Wednesday, September 11, 2013

அடிமைத்தனம் என்றால் என்ன ?...!!

(சிக்காகோவில் வாழும் அப்பாதுரை அவர்களின் பதிவிலிருந்து )





    'இளமையில் சுதந்திரம்' என்ற அமைப்பின் சார்பில் என்னை உள்ளூர் உயர்நிலைப்பள்ளியின் கோடை விழாவில் பேச அழைத்திருந்தார்கள். பெரும்பாலும் பத்து-பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நிறைந்த அரங்கு. சற்று கனமான கருத்துடன் தீட்டப்பட்டிருந்த என் உரையை முறையாகத் தொடங்குமுன் மாணவர்களைச் சற்றே ஈர்க்கலாம் என்று எண்ணி ஒரு கேள்வியை அவர்கள் முன் வைத்தேன்: "அடிமை என்கிறோமே.. அப்படியென்றால் என்ன தெரியுமா உங்களுக்கு?"


முன் வரிசையில் ஒருவரையொருவர் பார்த்தார்கள். என் கேள்விக்குப் பதில் சொல்ல முன்வரவில்லை. கேள்வியை சற்று விளக்கி மீண்டும் அவர்கள் முன்வைத்தேன். "கறுப்பர்கள் வெள்ளையருக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்று படிக்கிறோம். லின்சி லோகன் போதைப்பொருளுக்கு அடிமையானார் என்கிறோம். நம் நண்பர்கள் மற்றும் சுற்று வட்டத்தினர் சிகரெட் மது போன்ற பழக்கங்களுக்கு அடிமைகள் என்கிறோம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? தெரிந்தோ விரும்பியோ தானே சிகரெட் பிடிக்கிறார்கள்? உடல் நலத்தைக் கெடுக்கும் என்று தெரிந்து தானே போதை மருந்தை நாடுகிறார்கள்? எனில் அடிமை என்றால் என்ன? அடிமைத்தனம் என்பது என்ன? செய்கையா? உணர்வா? பாதிப்பா? பயமா? அல்லது குணமா? எங்கிருந்து வருகிறது? நாம் ஒருவருக்கோ ஒரு பழக்கத்துக்கோ அடிமையாக இருக்கிறோம் என்பதை எப்படி உணர்வது? "நீ என் அடிமை" என்று சொன்னால் மட்டுமே அறியப்படுகிற உண்மையா?". 


அரங்கில் சில கைகள் மெள்ள உயரத் தொடங்கின. எனக்கும் புத்துணர்ச்சி பிறந்தது. "சொல்லுங்கள்" என்றேன்.


"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.." 


"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"


"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"


"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"


"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."


"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."


"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"


"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."


"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."


அனைவருக்கும் நன்றி சொல்லி என் உரையைத் தொடங்கினேன். அன்றைய பேச்சு வெற்றிகரமாக முடிந்தது என்றே சொல்ல வேண்டும். இருபது நிமிடங்கள் கொடுத்திருந்தார்கள். 'சுதந்திரமாக சிந்தித்துச் செயல்பட வேண்டிய அவசியம்' என்ற பரந்த தலைப்பென்பதால் நிறைய பேச முடிந்தது. என்னுடைய பேச்சின் அடித்தளம், 'பிறர் சொற்படி கேட்டுச் சீரழிகிறோம், நம் எண்ணப்படி இயங்காமல் வாழ்வில் தோல்வியடைகிறோம், நம் முன்னோர்கள் உற்றார் நண்பர் சுற்றங்களின் பழக்கம் என்பதால் கண்ணை மூடி நாமும் பின்பற்றிப் பின்தங்குகிறோம்' என்ற கருத்துக்களில் அமைக்கப்பட்டிருந்ததால், என் நாத்திகச் சிந்தனைகளை சற்றுச் சுலபமாக அவர்கள் முன் வைக்க முடிந்தது. நான் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது மிகவும் நிறைவாக இருந்தது. ஆத்திக ஆதிக்கமும் வெறியும் மிகுந்த அமெரிக்க நகரமொன்றில் அறிவை நாடும் இளைய சமுதாயத்துடன் உரையாடிய அனுபவத்தை நான் மறக்கப் போவதில்லை. 



அடிமைத்தனம் என்பது செய்கையா ? பயமா ?பாதிப்பா ?உணர்வா ? குணமா ? போதைகளை  நாடுவது போல கடவுள் நம்பிக்கையும் ஒருவகை அடிமைத்தனமா ?


   












Monday, September 09, 2013

பாரதியின் 

மரணம் அவனைக் காப்பாற்றியது ......!!!!

