Friday, June 28, 2019
Thursday, June 27, 2019
"கடவுள் மீதும் ,
காதல் மீதும்",
நம்பிக்கை
இல்லாதவன்!!.
கடவுள் மீதும் காதல்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உலகத்தில் அமர காதலர்கள் யார் என்று கேட்டால் "மார்க்ஸ்- ஜென்னி " என்று அடித்து சொல்லுவேன்.
கொஞ்சம் முரண் போல தோன்றலாம்.
அந்த நகரத்தின் மிகசிறந்த அழ்கிகளில் ஒருவர் ஜென்னி. வசதியான குடும்பத்து இளவரசி போன்ற வாழ்க்கை .
அவரோடு ஒப்பிட்டால் மார்க்ஸ் ஏழை தான் .முண்டுமுண்டாக கன்ன கதுப்போடு அழகிலும் ஒப்பிட முடியாது.
"ஜென்னி ! இந்த மார்க்ஸ்தான் உனக்கு கிடைத்தானா ? " என்று தோழிகள் கேட்டால் " அவன் என் கையைத்தொட்டால் என் ஆத்மாவை தொடுவதாக நினைக்கிறேன். நான் அவனைத்தொட்டால் அவன் ஆத்மாவை மீட்டுவதாக நினைக்கிறான் ! இதைவிட என்ன வேண்டும் ? என்று ஜென்னி பதிலளிப்பரராம் .
"இவனை விட வசதியுள்ளவன் கிடைக்கவில்லையா?"என்றால்
"முட்டாள்களே ! இன்னும் நூறாண்டுகளுக்கு இப்படி ஒரு அறிஞன் பிறந்ததில்லை என போற்றப்படப்போகிறவனின் காதலியாக மனைவியாக நான் வரலாற்றில் பவனி வருவேன்." என்பாராம் .
ஜென்னி பல வருடங்கள் மார்க்ஸை விட வயதில்மூத்தவர் .அவரை கேலி செய்வாராம்..
"ஏ ! மார்க்ஸ் ! நீ அம்மணமாக "மணி ஆட்டிக்கொண்டு "வீட்டிற்குள் ஓடும் டும்போதே உன்னை பார்த்திருக்கேனாக்கும் ".
மார்க்ஸ் இருகைகளால் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்தில் தலை குனிவாராம்.
ஜென்னி மார்கசி நேசித்ததைப் போல் பலமடங்கு மார்க்ஸும் நேசித்துள்ளார் . தன் மார்க்ஸுக்காக அவர் வறுமையில் வாடியது உலகம் அறிந்த ஒன்று. அறிவிற் சிறந்த மார்க்ஸ் சம்பாதிக்கத்தெரியாதவன். ஜென்னி பலநாள் பட்டினி இருந்திருக்கிறாள் .கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சுரக்காமல் இருக்கும் அளவுக்கு பட்டினி இருந்திருக்கிறார் .
இவர்களின் வறுமையை அறிந்த நண்பர் ஒருவர் கொஞ்ச்ம கோது மையையும்,பணத்தையும் எடுத்துக்கொண்டு அவர்கள் விட்டு தேடி வந்துள்ளார். அங்கு அவர் கண்ட காட்ச்சி அவரை திடுக்கிட வைத்துள்ளது.
இருவரும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்
ரோமியோவாக மார்க்ஸும்,ஜூலியட்டாக ஜென்னியும்,வசனம் பேச குழந்தை பசியோடு அவர்களை பார்த்து சிரித்துக் ஒண்டிருந்ததாம்.
எனக்கு கடவுள்நமபிக்கை இல்லை.காதலிலும் நமபிக்கை இல்லை தான்!
ஆனால் மார்க்ஸும் -ஜென்னியும் அமர காதலர்கள் என்பதைநம்புகிறேன்!
Wednesday, June 19, 2019
அரசியல் நிர்ணய சபையில் ,
அண்ணல் அம்பேத்கரின் ,
இறுதி எச்சரிக்கை .....!!!
