Monday, March 09, 2015

"நன்றி 

ராஜு முருகன் அவர்களே !!!"





................"கடவுளே மூட நம்பிக்கைதானே  குட்டா "எனச்சிரித்த தோழர் ஹரிசுதனை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் !

வேளாண் வளர்ச்சிக்காகவும் ,இயற்கை வளங்களின் சுரண்டலுக்கு எதிராகவும் நடக்கும் அத்தனை போராட்டங்களிலும் தன்னை இணைத்துகொள்பவர் ஹரிசுதன் ! ஓடிஸா மலைக்கிராமங்களை வேதாந்தா நிறுவனம் ஆக்கிரமித்த பிரச்சினையிலிருந்து ,"காவிரி" டெல்டாவை விழுங்கும் மீத்தேன் திட்டம் வரை இந்தியாமுழுவதும் பாயணப்பட்டு போராட்டங்களில் பயணிப்பவர் ! ஆறுமாதங்களுக்கு மேலாக சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் ,மே.வங்க காடுகளில் அலைந்து அந்த மக்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்நிலையை ஆவணப்படுத்தியவர் ! 

" மார்க்சையும்,மசனா புஃ க்கொவையும் படிச்சு கிழிச்சுவளர்ந்தோமெ குட்டா !அதான் மிஸ்டேக் ! மத்த ஆளுகளை மாதிரி வேடிக்கை பாத்துட்டு வீட்லபோயி மா ட்சு பாக்க முடியல ! தூக்கம் பிடிக்கல ! ஊர்  ஊராபொயி தொ ண்டைகிழிய கத்துறோம்.  கொடிபிடிக்கிறொம் ! இதோ பாருங்க லெப்ட் ஷோல்டர்ல !இதே ஊர்லதான் ! தாலுகா ஆபீஸ் முன்னாடி பைக்ல வந்தவனை இழுத்துபோட்டு வெட்டினாங்க ! ஒரு அரசியல் கட்சி ஆளுங்க ! நாலஞ்சு வெட்டு! வெறி பிடுச்சவன் மாதிரி ஒடி தப்பிச்சென் ! ஒரு வெட்டு கழுத்துல விழுந்தாலும் அவுட் !நம்மால  இன்னும் சிலகாரியங்கள் நடக்கணும் இந்த உலகத்துக்கு !அதனால பொழைச்சிரூ க்கேன் !"என சிரித்தவரைபார்க்க ஆச்சரியமாக இருந்தது !

"..இதுல ரொம்ப பெரிய துக்கம் என்னன்னா குட்டா "... நாம யாருக்காக பொறாடரமொ...அவங்க நம்மை காமேடியனா பாத்துட்டு கடந்து போறதுதான் ! இந்த சனம் இப்படிதான் ! தீயது பின்னாடி தான் போகும் ! அபத்தங்களை ஒண்டாடும் ! கெட்டவனை ஜெயிக்க வைக்கும்! அதுக்காக நாமளும் வேஷம் கட்டிக்கிட்டு பவருக்கும்,சோக்குக்கும் அடிமையாக முடியுமா ? அதுக்கு பீயை தின்னு பொழைக்கலாம் ! இந்த பஜார் பக்கம்  ஒரு ஹோம் பிடிச்சு   பிராத்தல் பண்ணலாம் ! டிறக்ஸ் வித்து ,போர்ஜரி .கரப்ஷன் பண்ணி காசு சம்பாதிக்கலாம் ! அதுக்க நாம வந்தோம் குட்டா ? வாள சுழட்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான் ! போராடிக்கிட்டெ சாக வேண்டியதுதான் ! நம்ம சே மாதிரி உங்க பிரபாகரன் மாதிரி கண்ணை தொறந்து வச்சுகிட்டேசாவோம் ! பெரியார் மாதிரி மூத்திரபைய சுமந்து கிட்டெ வில்லன்களை அடிச்சு நொறுக்குவோம் !ஏ கே ஜி இருந்தார்ல ! தோத்தா என்ன ? ராஜதந்திரம்னு மக்கள் அரசியலை அடகுவைக்காம செங்கொடியை போத்திக்கிட்டு செத்து போவோமே  ! புதிய அரசியல் அதிகாரத்துக்கான அரசியலை முன்னெடுக்கணும் ! அன்னைக்கு எங்க கட்சி ஆபிச்லையே ஒருத்தன் " அட்ஜஸ்ட் " பண்ணிக்கிட்டு போவணூங்கறான் ! காலம் மாறிப் போச்சுங்கறான் ! அறத்துக்கு அட்ஜஸ்ட மென்டே கிடையாதுடா முட்டாள் !" சட்டென மௌனமாகி தீவிர யோசனையில் ஆழ்ந்து திரும்புகிறார் !

"முடியல குட்டா !...சுயநலமான தனிமனித வளர்ச்சி !பெரூ முதலாளிகள் வளர்ச்சி , அதிகாரக்குவியல் எல்லாம் நம் நாட்டையும்,இயற்கை வளங்களையும் தின்னிட்டு இருக்கு ! இப்படியே கோ டு போட்ட மாதிரி இந்தா முழுக்க போனேன் !இங்க காச்ர்கோட்ல எண்டோ சல்ப்ஹான் தெரியும்ல !..இப்பவும் தலை வீங்கி குச்சி குச்சியா புள்ளைங்க அலையதுங்க ! உபி மெஹந்திகஞ்சுல எட்டு கிராமத்தை மொத்தமா உறிஞ்சு எடுத்துட்டு போயிட்டான் கூலடிரிங்க்க் கம்பெனிகாரன் !போராட்டம் ,பேரணி நு அங்கயே கெடந்தோம் !மொத்ததையும்  உறிஞ்சு  ட்ரை ஆக்கிட்டு அப்புறம் தான் விட்டுட்டு  போனாங்க ! இங்க கேரளா பலாச்சிமடேலெர்ந்து திருச்சி சூருயூர்வரை அது தான் நடக்குது ! சோன்பத்ரால தெர்மல் பிளாண்ட் பொட்டு என்ன பண்ணுனாங்க ! இப்பவும் அங்க பொறக்கிற பிள்ளைங்க  கைகால் வளைஞ்சு தான் பொறக்குது ! வாத நோய், மெண்டல் டிஸார்டர் , பல்லு பூரா கறை ன்னு மனுஷங்க அவ்வளவு கொடுமையா அலையுறாங்க ! ஓடிஸா ஜெகத்சிங்பூர்ல கொரியாக்காரன் இரும்பு உருக்கு ஆலை  வைக்கிறேன்னு  இருபத்தி ஆயிரம் மக்களை வெளியெத்தினான் ! அதிகாரத்துல இருக்கிற எவன் கேட்டான் ! எங்க பொய் நிண்ணூச்சுங்க அந்த சனம் ? பொய் பாத்தா வயிறு எரியுது ! இந்த காயல் பட்டணத்துல கெமிகல் கம்பெனி வச்சு ஊர் மொத்தமும்  சுவாசப்பிரச்சினை வந்திருக்கு ! இப்பவும் பொராடிக்கிட்டுதான் இருக்கோம் ! என்ன தேசமடா இது ?இந்த ஊர்ல ஒரு அரசியல்வாதி, ஒர்பணக்காரன்,ஒரு தோழில் அதிபர் பாதிக்கப் பட்டிருக்கானா ? ஏழைங்க மட்டும் என்ன எலிங்களா ?விடக்கூடாது குட்டா ! அடிச்சு இவங்களை காலி பண்ணனும் ! ......."

(ஜிப்ஸி தொடர் (10) - ராஜு முருகன் விகடன் )



Saturday, March 07, 2015

பிராமணர்களுக்குள்ளூம் 

தீண்டாமை அடுக்குகள் ....!!!





தோழர் எஸ்.ஏ .பெருமாள் அவர்கள் "பிராமண மாற்றம் " என்ற தலைப்பில் தன்னுடைய "முக நுலில்" ஒரு நிலைத்தகவலை பதிந்திருந்தார் ! அதிலிருந்த பல தொலைபேசி சந்தேகங்கள் வந்து குவிந்து விட்டன! இது பற்றி எழுத நிறைய தகவல்கள் இருந்தாலும் நம் பொதுப்புத்தியில் உறைந்து போன சில விஷயங்களை பற்றி குறிப்பிடவேண்டும் என்று கருது கிறேன் !

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும்,நெல்லை காந்திமதி அம்மன் கோவிலிலும் "சாமி-சாமி "என்று " திரு   நீறு  "க்காகவும் "குங்கும"த்திற்காகவும் கை நீட்டும் நமக்கு அந்த சாமி பிராமணர்களுக்குள் உள்ளை சாதீய அடுக்கில் கட்ட கடைசியில் உள்ளவர் என்பது எத்துணை பேருக்கு தெரியும் !

"age nearer birthday " என்றால் எனக்கு 80 வயது ஆகிறது !என்னுடைய சிறு  வயதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைப்படுகிறேன்.

மதுரையில் "பட்டமார் தெரு என்று வடக்குஆவணிமூல வீதி யையும் வடக்கு சித்திரை விதியையும் இணைக்கும் சந்து களுக்கு பெயர் பட்டமார் சந்து ! இவர்கள் தான் கோவிலில் ஆண்டவனுக்கு "கைங்கரியம் "  செய்யும் வகுப்பினர் ! இவர்கள் வேதம்,உபநிஷத்து , சம்ஸ்கிருதம் என்று பாடசாலைகளில் படித்தவர்கள் அல்ல ! அந்த அந்த கோவில்களின் ஆகம விதிகளின் படி பணி செய்தால் போதும் ! பிராமணர்களின் பிரமிடுகளில் கடைசியில்  உள்ளவர்கள் !

பொதுவாக கிராமங்களில் "அக்கிரஹாரம் ", வடக்குதெரு "பிள்ளைமார் தெரு,  என்று பட்டறை பட்டறையாக வசிப்பார்கள் ! அக்கிரஹாரத்தில் "அய்யமார் " வசித்தாலும் வடமாள்,பிரஹ சரணம், வாத்திமார், எண்ணாயிரம் ,  பட்டமார் என்று ஒருங்கிணைந்த விடுகளில் வசிப்பார்கள் ! அக்கிரஹாரத்து விடுகளின் கட்டுமானமே வித்தியாசமாக இருக்கும் !

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் "வேனல் பந்தல் இருக்கும் !அடுத்து திண்ணை ! அதன் பிறகு நடை ! அதற்கு அப்பால் "ரேழி " ! அதன் பிறகு "ஐந்தாம் பத்தி "! ரேழியின் ஒருபகுதி "பாவுள் " ! இது முக்கியமான மதிப்புள்ள பொருள்களை வைக்கும் இடம் ! ஐந்தாம் பத்தியை ஒட்டி பெரிய சமையல் கட்டு ! அடுத்து பிரும்மாண்டமான பட்டாசாலை ! அதன் அருகே சிறு சமையல் புரை ! அடுத்து பட்டிய கல்  ! அதனை ஒட்டி  முற்றம் ! பின்னர் கொட்டில் ! அடுத்து மாட்டுத்தொழுவம் ! கிணறு சிறு தோட்டம் ! பின்னர் வைக்கல் போர் ! அதன் மூலையில் மண்ணில் குழைத்த உரூவமில்லாத சொள்ள  மாடன் ! இறுதியில் வண்டி தொழுவம் !

வீட்டு திண்ணையில் பட்டர் ஒக்காரக்கூடாது ! வேனப்ப்ந்தலில் உள்ள திண்டில் தான் உட்காரவேண்டும் ! விசேஷ  நாட்களில் கிராமச் சாப்பாட்டு நாட்களில் பட்டர் வீட்டிற்குள் வந்து சாப்பிடக்கூடாது ! அவருக்கு "நடை"யில் தான் சாப்பாடு! அவர் உள்ளெ வந்தால் தீட்டு ! கோவில் பிரசாதத்தை பட்டுத்துணியால் மூடி எடுத்து வருவார் ! தாமிர தட்டில் ! பட்டுக்கும் தாமிரத்திற்கும் தீட்டு கிடையாதாம் !

இவர்களில் ஒருபகுதியினரை பஞ்சாங்க பாப்பான் என்று அழைப்பார்கள் ! சிலரை "மத்தியான பறையன் " என்றும் அழைப்பர்கள் ! இவர்கள் தலித்துகளுக்கும் ,குடிபடைகளுக்கும் , நீத்தார் நினைவுநாள் மற்றுமுள்ள விசேஷங்களுக்கு சென்று வருவார்கள் !  

இந்த பிரமிடின் கட்டக்கடைசிக்கு முந்திய இடத்தில் தான் எண்ணாயிரப் பிராமணர்கள் வைக்கப்பட்டுள்ளனர் ! மற்ற மேலடுக்கு பிராமணர்கள் இவர்களோடு திருமண பந்தம் போன்று கொடுக்கல் வாங்கல்  வைத்துக் கொள்ள மாட்டர்கள் !"ஓ  ! அஷ்டசகஸ்ரமா ! " என்று ஒரு இழுப்பு இழுப்பார்கள் !

இது 1940 ஆண்டு அனுபவம் ! 

இன்று நிலைமை மாறிவிட்டது !


 

Friday, March 06, 2015

(2010 ம் ஆண்டு எழுதிய சிறுகதை ! கொஞ்சம் சீர் செய்து செம்மலருக்கு அனுப்பலாம் என்று இருந்தேன் ! அப்படியே இருந்து விட்டது ! சென்றமாதம் அனுப்பினேன் ! மார்ச் இதழில் பிரசுராமாகியிருப்பதாக தகவல் வந்தது ! என் கைக்கு புத்தகம் வர 20 நாளாகும் ! நன் 17ம் தேதி கிளம்பி திருப்பூர் பயணப்படுகிறேன் ! அதனால் இதனை பதிவிடுகிறேன் )



சிறு கதை
----------------





"நெருப்புக்கு தெரியுமா ?"


அரச இலையின் காம்பிலிருந்து நுனி வரை இரண்டாக பிளந்து பாயும் நரம்பு போல நாகபுரி நகரை பாதியாக பிரித்து செல்கிறது "வார்தா" செல்லும் சாலை !
நாகபுரியின் வடக்குப்பகுதியிலிருக்கிறது "வனதேவி" நகர் ! சுமார் ஐம்பது அறுவது குடும்பங்கள் வாழ்கின்றன !  முதல் வீட்டில் ரிஜ்வான் கான் வசிக்கிறான் 1 அவன் வங்கத்திலிருந்து வந்தவன் ! காலையில் நல்ல நீர் மீனி இல்லாமல் அவன் வீட்டில்பொழுது விடியாது! அவன் தாயார் வீட்டு வாசலில் உள்ள பட்டிய கல்லில் மீன உரசி செதில் நீக்கி துண்டு போட்டு வீட்டிற்குள் எடுத்து செல்வாள் !
அவன் அடுத்த வீட்டு தேவ்சந்த் மனவி சாக்கடை சண்டையை ஆரம்பிப்பாள் ! அடுத்தவீட்டு பரசுராம் சிங்கும் ,அப்துல் பஷீருக்கும் நிலச்சண்டை எப்போதும் !
பிளக்ஸ் போர்டு,பிளாஸ்டிக் ஷீட்டுகள்  தன் இருவர் வீட்டுக்கும் கூரை ,மற்றும் சுவர்கள் ! பஷீர் வீட்டில் படுத்து கால் நீட்டிக் கொண்டால் பரசுராம் வீட்டில் தெரியும் !
இங்கு வசிக்கும் ராம்சந்த் மத்திய பிரதேசத்துக்காரன் ! காலையில் எழுந்து ஐந்து மணிக்குள் குளித்து :ருத்ரம் " சொல்லி வேலைக்குப்பொவான் ! காலையில் ஐந்து வீடு ,மதியம்  இரண்டு,இரவு ஐந்து வீடு -வேலை ! ரொட்டி,சப்ஜி (வெஞ்சனம்) செய்வான ! சுத்தமான ம.பி பிராமணன் ! சமையல் வேலை !
அந்த வனதேவி நகரில் தான் தீவிபத்து !
2010ம் ஆண்டு நடந்தது ! மறு நாள் மத்திய இந்தியாவின் ஆங்கில இதழான "ஹிதவாதா" வில் தலைப்பு செய்தியாக வந்தது !
றிஜ்வான் வீடு சாம்பலாகி விட்டது ! அவனுக்கு இரண்டு கைகளிலும் தீக்காயம் ! தெவ் சந்த் வீட்டில் கூரை வேய்வதற்காக இரண்டு துருபிடித்த தகர ஷீட்டுகளை வைத்திருந்தான் ! தீபரவாமலிருக்க றிஜ்வான் அதை இழுத்தான் ! தகர மாதலால் சூடு தாங்காமல் அவன் இரண்டு கைகளும் கொப்பளித்து விட்டது !
தெவ்சந்த் மனைவி தகரப்பொட்டி ஒன்றை எடுத்தாள் ! அதற்குள் தான் சிறுவாடு வைத்திருப்பாள் திறந்து பார்த்தபொது ஏழு எட்டு பத்து ரூ நோட்டுகள்  கருகிக் கிடந்தன ! அவள் கையிலும் சூடு !
பஷீர் ரிங்ரோடில் ஒரு கடயில் சமையல்வேலை செய்கிறான் ! தன்னர்வ குழுக்கள் வசூல் செய்தனர் !
தேவ் சந்த் தனக்குத்தெரிந்த பலசரக்குகடைகாரரை 12 மணிக்குமெல்எழுப்பி அரிசி, உப்பு, எண்ணை வாங்கிவந்தான் ! பஷீர் 'புலவு" செய்தான் ! ரமாகாந்த் பந்திபோட்டன் ! முதலில் குழந்தகள் ! பின்னர் பெண்கள்  ! எல்லரும் சாப்பிட்டபின்  ஆண்கள் அமர்ந்து பேசிக்கொண்டனர் !
"தொஸ்த் ! ஒருவாரம் வேலைக்கு பொகாதே !" என்றான் ரிஜ்வானை நோக்கி தேவ் !
அவனைப்பார்த்து பரிதாபமாக இளித்தான் றிஜ்வான் !
"உன் குடும்ப  சாப்பாடு என்பொறுப்பு ! மீன் மட்டும் கேக்காத" என்றான் ராம்சந்த்1 எல்லரும் சிரித்தனர் !
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஹிதவாதா" பெப்பரில் இதனை படித்த எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது !
என் வீட்டு வாசலில் பெரிய புளியமரம் உண்டு ! அதன் பரந்த நிழலில் மதிய வேளையில் ஆடோகாரரகள் இளைபாருவார்கள் ! நானும் அங்கு சென்று அவர்களோடு வம்பு பெசுவேன் !
கமர் உத்தீன் என்ற ஆட்டோ காரார் என்னிடம் நிறைய பெசுவார் !
சாப் ! கபர் க்யா (செய்தி) ஹை ?" என்று கேட்பார் ! அவ்வப்போது நானும் அவரிடம் அன்றய செய்திய கூறுவேன் !
அன்று வனதேவி நகர் செய்தி நெகிழ்ச்சியாக இருந்ததால் அவரிடம் சொன்னென் !
முடிப்பதற்குள் சவாரி வந்து விட்டது ! கமர் உத்தீன் வண்டியைக் கிளப்பைக்கொண்டே சொன்னர்

"கியா சாப் ! ஆக் ஜானே கியா ? நெருப்புக்கு தெரியுமா ! இவன் முஸல்மான்.இவன் இந்து ,இவன் தலித் நு!"
ஆட்டோ பின்னால் புகை வெளியேறியதைப் பார்த்துக்கொண்டே நின்றென் !!!

Wednesday, March 04, 2015

பணவீக்கமும் 

ஐ.மா பாவும் .......!!!




அப்போது "தீக்கதிரில் "  பிழை திருத்தும் பகுதியில் மனோ என்ற பையன் பணியாற்றி வந்தான் ! எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் ! கொஞ்சம் கொஞ்சமாக துணை ஆசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவன் ! 

ஒரு கட்டத்தில்நிர்வாகப் பிரிவுக்கு அவன் அனுப்புபட்டான் ! இரு ந்தாலும் மதிய நேரங்களில் என்னி \டம் வந்து பல சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வான் ! 

"தோழர் ! பணவீக்கம் நா என்ன தோழர் ? " என்று என்று என்னிடம் கேட்டான் !

