skip to main |
skip to sidebar
பணவீக்கமும்
ஐ.மா பாவும் .......!!!
அப்போது "தீக்கதிரில் " பிழை திருத்தும் பகுதியில் மனோ என்ற பையன் பணியாற்றி வந்தான் ! எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் ! கொஞ்சம் கொஞ்சமாக துணை ஆசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவன் !
ஒரு கட்டத்தில்நிர்வாகப் பிரிவுக்கு அவன் அனுப்புபட்டான் ! இரு ந்தாலும் மதிய நேரங்களில் என்னி \டம் வந்து பல சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வான் !
"தோழர் ! பணவீக்கம் நா என்ன தோழர் ? " என்று என்று என்னிடம் கேட்டான் !
விளக்கமாக சொல்ல தெரியவில்லை ! அதனால் அடித்து விட்டேன் ! " more money chasing less commodity " என்று அடித்து விட்டேன் ! குண்டக்க மண்டக்க விளைக்கம் சொல்லி அனுப்பினேன் ! சமாளித்து அனுப்பினேன் என்பது தான் சரியாக இருக்கும் !
அருகில் இருந்த ஐ.மா.பா " சாமா ! உனக்கு எப்ப கலயாணம் ஆச்சு? ! என்று கேட்டார் !
'1962 "
"அப்பம் தங்கம் விலை என்ன?"
"நகை எல்லாம் வேண்டாம் நு ட்டேன் "
"தாலி கட்டினே இல்ல "
"தாலி மட்டும் தங்கத்தில செஞ்சாங்க "
"அப்பம் சவரன் எவ்வளவு ? "
"தெரியாது ஐமாபா !"
"தங்கமே வாங்கினது இல்லையா ?"
"63ல் வாங்கினேன் "
"எவ்வளவு ?"
"90 ரூ ஒரு சவரன் "
"பட்டு புடவை வாங்கியிருக்கியா ?"
"வெள்ளி கம்பில தங்கஜரிகை போட்டது "
"எவ்வளவு ?"
"ஏம் போட்டு உயிரை வாங்கரிய ?"
"உனக்கு மனசுலயும் ஒண்ணூங்கிடையாது !மண்டைலை யும் ஒண்ணும்கிடையாது ! கேட்டதுக்கு பதில் சொல்லு !"
"66 ரூபாய் இருந்திருக்கும் "
"இப்பம் தங்கம் விலை என்ன இருக்கும் ?"
"சவரன் 16000 ரூ "
"பட்டுப்டவை என்ன இருக்கும்? "
"12-13 000 இருக்கும் ?"
"முடிஞ்சு போச்சு ! உன் inflation ,stagnation ,stagflation எல்லாம் இம்பிட்டு தான் சாமா" !
"என்ன சொல்றிங்க ஐ.மா.பா !"
"8 கிராம் தங்கம் 90 ரூ 1 6கிராம் தங்கம் கொடுத்தா பட்டுபுடவை ! இப்பம் 8 கிராம் தங்கம் 16000 ரூ ! இப்பமும் 6 கிராம் தங்கம் கொடுத்தா அதே மாதிரி பட்டுப் புடவை ! "
"விலையை பாருங்க ஐமாபா ?"
"விலை என்ன விலை ? paper money ! காகிதப்பணம் ! "
"தங்கம் அதே 6கிராம் தான் ! காகிதப் பணம் கூடி போச்சு ! விரல் வீங்கினா ஆரோக்கியம் இல்லை ! அத மாதிரிதான் காகித பணமும் ! இது தாண்டா பணவீக்கம் !நாம எழுதறது தஞ்சாவுர் விவசாயிக்கும் புரியணம் ! உசிலம் பட்டி மாயிக்கும் புரியணம் ! "
நான் பதில்பேசவில்லை ! அவரை யே பாத்துக் கொண்டிருந்தேன் !
"ஐமாபா !நீங்க என்ன படிசிருக்கீங்க ! ?
எழுந்து சென்று "நியூஸ்பிரிண்ட் " பேப்பர் சைடுக்காக வெட்டி இருந்தை எடுத்து எண்ணை வடியும் முகத்தை துடைத்துக் கொண்டெ சொன்னார்
"பத்தாப்பு இரண்டுதரம் பெயில் "
0 comments:
Post a Comment