Saturday, November 10, 2018





"சர்கார் " திரைப்படத்தை 

முன் நிறுத்தி ......!!!









அரசியல் படம் பற்றிய சர்சசையில் ஈடுபடுவது அல்ல இந்த பதிவின் நோக்கம்.நான் அறிந்த அரசியல் படம் பற்றி சொல்வது தான் நோக்கம்.

அப்போதெல்லாம் சர்வதேச திரைப்பட விழாக்கள் டெல்லியில்நடக்கும்.பின்னர் மும்பை,கல்கத்தா,சென்னை என்று நடத்தினார்கள். 

 பங்களூருவில்நடந்தது .பிரான்சு,பிரிட்டன்,அமெரிக்கா ,ரஷ்யா, என்று சர்வதேச படங்கள்வரிசையாக நின்றன. அந்த ஆண்டு மிகசிசிறந்த அரசியல் படம் தேர்ந்தெடுக்கப்பட இருந்தது.

இந்த போ \ட்டியில் மிகசிறந்த படமாகதெலுங்கில் வந்த படமான "மா பூமி " என்ற படம் தேர்ந்தெடுக்கப்பட்டது .

நிஜாம் ஆட் சியில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியில் ஈடுபட்டு ஜமீன்களையும் ஜாகீர் ர்களையும் விரட்டிவிட்டு அந்த நிலங்களை மக்களுக்கு பகிர்ந்து அளித்துவிடுகிறார்கள் . நிஜாமின் சௌதி அரேபிய  கூலிப்படையை எதிர்த்து மூன்று ஆண்டுகள் ஆட்ச்சியை நடத்து கிறார்கள். இந்த போட்டாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் தான் சுந்தரய்யா, ராஜசேர்க்கர் என்ற கம்யூனிஸ்டு தலைவர்கள் .நிஜாம் தவித்து நின்றபோது நேருவும் ராஜாஜியும் சதி  செய்து இந்திய  ராணுவத்தை அனுப்புகிறார்கள். கர்னல் சௌத்திரியின் (பின்னாளில் ஜெனரல் ) தலைமையில் ஹைதிராபாத்திற்குள் நுழைந்த இந்திய ராணுவத்திடம்  நிஜாம்   ஒப்பந்தம் செய்து கொள்கிறார். புரட்ச்சி நசுக்கப்பட்டு நிலம் மீண்டும் ஜமீன்களிடம் கொடுக்கப்படுகிறது.

"மா பூமி " (என் நிலம் ) என்ற இந்த படத்தை எடுத்தவர் கவுதம் கோஷ் என்ற வங்கத்தைஸ் சேர்ந்த இளைஞர்.

சிறந்த விமரிசகரான ஷிவ்குமார் இதனை DOCOFICTION என்று வகைப்படுத்தி பாராட்டசினார். 

விரட்டியஅடிக்கப்பட்ட ஜமீன் களும் ஜாக்கிரகளும் இந்திய ராணுவம் புடை சூழ மீண்டுவந்து நிலங்களை பெற்றுக்கொள்வார்கள் . இந்தியா பிலிம்  டிவிஷனிலிருந்து வந்த படசுருளை கவுதம் கோஷ்  இதில் பயன்படுத்தி இருப்பர் .

இது ஒரு சர்வதேச பிரச்சினை யாகிவிடாமல் தடுக்க இந்தியா இதனை  இது ஒரு POLICEACTION என்று உலகிற்கு அறிவித்தது.

இன்றைய தெலுங்கானா மக்களுக்கு policeaction என்றுதான் தெரியும். அது ஒரு ஆயுதம் தாங்கிய புரட்ச்சி என்பது அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்  எனப்பதற்காகத்தான் இந்தபடத்தை எடுத்தேன் என்கிறார் கவுதம் கோஷ் .

அரசியல் படத்திற்கும், போஸ்டர் படத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டுய தருணம் வந்துவிட்டது.


0 comments: