skip to main |
skip to sidebar
ஒரு மணிநேரத்திற்கு
7 கோடி சலுகை ............!!!
சமயல் எரிவாயு வுக்கான மானியம் வாங்க ஆதார் அட்டையோடு போக வேண்டும் ! அதனைப் பெற ஆதார் அட்டையும் வங்கி கணக்கும் வேண்டும் !
மதுரையில் தண்ணி லாரிமூலம் மாநகராட்சியில் தண்ணீர் வீதி தோரும் அளிப்பார்கள் ! தண்ணி லாரி தெருவோரம் வந்ததும் சின்னப்பயலுகள் "தண்ணிலாரி வந்திடுச்சி " என்று கத்திக்கொண்டே தெருமுழுவதும் ஓடுவார்கள் ! அடுப்பங்கரையில் இருக்கும் தாய்மார்கள் குண்டான் குத்துப்போணி ,அலுமிநியசட்டி என்றுகண்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு தண்ணி பிடிக்க ஓடுவார்கள் !
இப்போது ஆதார் அட்டைக்கு படம் பிடிக்க ஓடுகிறார்கள் ! படம் பிடிப்பது யாரு,எப்போ,எங்க என்று தெரியாமல் அல்லாடுகிறார்கள் !
மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள்ள ஆதார் அட்டைய கொடுக்கலைனா எரிவாயு மானியம் தரமாட்டோம்னு மோடி அரசு சொல்லிட்டுது !
மானியத்தை வெட்டுது நல்லது தான் ! நிதி நில அறிக்கைல எதை எதை எப்படி கொறைக்கலாம்னு பத்தி பத்தியா சொல்லறாங்க ! உணவுப் பொருட்களை ஏழை பாழைகளுக்கு பொது வினியோகம் மூலம் கொடுக்கறதுல ஏகப்பட்ட சங்கடங்கள் ! "சவத்தை " கொஞ்சம் கொஞ்சமா குறைசுட்டு வராங்க ! இந்த பணத்தை "வளர்ச்சி " பணிகளுக்கு பயன்படுத்தி நாட்டை "விகாஸ் " பண்ண போறாராம் மோடி
அதே மாதிரி வரி வசூல் பண்ணவும்முடிவெடுத்திருக்காங்க ! ஒய்வு பெற்ற வர்கள் மிச்ச மிருந்ததை வங்கில போட்டு அறைவட்டி கால்வட்டி வாங்கி கஞ்சி குடிக்காங்க ! அது வருமானம் தான ! அதுக்கு வருமான வரியை வட்டில இருந்து வங்கியே பிடிசுக்கிடும் ! அவருடைய வருமானம் வரி கட்டவேண்டாத வரம்புக்குள்ள இருந்தாலும் வரியா வங்கிகள் பிடிச்சுக்கிடும் ! பின்னால அவரு வருமான வரி அலுவலகத்துக்கு நடையா நடந்து வாங்கிக்கலாம் !
வருமான வரி வசூல்ல சில புதுமைகளை செய்திருக்காங்க ! இதுபற்றி பத்திரி கையாள "சாய்நாத்" குறிப்பிட்டுள்ளார் !
பெரிய பெரிய கார்பொரேட் கம்பெனிகளுக்கும் வருமான வரி உண்டு ! அம்பானி,அதானி,பிர்லா,டாடா , நு அம்புட்டு பெருக்கும் வரி போட்டிருக்காங்க ! அவங்க எங்களுக்கு பொட்ட வரி அதிகம் நு சொல்லி முறையிடு வாங்க ! அப்பம் நிதியமைச்சர் தலையிட்டு அத "சரி ! அதனாலென்ன ! உங்களுக்கு மட்டும் சலுகையா தரன் ! நீங்க கட்டவேண்டாம் " நு உத்தரவு போடுவாரு !
இப்படி சலுகையா விட்டுக்கொடுதவரி எம்புட்டு தெரியுமா ?
ஒருமணிநேரத்துக்கு 7 கோடி ரூபாய் !
ஒருநாளைக்கு 168 கோடி ரூபாய் !!
ஒருவாரத்துக்கு 1176 கொடி ரூபாய் !!
ஒருவருசத்துக்கு 61152 கோடி ரூபாய் !!
9 வருசத்துக்கு 550368 கோடி ரூபாய் !!!
அது என்ன ஒம்பது வருஷம் ?
அதுக்கு முந்திய கணக்கை மறைச்சு வச்சிட்டாணுக !
இது தவிர சுங்க வரி,உற்பத்திவரினு 5லட்ச 32 ஆயிரம் கோடி சலுகை கொடுத்தாச்சு !
அது சரி அண்ணெ ! நாம ஆதார் அட்டைக்கு நாயா அலைவோம் !!!
0 comments:
Post a Comment