இந்திய சதந்திரப் போராட்டத்திலும், கங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலும்"சூரத் " நகரில் நடந்த மாநாடு மிக முக்கியமானது !
படித்த மத்தியதர மக்களுக்கும் ,சட்டம் பயின்ற இந்தியர் (natives ) களுக்கும் அர்சுபதவி,முன்சீப்பு,மாஜிஸ்டிரேட் , நீதிபதி பதவிகளை தரவேண்டும் என்று தீர்மானம் போட்டுக் கொண்டிருந்த மகாசபைதான் காங்கிரஸ் !

"முட்டாள்களே! இது  நம்நாடு ! எதற்கு வெள்ளைக் காரனிடம் கெஞ்சவேண்டும் ! என் நாட்டை நானே ஆண்டு கொள்கிறேன் ! சுதந்திரம் என் பிறப்புரிமை அதனை வாங்குவோம் !" என்று சூரத் காங்கிரஸில் கர்ஜித்தார் பாலகங்காதர திலகர்!

இதனை  ஆதரித்து திலகரோடு நின்றவர்கள்  வ.உ.சிதம்பரம் ,பாரதி ஆகியோர்  மாநாட்டில் இவர்கள் குரல் எடுபடவில்லை ! படித்த காங்கிரஸ் தலைவர்கள் இவர்களை ஆதரிக்கப் பயந்தார்கள் ! எற்கனவே தீவிர வாதிகள்,மிதவாதிகள் என்று இருந்தது வெளிப்படையாக வெடித்தது !

சுதந்திரம் கேட்டவர்கள் தீவிர வாதிகள் !!!

கேட்டால் ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளொவோம் ! பதவியோ பட்டமோ கிடைக்காது ! ராவ் பகதூர்,திவான் பகதூர் ஆகமுடியாது ! முன்சீபு,மாஜிஸ்டிரேட் கனவு நனவாகாது !என்று வாயை பொத்திக்கொண்டிருந்தவர்கள் பெரும்பான்மையினர் !

அதுமட்டுமல்ல ! சுதந்திரம் வேண்டியவர்களை "தீவிரவாதிகள் என்று ஒதுக்கி வைத்தனர் ! இதுதானே பிரிட்டிஷ் அரசுக்கு வேண்டும் !

சுதந்திரம் வேண்டியவர்களைபிரிட்டிஷ் அரசு பலவகையிலும் துன்புறுத்தியது ! அவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ,தேச விரோத நடவடிக்கையில ஈடு பட்டார்கள் என்று வழக்கு போட்டது ! 

பாலகங்காதர திலகர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது !
காங்கிரஸ் வக்கில்கள் யாரும் அவருக்காக வாதாட முன்வரவில்லை !பயம் ! "பிடிச்சு  உள்ள போட்டுட்டான்ன்ன !"

அப்போது தைரியமாக  திலகருக்காக ஒரு இளைஞர் வாதாட வந்தார்! 
அவர் தான் முகம்மது அலி ஜின்னா !!!

 தமிழ்நாட்டில் சுதந்திரம் என்பிறப்புரிமை என்று கர்ஜித்தவர்களிம் வ.உ.சி,பாரதி, சிவா ஆகியோர் ! 

வ.உ.சி.மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது ! சிவா மீது வழக்கு ! பாரதி தப்பி பாண்டிச்சேரி சென்றுவிட்டார் !

சிவாவும், வ.உ.சி.யும் தண்டிக்கப்பட்டனர் ! வ.உ.சியின் பட்டம் பறிக்கப்பட்டது ! இரன்டுகப்பலுக்கு சொந்தக்காரரான அவருடைய கப்பல் கள் ஏலம்போடப்பட்டன  ! சிறையிலிருந்து வந்த வ.உ.சிக்கு நிற்க நீழலிலை ! நெல்லை மாவட்டத்திற்குள் போகாக்கூடாது என்று உத்திரவு !

இரண்டு குழந்தைகளோடும்,மனைவியோடும் சென்னை வந்த வருக்கு சோறு போட ஆளில்லை !
பலசரக்கு சாமான்களை வாங்கி வீடுவீடாக விற்று ஜீவனம் !
ஒருகட்டத்தில் தள்ளு வண்டியில்  "மண்ணெண்ணை " விற்றார் !

மைலாப்பூர் காங்கிரஸ் வக்கீல்கள் எவரும் எட்டிப்பார்க்கவில்லை !

நீதிக்கட்சிக்காரரகள் அவர் மகனுக்கு அரசு வேலை  தர ஆசைகாட்டினார்கள் ! 
தேச துரோக குற்றத்தில் சிறை சென்ற என்மகனுக்கு பிரிட்டிஷ் அரசு உத்தியோகமா ? என்று வியந்தார்  வ.உ.சி.! பெரியாருக்கு கடிதம் எழுதுங்கள் ! எல்லாம் நல்லபடியாக முடியும் என்று ஆலோசனை சொன்னார்கள் !

எழுதினார் ! சேலத்தில் நடக்கும் மாநாட்டில் வந்து பேசுங்கள் ! என்றர் பெரியார் ! சேலம் போனார் ! மாநாட்டில் பேசச்  சொன்னர்கள் ! " இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது  ! அப்படியே கொடுத்தாலும் dominian அந்தஸ்து மட்டும்கொடுங்கள்  " என்று அவர்களுடைய கொள்கையை ஆதரித்து பேசினார் !

நல்லகாலம் ! பாரதி இல்லை !

இருந்திருந்தால் ஐந்தாம்  ஜார்ஜ் மீது  பிள்ளைத்தமிழ் பாடி காலில் விழச் 
செய்திருப்பார்கள் !

இந்த அவலத்திலிருந்து பாரதியின் மரணம் அவனைக் காப்பாற்றியது ! 










































































Thursday, September 05, 2013

உண்மையும் ,கருத்தும் .....?

உண்மை - கருத்து  ! இரண்டும் ஒன்றா ? வெவ்வேறா ?
நெருப்பு சுடும் ! இது உண்மையா ? இல்லைகருத்தா ?
என்னைக் கேட்டால்  உண்மை என்பேன் !

" நெருப்பு இருக்கிறது ! தொட்டேன் ! சுட்டது !" அதனால்   உண்மை என்பேன் ! சின்னப் பையனிடம் கேட்டாலும் உண்மை என்பான் ! அதை விளக்கச் சொன்னால் விழிப்பான் ! "ம்ம் ..எங்க அம்மா அப்பா சொன்னாங்க ! தாத்தா சொன்னாங்க ! என்பான் ! அவனுக்கு அவர்கள் சொன்ன கருத்து அது !

இரண்டும் இரண்டும் நான்கு ! இது உலகம் எற்றுக் கொண்ட உண்மை ! பல கணித  விதிகளுக்கு   உட்பட்டு தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ! சின்ன பையனிலிருந்து பேராசிரியர் வரை ஏற்றுக்கொண்ட உண்மையான கருத்து !

ஒரு கருத்து தர்க்கரீதியாக எல்லாராலும் எற்றுக் கொள்ளப்பட்டதால் உண்மையாகிவிடுமா ?

ஒரு உண்மை நிரூபிக்கப் படாததால் கருத்து என்று ஒதுக்கப்படுமா ?

சென்னையில் நாத்திகத் திருவிழா நடந்தது !

"கடவுளில்லை !கடவுள்  உண்டு என்பவன் முட்டாள் !" என்று பதாகை களோடு ஊர்வலம்வந்தார்கள் !

உலகம் பூராவிலும் உள்ள நாத்திகர்களுக்குமிவர்களுக்கும் வித்தியாசமுண்டு ! இவர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் அடிப்படையில்வித்தியாசமில்லை ! இருவருமே கடவுளை அவருடைய இருத்தலை நம்புகிறார்கள் !

கடவுள் இல்லை என்பது உண்மை ! அதனை   நிருபிக்க சங்கடப்படுகிறது ! அதனாலேயே அதனை  கருத்து என்று பெரும்பாலானவர்கள்   ஒதுக்குகிறார்கள் ! 

நம்ம ஊர் கருப்புச்சட்டை நாத்திகர்கள்  அறிவியல் ரீதியில் கடவுள் இல்லை என்பதை நிறுவ முற்படுவதை விட கடவுள் எதிர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் !

உண்மையான நாத்திகனுக்கு கடவுள் எதிரி அல்ல ! கடவுள்   இல்லை
  என்பவனுக்கு இல்லாத ஒன்று எப்படி எதிரியாக முடியும் ? 

( நண்பர் அப்பாதுரை எழுதி வரும் கலர் சட்டை நாத்திகம் என்ற இடுகையிலிருந்து எடுத்த பகுதியோடு நான் எழுதியதும் , ! சுட்டி naathikan . blog spot )


















































Wednesday, September 04, 2013

அந்த பேராசிரியர் ........!!!


இந்திய சுதந்திர வேள்வியில் மாணவர்கள் குதித்திருந்த நேரம் ! பனாரஸ் இந்து பலகலைகழகம்.இந்த மாணவர்களின் யாகசாலையாக    இருந்தது !

சைமன் கமிஷனுக்கு எதிராக கங்கை ஆற்றினுள் நீந்திச்  சென்று பி.ராமமூர்த்தி சகமாணவர்களொடு கறுப்புக் கோடி கட்டிய பல்கலையும் அது தான் !

அங்குதான் அவர் பெராசிரியராக    இருந்தார் !

பிரிட்டிஷ் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது ! பல்கலை வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது !  துணை வேந்தராக இருந்தவர் தான் அந்த பேராசிரியர் ! பல்கலை வளாகத்திற்குள் போலீசார் வரக்கூடாது என்று கூறிவிட்டார் !

சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த மாணவர்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்க மாட்டென் என்று அறிவித்து விட்டார் !

அவரை மிறி போலிஸ் நுழைந்தால் ...?

மாண்வர்கள் துணைவேந்தரை சந்தித்தார்கள் ! நிலைமையை அவரும் பரிசீலித்தார் ! 

"நீங்கள்வளாகத்தில் இருக்கும் வரை உங்களுக்கு நான் பாதுகாப்பு ! என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள் ! இரவோடு இரவாக  கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள் ! அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள் !" என்றார் அந்த துணைவேந்தர் !

மறுநாள் போலீஸ் நுழந்த பொது அவர்கள் தேடிவந்த மாணவர்கள்   அங்கு இல்லை ! 

அந்த துணைவேந்தர் தான் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் !
 
இந்தியாவின் தூதுவராக மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்த ஒரே இந்தியர் !!!





 





2013 பால்ராஜ்  சஹானியின் நூற்றாண்டு .....!!!



1913ம் ஆண்டு மே மாதம் முதல் தேதியில் பிறந்த  பால் ராஜ் சஹானியின் நூற்றாண்டு இது ! கேன்ஸ் விழாவில் சிற்ந்த நடிகருக்கான விருது பெற்ற அவரைப்பற்றி ஓசைப்படாமல் இருந்து விட்டது இந்திய திரைப்பட உலகம் !

ராவல் பிண்டியில் பிறந்த  பால்ராஜ் ஆங்கில இலக்கியத்தில் எம்.எ படித்தவர் ! காந்தியின் ஆலோசனையின் பேரில் பி.பி.சி யில் பணியில்செர்ந்தார் ! பிரிவினக்குப்பின் இந்தியா வந்தார் ! கம்யுனிஸ்ட் கட்சியோடு நெருங்கியிருந்தார் ! அகில இந்திய வாலிபர் சம்மேளனத்தை கட்டி அமைத்தார் ! அதன் முதல் தலைவரும் அவரானார் !

மும்பை திரைத்துறை அவரை வரவேற்றது ! அன்றய இடது சாரி கலைஞர்களான கே.ஏ .அப்பாஸ், குருதத், திலிப் குமார் ,தேவானந்த் ,ஆகியோரோடு இணந்து இந்தி  துறைக்கு அடையாளமாக திகழ்ந்தார் !

இந்திய மக்கள் நாடக மன்றம்  உருவான போதும் பின்னர் அதன வழி நடத்திய கலைஞர்களில் அவரும் ஒருவர் !திரைப்படத்துறையில் இடது சாரிகளின் பிடியை சகிக்காதவர்கள் இவர்களைஓரம்கட்ட ஆரம்பித்தார்கள் ! ஆட்சியாளர்களும் இதற்கு தாளம் போட்டனர் ! பால்ராஜ் சஹானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் !

கம்யூனிஸ் கட்சியிலிருந்து விலகி விடுமாறு அவருக்கு ஆலோசனை என்ற பெயரில் மிரட்டல்விடுக்கப்பட்டது ! பாலராஜ் மசியவில்லை !

நீதிமன்றத்தை  நாடி அவர் நடிக்கும் படங்களின் முதலீடுகருதி அவரை நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலாளிமார்கள் கேட்டுக் கொண்டனர் !

சிறையிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு போலிஸ் வாகனத்தில் காலை  8 மணிக்கு வரலாம் ! படப்பிடிப்பு முடிந்து மாலை 5 மணிக்கு மீண்டும்போலீஸ்
 வாகனத்தில் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று நீதி மன்றம்
உத்திரவிட்டது !

சிறையிலிருந்து கொண்டே  நடித்துக் கொடுத்த அந்த கலைஞன் பிறந்த நூற்றாண்டு   இது !

நமக்கென்ன !

 ரசனி இருக்காரு !
கமல் இருக்காரு !!
அசித் இருக்காரு !!!
விசய் இருக்காரு

அப்புறம் வேறென்ன வேணும் !




































































































































































 !!!!