சென்னை மாநாட்டில் ,
தனித்தனி அறிக்கை .
வைத்தோம் ...!!!
சென்னையில் த.மு.எ ச மாநாடு நடந்த போது கவிதை,நாவல், திரைப்படம் என்று தனித்தனியாக அறிக்கை வைக்க முடிவு செய்தொம்.பரீட்சார்த்தமாக இது ஆரம்பமானது.
தமிழ் திரைப்பட உலகம் பற்றிய அறிக்கையை காஸ்யபன் தயாரிக்க வேண்டும். திருச்சியை சார்ந்த ஸ்டேட் வங்கி தோழர் அவருக்கு உதவுவார் என்று முடிவாகியது.
திரைப்படம் என்பது மக்களுக்கு கற்று கொடுக்கும் சாதனம்> அதனால் அதனை கல்வி இலாக்காவோடு இணைத்து சோவியத் அமைசரவையில் மாமேதை லெனின் வைத்தார்.தமிழ் திரையுலகம் ஆரம்பத்திலாரோக்கியமாகவே தொடங்கியது /
கலை இலக்கியத்தில் பரிசய முள்ளவர்கள் வந்தனர். படப்பிடிப்பு தளம்,மாதசம்பளத்தில் நடிகர் ,நடிகைகள், தொழில் நுணுக்க வல்லுநர்கள்< இசைஅமைப்பாளர்கள், பட விநியோகம், ஏன் திரை அரங்குகள் வரை அவர்கள் வைத்திருந்தனர் .தயாரிப்பிலிருந்து, மக்களை அடையும் வரை அவர்கையிலேயே இருந்தது> ஜெமினி ஸ்டுடியோ,லாபரேட்டரி, சர்க்கியூட் என்று இருந்தது> பக்ஷிராஜா,ஏவி.எம்.என்று இருந்தன. இந்தமுறையை ஸ்டூடியோ சிஸ்டம் என்று அழைத்தனர்
இரண்டாம் உலக யுத்தம் வந்து எல்லாவற்றையும் புரட்டி போட்டது. பொருட்கள் தட்டுப்பாடு அதிகமாகியது> ரேஷன் முறை வந்தது> விலைவாசி ஏறியது> கள்ள மார்க்கெட் உருவாகியது>கள்ளப்பணமும் வந்தது> 50000 ஆயிரத்தில் இருந்து ஓர் லட்சத்திற்கும் படம் எடுத்த காலம் போய் தயாரிப்பாளர்கள் முதலீடு இல்லாமல் தவித்தார்கள்.கள்ளப்பணம் இந்த தவிப்பை நேர் செய்தது
பணம் இருப்பவன் கலைஞனை வாடகைக்கு வாங்கி படம் தயாரிக்கும் நிலை தோன்றியது>லாபநோக்கும்,கேளிக்கையும் அடிநாதமாக மாறியது ஸ்டுடியோஸிஸ்டம் நொறுங்கி ஸ்டார் சிஸ்டம் தோன்றியது>1000 ரூ பணம் கொடுத்து 500 க்கு ரசிது வாங்கும் கள்ளக்கணக்கு முறை வந்தது>
சுதந்திர இந்தியாவின் வளர்சசி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன முக்கியமாக மின் சாரமயம் நடந்தது> கள்ளப்பணம் உள்ளவன் தன்கருப்பை வெள்ளையாக்க இதன் பயன்படுத்திக்கொண்டான.ஊருக்கு ஊர், திரை அரங்குகளை கட்டி ஒரு மாற்றுப்பொருளாதாரத்தையே உருவாக்கினான்> உ.பிமானிலத்தில் ஐந்து லட்சம்பேருக்கு ஒரு தியேட்டர்> தமிழகத்தில் 60000 பேருக்கு ஒன்றாகியதும். மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர். ( அறிக்கையின் சில பகுதிகளே இவை )
திரைப்படத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு அதற்கு வெளியே சமூகத்தில் உள்ளது என்று அறிக்கை அறிவுறுத்தியது.
மாநாட்டு நிகழ்சசிகள் அதிகமாக இருந்ததால். இந்த அறிக்கைகள் வாசிக்கப்படாமல், வாசிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
தமுஎ சவின் ஆவணங்களோடு இந்த அறிக்கையும் கோப்புக்குள் அடங்கி விட்டது