skip to main |
skip to sidebar
"கடவுள் மீதும் ,
காதல் மீதும்",
நம்பிக்கை
இல்லாதவன்!!.
கடவுள் மீதும் காதல்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உலகத்தில் அமர காதலர்கள் யார் என்று கேட்டால் "மார்க்ஸ்- ஜென்னி " என்று அடித்து சொல்லுவேன்.
கொஞ்சம் முரண் போல தோன்றலாம்.
அந்த நகரத்தின் மிகசிறந்த அழ்கிகளில் ஒருவர் ஜென்னி. வசதியான குடும்பத்து இளவரசி போன்ற வாழ்க்கை .
அவரோடு ஒப்பிட்டால் மார்க்ஸ் ஏழை தான் .முண்டுமுண்டாக கன்ன கதுப்போடு அழகிலும் ஒப்பிட முடியாது.
"ஜென்னி ! இந்த மார்க்ஸ்தான் உனக்கு கிடைத்தானா ? " என்று தோழிகள் கேட்டால் " அவன் என் கையைத்தொட்டால் என் ஆத்மாவை தொடுவதாக நினைக்கிறேன். நான் அவனைத்தொட்டால் அவன் ஆத்மாவை மீட்டுவதாக நினைக்கிறான் ! இதைவிட என்ன வேண்டும் ? என்று ஜென்னி பதிலளிப்பரராம் .
"இவனை விட வசதியுள்ளவன் கிடைக்கவில்லையா?"என்றால்
"முட்டாள்களே ! இன்னும் நூறாண்டுகளுக்கு இப்படி ஒரு அறிஞன் பிறந்ததில்லை என போற்றப்படப்போகிறவனின் காதலியாக மனைவியாக நான் வரலாற்றில் பவனி வருவேன்." என்பாராம் .
ஜென்னி பல வருடங்கள் மார்க்ஸை விட வயதில்மூத்தவர் .அவரை கேலி செய்வாராம்..
"ஏ ! மார்க்ஸ் ! நீ அம்மணமாக "மணி ஆட்டிக்கொண்டு "வீட்டிற்குள் ஓடும் டும்போதே உன்னை பார்த்திருக்கேனாக்கும் ".
மார்க்ஸ் இருகைகளால் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்தில் தலை குனிவாராம்.
ஜென்னி மார்கசி நேசித்ததைப் போல் பலமடங்கு மார்க்ஸும் நேசித்துள்ளார் . தன் மார்க்ஸுக்காக அவர் வறுமையில் வாடியது உலகம் அறிந்த ஒன்று. அறிவிற் சிறந்த மார்க்ஸ் சம்பாதிக்கத்தெரியாதவன். ஜென்னி பலநாள் பட்டினி இருந்திருக்கிறாள் .கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சுரக்காமல் இருக்கும் அளவுக்கு பட்டினி இருந்திருக்கிறார் .
இவர்களின் வறுமையை அறிந்த நண்பர் ஒருவர் கொஞ்ச்ம கோது மையையும்,பணத்தையும் எடுத்துக்கொண்டு அவர்கள் விட்டு தேடி வந்துள்ளார். அங்கு அவர் கண்ட காட்ச்சி அவரை திடுக்கிட வைத்துள்ளது.
இருவரும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்
ரோமியோவாக மார்க்ஸும்,ஜூலியட்டாக ஜென்னியும்,வசனம் பேச குழந்தை பசியோடு அவர்களை பார்த்து சிரித்துக் ஒண்டிருந்ததாம்.
எனக்கு கடவுள்நமபிக்கை இல்லை.காதலிலும் நமபிக்கை இல்லை தான்!
ஆனால் மார்க்ஸும் -ஜென்னியும் அமர காதலர்கள் என்பதைநம்புகிறேன்!
0 comments:
Post a Comment