Friday, August 14, 2020
(ஆராய்சசியாளர்கள் கருத்து)
ஸ்ரீ ராமர் விந்தியமலைக்கு தெற்கே
வரவில்லை ....!!!
வால்மீகி ராமாயணத்தை ஆராய்ந்த ஆராய்சசி யாளர்கள் ஸ்ரீ ராமர் விந்தியமலைக்கு தெற்கே வரவில்லையென்கிறார்கள்.
வரலாற்றாளர் சாங்காலியா தன் நூலில் குறிப்பிடுகிறார்.
மைஸுர் சமஸ்தானத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாகஇருந்த பரமேஸ்வர அய்யரவர்களும் இதனையே சொல்கிறார்.ஆங்கிலம்,தமிழ்,சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்த்யம் உள்ளவர் அவர். வால்மீகிராமாயணத்தை ஆராய்ந்தவர்.
ராமாயணபற்றீய நூலில் வால்மீகி அப்பொ திருந்த தாவரங்கள்,செடிகொடிகள்மரங்கள் ஆகியவை பற்றி குறிப்பிட்டிருக்கிறார.அவை இலங்காஇயிலில்லாதவை. மெலுமவ்ர் பறவைகள்,விலங்குகள் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார அவையும் இலாங்கையில் இல்லாதவை." என்று பரமேஸ்வர அய்யர் எழுதுகிறார.
தமிழ்னாட்டில்குளம்,குட்டை,ஊருணிஎன்று நீர் நிலைகளை குறிப்பிடுவோம்.ஆனால் வட நாட்டில் குளத்தையெ சாகர் என்பார்கள்.
விந்த்யமலைச்சரலில் உள்ள குளஙளை சாகர் என்று குறிப்பிடுகிறார்கள்.அப்படிபட்ட சாகர் ஒன்றின் மறுகரையில் இருக்கும் குனறிர்க்கு திர்கோன மலை என்று பெயர்.இந்தமலையடிவாரத்தில் வசிக்கும் வனகுடிமக்கள் கோண்டு இனத்தவர்.இவர்களின் தலவனை இன்றும் ராவணன் என்று தான் அழைக்கிராரகள் "என்றும் அவ்ர் குரிப்பிடுகிரார.
பர்மேச்வர அய்யரின் தம்பி அம்ர்தலிங்கமய்யர்.இவரும் வக்கிலாக திண்டுக்கல்லில் இருந்தார.இவரும் வால்மீகி ராமாயனம் பற்றீ ராமாயண ரசன என்று ஒரு நூல் எழுதிய்ருக்கறார்.அதிலும் ஸ்ரீராமர் வனவாசத்தின் போது சென்ற பகுதிகலை வரைபடமாக காட்டி இருக்கிரார.விந்தியமலையை தாண்டி ஸ்ரீராமர் வந்ததாக அவர் சொல்லவில்லை.
பெரியர் ராமயண எதிர்ப்புக்கு இவர்கள் எழுதிய நூலை ஆதாரமாக காட்டுகிறார. இவர்களை "அக்கிஅகாரத்து அதிசயமநிதர்கள்" என்று பெரியார் வர்ணிக்கிறார.
பரமேஸ்வர அய்யரும்,அமிர்தலிங்க அய்யரும் ஸ்ரீராம பக்தர்கள்.காலயில் எழுந்து குளீத்து ,பருத்திஆடை உடுத்தி,வால்மிகி ராமாயனத் தின் பத்து ச்லொகங்களை பாராயானம்பண்ணிய பிறகு தான் தங்கள் வேலைய துவக்குவார்கள்.
இந்த ராமபக்தர்கள் தங்கள் நூலில் இவை பற்றீ விரிவாக எழுதியுள்ளனர்.
Monday, August 10, 2020
(பா.ஜ.க பல்டி )
அயோத்தி
ராம ஜன்ம பூமியல்ல,
குழந்தை ராமர் விளையாடியபூமி...!!!
கோலாகலன் கண்டுபிடிப்பு !!