விளக்கமாக சொல்ல தெரியவில்லை ! அதனால் அடித்து விட்டேன் ! " more money chasing less commodity " என்று அடித்து விட்டேன் ! குண்டக்க மண்டக்க விளைக்கம் சொல்லி அனுப்பினேன் ! சமாளித்து அனுப்பினேன் என்பது தான் சரியாக இருக்கும் !

அருகில் இருந்த ஐ.மா.பா " சாமா ! உனக்கு எப்ப கலயாணம் ஆச்சு? ! என்று கேட்டார் !

'1962 "

"அப்பம் தங்கம் விலை என்ன?"

"நகை எல்லாம் வேண்டாம் நு ட்டேன் "

"தாலி கட்டினே இல்ல "

"தாலி மட்டும் தங்கத்தில  செஞ்சாங்க "

"அப்பம் சவரன் எவ்வளவு ? "

"தெரியாது ஐமாபா !"

"தங்கமே வாங்கினது இல்லையா ?"

"63ல் வாங்கினேன் "

"எவ்வளவு ?"

"90 ரூ ஒரு சவரன் "

"பட்டு புடவை வாங்கியிருக்கியா ?"

"வெள்ளி கம்பில  தங்கஜரிகை போட்டது "

"எவ்வளவு ?"

 "ஏம் போட்டு உயிரை வாங்கரிய ?"

"உனக்கு மனசுலயும் ஒண்ணூங்கிடையாது !மண்டைலை யும் ஒண்ணும்கிடையாது ! கேட்டதுக்கு பதில் சொல்லு !"

"66 ரூபாய் இருந்திருக்கும் "

"இப்பம் தங்கம் விலை என்ன இருக்கும் ?"

"சவரன் 16000 ரூ "

"பட்டுப்டவை என்ன இருக்கும்? "

"12-13 000 இருக்கும் ?"

"முடிஞ்சு போச்சு ! உன் inflation ,stagnation ,stagflation எல்லாம் இம்பிட்டு தான் சாமா" !

"என்ன சொல்றிங்க ஐ.மா.பா !"

"8 கிராம் தங்கம் 90 ரூ 1 6கிராம் தங்கம் கொடுத்தா  பட்டுபுடவை ! இப்பம் 8 கிராம் தங்கம் 16000 ரூ ! இப்பமும் 6 கிராம் தங்கம் கொடுத்தா அதே மாதிரி பட்டுப் புடவை ! "

"விலையை பாருங்க ஐமாபா ?"

"விலை என்ன விலை ? paper money ! காகிதப்பணம் ! "

"தங்கம் அதே 6கிராம் தான் ! காகிதப் பணம் கூடி போச்சு ! விரல் வீங்கினா ஆரோக்கியம் இல்லை ! அத  மாதிரிதான் காகித பணமும் ! இது தாண்டா பணவீக்கம் !நாம எழுதறது தஞ்சாவுர் விவசாயிக்கும் புரியணம் ! உசிலம் பட்டி மாயிக்கும் புரியணம் ! "

நான் பதில்பேசவில்லை ! அவரை யே பாத்துக் கொண்டிருந்தேன் !

"ஐமாபா !நீங்க என்ன படிசிருக்கீங்க ! ?

எழுந்து சென்று "நியூஸ்பிரிண்ட் " பேப்பர் சைடுக்காக  வெட்டி இருந்தை எடுத்து எண்ணை வடியும் முகத்தை துடைத்துக் கொண்டெ சொன்னார் 

"பத்தாப்பு இரண்டுதரம்  பெயில் "









Tuesday, March 03, 2015

ஒரு மணிநேரத்திற்கு 

7 கோடி சலுகை ............!!!



சமயல் எரிவாயு வுக்கான  மானியம் வாங்க ஆதார் அட்டையோடு போக வேண்டும் ! அதனைப் பெற ஆதார்  அட்டையும் வங்கி கணக்கும் வேண்டும் !