1950ம் ஆண்டு ஜனவருமாதம் 26ம் தேதி இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது.இதனை வடிவமைத்த அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்டம் 1949 நவம்பர் 25ம் தேதி நடந்தது . சட்டத்தின் வரைவினை முன் மொழிந்து அண்ணல் அம்பேத்கார் அவர்கள் இறுதி பேச்சு மி கவும் .முக்கியமானதாகும் அப்போது அவர் மூன்று எச்சரிக்கையை விடுத்தார். அதன் சாராமசத்தை தருவதுதான் இந்த இடுகையின் நோக்கம்:
எச்சரிக்கை 1
" நாடாளுமனற ஜனநாயகம் இந்தியர்களுக்கு புதுசு அல்ல. புத்தர் மடத்தை நிர்வகிக்க சபைகளை உருவாக்கினார்> அந்த சபை உறுப்பினர்கள் தகுதி, செயல்முறை ,தேர்ந்தெடுக்கப்படும் முறை,நடத்தை விதிகளை ஆகியவற்றையும் உரூவாக்கினார். மடத்திற்கு வெளியே இருந்த சமூகத்திலிருந்து விதிகளைப்பார்த்து தான் உருவாக்கினார். "
"சுதந்திரம் நமக்கு இருந்தது. எனக்கு பயமாக இருக்கிறது .1950 ஜனவரி 26ம் தேதி நாம் தனிநாடாக சுதந்திரமாக இருக்க போகிறோம். நாம் அதனை தக்க வைத்துக் கொள்வோமா ? "
" முகம்மது காசிம் சிந்த் பகுதியை ஆக்கிரமித்தான் . அரசன் தாபர் அவனை எதிர்த்து போரிட்டான். தாபரின் தளபதிகள் காசிமிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு காசிமை எதிரித்து போரிட மறுத்து விட்டார்கள்"
"பிரித்விராஜனை வெறுப்பவன் ஜெயசந்திரன். கோரி முகம்மதுவை அழைத்து வந்து தாக்க சொன்னான். கோரி க்கு ஜெய்சந்திரனும் குஜராத்தின் சோலங்கி ராஜாவும் உதவினார்கள் ."
"சிவாஜி கடுமையாக்க போரிட்டார் . ஆனால் மராத்திய பிரபுக்களும், ராஜஸ்தானத்து அரசர்களும் முகம்மதியர்களோடு சேர்ந்து செயல்பட்டனர்."
"பிரிட்டிஷார் சீக்கிய அரசுகளை துவம்சம் செய்தனர் . சீக்கிய தளபதி குலாப் சிங் வேடிக்கை பார்த்தான்"
"இந்தியாமுழுவதும் 1857ம் ஆண்டு பிரிட்டீஷாரை எதிர்த்து போரிட்டனர் . வடக்கே சீக்கியர்கள் அமைதிகாத்தனர்"
எச்சரிக்கை 2
'அமெரிக்காவில் திருச்சபைகளில் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள்.அதன்படி பிரார்த்தனை செய்யும் பொது "கர்த்தரே ! எங்கள் அமெரிக்க தேசத்தையும் பாதுகாத்து அருளும் " என்று சேர்த்துக் கொண்டார்களா.ஓராண்டு இது நடந்தது.'
'அமேரிக்கா குடியற்ற நாடு. அங்கு பிரிஞ்சு,ஜெர்மனி, ஸ்பெயின் ,இத்தாலி, ஆகிய தேசத்தினரும் உண்டு அதனால் தேசம் என்பதை எதிர் த்தார்கள் .பின்னர் united states of America என்று மாற்றிக்கொண்டார்கள்'
'இந்திய பல மொழிகள்,பழ இனங்கள்.பல கலாசாரங்களை கொண்ட துஅமெரிக்காவில் இல்லாத சாதி கட்டமைப்பு உள்ள நாடு.''
எச்சரிக்கை 3
'ஜனநாயகத்தின் அடித்தளம், சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம். சுதந்திரமும் சகோதரத்துவமும் செழிக்க சமத்துவம் வேண்டுமே ! பிறப்பிலேயே சமத்துவம் இல்லையே "
( அண்ணல் அம்பேதகரின் பேச்சின் மொழிபெயர்ப்பு அல்ல இது அதன் சாறு தான் இது.)