒருவருடம்   தான் ஆகியிருந்தது !

"முதலமைச்சராக இருந்தால் என்ன ? கைது செய்து நீதி மன்றத்தின் முன் நிறுத்துங்கள் "என்று உத்திரவிட்டார் நீதிபதி !  

அந்த இளம்  நீதிபதியின் பெயர் 

ஜாண் மைக்கேல் த குன்ஹா !!!





1 comments:

சிவகுமாரன் said...

வாவ்.
குன்ஹா அவர்களைப் பற்றிய மதிப்பு உயர்ந்து கொண்டே
போகிறது. பகிர்வுக்கு நன்றி அய்யா