சிறுகதை
ஐவரானோமா? (காஸ்யபன்)
வங்கி மானேஜர் அந்த ஃபாக்ஸ் செய்தியைப்பார்த்தார்.
பிராந்தீய அலுவலகத்திலிருந்து இன்ஸ்பெக்ஷன் குழு வருகிறது.தயார் நிலையில் இருக்கவும்.
புண்ணியமூர்த்தி பெருமூச்சு விட்டார் பிராந்தீய அலுவலகத்தின் ஆடிட் அண்ட் இன்ஸ்பெக்ஷ்னுக்கு செக்ரட்டரி லெவலில் எம்.எஸ். முத்துதான் பொறுப்பு.
எட்டு ஆண்டுகள் இருக்குமா.இல்லை பத்து ஆண்டுகள் இருக்கும்.ஆம். சாத்தூரில் செக்ஷன் இன் சார்ஜ் ஆக இருந்த பொது நடந்தது.
முனியாண்டி தான் வந்தான்.
"சாமி...சாமி"
வாசலில் குரல் கேட்டு புண்ணியமூர்த்தியின் மனைவி புஷ்பா தான் எட்டிப்பார்த்தாள்.
" இந்தாங்க உங்களை பாக்க உங்க ஆபீஸ் முனியாண்டி வந்திருக்கான்"
ஷேவ் செய்து கொண்டிருந்த புண்ணியமூர்த்தி எட்டிப்பார்த்தான்.
"என்ன முனியாண்டி?"
" சாமி! என் மவன் வந்திருக்கான் சாமி"
கச்சலான நெடிய உடம்பு.குழிவிழுந்த கண்கள்.கண்களில் மிரட்சியும்,நம்பிக்கையின்மையும் கொண்ட இளைஞன்.புண்ணிய மூர்த்தியை நோக்கி இரண்டு கைகளையும் காட்டி வணங்கினான்.
"மதுரையில படிக்கான் சாமி"
"என்னப்பா படிக்க"
'பி.ஏ"
" வில் யு கம்ப்ளிட் யுவர் ஸ்டடீஸ்?"
"நோ கொஸ்டின் ஆஃப் டிஸ்கண்டினியுவன்ஸ்"
" லிட்டெரெசரா""
"எஸ் ஸார்ர்"
புண்ணியமூர்த்தியின் முகம் பிரகாசமடைந்தது."முனியா.! ஏகிளாஸ் பையன்.நல்லாபடிக்கவை"
"சரி.. சாமி.நம்ம ஆபீஸ்ல"
" அவசரப்படாத முனியா! அவன் முடிக்கட்டும்.மே மாதம் ஆபீசர் பரீட்சை வருது.ஏன்பா! உம்பெரென்ன?"
"சோள்ளமுத்து"
" முனியா நான் கிளார்க்கா வந்தேன்.இப்பத்தான் செக்ஷன் இன் சார்ஜ்.இந்தாபாரு சோள்ளமுத்து! நிறைய புத்தகம் வந்திருக்கு பரீட்சைக்குள்ள அதெல்லாம் பாத்துக்க..முனியா உம்பையன் பரீட்சை நல்லா எழுதிட்டான்னா ஆபீசர்தான்.மளமளன்னு வந்திரலாம்.ஏன்? எனக்கே ஆபீசரா வரலாம்"
முனியாண்டி நெளிந்தான்.சொள்ளமுத்துவின் கண்களில் நாம்பிக்கை குறைந்த புன்சிரிப்பு.
"சாமி!" முனியாண்டி கால்களைபிடிக்கப் போனான்.
-----------------------------------------------------------------
ஃபாக்ஸ் செய்தியையே பார்த்துக்கொண்டிருந்த புண்ணியமூர்த்தி காலிங் பெல்லைத்தட்டினார்.அக்கவுண்டு அண்டு பெர்சனல் டிபார்ட்மெண்ட் இன் சார்ஜ் வந்த்தர்.
"மார்ச் 15ம் தேதி இன்ஸ்பெல்ஷன் டீம் வருது"
"எஸ் ஸார்"
"எல்லாம் ரெடியா இருக்கா?"
"பக்காவா இருக்கு"
"கீப்-இட்-அப்"
சொள்ளமுத்து புரபேஷனரி ஆபீசராக செர்ந்தான்.பம்பாயில்பொஸ்டிங்....மூன்று ஆண்டுகளில்வடமாநிலங்களில் சுற்றினான்.சி.ஐஓபி..பரீட்சையில் நல்ல ரங்கில் தேரியபோது ஹவுஸ் மாகசைனில் அவன் போட்டோ வந்திருந்தது.முனியாண்டியின் பின்னால் மிரட்சியும் நம்பிக்கையின்மைதெறிக்கும் குழிவிழுந்த கண்களைக் கொண்ட முகமல்ல அது.மகிழ்ச்சி கொப்பளிகஇன்னும் இன்னும் சாதிக்கத்துடிக்கும் புன்முறுவலோடு இருந்தான்.கீழே பெயரும் எம்.எஸ்.முத்து என்று இருந்தது.அவ்வப்பொது தீபாவளி,புத்தாண்டு வழ்த்துக்கள் வரும்.புண்ணியமூர்த்தி தமிழ்நாடு பூராவும் சுற்றினார்.இப்போதுதான் பிராஞ்சு இன் சார்ஜ்.
