Thursday, September 02, 2010

தாய் மொழியில் பெசுவது பிறப்புரிமை

தாய் மொழியில் பேசுவது பிறப்புரிமை.


இந்திய தொழிற்சங்க மையத்தின் நான்காவது அகில இந்திய மாநாடு1979ம் ஆண்டு எப்ரல் மாதம் சென்னையில் நடந்தது. இந்தியா பூராவிலும் இருந்து ஐயாயிரம் சார்பாளர்கள் கலந்து கொண்ட மிகப் பிரும்மண்டமான மாநாடாகும் அது.

ஐயாயிரம் சார்பாளர்கள் காலை எட்டு மணிக்குள் காலைக் கடன்களை முடித்து,குளித்து,காலை உணவை முடிக்க வேண்டும்.ஒன்பதரை மணிக்கு விவாதம் ஆரம்பமாகும்.சங்கத்தின் தலைவர் பி.டி. ரணதிவே.யார் வந்தாலும் வராவிட்டாலும் சரியான நெரத்தில் கராறாக ஆரம்பித்து விடுவார் சார்பாளர்கள் குலைநடுங்க ஓடி வருவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். சரியாக பதிணொண்ணரை மணிக்கு ஐயாயிரம் பெருக்கும் ஐந்து நிமிடத்தில் .தேநீர் கொடுக்க வேண்டும்.ஆறாவது நிமிடம் அடுத்த சார்பாளரை தலைவர் பெசக் கூப்பிட்டுவிடுவார்.

மதியம் ஒன்று முப்பதுக்கு முப்பது நிமிடம் இடைவேளை. அதற்குள் அத்துணைபேரும் உணவை முடித்துக் கொள்ள வேண்டும்..மாலை நான்குமணிக்கு தேநீர். ஐந்து நாட்கள் தமிழக சி.ஐ.டி.யு ,குறிப்பாக சென்னை தொழர்கள் இதனைச்செய்துகாட்டினார்கள்.அவர்களுடய செய்நேர்த்தியையும்,செயல்திறனையும் பார்த்து தேனீ கூட வெட்கித்தலை குனியும்.

இடதுசாரி தொழிற்சங்கங்களின் ஜனநாயக மாண்பு மாநாடு நடத்தப்பட்ட முறையில் அற்புதமான வகையில் வெளிப்பட்டது.திரிபுராவின் பழங்குடி,அசாமின் தேயிலைத்தோட்டத்தொழிலாளி,டார்ஜிலிங்கின் கூர்கா,டோங்கிரி பேசும் காஷ்மீரி,,மத்திய பிரதேசத்தின் வனகுடிகள், மும்பையின் ஆலைத்தொழிலாளி,பஞ்சாபி,இந்தி,உருது, தமிழ்தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,வங்கம்,இந்தியாவின் சகலமொழிக்காரர்களும் அங்கு இருந்தனர்.அவர்கள் அத்துணை பெரும் அவரவர் தாய் மொழியிலேயே பேச அனுமதிக்கப்பட்டனர்.இது எப்படி நடைமுறைபடுத்தப் பட்டது? . உதாரணமாக,குஜராத்தியில் ஒருவர் பேசினால், அவர் பெசிமுடித்தவுடன் தலைவர் பி.டி.ஆர் ஐந்துந்மிடம் மொழிபெயர்ப்பு என்று அறிவிப்பார்..குஜராத்தியில் பெசியது இந்தியில் மொழிபெயர்க்கப்படும்.இந்தி தெரியாதவர்களுக்காக வேரொருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்.ஆங்கிலமும்,இந்தியும் தெரியாதவர்கள்

என்னாவது?அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தலைவர் பொது மொழிபெயர்ப்பு என்று அறிவிப்பார்.இந்தி ஆங்கிலம் தெரிந்த அந்தந்த மொழிக்காரர்கள் தங்கள் தங்கள் தாய். மொழியில் அந்தந்த குழுக்களுக்கு மொழிபெயர்ப்பார்கள்.ஐயாயிரம் சார்பாளர்களிடையே இருபத்து மூன்று இந்திய மொழிகள் ஒரேசமயையித்தில்

பெசப்படுவதை கேட்பதும் பார்ப்பதும் மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வாகும

என்னசெய்வது? மத்திய அமைச்சர் ஒருவர் தாய்மொழியில் தான் பெசுவேன் என்று இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார்.இறுதியில் ஆங்கிலத்தில் எழுதிவைத்து வாசிக்கவேண்டியதாயிற்று.பணபலமோ,அதிகாரபஇல்லாதவர்களால்முடிகிறது

ஆட்சியாளர்களால் ஏன் முடியவில்லை?