மதுரையில் தண்ணி லாரிமூலம் மாநகராட்சியில் தண்ணீர் வீதி தோரும் அளிப்பார்கள் ! தண்ணி லாரி தெருவோரம் வந்ததும் சின்னப்பயலுகள் "தண்ணிலாரி வந்திடுச்சி " என்று கத்திக்கொண்டே தெருமுழுவதும் ஓடுவார்கள் ! அடுப்பங்கரையில் இருக்கும் தாய்மார்கள் குண்டான் குத்துப்போணி ,அலுமிநியசட்டி   என்றுகண்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு தண்ணி பிடிக்க ஓடுவார்கள் !

இப்போது ஆதார்  அட்டைக்கு படம் பிடிக்க ஓடுகிறார்கள் ! படம் பிடிப்பது யாரு,எப்போ,எங்க என்று தெரியாமல் அல்லாடுகிறார்கள் !

மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள்ள ஆதார்  அட்டைய கொடுக்கலைனா எரிவாயு மானியம் தரமாட்டோம்னு மோடி அரசு சொல்லிட்டுது !

மானியத்தை வெட்டுது நல்லது தான் ! நிதி நில அறிக்கைல எதை எதை  எப்படி கொறைக்கலாம்னு  பத்தி பத்தியா சொல்லறாங்க ! உணவுப் பொருட்களை ஏழை பாழைகளுக்கு பொது வினியோகம் மூலம் கொடுக்கறதுல ஏகப்பட்ட சங்கடங்கள் ! "சவத்தை " கொஞ்சம் கொஞ்சமா குறைசுட்டு வராங்க ! இந்த பணத்தை "வளர்ச்சி " பணிகளுக்கு பயன்படுத்தி நாட்டை "விகாஸ் " பண்ண போறாராம் மோடி 

அதே மாதிரி வரி வசூல் பண்ணவும்முடிவெடுத்திருக்காங்க ! ஒய்வு பெற்ற வர்கள் மிச்ச மிருந்ததை வங்கில போட்டு அறைவட்டி கால்வட்டி வாங்கி கஞ்சி குடிக்காங்க ! அது வருமானம் தான ! அதுக்கு வருமான வரியை வட்டில இருந்து வங்கியே பிடிசுக்கிடும் ! அவருடைய வருமானம் வரி கட்டவேண்டாத வரம்புக்குள்ள இருந்தாலும் வரியா வங்கிகள் பிடிச்சுக்கிடும் !  பின்னால அவரு வருமான வரி அலுவலகத்துக்கு நடையா நடந்து வாங்கிக்கலாம் !

வருமான வரி வசூல்ல சில புதுமைகளை செய்திருக்காங்க ! இதுபற்றி பத்திரி கையாள "சாய்நாத்" குறிப்பிட்டுள்ளார் !

பெரிய பெரிய கார்பொரேட் கம்பெனிகளுக்கும் வருமான வரி உண்டு ! அம்பானி,அதானி,பிர்லா,டாடா , நு அம்புட்டு பெருக்கும் வரி போட்டிருக்காங்க ! அவங்க எங்களுக்கு பொட்ட வரி அதிகம் நு சொல்லி முறையிடு வாங்க ! அப்பம் நிதியமைச்சர் தலையிட்டு அத "சரி ! அதனாலென்ன ! உங்களுக்கு மட்டும் சலுகையா தரன் ! நீங்க கட்டவேண்டாம்  " நு உத்தரவு போடுவாரு !

இப்படி சலுகையா விட்டுக்கொடுதவரி எம்புட்டு தெரியுமா ?

ஒருமணிநேரத்துக்கு   7 கோடி ரூபாய் !

ஒருநாளைக்கு 168 கோடி ரூபாய் !!

ஒருவாரத்துக்கு 1176 கொடி ரூபாய் !!

ஒருவருசத்துக்கு 61152 கோடி ரூபாய் !!

9 வருசத்துக்கு 550368 கோடி ரூபாய் !!!

அது என்ன ஒம்பது வருஷம் ?

அதுக்கு முந்திய கணக்கை மறைச்சு வச்சிட்டாணுக !

இது தவிர சுங்க வரி,உற்பத்திவரினு 5லட்ச 32 ஆயிரம் கோடி சலுகை கொடுத்தாச்சு !

அது சரி  அண்ணெ !  நாம ஆதார் அட்டைக்கு நாயா அலைவோம் !!!