Sunday, September 26, 2010

"ஹே! ராம்"

"ஹே!ராம்!" திரைப் படத்தை மும்பையில் வெளியிடுவதற்கு முன்பு கொலைகாரன் நாதுரா ம் கோட்சே யின் தம்பி கோபால் கோட்சே பார்த்து அனுமதி கொடுத்தாராம்.


அந்தப் படத்திற்கு முதல் பாரட்டுவிழா கொல்கத்தாவில் நடந்தது.அதில் காந்தியாக நஸ்ருதீன் ஷா நடித்திருப்பார்."காந்தி" படத்தின்" பென் கிங்ஸ்லி" யை விட சிறப்பான சித்தரிப்பு என்பது என் தனிப்பட்ட எண்ணம். பிர்லா மாளிகையின் நந்தவனத்தில் கோட்சேயால் சுடப்பட்டு பின்னோக்கி படிக்கட்டுகளைத்தாண்டி கீழே விழும் காட்சியில் ஷா அற்புதமாக நடித்திருப்பார்.

அப்படி விழும் போது "ஹே!ராம்!" என்று அவர் குரலெழுப்பமாட்டார். இதுபற்றி கமல்ஹாசனிடம் நிருபர் ஒருவர் கேட்டபோது " அப்படி குறிப்பு எதுவும்" கிடைக்கவில்லையே" என்றாராம்

இருந்தாலும்,துளசி தாசர்,பத்திராசலம் ராமதாஸ் ஆகியோரோடு ஒப்பிடும் அளவுக்கு ராமர் மீது பக்தி கொண்டவர் காந்தி அடிகள் பிரிவினையின்போது டில்லிபட்டணத்து அகதிகள் முகாமில் அவர் செய்த பணியை ராமபிரானுக்குச். செய்யும் பணியாக நினைத்துச் செய்தார் அங்குதான் அன்றய ஜனசங்கத்தின் தாய்வீடான ஆர்.எஸ்.எஸ் காரர்களையும் சந்தித்தார்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும்,தலைவர்களும் எப்படியாவது காந்தியின் நம்பிக்கையப் பெறவேண்டும் என்று கருதினார்கள். காந்தியை தங்கள் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார்கள். .காந்தியும் ஒரு நாள் செண்றார்.

பிரும்மாணமான,அழகான அலுவலகம்.ஒவ்வொரு அறையாக காட்டினார்கள்.ஒவ்வொரு அறையிலும் வண்ணத்திரைச்சீலையில் எண்ணை ஒவியங்கள் வைக்கப்பட்டு இருந்தன.ராணா பிரதாப் சிங், வீர சிவாஜி என்று படங்கள் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.மகிழ்ச்சியோடு பார்த்த காந்தி கிளம்பி வெளியே வந்தார்.

அவரிடம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்"ஐயா!அலுவலகத்தைப் பார்த்தீர்கள்.உங்கள் அபிப்பிராயம் என்ன? " என்று கேட்டுள்ளார்".அற்புதமான ஒவியங்களை வைத்துள்ளீர்கள்.ஒரு ராமர் படம் சின்னதாகவாவது வைத்திருக்கலாம். நான் ராம பக்தன்.அதுதான் என் வருத்தம்" என்றாராம் காந்தியடிகள்.

"ராணாவும், ரஜபுத்திரர்களும் முகம்மதியர்களை எதிர்த்து போராடினார்கள்.வீர சிவாஜி ஔரங்கசீப்பை எதிர்த்து போராடினார்.இவர்களைக் காட்டி பாரத மக்களுக்கு வீரமூட்டி இந்து சாம்ராஜ்ஜியத்தை அமைக்கவே விரும்புகிறோம். ராமர் எந்த முகம்மதியரையும் எதிர்த்து போராடவில்லையே" என்று தலைவர் பதிலளீத்தாராம்.

இந்த இடுகையைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். " நீங்கள் ஏதாவது ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஸ்டாம்ப் ஸைசிலாவது ராமர் படத்தைப் பார்த்தால்" எனக்கு தகவல் கொடுங்களேன்.

8 comments:

காமராஜ் said...

துனுக்கு போல இருந்தாலும் பெரிய்ய அளவில் துனுக்குறச்செயும் தகவல் தோழரே.
வியப்பு மேலிடுகிறது இன்னும் சொல்லுங்கள்.காத்திருக்கிறோம்.

kashyapan said...

தொழா! தகவல்கள் நிறைய இருக்கின்றன.சீக்கிரமாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறென்.வயதும் ஆகிக்கொண்டே பொகிறதே.நன்றி காமராஜ்---காஸ்யபன்

hariharan said...

அவர்களுக்கு ராமரா முக்கியம், ஆட்சியதிகாரம் ஹிட்லரின் பாணியில் வேண்டும்.

நல்ல தகவல்.

Pradeep said...

oh....puthu visayamaa iruku sir....

அழகிய நாட்கள் said...

காஸ்யபன்,
வணக்கம்! இதுவரையில் ஆர் எஸ் எஸ் தலைமை என்பது சத்பவன பிராமண தலைமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது இது வரை. சுமார்த்த மற்றும் பிற பிரிவினருக்கு தலைமையில் இடம் இல்லையாம் என்ன கொடுமை சார் இது !

kashyapan said...

சித்பவன் பிராமணர்கள் என்று மஹாரஷ்டிராவில் ஒர் வகுப்பினர் உண்டு.அந்தக்காலத்தில் ஐ.சி.எஸ். அதிகாரிகளாக சிலர் வந்துள்ளனர்.கோபலகிருஷ்ண் கோகிலே சித் பவன் என்பார்கள்.ஏன்? தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு தலைமைதாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக அப்போது இந்தவர் பி.டி.ரணதிவே. அவரும் சித்பவன் பிராமணரே..தற்பொது தலைவராக இருக்கும் மோகன் பகவத், முந்தய தலைவர் சுதர்சனுக்கு அடுத்து வந்தவர்.சுதுர்சன் மத்திய பிரதெசத்தைச் சார்ந்தவர். ஆனால் அவர் பூர்வீகம் தமிழ்நாடு என்று சொல்வார்கள் அவருக்கு முன் ராஜேந்திர பூரி என்று இருந்தார்.அவர் ஊ.பி காரர் என்பார்கள்.---காஸ்யபன்.

பாரதசாரி said...

நல்ல பதிவு ஐயா. பொறுமையாக எழுதுங்கள் நாங்கள் காத்திருப்போம். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்!

சிவகுமாரன் said...

மிக நல்ல பதிவு
அயோத்தி தீர்ப்பு பற்றி அய்யாவின் கருத்து என்ன?
தினம் ஒரு பதிவு இடுங்கள் அய்யா.
ஆவலுடன் தினம் திறந்து பார்த்து ஏமாந்து போகிறேன்.
-சிவகுமாரன்