"கடசி இல்லாத "(!?)ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேயின் சாணக்கிய தொலைக்காட்ச்சியில் குழந்தைராமர் கோவில் என்ற தலைப்பில் கோலாகல ஸ்ரீநிவாசன் உரை நிகழ்த்தி உள்ளார்.
பாபரின் வாழ்க்கை வரலாறு சொன்னபடி அவர் வட கிழக்கு இந்தியாவில்பயணம் செய்துவிட்டு திரும்பும் பொது சரயு நதிக்கரையில் சிறிது நேரம் தங்கியுள்ளார்..அப்போது ஒரு மசூதி காட்டும் படி தன தளபதி மீர் பாக்கி இடம் கூறியுள்ளதாக கோலாகலன் கூறுகிறார
பாபர் இந்தியாவில் ஆண்டது மொத்தம் 4வருடம் 8மாதமாகும். 1528ம் ஆண்டு அவர் ஆக்ராவில் மரணமடைகிறார்.
அயோத்தியில் மசூதி கட்டுவதை சிற்றரசர் எதிர்க்கிறார்கள். பலபோர்கள் நடந்ததாக கோலாகலன் விவரிக்கிறார்.
"இதில் ரன்சிங் என்பவர்மிகத் தீவிரமாக போரிடுகிறார. இறுதியில் அவர் தோற்கடிக்கப்படுகிறாரா. போரின் 17ம் நாளில் ஒரு சம்பவம் நடக்கிறது. கோவிலி லிருந்து சியாமானந்த பாபா என்பவர் குழந்தை ராமர் பதுமையை தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறார் .இப்படி உரைநிகழ்த்துகிறார கோலாகலன்.
1500 களிலிருந்து விடுபட்டு நிகழ் காலத்திற்கு வருகிறார் .
அலகாபாத் நிதிமன்ரம் மசு \திக்கு கீழே கோவில் இருந்ததா என்று ஆராய தோல் பொருள் இலாகாவை கேட்டுக்ககொள்கிறது .
வழக்கு பின்னர்உசச நிதிமனறத்தில் நடக்கிறது. நித மன்றம் ம் 1919ம் ஆண்டு தீர்ப்பளிக்கிறது.
மசூதிக்கு கீழே எந்த கோவிலும் இருந்ததற்கு சான்று எதுவும் அளிக்கப்படவில்லை என்று தீர்ப்பது அளிக்கிறது. இருந்தாலும் எ அங்கு கோவில்கட்ட ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி கட்டிக் கோவில் கொள்ளலாம் எ ன்று சொல்கிறது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் அவர்கள் விரும்புமிடத்தில் கொடுக்கவும் உத்திரவிடுகிறது.மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்றும் குறிக்கிறது.
"சியாமானந்த் பாபா செய்த முக்கியமானகாரியம் குழந்தை ராமர் பதுமையை காப்பாற்றியதஹாகும்." என்கிறாரா கோலாகலன் .
எந்தஇடத்திலும் அவர் கோவில் இடிக்கப்பட்டு அங்கு மசூதிகட்டப்பட்டதாக 1526 பற்றி விவரிக்கும்போது குறிப்பிட கவனமாக தவிர்க்கிறார்.
அயோத்தியில் குழந்தை ராமர் விளையாடியதை குறிப்பிடுகிறார்.
ராமஜென்மபூமி என்று சொல்லி கலவரம் நடத்தி ,குஜராத்தில் 3000 சிறுபான்மையினரை பலியிட்டு இன்று அது ராமர் குழந்தையாக இருந்த போது விளையாடிய பூமி என்று சொல்கிறார்கள்.. அங்கு ராமர் கொவில் கட்ட அடிக்கல் நாட்டிய பிறகு ...!!!
.
Saturday, August 08, 2020
Saturday, June 27, 2020
Thursday, May 14, 2020
Saturday, November 23, 2019
ராமாயணம்,மகாபாரதம் , ஏன் ?
கிரேக்க புராணங்களும்
என் பாட்டன் சொத்துதான் ...!!!
என் பால்ய நணபர் ஒருவர் கேட்டார் .
பகவத் கீதை பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?
"காலங்களில் வசந்தம் என்றும் ,மாதங்களில் மார்கழி என்றும் காண்ணதாசன் சொல்லும்போது வியாசன் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் முப்பத்தி ஐந்தாவது பாடலாக அதையே சொன்னால் ஏற்கத்தான் வேண்டும்."என்றேன்.
"கீதையின் தத்துவ விசாரணையில் எனக்கு விருப்பம் உண்டு. அறிவு என்றால் என்ன என்ற கேள்வியை வியாசன் எழுப்புகிறான். அனுபவத்தின் சாறு தான் அறிவு என்கிறான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதக்கூறியுள்ளான். இது பகுதி உண்மை"
"மதுரையிலும்மாஸ்க்கோவிலும் சாலைகள் உள்ளன. புது தில்லியிலும் நியூ யார்க்கில் சாலைகள் உள்ளன. சமந்தரையில் தான் அவை அமைந்துள்ளன. பூமி தட்டையாக உள்ளது என்பது நமது அனுபவம்.. ஆனால் உண்மையில் பூமி உருண்டையாக இருப்பது தான் யதார்த்தம்."
அனுபவம் மட்டுமே அறிவாகுமா ?
மகாபாரதம்,ராமாயணம் மட்டுமல்ல கிரேக்க புராணங்களும், அரேபிய இரவுக்கதைகளுக் என் பாட்டனின் சொத்து> தட்ஷசீல பல்கலை மாணவன் விஷ்ணுதத்தன் எழுதிய "பஞ்சதந்திர கதை"களும்,எனக்கு பாத்தியதாயானவை."
கிரேக்க மொ ழி,பாரசீகம் ,அரபி,ஸ்வகிலி ஆகியவற்றின் கொச் சைவடிவத்தை ஆராய்ந்து பாலி , பிராகிருதம் ஆகிய பேச் \சு மொழியை சீர்திருத்தி ஒரு செம்மொழியை உருவாக்கிய பாணினி என் முப்பாட்டன்"
கம்பனின் வெண்பாவும் ,வள்ளுவனின் முப்பாலும்,சிலப்பதிகாரம்,சீவக சிந்தாமணி,குண்டலகேசியும் என் ரத்தமும் சதையுமாகும்.
இவற்றை மதவெறியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை நான் ஏற்கவில்லை.
எனக்கும் அவர்களுக்குமொரு வித்தியாசம் உண்டு. நான் கடவுளை யும்,காதலையும் ஏற்கவில்லை. ஆனால் உலகத்தின் மிகசிறந்த காதல் தம்பதியர் என்றால் ஜென்னியையும் மார்க்ஸையும் தான் கூறுவேன்
அந்த ஜெர்மன் நகரத்து அழகிகளில் ஒருவர் ஜென்னி. கன்னங்களிலும் தாடையிலும் கதுப்பாக சதையைக்கொண்டவன் மார்க்ஸ்..
உன் அழகுக்கு இவனை விட அழகன் கிடைத்திருபானே ஜென்னி என்று தோழிகள் ஜென்னியிடம் கூறு வார்களாம்.
இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் இப்படியொரு அறிஞன் பிறக்கப்போவதில்லை என்ற என் மார்க்கஸுக்கு காதலியாக மனைவியாக இ ருக்கரண்டி பைத்தியக்காரிகளே என்று பதிலளிப்பாராம் ஜென்னி.
வறுமை அவளை வாட்டியது> பட்டினியா இருந்தாலும் ம் பிள்ளைக்கு பால்கொடுப்பாள் .பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசிமறைப்பாள் " என்றான் கவிஞன் .