முத்து மறுநாள் காலை பாண்டியனில் வருகிறான்.காரை எடுத்துக்கோண்டு போய் அழைத்து வரவேண்டும்.நாமே பொவதா இல்லை அக்கவுண்டண்டை அனுப்புவதா? வருவது முத்து அல்ல. ரீஜினல் ஆபீஸ் அதிகரி. செக்ரட்டரி...சே..நம்ம ..கண்முன்னால..நாம கைகட்டி... போகலைன்னா..தப்பில்லை பாரு போகணும்....வேரு வழியில்லை.
ரயிலடியில் ஆஜனுபாகுவாக கம்பீரமாக வந்திறங்கியமுத்து , புண்ணீயமூர்த்தியை "அண்ணாச்சி! அண்ணாச்சி!" என்றுகட்டிப்பிடித்துக்கோண்டான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. புண்ணிய மூர்த்திக்கும் சந்தோஷம் தான்.பதவியில் தனக்கு மேல் இருந்தாலும் பழயதை மறக்காமல் முத்து இருக்கிறான்.அவருக்கு நிம்மதிதான். இருந்தாலும்.... இருவரும் காரில் ஏறி கெஸ்ட் ஹவுஸ் சென்றார்கள்.
முத்து அவன் குடும்பத்தைப் பற்றி கூறினான்.முனியாண்டி இறந்துவிட்டதைச் சொன்னான்புண்ணியமூர்த்தியின் குடும்பத்தைப்ப்ற்றி விசாரித்தான்.எல்லமே சந்தோஷ்மகத்தான் இருந்தது. இருந்தலும்....
மூன்று நாள் இன்ஸ்பெக்ஷன் முடிந்து முத்து மறுநாள் மதுரை-பம்பாய் பிளைட்டில் மதியம் செல்வதாக ஏற்பாடு.காலை சிற்றுண்டி முடிந்ததும் சொல்லலாமென்று நினத்தார்.அவர் மனதை அது நெருடிக் கொண்டே இருந்தது.எப்படியும் முத்துவிடம் சொல்ல வேண்டும்.சொல்லித்தான் ஆக வேண்டும்....ஆனால் தயக்கமிருந்தது. இருவரும் விமானநிலையம் செல்லும் வரை அவரால் சொல்லமுடியவில்ல.விமானத்திற்காக காத்திருக்கும் போது புண்ணிய மூர்த்தியும் முத்துவும் மட்டுமே இருந்தனர்.மெதுவாக ஆரம்பித்தார்.
" செக்ரட்டரி சார்"
"என்ன அண்ணாச்சி செக்ரட்டரிசர்ங்கரிங்க"
. "அதுதான் சரி"
"அண்ணாச்சி நான் எப்பவுமே உங்களுக்கு முத்துதான்"
" எனக்கு தெரிஞ்சு சொள்ளமுத்துதான்.ஏம்.ஏஸ் முத்து செக்ரட்டரிதான்"
"என்ன அண்ணாச்சி இப்பாடி பேசரிங்க"
"நான் உங்களை செக்கரட்டரின்னே கூப்பிடறென்
" "............"
"நீங்களும் என்னை ப்ரஞ்சு மானெஜர்னே கூப்பிடுங்க"
".........."
"அண்ணாச்சின்னு கூப்பிடாதீங்க"
முத்து புண்ணியமூர்த்தியின் கண்களைப் பார்க்க முன்றான். அதுகருப்புக்கண்ணாடியால் மூடப்பட்டிருந்த்து..
"ஏன் அப்படி சொல்றீங்க" முத்து கேட்டான்.
"எனக்கு பிடிக்கல" என்றார் புண்ணிய மூர்த்தி
"ராமன் குகனை" சகொரன்னு கூப்பிடலையா
' தசரத்னுக்கு நான்கு .உன்னையும் செர்த்து ஐவராவோம்னு ராமன் சொல்லுகிறானே"
"ஆமா"
"வால்மீகியும் கம்பரும் சொன்னதுதானே அது"
"ஆமா"
" நான் உங்களைக்குப்பிடக் கூடாதா?"
'"செக்ரட்டரிசார்! வால்மீகியும் கம்பனும் விபரமானவங்க"
"அதனலதான்...."
"அவசரப்படாதீங்க்" என்று பூண்ணிய மூர்த்தி குறுக்கிட்டார் " குகனை சகோதரனா ஒத்துக்கிட்டேன்னு சொன்னது யாரு?"
"ஏன் ராமன் தான்"
"ராமனால அப்படிச் சொல்லமுடியும். குகனால முடியாது.குகன் ராமனைச் சகோதரன் என்று அறிவிச்ச மாதிரி வால்மீகியோ கம்பனோ எழுதல"
"ஏன்?"
"ஏன்னா அயொத்தியில அன்னக்கே சாதிக்கலவரம் வந்திருக்கும்"
முத்துவின் இதயத்தின் ஓரத்தில் "மளுக்" என்று சத்தம்கெட்டது.
அயொத்தியிலிருந்து நெல்லை மாவட்டம் வரை எத்தனை தூரம், எத்தனை காலம். ஏன் மாற மறுக்கிறோம் .முத்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே பம்பாய் விமானம் தரை இற்ங்கியது. ' (1985 ம் ஆண்டு வாக்கில் நெல்ல கலவரத்தின் பின்னணியில் தினபூமியில் வந்தது)