காதல் திருமணமும் ,
மத மாற்றமும்......!!!
அகிலா என்ற இந்து மதத்தை சார்ந்த பெண் முஸ்லிமாக மாறியது உச்சநீதி மன்றம் வரை சென்றது .
ஒரு இந்துவும் முஸ்லிமும், நணபர்களாக இருக்கலாம் என்றால் திருமணம் ஆனபிறகும் அப்படியே ஏன் இருக்க முடியாது என்ற கேள்வி முகநூலில் எழுப்பப்பட்டு விவாத பொருளாகிவிட்டது. இதற்கு காரணம் இந்துக்கள் அல்ல. கிறிஸ்துவ,இஸ்லாமிய மதத்தினரே என்று ஒருவர் பதிலும் எழுதி இருக்கிறார் .
நாட்டில் நடப்பில் நடக்கும் நிலைமை பற்றி சரியான கவனம் இல்லாததே இதற்கு காரணம்.
பல மாநிலங்களில் வெவவேறு மதத்தை சார்ந்தவர்கள் ஓரே குடும்பத்தில் மிகவும் சகஜமாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மை யை அறியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம் தான் அதிகமாக இருக்கிறது. கிராமப்புற மக்களிடையே இருக்கிற புரிதல் இந்த intelectuals களிடையே இருப்பதில்லை .
நெல்லை மாவட்டத்தில் அண்ணன் இந்து வாகவும் தங்கை கிறிஸ்துவராகவும் இருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம் . எனது நண்பர் கிரிஸ்துவர் . வெகுகாலம் குழந்தை இல்லை . ஒருமுறை சங்கரன் கோவில் சென்றிருக்கிறார் .அங்கு ஒருவர் ஆலோசனையை கேட்டு குழ்ந்தை பிறந்தால் சங்கர நாராயணன் என்று பெயர் வைப்பதாக நேர்ந்திருக்கிறார் .அவருக்கு முதல் குழந்தையாக பெண் பிறந்ததும். அந்த குழந்தைக்கு கோமதி என்று பெயர் வைத்தார் .அதன்பிறகு அவருக்கு ஒரு ஆணும் பெண்ணும் குழந்தையாக பிறந்தது.
கோமதி தன அத்தைமகன் சலமனை திருமணம் செய்து கொண்டார். கோமதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்> அவரது முதல் மகன் சங்கர நாராயணன் , இளையவன் பிரிட்டோ ! மூத்தவன் இந்துவாகவும் இளையவன் கிறிஸ்துவாகவும் வாழ்கிறார்கள்.
பஞ்சாபில் இத்தகைய நல்லிணக்கத்தை அதிகம் பார்க்கலாம் . அண்ணண் காளி பக்தனாக இருப்பான். தம்பி தாடியோடு சீக்கியராக வலம் வருவார்.
பஞ்சாபி இலக்கியத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் நானக் சிங். லாகூரில் பிறந்தவர் .அவர் ஒரு இந்து .பின்னாளில் சிக்கியராக மாறினார். ஹன்ஸ் ராஜ் என்ற தன பெயரை மாற்றிக்கொண்டு நானக் சிங் என்று ஆனார்.
அக்பரின் மனைவி ஜோதிபா ! அவர் மதம் மாறவில்லை .அரண்மனைக்குள் கிருஷ்ணன் கோவில் கட்டிக்கொடுத்தார் அக் பர்கிருஷ்ணன் பிறந்தநாள்விழாவில் அக்பரும் கலந்து கொள்வார் என்பது வரலாறு.
நீதிமான்கள்,மத தலைவர்கள் கூட இதனை மறந்து நிற்கிறார்களே !!!
.
0 comments:
Post a Comment