"தூத்து குடி "
பெயர் வந்த காரணம் ...!!!
பண்டைய காலத்தில் முத்துநகர் என்றே அழைக்கப்பட்டுள்ளது ஒருபக்கம் காயல் பட்டினம் துறைமுகம். இந்தப்பக்கம் மணப்பாடு ,
அன்னை தாமிரவருணி நெல்லும்,கரும்பும், சோளமும், கேப்பையும், அள்ளிக்கொடுத்தாள் . மேலமலை மிளகும் கிராம்பும் ஏலமும்கொடுத்தது .ஆழ் கடலில் கப்பலை நிறுத்தி பாரசீக வணிகர்கள் அள்ளி ச் சென்றனர் சென்றனர் .
தென்தமிழகத்தின் வணிகர்கள் தங்கள் தானியங்களை பாரவண்டியில் ஏற்றி மணப்பாடு,காயல் பட்டினம் இரண்டுக்கும் நடுவாக முத்து நகரில் இறங்குவார்கள்> அங்கிருந்து தலைசுமையாயாக படகில் ஏற்றி பெரிய கப்பல்களில் சரக்கேற்றுவார்கள் .
எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சாக்குமூட்டையிலிருந்து தானியங்கள் சிதறத்தான் செய்யும்.இந்த சாலையில் சிந்திய தானியங்களை "தூத்து " பெருக்கி பொறுக்கி கூழ் காய்சசி "குடி"க்க வென்றே ஒரு கூட்டம் உண்டு .
தென் மாவட்டங்களில் ஒரு சொலவடை உண்டு.அண்ணன் தம்பி, தாய் மகன் ,தந்தை மகன் குடும்பச்சண்டையில் ஆதரவற்றவர்களா னவர்கள் பேசுவார்கள் "ஏல ! நீ இல்லைனா செத்தா போயிடுவேன் .தூத்து பெருக்கி கஞ்சி குடிச்சிக்கிடுவேன் " என்று சவால் விடுவார்கள் .
அப்படி "தூத்து - குடி "ச்ச சனங்கள் வாழ்ந்த , முத்துநகர் தான் தூத்துக்குடி ஆயிற்று .!
0 comments:
Post a Comment