Thursday, August 17, 2017






அற்புதம், அற்புதம், அற்புதம் !!!

வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் அவர்களே !!!




1948அல்லது 49 ஆக இருக்கலாம். நெல்லை டவுனில்நான் எட்டாம் வகுப்புப்படித்துக்கொண்டிருந்தேன். ஓவிய ஆசிரியர் அழகேசன்  சிறு புத்தகங்கள்படிக்கக்கொடுப்பார். கரிபால்டி,  ஆலிவர் க்ராம்வெல், வால்டேர் ஆகியோரின் வாழ்க்கை  பற்றி வே சுவாமினாத சர்மா  எழுதிய  புத்தகங்கள் அவை. கனமான நீல  அட்டை போட்டு 20 அல்லது 30 பக்கங்கள் இருக்கும். ஒருமுறை ஒருபுத்தகத்தை கொடுத்து, இங்கேயே படி.வீட்டுக்கு கொண்டு போகாதே என்று  கூ றி ஒரு புத்தகத்தை கொடுத்தார். அட்டையில் கார்ல் மார்க்ஸ் என்று இருந்தது.

அதன் பிறகு மார்க்ஸ் பற்றியும்,அவருடைய தத்துவம்யுபற்றியும் நிறைய படித்து வருகிறேன்.

இன்று காலை U டியூபில் மார்க்ஸ் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் உரையை கேட்டேன் .

" எல்லோருக்கும் வணக்கம் ! திருப்பூரில் ...." என்று ஆரம்பித்து தங்கு தடை இல்லாத பேசசு .ஆற்றோட்டம் போன்ற சொற் பிரயோகம் எங்கும் பிசிறுதட்டாத உசசரிப்பு. 

மார்க்ஸ் சின் வாழ்கையில் அருகில் இருந்து அனுபவித்தவர்களால்  கூ ட இப்படி சித்தரிக்க முடியுமா ? 

மார்க்ஸ் ஒரு சிந்தனையாளன் தான். அவணுக்குள்ளும்  ஒரு காதல் நெஞ்சம்  உள்ளதே. அவன் காதலி ஜென்னி அவனை வீட நான்கு வயது மூத்தவள்.

"மார்க்ஸ் !   நீ   சின்ன குழந்தையாக இருந்த போதே உன்னை பார்த்தவள் நான் " எத்தனை குறும்புகலந்த காதல் மனம். ராமகிருஷ்ணன் ஜென்னியை பற்றியும் மார்க்ஸ்பற்றியும் பேசும் பொது உணர்ச்சி  வசப்பட்டார். பார்வையாளர்களும் கூ ட . காரணம் அவர்கள் இருவரும் வாழ்ந்த  வாழ்க்கை. .

மார்கஸ்,ஹெகல், ஏங்கல்ஸ் , எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்..

தன்னை நாடற்றவராக மார்க்ஸ் அறிவித்தார் என்று கூறியபோது அவர் குரல் தழுதழுத்தது. .கேட்டுக் கொண்டிருந்த என்கண்களிலுமஈரம் கசிந்தது. 

மார்க்ஸ் வாழ்க்கை  வரலாற்றை படித்திருக்கிறேன்.

ஆனால் ராமகிருஷ்ணன் மூலம் கிடைத்த அனுபவம் என் ஆயுளுக்கும் மறக்க  முடியாதது .

வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் .!!!






















0 comments: