Friday, September 17, 2010

மொழிபெயர்ப்பும் கவிதையும்

மொழிபெயர்ப்பும் கவிதையும்


தொலைக்காட்சிப் பெட்டியைத்திறந்தால் இந்தியில் வாயசைக்கும் விளம்பரங்களுக்கு தமிழில் ஒலிவரும்."காம்ப்ளான் சாப்பிடாத குழந்தைக வளந்தாங்க 3செண்டி மீட்டர்!

காம்ப்ளான் சாப்பிட்ட குழந்தைக வளந்தாங்க 6செண்டிமீட்டர்!" என்று ஒலிக்கும்.சில இந்தி தொடர்கள் தமிழில் பேசும்."வருகிறேன் சாப்பிட!" போகிறேன் வீட்டுக்கு!" என்று வினைச்சொல்லை முன்வைத்து பெசும்.இந்தி மொழியில் வினச்சொல்லை முதலில் பயன்படுத்துவது வழக்கம்தான்.மொழிபெயர்ப்பில் தமிழ் மொழியின் நளினம்,மென்மை,மேன்மை தெரியாதவர்களைப் பயன்படுத்துவதால் .ஏற்பட்டதின் விளைவுதான் இது.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்குமுன்,திருமண வீடுகளில் வாத்தியக்காரர்கள்,நாதஸ்வரமாக இருந்தாலும்,பாண்டுவாத்தியமாக இருந்தாலும் ஒரு பாட்டை வாசிக்காமல் இருக்கமாட்டார்கள்.அதிலும் பெண்ணோ, மாப்பிள்ளையோ ஊர்வலமாக வரும் போது கண்டிப்பாக வாசிப்பார்கள்.அது

"கல்யாண

ஊர்வலம் வரும்

உல்லாசமே தரும்---மகிழ்ந்து நான்

ஆடிடுவேன்" என்ற பாடலாகும்.இது ஒரு திரைப் படப்பாடல்."அவன்" என்ற படத்தின் பாடல். இந்தியில் "ஆ: என்று வெளிவந்த படத்தின் "டப்பிங்" வடிவம்.ராஜ் கபூர், நர்கீஸ் நடித்தார்கள்.சங்கர்--ஜெய்கிஷன் இசை அமைத்தனர்.ஷைலேந்திரா என்ற உருதுக் கவிஞர் படலை எழுதினார்.அது:

" ராஜா-கி-ஆவொகி பராத்

ரங்கோலி-கிராத்---மகனு மை

நசூங்கி" என்பதாகும்.இந்தப் படத்தின் அத்துணை பாடல்களும் பிரபலமானவை".ஜி.கிருஷ்ணவேணி" என்ற "ஜிக்கி" பாடியவை.அந்த்க்காலத்தில் இசைத்தட்டு விற்பனையில் முத்லிடம் பெற்றவை. தமிழ்ப் பாடலைக் கேட்ட ஷைலேந்திரா பாடலாசிரியரைப் பார்க்க தமிழ்நாடு வந்தார்."ஐயா! மூலத்தை நீங்கள் தமிழில் எழுதி அதனை உருதுமொழியில் நான் மொழிபெயர்தது போன்று அமைந்துள்ளது" என்று பாராட்டினாராம்.

மனதில் கவித்துவமும் மடியில் தமிழும் இருந்தால் கவிதையை மொழிபெயர்ப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.

அந்தப் பாடலாசிரியர் பெயர் "கண்ணதசன்"

5 comments:

பாரதசாரி said...
This comment has been removed by the author.
பாரதசாரி said...

மீண்டும் ஒரு நற்பதிவு.. நன்றி ஐயா!

கண்ணதாசனுக்கு இணை அவரே.மிக எளிமையான சொற்களை வைத்து அருமையான கவிதகள் படைப்பதில் விற்பன்னர். எனக்கு பிடித்த சில வரிகள்
"புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே"
"இளமை அழகின் இயற்கை வடிவம், இரவைப் பகலாய் அறியும் பருவம்"

இன்னும் எவ்வளவோ....

Unknown said...

தற்போதைய சூழலுக்கேற்ற பதிவு.

Anonymous said...

nandri ungal pathivigu,

eye donate awarnee pathi , u write somthig please

selva

மார்கண்டேயன் said...

உங்களின் பதிவு, இளமை விகடனையும் தொட்டிருக்கிறது,

http://youthful.vikatan.com/youth/NYouth/Blogs.asp

வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் பயணத்தை