ஜென்னி மார்க்ஸைவிட ஐந்தாறு வயது மூத்தவள்.முயங்கும் பொது "மார்க்ஸ் ரெம்ப வெட்கப்படாதே. நீ ஜெட்டி கூ ட போடாமல் மணியாட் டிக்கொண்டு ஓடும் போதே உன்னை பார்த்தவள் நான். " என்பாளா ம் ஜென்னி .இருகைகளாலும் மார்க்ஸ் முகத்தை முடிக்கொள்வானாம்.வெட்கத்தில்.
இவர்கள் வறுமையை அறிந்த நன்பர் கொங்சம் கோதுமைமாவும் சில ஷில்லிங்குகளையும் எடுத்துக் கொண்டு அவர்களை பார்க்கசென்றிருக்கிறார.அங்கு அவர்பார்த்தக்காட்ச்சி அதிர்சசி அளித்துள்ளது.
ஷேகஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடக வசனத்தை மார்க்ஸ் ரோமியோவாகவும் ஜென்னி ஜூலியட்டாகவும் பேசி நடித்துக்கொண்டிருக்க குழந்தை பெற்ரோரைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்ததாம்.
ஜென்னியை மறக்க முடியாது. !
மார்க்ஸையும் மறக்க முடியாது !!
மார்க்சிசத்தையும் தான்!!!
Monday, November 11, 2019
"பாபர்மசூதி" தீர்ப்பும் ,
இயக்குனர் அமீரின்
கருத்தும் .....!!!
உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். "பருத்தி வீரன் " பட இயக்குனர் சமூக வலைத்தளத்தில் பகிரங்கமாக தன கருத்தை சொல்லிவருபவர். அவர் தீர்ப்பு பற்றி தன் கருத்தை சொல்லியிருக்கிறார் .
மிகவும் வித்தியாசமான அதேசமயம் ,முதிர்சசியான கருத்தினை சொல்லி இருக்கிறார் ..
" கொலைக்கு கொலை என்பதுஇஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளது தன் மகன் கொலைசெய்யப்பட்டான் என்றால் நான் ரத்த உறவுள்ள நான் கொலை செய்ய உரிமை உள்ளவன்> அதற்காக யாரையும் கொலை செய்வ தில்லை . என்மகனை கோலா செய்தவனை கொலைசெய்ய எனக்கு இஸ்லாமிய சட்டமனுமதி அளிக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இந்த சட்டம் நடைறைப்படுத்தப்படுகிறது "
"இது ஒருவகை நியாயம் . கொலைசெய்தவர் தவறாக நடந்து விட்டது - இதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஏற்படும் நட்டத்தை பணம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்றும் சொல்லலாம்.சம்மந்தப்பட்டவர்கள் அவரை மன்னித்து அதனை ஏற்றுக்கொள்ளலாம்.இதுவும் இஸ்லாமிய சட்டத்தில் உள்ளது> "
"இந்த இரண்டும் தவிர மூன்றாவதாக ஒன்றும் உள்ளது.மகனை இழந்தவர் அந்த கொலையாளியை மன்னிக்கலாம் . இறைவன் அவருக்கு நல்லதையே செய்வான்"
"பாபர் மசூதி இடிக்கப்பட்டுவிட்டது . அந்த இடம் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அறக்கட்டகை மூலம் அரசு அங்கு ஒரு கோவிலக்கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்துக்களின் நம்பிக்கையை மேலிறுத்தி இப்படிகூறுகிறார்கள்.இது சரியா தப்பா என்பதைவிட நானுறு ஆண்டுகளாக நாம் அனுபவித்தோம். இப்போது அமைதிக்காக அவர்கள் அனுபவிக்கட்டுமே . இஸ்லாம் வழிபாட்டுத்தலம் தான் வேண்டும் அது எந்த இடம் என்பதை சொல்வதில்லை " என்றார் .
மிகவும் வித்தியாசமானப்பார்வையை கொண்டிருக்கிறார் .
"அதேசமயம் இந்த இடி ப்பு விஷயம் இதோடு நின்றுவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார், சு.சாமி வகையறாக்கள் இந்தியா முழுமைக்கும் ஒரு பட்டியலை தயார் நிலையில் வைத்துக்கொண்டு திரிகிறார்கள்> சமரசக்குழவில் இஸ்லாமியர் சார்பாக இத்தொடு முடிவுக்கு வரவேண்டும் என்று உத்திரவாதம் கேட்டபோது எதிர்தரப்பினர் அளிக்க மறுத்துவிட்டனர்" என்பதையும் அமீர் சுட்டிக்காட்டியுள்ளார் .
பெரும்பாலான இந்துக்கள் அப்படி ஒன்று நடப்பதை ஆதரிக்கமாட்டார்கள் என்ற தன் நமபிக்கையும் அமீர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அமீருக்கு நம் பாராட்டுக்கள்.
Sunday, November 10, 2019
உச்ச நீதிமன்ற தீர்ப்பும் ,
பாபர் மசூதியும்....!!
மசூதி இடிக்கப்பட்டு இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரசசினை உண் டான பொது இதனை பேசி தீர்க்க வேண்டும் என்று இடது சாரிகள் கருதினர் . அப்படி முடியாவிட்டால் இரண்டு கடசியினரும் நீதிமனறத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வது தான் சரியாக இருக்கும் என்றும் குறிப்பி ட்டனர் .
இப்போது திப்பு வந்துள்ளது. முதலில் அமைதிகாப்பது மிகமுக்கியம் . தீர்ப்பை அலசுவது என்பது ஒருபக்கம் நடக்கட்டும். நாட்டின் அமைதி என்பது மிகமுகக்கியமான ஒன்றாகும்.
தீர்ப்பின் முக்கியமான வற்றை பார்க்கலாம்.
1992ம் ஆண்டு மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்தது ஒரு கிரிமினல் குற்றம் என்று தீர்ப்பு கிறுகிறது . அப்படியானால் அந்த குற்றமிழைத்தவர்களுக்கு என்ன தண்டனை ?
1949ம் ஆண்டு தொழுகை நடந்து கொட்டிருக்கும் கட்டிடத்திற்குள் இரவு ராமர் பொம்மையை கொண்டுவைத்தது குற்றம் என்று தீர்ப்பு குறிப்பிடுகிறது. வைத்தவர்களை என்ன செய்ய ?
1991ம் ஆண்டு இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டுவந்தது. அதன்படி இந்தியா சுதந்திரம் பெற்ற பொது எந்தெந்த வசுழிபாட்டு தலங்கள் எந்தெந்த மதத்தினரிடம் இருந்ததோ அது அப்படியே இருக்க வேண்டமென்று அந்த சட்டம் குறிப்பிடுகிறது. பாபர் மசூதி மட்டும் அதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டது> இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு..
மசூதி இடிக்கப்பட்ட இடம் சர்சசைக்குரியதாக அறிவிக்கப்பட்டது யாருக்கு சொந்தம் என்பது வழக்கு. மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோவிலை இருந்தாக சொன்தை நீதிமன்றம் ஏற்க வில்லை . அதேபோல் நிலம் மசூதிக்கு சொந்தம் என்பதையும் ஏற்கவில்லை.
ஆகையால் நிலம் அரசுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு கூறுகிறது. 2.7 ஏக்கர் நிலத்தை அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு குறிப்பிடுகிறது. . இஸ்லாமியர்களுக்கு மசூதிக்காட்ட 5 ஏக்கர் நிலத்தை அவர்கள் விரும்பும் இடத்தை தேர்வு செய்து கட்டித்தரவேண்டும் என்கிறது தீர்ப்பு.
இறுதியாக அரசு வசம் வந்துள்ள நிலத்தை ஒரு அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் அங்கு ஒரு கோவில் கட்டி கொடுக்க வேண்டும் என்பதும் தீர்ப்பாகும். இது பெரும்பாண்மை இந்துக்களின் நாம்பிக்கை யை அடுத்து எடுத்ததாக தெரியவந்துள்ளது.
இந்த திப்பினை எதிர்த்து மாறிய பரிசீலனை செய்ய மீள்வார்கள் என்றும் குறைப்படுகிறது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பு சொல்லியிருக்கும் பொது மறு ஆய்வு நிராகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Tuesday, October 15, 2019
(அவர் நினைவில் )
ப.ரத்தினம் எழுதிய ,
சிறந்த நாடகம்,
"ஒரு கல் கனி கிறது " ...!!!
1977ம் ஆண்டு வாக்கில் தேசிய நாடக பள்ளி காந்திகிராம பல்கலையில் நாடக பயிற்சி முகாமை நடத்தியது. தமுஎச விலிருந்து பரத்தினம் அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.
ஜெயந்தன்,அன்றைய மாணவர் மு.ராமசாமி,வேசங்கரன் ,என்ற ஞனி ,கலைஇயக்குனர் கிருஷ்ண மூர்த்தி என்று பலர் கலந்து கொண்டனர்.
ஆத்யம் ரங்காச்சாரி, சிவராம கரந்த் , பிரசன்னா, பி.வி கரந்த்,பிரேமா கர ந்த ஆகியோர் வகுப்பு எடுத்தனர்.பேராசிரியர் ராமானுஜம்,எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் நடத்தினர்.
ஸ்தானிஸ்லாஸ்க்கி யிலிருந்து,டென்னஸி வில்லியம் வரை, உத் பல்தத்,பதால் சர்க்கார், பாசி, விஜய் டெண்டுல்கர் என்று நாடக ஆளுமையாக்களின் பரிசியம்முதன் முதலாக கிடைத்தது.
குழந்தையின் ஆச்சிரியத்தோடு ரத்தினம் அவர்கள் குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.
டெண்டுல்கரில் ஒப்பற்றநாடகம் "சகாராம் பைண்டர் ." மரத்தியநாடகத்தி ன் உச்சம் அந்த நாடகம்.
சகாராம் ஒரு லும்பன். சகல கேட்ட பழக்கங்களும் உள்ளவன்.நகரத்தின் கேடுகெட்ட ரவுடி. அவன்வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவம் அவனை புரட்டிப்போடுகிறது. மிகசிறந்த மனிதனாக அவனை மாற்றுகிறது. இதுதான் நாடகம்.
பிரத்தினம் மனதை பாதித்தஇந்தநாடகத்தை "ஒரு கல் கனிகிறது "என்ற அற்புதமான நாடகமாக எழுதினர்.
மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் அரங்கேற்றினார்கள்.
எல்.ஐ.சி ஊழியரான நீல கண்ட ஜோஷி இதனை இயக்கினார்.
இந்த குழு அரங்கேற்றிய முக்கியமான நாடகங்களில் இதுவும் ஒன்றாகும்.
Monday, October 14, 2019
என் முன்னோடி
ப.ரத்தினம்
மறைந்தார் ...!
அஞ்சலிகள் !!!
1962ம் ஆண்டு வாக்கில் "தாமரை " இதழில் என் முதல்சிறுகதை வெளிவந்ததிலிருந்து ரத்தினம் அவர்கள் பரிச்சியம். கட்சி ஒன்றாயிருந்த காலம்.
நவபாரதி ,முப்பால் மணி , காஸ்யபன், ப.இரத்தினம் என்று ஒரு ஜமா சேர்ந்திருப்போம். கலை ,இலக்கிய பெறு மன்றம் தான் எங்கள் புகலிடம்.
காலம் மாறியது. 1969ம் ஆண்டு செம்மலர் பத்திரிகையை கு.சின்னப்ப பாரதி ஆசிரியராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக உள்ள ஆசிரியர் குழுவில் என்னை சேர்த்துவிட்டார் தோழர் ப.ரத்தினம்.
நெருக்கம் அதிகமானது. மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநாட்டிற்காக அவர் எழுதிய நாடகம் "நெஞ்சில் ஒரு கனல் "பீப்பிள்ஸ் தியேட்டரின் சார்பாக அரங்கேற்றப்பட்டது. வையை செழியன் என்ற பெயரில் எழுதி இருந்தார். இயக்கியவர் காஸ்யபன்,
செம்மலரில் ப.ரத்தினம் என்ற பெயரில் எழுதிவந்தார். சில சமயங்களில் மதிச்சியம் கணேசன் என்ற பெயரிலும் எழுதி உள்ளார்.
1974ம் ஆண்டு செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் மதுரை பெரியார் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தில் சந்தித்தோம்.தமிழகம் பூராவிலும் இருந்து வந்திருந்தவர்கள் 16 பேர்.
நமக்கு என்று ஒரு எழுத்தாளர்சங்கம் ஆரம்பிக்க முடிவாகியது. 1975ம் ஆண்டு சங்கம் உதயமாகியது. மதுர மாவட்ட செயலாளராக ரத்தினம் அவர்கள்பணியாற்றினார்கள். என்னையும்மாவட்ட செயலாளராக ஆக் கி அழகு பார்த்தார்கள்.
அப்போது மார்க்சிஸ்க்காட்ச்சியின் மாநிலக்குழு மதுரையில்செயல்பட்டு வந்தது. கடசியின் முது கெலும்பாக பணியாற்றினார். தன்னை எப்போதுமே முன் நிறுத்திக்கொள்ளாத மனம் கொண்டவர்.இளைஞர்களை ஆதரித்தது செயல்படுவார்.
அற்புதமான அந்த தோழரின் மறைவு கட்சிக்கும் தனிப்பட்டமுறையில் எனக்கும் பெரும் இழப்பாகும்.
அவருக்கு என் அஞ்சலிகள்!!!
Sunday, September 22, 2019
கோமல் சுவாமிநாதனும் ,
அருங்காட்ச்சி அரங்கமும் .....!!!
அப்போது நான் மதுரையில் இருந்தேன் .கோமல் அவர்களிடமிதுனது தந்தி வரும். " நாளை பாண்டியனில் வருகை. மாலை நாலுமணிக்கு "சந்தானம் " வாருங்கள். ரங்கராஜா புரம் போகிறோம் "என்று இருக்கும்.
மறுநாள் மாலை ரங்கராஜா புறம் சென்று அங்கு ஆசிரியர் பணிசெய்யும் நீலமணி வாத்தியாரை பார்ப்போம்.
"மதுரை வீரன் அம்மானை " என்ற கிராமியப்பாடலை பதிவு செய்து வருவோம். இப்படி நிறைய அவர் சேர்த்து வைத்துள்ளார். "இவை அழிந்து விடக்கூடாது ஐயா !பாதுகாக்கப்படவேண்டும் என்பார்.இப்படி பல அனுபவங்கள் உண்டு.
இரண்டு பெரும் பலநாடக விழாக்களுக்கு செல்வோம். அவர் அருகில் அமர்ந்து கொண்டு நாடகம் ப்பார்ப்பதே ஒரு சுகம்.
மதுரை யில் ஒரு நாடக விழா ! அதில் "பரிக்கிறமா " என்ற நாடகம்கோவாவில் இருந்து ஒரு குழு போட்டது. மலை யாள நா டகமிருந்தது.
ஒரு விழாவில் "பனி வாள் " என்ற நாடகம் .டாக்டர் வேலு சரவணன் ஆரம்ப காலத்தில் போட்ட நாடகம். வித்தியாசமான அரங்க அமைப்பு .உடல் மொழி . வசன உச்சரிப்பு. மற்றோரூ நாடகம் - பாண்டிசெறி பேராசிரியர்......ஆறுமுகம் என்று நினைவு - ரயிலடியின் ஒரு பகுதி தான் அரங்கம்.இருப்புப்பாதை முன் மேடை வழியாக பார்வையாளர்கள் வரை வரும் .இரண்டு பேர் இருப்புப்பாதையில் பேசிக்கொண்டு வருவார்கள் வருவார்கள். ரயில் வருவது ஒளியின் முலமும் ஒலியின் மூலமும் உணர்த்தப்படும்.
எனக்கு இது புது அனுபவம். "என்னய்யா இது? "என்று கேட்டேன்.
"பிறகு இரவு பேசிக்கொள்ளலாம் .இப்போது பாரும் " என்றார்.
மதுரைபலக்லைக்கழக பேராசிரியர் டாகடர் ராம மூர்த்தி பேசினார்.
இரவு நாங்கள் இருவரும் விவாதித்தோம்.
"சாமா ! திருவனந்தபுரம் போயிருக்கேறா ?
"போயிருக்கேன் "
'அங்க நகைக்கடைல தங்க நாகை மட்டும் இருக்காது . தந்த சிலை களும் வச்சிருப்பாங்க "
"ஆமா ! அழகான யானை கூட்டம், மான்கள் னு இருக்கும்"
"அதுமட்டுமில்ல வே ! ஊஞ்சலில் ஆடும் ராதையும் கிருஷ்ன்ணனும் ராதையும் இருக்கும்" ..ராதைக்கு 25 வயது .கிருஷ்ணருக்கு 15 வயது.காதலிச் சாங்க .ராதை யின் சேலை காற்றில்பறக்க கண்ணன் மீது நளினமாக சாய்ந்திருப்பாள் .அவள் கழுத்தை வளைத்தது கண்ணன் வேணுகானம் இசைப்பான்.அவன் உடல் 15 வயதை காட்டும் முகம் குழந்தை முகமாக ருக்கும் ".
"பார்த்திருக்கிறேன்,மணிக்கணக்கில் சோறுதண்ணி இல்லாமல் பார்க்கலாம்"
"அது சரி ! அதுக்காக தினம் பூ செய்யும் விக்கிரகம் மாதிரி சந்தனம் குங்குமம் புஷ்பம் சாத்த முடியாது.. அந்த அற்புதமான கலைஞனை கவுரவிக்க பாராட்ட அந்த பதுமையை அருங்காட்ச்சி அரங்கத்தில் தா வைக்க வேண்டும்."
"புரியுதா வே "
"புரிஞ்சுட்டு"
Tuesday, August 27, 2019
"அஞ்சல் அட்டை "
காஷ்மீரோடு தொடர்பு கொள்ள அஞ்சல்அட்டை ஒன்றுதான் வழி . ஆகா ஷாஹித் அலி என்ற கவிஞர் இதனை ஒரு கவிதையாக எழுதி உள்ளார்.
கர்நாடக இசை கலைஞர் T . M . கிருஷ்ணா இதனை பாடி காணொளியாக ஏற்றியிருக்கிறார். காணொளியில் பின்னணியாக செயல்படாத காஷ்மீர த்துத்தொலைபேசி நிலையங்களின் "பீப் -பீப் " ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்.
tmkrishna -reciting agha shahid ali's poetry என்று google சென்றால் கேட்டு சோகத்தைஅனுபவிக்கலாம்.
இதோ அந்த கவிதை:
காஷ்மீர் என்னுடைய மின்னஞ்சல் பெட்டிக்குள் அடங்கிவிட்டது !
என்வீடு 4"X 6"தான் !
எனக்கு சுத்தம் பிடிக்கும் !
இப்போது நான் அரைஅங்குல இமாலயத்தை என் கையில்பிடித்திருக்கிறேன் !
இது தான் என்வீடு !
என்று சொல்லிக்கொள்ளலாம் !
நான் வீட்டிற்கு போக முடியாது!
நான் திரும்பும் பொது வண்ணங்கள் ஒளிராது !
ஜீலம் நதியின் தண்ணீர் சுத்தமாக இருக்காது !
என் அன்பு மிக அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டது !
என் நினைவுகள் த ன் கூர்மையை இழந்துவிட்டன .!
அதற்குப்பதிலாக
ஓரு புகைப்படத்தின் கழுவப்படாத பிலிம்
போல கருப்பு வெள்ளையாகவும்,
வெள்ளை கருப்பாகவும் ராட்சத்தனமாக தெரிகிறது !!!
நன்றி :svv