தமிழை செம்மொழியாக்க ,
மோகன்,நாச்சியப்பன்,வை.கோ உதவினார்கள்.!!!
(திமுக,அதிமுக ,பாமக மறுத்துவிட்டார்கள் )
தமிழ் செம்மொழியானது யாரால் ?
தொல்காப்பியரிலிருந்து, வள்ளுவரிலிருந்து ,கமபனிலிருந்து ,பாரதி ,புதுமப்பித்தனிலிருந்து இதனச் சாதித்தவர்கள் ஏராளம் !
சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமார் கலைஞரும் பொறுப்பு !
இதற்காக கிராமம் கிராமமாக ,சிற்றூர் ,பேரூர்,நகரம் ,மாநகரம் ,நகராட்சி மாநகராட்சி என்று கருத்தரங்கள் நடத்தி,மாநாடு நடத்தி மக்களிடையே சொல்லி அவர்களின் ஆதரவைதிரட்டிய த.மு.எ.சவும் பொறுப்பு !
இறுதியாக டெல்லி சென்று ஜநதார் மந்தர் ரிலிருந்து ஊர்வலமாகச் சென்று பிரத்மரிடம் மனுகொடுத்து வேண்டிய ,தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்கலைஞர்கள் பொறுப்பு !
இது பற்றி கண்டு கொள்ளாத தி .மு.க வும் அதிமுகவும் இப்போது "நாந்தான் நாந்தான்" என்று லாவணி பாடுவது வேடிக்கை !
தமிழகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும்,கலைஞர்களும் த.மு.எ.ச வின் தலைமையில் டெல்லி சென்றார்கள் !
அவர்களை வரவேற்று,தங்கும்வசதி,உணவு ஏற்பாடு,மற்றவற்றைசெவ்வனே செய்துகொடுத்தவர் மதரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் பி.மோகன் அவர்கள் !
பிரதமர்,மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்து உதவியவர் "வைகோ "அவர்கள் !
பா.ம.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர்வலத்தில்கலந்து கொள்ள மறுத்து விட்டார்கள் ! மனுவில் கையெழுத்து போட்டார்கள் !
அண்ணா தி.மு.க உறுப்பினர் மலைச்சாமி வருகிறேன் என்றார்! ஊர்வலம் புறப்படும் வரை காத்திருந்தோம் ! முந்திய இரவு அவசர அழைப்பின் பேரில் சென்னை சென்றுவிட்டதாக கூறினார்கள் !
தி .மு.க கலந்து கொள்ள மறுத்து விட்டது!
காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் வந்தார் ! பிரதமரிடம் மனு கொடுக்கும்பொதும்கூட இருந்தார் !
பிதம்ரிடம் எங்களை வைகோவும்,மோகனும் அழத்துச் சென்றார்கள் !
த.மு.எ.ச தலைவர்அருணன் அவர்கள் மனுவை முழுவதுமாக படித்து பிரதமர் "வாஜ்பாயிடம் "கொடுத்தார் ! " we are working on it " என்று பிரதமர் பதிலளித்தார் !
பதவியை விட்டு விலகும் வரை எதுவும் செய்யவில்லை !
அடுத்து ஐக்கிய முற்போக்கு அரசு ,இடதுசாரிகளின் ஆதரவோடு வந்தது !
தமிழ் செம்மொழி என்று அறிவித்தது !
0 comments:
Post a Comment