Wednesday, April 13, 2016

மதுவிலக்கும் ,

கரும்பு விவசாயமும் ...!!!


மகராஷ்டிரா ,மத்தியபிரதெஅசம் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில்  சர்க்கரை ஆலைகள் அதிகம். இந்த ஆலை முதலாளிகள்  கூடவே மது ஆலைகளை வைத்திருப்பார்கள் . 

சர்க்கரை ஆலைகளின் கழிவுகளிலிருந்துகிடைக்கும் "மொலசஸ் " தான் மது ஆலைகளின் கச்சாபொருள் .இதனைக்கொண்டு தான் இவர்கள் indian made foreign liqor தயாரிக்கிறார்கள்.     விவசாயிகளின் கரும்புக்கே பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் இந்த முதலாளிகள் கரும்புச்சாறி \ன் கழிவிற்கா பணமகொடுக்கப்போகிறார்கள்.? பூராம் முதலில்லாத வியாபாரம்தான்.

மத்திய   அமைச்சர் கத்காரி மிகப்பெரிய தொழிலதிபர்."பூர்த்தி " குழுமம் அவருடையது. கரும்பு ஆலைகள் உண்டு. அதன் காரணமாக மது ஆலகளுமுண்டு . 

தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு 3600 ரூ கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது அதேசமயம்  தஞ்சையில் விவசாயிகள் "கரும்பு தொகையை "  கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் " ஆலை முதலாளிகள் எங்களிடம் வாங்கிய கரும்புக்கான பாக்கியை கொடு" என்று  . கோஷமிட்டுகொண்டு சென்றார்கள். அந்தப்பகுதி விவசாயிகளுக்குமட்டு 36 கோடி ரூ கொடுக்காமல் ஆலை நிர்வாகம் வைத்திருக்கிறது.

கரும்புக்கே பணம் கொடுக்காமல் இருக்கும்  இந்தமுதலாளிகள் கழிவுக்கு பணம் கொடுப்பார்களா ? தமிழ் நாட்டில் சென்ற ஆண்டுமட்டும் இந்த கரும்பு கழிவுகளைபயன்படுத்தி விற்பனையான மதுவின் மதிப்பு 25000 கோடி ரூபாயாகும்.இது அத்துணையும்  கரும்பு விவசாயிக்கு போகேண்டியவை. அத்துணையையும் ஆலைமுதலாளி"அபேஸ்" செய்கிறான் இது தமிழ் நாட்டில்மட்டும்.

அகில இந்திய அளவில் .......??

 தி.மு.க.வும் அதிமுகவும் மதுவை ,படிப்படியாகவோ ,செங்கல் செங்கலாகவோ  குறைக்க போவதாக கூறுவார்கள் .செய்ய மாட்டார்கள்.ஏனென்றால் இவர்கள் மது ஆலைமுதலாளிகளுக்கு வேண்டியவர்கள்.

கரும்பு விவசாயிளுக்கு நியாயமாக சேரவேண்டியதை வாங்கிக் கொடுத்தாலே போதும்.

இவர்களால் முடியாது !!

  



 

Saturday, April 09, 2016

ஆணவ கொலைகாரர்களுக்கு 

என்ன தண்டனை கொடுக்கலாம் ?



உடுமலையில் சங்கரையும், கௌசல்யாவையும் பட்டப்பகலில் ,நட்ட நடுரோட்டில் வெட்டிய காட்சியை குறைந்தது ஐந்துலட்சம்பெராவது தொலைக்காட்சியில் பார்த்திருப்பார்கள். குலை நடுங்க அதிர்ந்திருப்பார்கள்  . அதன் பிறகு .....

பார்த்தவர்கள் பார்த்தவர்களாகவே தான் இருப்பார்களென்று அந்த கொலைகாரப்பவிகளுக்கு தெரியும். எதையும் அவர்களால்செய்ய முடியாது என்பதும் தெரியும்.  இப்படிப்பட்ட கொடூரமான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை நீதிமன்றம்,வழக்கு என்று  இழுத்து ஒன்றுமில்லாமல் செய்ய முடியும் .

1944ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கலாம். நெல்லை மாவட்டத்தின் உட்பகுதியில் உள்ள   குக்கிராமம்.

இந்தியா சுதந்திரம் பெறவில்லை . அருகில் உள்ள குடியிருப்பில் சிலர் வசித்து வந்தனர் நாங்கள் சிறுவர்கள் அந்த பக்கம் போகக்கூடாது என்று எங்களுக்கு சொல்லி இருந்தனர் அங்குள்ள ஒன்றிரண்டு பேர் கிராமத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த தண்டணை கால் நரம்பினை வெட்டிவிடுவது.,அதாவது குதிகாலுக்கும்   பாதத்திற்கும் இனைபாக இருக்கும் நரம்பை வெட்டி அந்த புண் ஆறும் வரை சிக்கிச்சை கொடுப்பார்கள் . பின்னர் விடுவிப்பார்கள். அவர்களுடைய கால் பாதம் தொங்கியபடி இருக்கும்.  கால்எலும்பு  இருப்பதால் .   நிற்க முடியும்.    பாதத்தை நினைத்தபடி அசைக்க முடியாது. ஆயுளுக்கும் அது தான் நிலைமை .

மற்றொரு தண்டனையும் உண்டு .  பத்து அல்லது பதினைந்து கிலோ எடை உள்ள பட்டிய கல்லை செதுக்குவார்கள்  அதில்துளை இட்டு  இரும்பு  சங்கிலியைகட்டுவார்கள் சங்கிலியின்மறுமுனைதண்டனைக்கு உரியவனின் காலில் பிணத்திருக்கும் . அவன் அந்த கல்லையும் இழுந்துக்கொண்டுதான் நடக்கவேண்டும்.  ஐந்து ஆறடி நீளம் உள்ள சங்கிலி ஆதலால் கல்லை மார்பளவு துக்கிகொண்டு சென்று குளியல் மற்றும் காலைகடன் களை  செய்து கொள்ளவேண்டும்.இது பிரிட்டிஷ் சட்டத்தில் உள்ளதா? இந்திய சட்டத்தில் உள்ளதா ? இல்ல கட்ட பஞ்சாயத்தா ? தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட தண்டனையை அனுபவத்தவர்களை நான் என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் .   ,கொலை ,    கொள்ளை ,வழிப்பறி ,என்று மீண்டும் மீண்டும் ஈடுபடுபவர்களை இப்படி தண்ண்டிப்பார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

ஆணவக் கொலைகாரர்களை இப்படி தண்டிக்கவேண்டும் . 

மனித உரிமைக்காரர்கள் கொஞ்சம் கண்டுக்காமல் இருந்தால் நடக்கலாம் .

 

Wednesday, April 06, 2016

பயந்துபோன கருணா நிதி 

"இந்தி"யில் பேசினார் ...!!!





2012ம் ஆண்டு விழுப்புரத்தில்னடந்தநிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த கருணாநிதிக்கு ,பார்வதி,பரமேஸ்வரன், முருகன் என்று இந்து கடவுளர்கள் வேடமிட்டவர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதனை இந்து மகாசபை எதிர்த்து வழக்குப் போட்டனர்.

சேதுசமுத்திரம் திட்டம் பற்றி பேசும் போது கருணாநிதி அவர்கள் " ஒருலட்சத்து எழுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் இருந்தாரா ? செதுபாலத்தை கட்டினாரா ? அவர் எந்த பொறியியர்கல்லூரியில் படித்தார் ?"என்று  பேசினார். பா.ஜ.க பிரமுகர் ரவி சங்கர் பிரசாத் இதனை கண்டித்தார். 

"இன்று வால்மீகியும் இல்லை .ராமனும் இல்லை . வால்மீகி எழுதி உள்ளதை தான் நான் சொன்னேன் . ராமன் குடிகாரன் என்று வால்மீகி எழதி உள்ளார் அதனைக் கூட நான் குறிப்பிடவில்ல " என்றும் கருணாநிதி விளக்கினார்.

இருந்தாலும் கூட்டணியில் அவரோடு இருந்த கட்சிகளா ன காங்கிரஸ் போன்றவைகளே முகம் சுளித்தன.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வற்புறுத்தி தமிழகம் முழுவதும் "பந்த் " நடத்த அறிவித்தார்.

இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. "பந்த்" நடத்தாமல் உண்ணாவிரதம் என்று அறிவித்தார். அன்று நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசினார்.

"எனக்கு ராமன் விரோதி அல்ல . ராவணன் தான் விரோதி " என்று அவர் பேசிய போது பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அது மட்டுமல்ல.

"இந்துஸ்தான் ஹை  தேஷ் ஹமாரா ! 

ஜான்சே அப்னே ஹம்கோ ப்யாரா!

இந்து முஸ்லீம்சீக் இசாயி !

சபி ஹமாரா பாயிபாயி !

 பாயிஹோகா பாயி ஹமாரா!

 ஐஸா ஹோகா தேஷ் ஹமாரா!! " 

என்று இந்தியிலும் பேசினார் . 

ஏன் இந்தியில்பேசினார் என்பதற்கு எந்த விளக்கமும் இதுவரை இல்லை 

" இந்தியன் எக்ஸ்பிரஸ் ". -2007 ஆண்டு ஆவணக்காப்பகத்தில் கருணாநிதி அவர்களின் குரலில் பதிவு செய்யப்பட்டதை  கேட்கலாம். 

(to come out of  s c ban karuna nithi made a fast change and he spoke in Hindi 2-10- 2007 Indian express )




 

Sunday, April 03, 2016

தமிழை செம்மொழியாக்க ,

மோகன்,நாச்சியப்பன்,வை.கோ உதவினார்கள்.!!!



(திமுக,அதிமுக ,பாமக மறுத்துவிட்டார்கள் ) 






தமிழ் செம்மொழியானது யாரால் ? 

 தொல்காப்பியரிலிருந்து, வள்ளுவரிலிருந்து ,கமபனிலிருந்து ,பாரதி ,புதுமப்பித்தனிலிருந்து  இதனச் சாதித்தவர்கள் ஏராளம் ! 

சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமார் கலைஞரும் பொறுப்பு ! 

இதற்காக கிராமம் கிராமமாக ,சிற்றூர் ,பேரூர்,நகரம் ,மாநகரம் ,நகராட்சி மாநகராட்சி என்று கருத்தரங்கள் நடத்தி,மாநாடு நடத்தி மக்களிடையே சொல்லி அவர்களின் ஆதரவைதிரட்டிய த.மு.எ.சவும் பொறுப்பு !

 இறுதியாக டெல்லி சென்று ஜநதார் மந்தர் ரிலிருந்து ஊர்வலமாகச் சென்று பிரத்மரிடம்  மனுகொடுத்து வேண்டிய ,தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்கலைஞர்கள் பொறுப்பு !  


இது பற்றி கண்டு கொள்ளாத தி .மு.க வும் அதிமுகவும் இப்போது "நாந்தான்  நாந்தான்" என்று லாவணி பாடுவது வேடிக்கை !




தமிழகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும்,கலைஞர்களும் த.மு.எ.ச வின் தலைமையில் டெல்லி சென்றார்கள் !




அவர்களை வரவேற்று,தங்கும்வசதி,உணவு ஏற்பாடு,மற்றவற்றைசெவ்வனே  செய்துகொடுத்தவர்  மதரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் பி.மோகன் அவர்கள் !




பிரதமர்,மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்து உதவியவர் "வைகோ "அவர்கள் !




பா.ம.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர்வலத்தில்கலந்து கொள்ள  மறுத்து விட்டார்கள் ! மனுவில் கையெழுத்து போட்டார்கள் !




அண்ணா தி.மு.க உறுப்பினர் மலைச்சாமி   வருகிறேன் என்றார்! ஊர்வலம் புறப்படும் வரை காத்திருந்தோம் ! முந்திய இரவு அவசர அழைப்பின் பேரில் சென்னை சென்றுவிட்டதாக கூறினார்கள் ! 




தி .மு.க கலந்து கொள்ள மறுத்து விட்டது!




காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் வந்தார் ! பிரதமரிடம் மனு கொடுக்கும்பொதும்கூட இருந்தார் !




பிதம்ரிடம் எங்களை  வைகோவும்,மோகனும் அழத்துச் சென்றார்கள் !




த.மு.எ.ச தலைவர்அருணன் அவர்கள்  மனுவை முழுவதுமாக படித்து பிரதமர் "வாஜ்பாயிடம் "கொடுத்தார் ! " we are working on it " என்று பிரதமர் பதிலளித்தார் !




பதவியை விட்டு விலகும் வரை எதுவும் செய்யவில்லை !




அடுத்து ஐக்கிய முற்போக்கு அரசு ,இடதுசாரிகளின் ஆதரவோடு வந்தது !




தமிழ் செம்மொழி என்று அறிவித்தது !


 

Friday, April 01, 2016

"பரமனின் "

தி.மு.க ......!!!



மதுரையில் "பாத்திமா" கல்லுரியை தெரியும் .அதன் இடது பக்கம்  ஆலமரத்தின் வழியாக ரயிலவே  கேட்டை கடந்தால்.எல்.ஐ.சி காலனி,ரயிலார் நகர், போஸ்டல். என் ஜி ஓ காலனி என்று வரும். அங்குள்ள கிணற்று  நீர்   brackish ஆக இருந்ததால் அவர்கள் அரசரடி தண்ணிர் தொட்டியில் இருந்து தண்ணிர் கோண்டு வருவார்கள்.

பரமன் ட்ரை சைகிள் முலம்   தன்ணீர் கொடுப்பான். 30 - 40 விடுகளுக்கு சப்பளை அவன்தான். தேனி ரோட்டிலிருந்து திரும்பினால் காமராஜர் பாலம் வரை மேடுதான் . தூரத்தில் ஆற்றுக்கு அக்கரையில் "தீக்கதிர்"  ஆபிஸ் மேல் கமபத்தில் அரிவாள் சுத்தியல் நட்சத்திர கொடி பறப்பது தெரியும்.

அரசரடி மூக்கிலிருந்து பாத்திமா கல்லுரி வரை மேடுதான். 20-25லிட்டர் 20 கேனை இழுத்து  வருவது சிரமம் தான்.பரமன் அதைத்தான் செய்து வந்தான், காலை நான்கு மணியிலிருந்து மதியம் ஒருமணி வாரை ட்ரிப் அடிப்பான்.  மாலை திமுக கூட்டம் நகரத்தில் எங்கு நடந்தாலும்டிரை சைக்கிளோடு போய்விடுவான். சிறு சிறு பணி  களை ச் செய்வான்கூட்டம்முடிந்ததும் அங்கேயே   ட்ரைசைக்கிளில் வேட்டியை அவிழ்த்து போத்திப்படுத்திருந் விட்டு  காலை நான்கு மணிக்கி தண்ணிபிடிக்க ஆரம்பிப்பான்.67 தேர்தலில் நான் எனவிட்டு வாசலில் அமர்ந்து வாக்களர் ஸ்லிப் எழுதும் பொது தான் நான் கட்சிக்காரன் என்பதை தெரிந்து கொண்டான். மிக நெருக்கமாக பழகினோம்.

அண்ணா வின் வெற்றி அவன் வெற்றி.சென்னை செல்ல அவனுக்கு விருப்பம் தான். பஸ்  ஏற்பாடு செய்திருந்தார்கள். மதுரை தஞ்சை,புதுச்சேரி.சென்னை சென்று வர 35 ரூ. 

"நம்ம வசதிக்கு முடியாதுண்ணே ! கூட்டம்பெரும்கூட்டம்வரும் .சாலியா இருக்கும் "

"பரமா ! இது ஒரு வரலாறு !

"கண்கள்பளபளக்க" அண்ணா அண்ணா "என்று ஜெபித்தான

அவன் தெரு பூராவும்  ஆரஞ்சு  மிட்டாய் வாங்கி கொடுத்து கொண்டாடினான்.. 

அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை !

அண்ணாவுக்கு உடல் நலம் இல்லாமல் போனது. பரமன் பட்ட வேதனையை சொல்லி மாளாது.என்ன செய்ய ? மரணம் தவிர்க்கமுடியாததாயிற்று .

"அண்ணெ ! 25 ரூ கோடுங்க அண்ணே ! "சென்னைக்கு ரயிலேறி விட்டான் .

அரைமணி நேரம் கழித்து அவன் தம்பி அண்ணன் சென்னை செல்கிறார். 25 ரூ வாங்கிவரச் சொன்னார் என்றான்.புரிந்து கொண்டேன். அவனையும் அனுப்பி வைத்தேன்.

"எந்த ஆறு என்பது நினைவில்லை . ரயிலின் கூரையின் மீது வந்தவர்கள் கர்டர் பாலத்தில் அடிபட்டு கிடக்கிறார்களென்று சேய்தி  வந்தது.பரமனுக்கு ஒன்று மில்லைஅவந்தம்பி தலையில் அடிபட்டு வீட்டில்  இருக்கிறான் . 

"தம்பி ! இப்படி ஆயுடுச்சே ! 'என்று அவனைப்பார்த்து வருத்தப்பட்டேன்,"எனக்கு அடிதான பட்டுது  அண்ணாவுக்கு "அவனால்  பேச முடியவில்லை . "உயிர்" தொண்டை அடைக்க மேலே கையக்காட்டினான்    .

நான் ஒய்வு பெற்று வந்து விட்டேன். 

தம்பி கோலா கம்பெனியில் மலையாய்  குவிந்திருக்கும் உடைந்த பாட்டிகளிலிருந்து நல்ல பாட்டிலை பொறுக்கும் இடத்தில்கூலி வேலை  செய்கிறான்.

பரமனை தேடினேன் கிடைக்கவில்லை. 


அவனுடைய தி.மு.க வையும் காணவில்லை !

இனி காணவும்முடியாது !!!