Wednesday, June 19, 2019



அரசியல் நிர்ணய சபையில் ,

அண்ணல் அம்பேத்கரின் ,

இறுதி எச்சரிக்கை .....!!!



1950ம் ஆண்டு ஜனவருமாதம் 26ம் தேதி இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது.இதனை வடிவமைத்த அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்டம் 1949 நவம்பர் 25ம் தேதி நடந்தது . சட்டத்தின் வரைவினை முன் மொழிந்து அண்ணல் அம்பேத்கார் அவர்கள் இறுதி பேச்சு மி கவும் .முக்கியமானதாகும் அப்போது அவர் மூன்று எச்சரிக்கையை விடுத்தார். அதன் சாராமசத்தை தருவதுதான் இந்த இடுகையின் நோக்கம்:

எச்சரிக்கை 1

" நாடாளுமனற ஜனநாயகம் இந்தியர்களுக்கு புதுசு  அல்ல. புத்தர் மடத்தை நிர்வகிக்க சபைகளை உருவாக்கினார்> அந்த சபை உறுப்பினர்கள் தகுதி, செயல்முறை ,தேர்ந்தெடுக்கப்படும் முறை,நடத்தை விதிகளை ஆகியவற்றையும் உரூவாக்கினார். மடத்திற்கு வெளியே இருந்த சமூகத்திலிருந்து விதிகளைப்பார்த்து தான் உருவாக்கினார்.   "

"சுதந்திரம் நமக்கு இருந்தது.  எனக்கு பயமாக இருக்கிறது .1950 ஜனவரி 26ம் தேதி நாம் தனிநாடாக சுதந்திரமாக இருக்க போகிறோம். நாம் அதனை தக்க வைத்துக் கொள்வோமா ? "

" முகம்மது காசிம் சிந்த்  பகுதியை ஆக்கிரமித்தான் . அரசன் தாபர்  அவனை எதிர்த்து போரிட்டான். தாபரின் தளபதிகள் காசிமிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு காசிமை எதிரித்து போரிட மறுத்து விட்டார்கள்"

"பிரித்விராஜனை வெறுப்பவன் ஜெயசந்திரன். கோரி முகம்மதுவை அழைத்து வந்து தாக்க  சொன்னான். கோரி க்கு ஜெய்சந்திரனும் குஜராத்தின் சோலங்கி ராஜாவும்  உதவினார்கள் ." 

"சிவாஜி கடுமையாக்க போரிட்டார் . ஆனால் மராத்திய பிரபுக்களும், ராஜஸ்தானத்து அரசர்களும் முகம்மதியர்களோடு சேர்ந்து செயல்பட்டனர்."

"பிரிட்டிஷார் சீக்கிய அரசுகளை துவம்சம் செய்தனர் . சீக்கிய தளபதி   குலாப் சிங் வேடிக்கை பார்த்தான்"

"இந்தியாமுழுவதும் 1857ம் ஆண்டு பிரிட்டீஷாரை எதிர்த்து போரிட்டனர் . வடக்கே சீக்கியர்கள் அமைதிகாத்தனர்"

எச்சரிக்கை 2

'அமெரிக்காவில் திருச்சபைகளில் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள்.அதன்படி பிரார்த்தனை செய்யும் பொது "கர்த்தரே ! எங்கள் அமெரிக்க தேசத்தையும் பாதுகாத்து அருளும் " என்று சேர்த்துக் கொண்டார்களா.ஓராண்டு இது நடந்தது.'

'அமேரிக்கா குடியற்ற நாடு. அங்கு பிரிஞ்சு,ஜெர்மனி, ஸ்பெயின் ,இத்தாலி,  ஆகிய தேசத்தினரும் உண்டு அதனால் தேசம் என்பதை எதிர் த்தார்கள் .பின்னர் united states of America என்று மாற்றிக்கொண்டார்கள்'

'இந்திய பல மொழிகள்,பழ இனங்கள்.பல கலாசாரங்களை கொண்ட துஅமெரிக்காவில் இல்லாத சாதி கட்டமைப்பு உள்ள நாடு.'' 

எச்சரிக்கை 3

'ஜனநாயகத்தின் அடித்தளம், சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம். சுதந்திரமும் சகோதரத்துவமும் செழிக்க  சமத்துவம் வேண்டுமே ! பிறப்பிலேயே சமத்துவம் இல்லையே "

( அண்ணல் அம்பேதகரின் பேச்சின் மொழிபெயர்ப்பு அல்ல இது அதன் சாறு தான் இது.)

இந்திய நாடாளுமன்றம் கூடியது .ராட்சச பலத்தோடு கூடிய ஆளும் கடசியினர் போட்ட ஆட்டம் பார்த்தோம். 

அம்பேத்கரின் எச்சரிக்கை பலன் தருமா ? 


  


0 comments: