Saturday, May 18, 2013

விளையாட்டில் சூதாட்டம் !

1919ம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பம் ...!!!


இந்திய கிரிகேட் விளையாட்டில்சூதாட்டம் என்று ஊடகங்கள் கோட்டிமுழக்குகிண்றன! இதில் நிபுணர்கள் விவாதம் என்ற பெயரில் முன்னாள் கிரிகெட் வீரர்களும் வருகிறார்கள்! வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த டாலர்களை பதுக்கி "லாக்கர்"களில் வைத்தவர்களும், வரி கொடுக்காமல்  ஏமாற்றி வாகனங்களைக் கொண்டுவந்த  கிரிகேட் வீரர்களும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்!

இந்த விளையாட்டு சூதாட்டம் பற்றிய முதல் சிக்கல் 1919ம் ஆஅண்டு அமெரிக்காவில்தோடங்கியது! அந்த நாட்டில்   "பேஸ்பால் " மிகவும் முக்கியமான விளையாட்டு! 

குறிப்பாக சிகாகோவில் சர்வதேச ஆளவில் பந்தயம்  நடக்கும்! ஆயிரக் காணக்கில் சூதாட்டம் இடம் பெரும்!

1919ம் ஆண்டு சிகாகோவில் மிகவும் பிரசித்தமான சிகாகோ வைட் சாக்ஸ் (chicoko white sox ) என்ற அணிவிளையாட விருந்தது! அதனை எதிர்த்து ரெட் சாக்ஸ் என்ற அணி இறுதிப் போட்டியில் விளையாடியது!

சூதாட்டக் காரர்கள் வைட் அணியில் உள்ள ஆர்னால்டு காந்தில் என்ற வீரரை பிடித்தனர்! அவர் தன அணியில்மேலுமெட்டுபேரை பிடித்தார்!  இந்த உள் குத்து வேலை தெரிந்ததும் அதிகாரிகள் அவர்களை வேளியேற்றினார்கள் 

ரெட் சாக்ஸ் அணி வென்றதாக அறிவித்தார்கள் !

அமெரிக்காவின் மிகப் பெரிய தாதாக்கள்  இதில் பங்கெடுத்தார்கள்!



விளையாட்டு அரங்கில் chicoko white sox  scandel  என்பது முக்கியமானது !

சிலர் அதனை black sox scandel என்றும் கூறுவர்!















Friday, May 17, 2013

யார் அந்த கிருஷ்ணன் .......?

சிவந்தி பட்டி என்ற சிறு கிராமம் திருநெல்வேலியிலிருந்து 13 கி.மீ தூரத்தில உள்ளது! தினம் அந்த கிராமத்து மக்கள் திருனெல்வேலி வந்து போவார்கள் கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் தான் அங்கு செல்ல்கிறது!

பாளையங்கோட்டை பள்ளிகள்,கல்லூரிகள் ,தவிர மக்களும் தங்கள் விளை பொருட்களான  காய்கறி போன்றவைகளையும் கொண்டு செல்வார்கள் !

பேருந்து முதலில் பாஞ்சாயத்து அலுவலகம் முன் நிற்கும்! அடுத்து அம்மன் கோயில்! கடைசியாக அரிசி மில் நிறுத்தம் ! அதேபோல் அரிசிமில்லிருந்து  புறப்படும்! 

அந்த பஞசாயத்து தலைவராக இருந்தவர் கொலை  செய்யப்படுகிறார்! அவர் மேல்சாதி! அதனால் கலவரம் வந்தது!பேருந்து சேவை நிறுத்தப்பட்டது!

பல முறையிட்டுக்குப் பிறகு மீண்டும் சேவை வந்தது! ஆனால் பேருந்து  
அரிசிமில் வராமல் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தது ! அரசி மில் பகுதியில் வாழ்ந்த மக்கள் சமார் இரண்டு கி.மீ நடந்துந்தான் பேருந்தை பிடிக்கவேண்டும் !

இதனை  மாற்றி அரிசிமில் வரை வர பலமுறை மனு கொடுத்தும்  பயனில்லை !

விவசாயப் பெருங்குடி மக்கள் அதனால் அவதிக்குள்ளாகினர் ! புறப்படும் இடம் மாற்றப்பட்டதற்கான காரணமும் அதிகாரிகள் சொல்லவில்லை!

திருநெல்வேலியில் வழக்கறிக்ணராக இருந்த வக்கீல் கிருஷ்ணன் பொதுநல வழக்கினை போட்டர்! உயர்  நீதி மன்றம் விசாரித்தது!கோப்புகளை வரவழைத்து பரிசிலித்தது!

அப்போதுதான் அந்த உண்மை தெரியவந்தது! "அரிசிமில் அருகில்தான் தலித் காலனி உள்ளது! பேருந்து அங்கிருந்து புறப்பட்டால் தலித் பயணிகள் இருக்கைகள்  முழவதும் அமர்ந்து கொள்கிறார்கள்! பஞ்சாயத்து  , அம்மன் கோவில் நிறுத்தத்திலிருந்து ஏறும் மேல்சாதி பயணிகள் நிற்க வேண்டி வருகிறது! அதனால் பேருந்து பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து புறப்பட வேண்டும் என்று காவல் துறை ஆணையர் போக்குவரத்துக்கு கழகத்திற்கு உத்திரவிட்டிருந்தார்!

இந்த நவீன தீண்டாமையை அனுமதிக்க மறுத்த உயர் நீதி மன்றம் மறுபடியும் அரிசி ஆலையிலிருந்து புறப்பட வேண்டும் என்று உத்திரவிட்டது! 




வக்கீல் கிருஷ்ணன் வசுதேவ நல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ! நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் ஆவார்!
















Tuesday, May 14, 2013

"பக்த  ராமதாசும் "

நவாபும்......!!!

 பதிவுலக நண்பர் மோகன் ஜீ  அவர்களின் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டம் போட்ட  போது "பக்த ராமதாஸ் பற்றி குறிப்பிட்டிருந்தேன்! அதை யோட்டி என்னுடைய நினைவுகள் பின்னோக்கி சென்றது!

நான் சிறுவனாக இருந்த போது நாடகங்கள்பார்க்க கல்லிடைக் குறிச்சி செல்வோம்!  அப்போது கல்லிடை ரயில் நிலையம் முன்பு ஒரு நாடகக்கொட்டகை இருந்த நினைவு இருக்கிறது! அங்கு மதுரை தேவி பாலசங்கீத நாடக சபா குழுவினர் நாடகம் போடுவார்கள் ! "கிருஷ்ண லீலா ",,"சுவாமி ஐயப்பன் " பக்த ராமதாஸ் " என்று நாடகங்கள் நடக்கும்!

அந்த நாடகக்கம்பெனியின் முதலாளி ராஜமாணிக்கம்பிள்ளை  ! மிகச்சிறந்த நடிகர்! நுற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள்,தோழிலாளர்களை வைத்து நாடகம் போடுவார்! சிறந்த தேசபக்தர்! சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்!

அவர் "பக்த ராமதாஸ் " நாடகம் போட்டால் கூட்டம் மொய்க்கும்!  
அவர்தான் நவாபாக நடிப்பார்! இந்தியா பூராவும் சென்று நாடகங்களை போட்டுள்ளார்! 
 ஒருமுறை மைசூரில் "பக்த ராமதாஸ்" நாடகத்தை மைசூர் மகாராஜா ஜெய சாமராஜ்முன்னிலையில் போட்டார்!

நவாபாக அவர்  நடித்ததைக் கண்டு சொக்கிப்போன  மகாராஜா தன அரண்மனையிலிருந்து தன்னுடைய ராஜ உடை ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்து "இனி   இந்தக்காட்சியில் இந்த உடையப் போட்டுக்கொண்டு நடிக்கவேண்டும் " என்று கூறி "இன்றிலிருந்து உமக்கு "நவாப்" "என்ற பட்டத்தை அளிப்பதாக அறிவித்தார்!
    
அன்றிலிருந்து ராஜமாணிக்கம் பிள்ளை "நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை " 
ஆனார்!









Thursday, May 09, 2013

வடக்கே  புத்தன் சிந்தன்

V P C.....!!!

அப்பபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மதுரையில் செயல் பட்டு வந்தது !அங்கு சென்று சிறு சிறு பணிகளை ச் செய்வது உண்டு !
மாநில அளவில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கான எற்பாடுகளைச் செய்ய தலைவர்கள் வந்திருந்தார்கள் !தீர்மானங்கள் ,அறிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சொல்லச்சொல்ல எழுதி கொடுக்க வேண்டும் .

சென்னையிலிருந்து வந்த அவர் சொல்லிக்கொண்டு வந்தார்! நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் ! "சரி ! எங்க போய் சாப்பிடப் போற ?" என்று கேட்டார் !
என் பையில் நான் கொண்டுவந்த தை சொன்னேன்! "நானும் சாப்பிடலாமா ?" 
நடுத்தர குடும்பம் ! நான் என்ன பஞ்ச பரமான்னமா கொண்டு வந்திருப்பேன் ! வெட்கமாக இருந்தது ! அவர் எவ்வளவு பெரியதலைவர்! 
பிரித்தேன் ! நான்கு கோதுமை பரோட்டா ! வெஞசனமாக தேங்காய் கலந்த கீரைக் கடைசல் !
 அவருக்கு இரண்டு,எனக்கு இரண்டு என்று பகிர்ந்தோம் ! 
"உன்மனைவி என்ன மலையாளப் பக்கமா?"என்று கேட்டார் !
"இல்லை தோழர் ! நான் நெல்லை மாவட்டம் ! ஆழ்வார்குறிச்சி ! திருவனந்தபுரத்து தொடர்பு உண்டு "என்றேன்!
"எங்கள் ஊர் காரர்கள் செய்வது மாதிரியே கீரை இருந்தது அதனால் தான் கேட்டேன்!"என்றார் !
நான் காப்பி குடிக்க சென்றேன்! அவர் காப்பி குடிக்க மாட்டார்! என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார்! மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம்! அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது ! பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் ! எனக்கு பெருமை தாங்கவில்லை ! முக்கில் உள்ள கோபி ஐயங்கார் கடைஅருகில்  காபி அருந்தினேன்  ! அவர் எதுவும் சாப்பிட மறுத்து விட்டார்! 
"ஆமா ! நீ என்ன பண்ற ?"
சொன்னேன் !
"கட்சில மேம்பராயிட்டயா?"
"இல்ல "  
"ஏன் ?"
என் வாய்க் கொழுப்பு ! 
"I  don't have any objection " என்றேன்!
கனமான கண்ணாடிக்குள் இருந்து  with a sharp look and broad smile 
"நீ பாதி உறுப்பினராகத்தான்முடியும் " என்றார்!
"ஏன் ?" 
"மறு பாதி கட்சிக்கு உன்னை உறுப்பினராக்க objection இருக்கக் கூடாதல்லவா!"  
எழுந்து செல்லமாக என்தலையில் குட்டி" வா! போகலாம் " என்றார்!
அவர் குட்ட வில்லை !
என்னை ஆசீர்வதித்தார் !என் கொழுப்பு கரைய !!
 இந்த ஆண்டும் என் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து விட்டேன் தோழா!

என்னை ஆசீர்வதியும்!!!





vpc 

Saturday, May 04, 2013

"ஜனாதிபதி"யின் முன்னால் 

நடித்தேன் .........!!!


1957-62 ம் ஆண்டுகளில் ஹைதிராபாத்தில்பணியாற்றிக் கொண்டிருந்தேன்  ! அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் திராவிடக் குஞ்சுகள் "வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது  என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள் ! இதற்கு மாற்றாக ராஜாஜி "தட்சிணப் பிரதேசம் " என்று பூச்சாண்டி 
காட்டிக்கொண்டிருந்தார்!

இந்த இரண்டையும்முறியடிக்க காங்கிரஸ் ஒரு வழி பண்ணியது ! அதன் படி  டெல்லியில் இருக்கும் ஜனாதிபதி தென் இந்திய மக்களுக்கு அருகில் ஆண்டுக்கு ஒரு மாதம் தங்க வேண்டும் என்றும் ஒவ்வோரு ஆண்டும்  
ஆகஸ்டுமாத வாக்கில் ஹைதிராபாத்தில் தங்க  வேண்டும் என்றும்முடிவு செய்தது !

ஆந்திரப்பிரதேசம் உருவாகி  கர்னூலிலிருந்து ஹைதிராபாத் தலைநகராக மாறியது!கடல் கரை  யோர ஆந்திர ரெட்டிகளும், கம்மா நாயுடுகளும் ஹைதிராபாத்தில்  ஆதிக்கம் செய்ய இன்னும்   ஆரம்பிக்கவில்லை! சமஸ்தானத்தின் நல்லதும் பொல்லாததும் மிச்ச சொச்சங்களாக நடைமுறை இருந்தது! 

ஹைதிராபாத்தில் தமிழர்கள்,கன்னடியர்கள்,மலையாளிகள் அரசு பணியில் இருந்த காலம் அது! நிஜாமின் திவான் பகதூராக ஆராவாமுத ஐயங்கார் என்பவர் இருந்த காலத்தில்.தஞ்சை,திருச்சி, திருனெல்வேலி சாமிமார்கள் அரசு வேலைகளில் வந்தார்கள் ! அவர்களுக்காக உருவானது தான் South Indian cultural Association ஆகும்! உயர் நிதிமன்ற நீதிபதி சீனிவாசாசாரியார்  தலைவராக இருந்தார்! A G "s .postal audit ,income tax ஆகிய மத்திய அலுவலகங்கள் பூராவும் நம்மூர் ஆட்கள் தான் ! sica  கொடிகட்டி பரந்த காலம் அது!

நாடகம் போட முடிவாகியது ! ag ஆபிஸ் கணேசன் இயக்குனர்! சீனிவாசன் 
(IRS ),ta நரசிம்மன் நடிப்பு ! என்போன்ற எடு பிடிகளுக்கு சின்ன பாத்திரங்கள்! தேவனின் "மிஸ்.ஜானகி  "நாடகம் !  

அது ஆகஸ்டு மாதம்! ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஹைதிராபாத்தில் தங்கி இருக்கிறார்! பெரியவர்கள் மூலம் அவரை அழை க்க முடிவாகியது !அவரும் எற்றுக் கொண்டார்! ஒரு  நிபந்தன !  நாடகம் ஆரம்பித்து அரைமணி நேரம் கழி த்து கிளம்பி விடுவார்! இது ஏற்பாடு ! நிர்வாகிகள் இதனை வெளியில் சொல்ல வில்லை! தெரிந்ததும்கலாட்ட ஆரம்பித்தது!

கதாநாயகன் ,நாயகி அரை மணி நேரம் கழித்து தான் வருவார்! பலவாறு யோசனை செய்து கதாநாயகனும் கதாநாயகியும் வரும் காட்சியை முதலில் கொண்டுவர முடிவாகியது! நாங்கள் விடுவோமா! நாங்களும் ஜனாதிபதிமுன் நடிக்கக் கூடாதா ? மீண்டும் சிக்கல் !

இறுதியில் ஒரு ஆள் தெரியும் அளவு திரை  திறக்கப்படும்! ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுடைய முக்கிய வசனத்தை ஜனாதிபதி  பார்க்க சொல்லிவிட வேண்டும்! இந்த ஜனநாயக நடைமுறையை உருவாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு! எல்லாரும் என்னையும்பாராட்டினார்கள் !

எனக்கு உள்ள வசனத்தில் "ஐயா ! பக்கத்து சந்தில் இருக்கிறான் " என்று கூவ வேண்டும்!

என் முறை வந்தது! பயமாக வும் டென்ஷனாகவும் இருந்தது!இந்தியாவின் ஜனாதிபதி முன் நடிக்கப் போகிறேன் !

இயக்குனர் சியாமளம்- எல்.ஐ .சி என்று அறிவித்தார்! 1 ஆயிரம் முறை சொல்லிப் பார்த்த வசனம் ! சென்றேன்! நின்றேன் ! போகஸ்\லைட் என்மீது விழுந்தது ! 

"ஐயா ! சக்கத்து பந்தில் இருக்கிறான் " என்று கூவினேன் ! 

அரங்கமே அதிர சிரிப்பொலி !

ஏன் சிரித்தார்கள் ?

சக நடிகர்கள் மேடையில் இருப்பவர்கள் எல்லாருமே கைகொட்டி சிரித்தார்கள் !

ஜனாதிபதி சிரித்தாரா ? 

தெரியவில்லை !

ஏன் சிரிக்கிறார்கள் !!!