7 comments:

hariharan said...

உலக அரங்கில் ஐநா சபையில் ஹிந்தியில் பேசினால் மொழிமாற்று செய்வதற்கு வசதி இருக்கும் போது, செம்மொழியாம் தமிழ்மொழியில் நமது பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை யென்றால் உடன்பிறப்புக்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையே!!

kashyapan said...

ஐ.நா வில் இந்தி மொழிபெயர்ப்பு உள்ளதா என்பது உறுதிபட தெரியவில்லை."நெட்" டில் தெடினேன். கிடைக்கவில்லை..வாஜ்பாய் ஒரு முறை இந்தியில்தான் பெசுவேன் என்று அடம்பிடித்தார்.முலயம்,லாலு,போன்றவர்கள் அவ்வப்போது ஓலமிடுவார்கள். இவர்கள் இந்தியைக் காசாக்கி, காசை கூழாக்கி,கூழைக் குடித்து கும்மாளமிடுபவர்கள்தான்.நன்றி ஹரிஹரன்---காஸ்யபன்.

ராம்ஜி_யாஹூ said...

போன தேர்தல் (நாடாளுமன்றம்) போல இந்த முறையும் காங்கிரசிற்கு நாடாளுமன்ற உறுப்பின்னர்கள் குறைவாக இருந்து இருந்தால், மாண்புமிகு அழகிரி அவர்கள் தமிழில் பேசி இருந்து இருக்க முடியும். DMK could have dictated the terms, but now the situation is little different, It would change.

எல்லாம் இருக்கை எண்ணிக்கை அடிப்படை.

kashyapan said...

இல்லை நண்பரே! காங்கிரஸ் இப்போதும் சிறுபான்மை அரசுதான்.மாறன்,ராஜாவுக்கு அமைச்சரவை அந்தஸ்த்தில் பதவி.மாறன் தாத்தாவை தள்ளுவண்டியில் வைத்து டில்லி பட்டணத்தில் தெருத்தெருவாக அழைத்து செல்ல அழகிரிக்கு அமைச்சரவை அந்தஸ்த்தில் பதவி கிடைத்தது.அரசியல் என்பதும், வாழ்க்கை என்பதும் விட்டுக்கொடுப்பதில் தான் இருக்கிறது. எதை, எப்போது விட்டுக்கொடுக்கிறொம் என்பது முக்கியமாகும்---காஸ்யபன்

காமராஜ் said...

தொழிற்சங்க மாண்புகளையும்,ஜனநாயகத்தையும் பேசிக்கொண்டே வந்து ஜனநாயகமில்லாத அரசியலைச்சாடிவிட்டீர்களே.அருமை தோழரே.

இனிய தமிழ் said...

விடையளிக்க முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்று...

S.Raman, Vellore said...

அதுவும் கூட அவர் முழுமையான பதில் சொல்லவில்லை. கேள்வி என் 169 என்று மட்டுமே ஆங்கிலத்தில் படித்தார். ஐ.நா வில் உள்ளதுபோல ஒரே சமயத்தில் மொழிபெயர்க்கும் வசதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் சில ஆண்டுகள் முன்பு நடந்தபோது செய்யப்பட்டதாக தோழர்கள் தெரிவித்தனர். வாலிபர் சங்கத்தால் அதுவும் மிகக்குறைவான வசதிகள், நிதியாதாரத்துடன் முடிகிறபோது நாடாளுமன்றத்தில்
மொழிபெயர்ப்பு என்பது சாத்தியமானதே. அதைச்செய்வதற்கு காங்கிரஸ் கட்சிக்கு மனமில்லை. கேட்பதற்கு திமுகவிற்கு தைரியமில்லை