Wednesday, June 06, 2018


கோவையில் நடந்த

மாநாடு .


அப்போது தோழர் ரமணி அவர்கள்  இருந்தார்கள் . அருமையான ஏற்பாடுகள் . சோஷலிச வாலிபர் சங்க தோழர்கள் பாடிக்கொண்டே  "லெஜிம் " நிகழ்ச்ச்சியை நடத்தினர்.

 கலைநிகழ்ச்ச்சிக்காக பெங்களூரிலிருந்து சமுதாய குழு வந்திருந்தது . சமுதாயாவின் தலைவர் தோழர் பிரசன்னா வந்திருந்தார் .அந்த குழுவில் திருநாவுக்கரசர் என்ற தமிழ்நாட்டுக்காரரும் இருந்தார் .

பிஹாரில் சுரங்க விபத்து நடந்த நேரம். சாசனலா என்ற சுரங்கத்திற்குள் நீர் புகுந்து விட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கத்தொழிலாளிகள் "ஜலசமாதி " அடைந்தனர்.

அந்த சம்பவத்தை நாடகமாக போட்டனர்.  தொழிலாளர்கள் மூச்சுத்திண றி உயிருக்கு போராடி பிணமாக மிதக்கும் காச்சி நடந்த பொது பிரமிப்பாக இருந்தது .

இந்த நாடகத்தை பிரசன்ன அவர்கள் இயக்கி இருந்தார் .


0 comments: