Saturday, January 15, 2011

வியாபாரிகள் முதலளியான கதை

மதுரை மேல மாசி மேலக்கோபுரத்தெரு முட்டும் சதுக்கத்தைதியாகிகள் சதுக்கம் என்று சொல்லுவோம்.நகர் தொழிற்சங்க குழு நடத்தும் ஊர்வலங்கள் அங்கிருந்து தான் புறப்படும்.விலை உயர்வை எதிர்த்து ஊர்வலங்கள் நடந்துள்ளது.


1967ம் ஆண்டு நடந்த தெர்தலில் அண்ணாத்துரை அவர்கள் நாங்கள் வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்தார். அது நிறைவேறியிருந்தால் ரூபாய்க்கு கிட்டத்தட்ட 5லிருந்து 6கிலோ அரிசியாகும். ஆனால் ஒரு ரூபாய்க்கு ஒருபடி என்று ஆட்சியைப் பிடித்ததும் அறுவிக்கப்பட்டது.

சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே விலைவாசி ஒரு பிரச்சினை தான் ஊர்வலங்களில் கோஷம் எழுப்பி எங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறோம்.அப்பொதெலாம் மேல, வட்க்கு மாசி வீதிகளில் வீடுகள் தான் அதிகமிருக்கும்.இப்போதுபோல் வர்த்தக நிறுவனங்கள் கிடையாது.. மேல மாசிவீதி,பின்னர் வடக்குமாசி வீதி வந்து கிழக்கு மாசிவீதி திரும்பியதும் எங்களுக்கு "சாமி" பிடித்துவிடும்.

கழுத்து நரம்பு புடைக்க, பதுக்கல் காரர்களை தூக்கிலிடு,கள்ளமார்கட் காரர்களை கைது செய், விலயை குறை என்று கூவுவொம்.கீழ மாசிவீதியில் தான் பலசரக்குக்கடைகளும் கிட்டங்க்கிகளும் இருந்தன. இந்த நாடு சுபிட்சமாக வேண்டுமென்றால், இந்த கீழமாசி வியாபரிகளை அமுக்கினல் பொதும் என்று மனதார நம்பினோம்.எதுவும் மாறவில்ல.

நாங்கள் ஊர்வலத்தை நிறுத்தவில்லை.கோஷத்தை மாற்றினோம்."விலையைகுறை" என்பதற்கு பதிலாக "விலையைஏற்றாதே"என்று கோஷம் போட்டோம்.எதுவும் நடக்கவில்லை.விலை ஏறத்தான் செய்தது. நங்கள் ஊர்வலத்தை நிறுத்தவில்லை.கோஷத்தை மாற்றினோம்.விலையை எற்றிக்கோள்ளுங்கள் "மானங்காணியா" ஏத்தாதீர்கள்.கொஞ்சம் கட்டுப்படுத்தி ஏற்றுங்களென்று கூறி "விலை வாசியைக் கட்டுபடுத்து " என்று கோஷ மிட்டோம்.

மினு மாசனியிலிருந்து லால்களும்,ஷா களும் கூப்பாடு பொட்டனர். விலவாசி உயரத்தான் செய்யும்.உயரவேண்டும் அது நம் வளர்ச்சியின் அடையாளம்.வளரும் நாட்டிற்கு அவசியம்" என்று விளக்கினார்கள்.

தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் வேண்டும். அன்று நம் முதலாளி மார்களிடம் மூலதனமில்லை அரசாங்கம் தன் கஜானா விலிருந்து அவர்களுக்கு கொடுக்க முடியாது.ஆ கவே ஒரு தந்திரம் செய்தார்கள். இடுபோருள்,உழைப்பு, லாபம சேர்த்து அடக்கவிலை 5ரூ என்றால் அந்தப்பொருளை 8ரூ-10ரூ விற்றுக்கொள். மிகுதியை மூலதன்மாக்கிக் கொள்ளுங்கள் என்று அன்றய" மன் மோகன்" கள் யொசனை கூறினார்கள் .

வியாபரிகள் முதலாளியான கதை இது தான்.

13 comments:

'பரிவை' சே.குமார் said...

viyaparigal muthalaliyana kathai innum thodarnthu indru pana muthalaikalai allava irukkiraarka..

Unknown said...

இன்று முதலாளிகள் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியானதுதான் சீர்கேட்டின் உச்சகட்டம்.

Matangi Mawley said...

very true sir!
people born with a silver spoon in their mouth- what do the know of the woes of the "aam junta"?

hariharan said...

மிக முக்கிய பிரச்சனையே பொருளின் விலையை சந்தை தீர்மானிப்பது..

உற்பத்தி செய்த விவசாயிக்கு உரிய விலை கிடைக்கவில்லை, அவனால் விலையை நிர்ணயம் செய்யமுடியவில்லை. ஆனால் இந்த விவசாயமே பெரிய நிறுவனமாகிவிட்டால் மூலதனம் பெருகிவிட்டால் அவர்கல் வைக்கிறது தான் விலை.

இன்றைக்கும் OMC என்று சொல்லக்கூடிய ஆயில் மார்க்கெட்டிங்க் நிறுவனம் நஷ்டம் என்று ‘பூ’ சுற்றுகிறார்களே என்ன செய்வது. எல்லாரும் உற்பத்தி விலையை விட 15சதமான லாப்த்திரற்கு மேல் விற்கக்கூடாது என்று அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாதா???

ரிஷபன் said...

எவ்வளவு விலை வச்சாலும் வாங்கித்தான் ஆகணும் என்று மாற்றி விட்டார்கள். அதற்கு காரணம் ஆராயப் போனால் அது விலைவாசியை விட மோசமாய் இருக்கும்.

சிவகுமாரன் said...

பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே தான் போகிறது. வண்டிகள் குறைந்த பாடில்லையே. மாதத்திற்கு 400 ரூபாய் என் பெட்ரோல் பட்ஜெட். சென்ற வருடம் 8லிட்டர் இந்த வருடம் 6.5லிட்டர் ஆனது. அதற்குள் தான் ஓட்ட வேண்டியிருக்கிறது வண்டியை.

அப்பாதுரை said...

முதலில் இட்ட பின்னூட்டம் காணாமல் போய்விட்டதே? முதலாளித்துவ மோசடியா? நினைவிலிருந்து எழுதுகிறேன்.

இடுபொருள், உழைப்பு, லாபம், அடக்கவிலை - அடடா, மறந்து போன தமிழ்ச்சொற்கள். நினவூட்டியதற்கு நன்றி.

supply-demand (மன்னிக்கவும், தமிழ்ச்சொல் சட்டென்று தோன்றவில்லை) இவையே விலைவாசியின் அடிப்படைகள் என்றாலும், அவ்வப்போது வாய்ப்பைப் பொறுத்து பேராசையும் கலந்து விடும். ஆனால் எல்லா விலையேற்றத்தின் பின்னணியிலும் முதலைகள் இருப்பதாகச் சொல்வது விவரம் மறந்த வாதம்.

சற்று யோசிப்போம். அரிசி விலையேறியதைக் கண்டித்தோம்; பிறகு தக்காளி வெங்காயம் பருப்பு விலையேற்றத்தில் துடித்தோம்; இப்போது பெட்ரோல் விலையேற்றம் கண்டு கொதிக்கிறோம். எனக்கென்னவோ இது சாதாரண மனிதனின் வியத்தகு முன்னேற்றம் என்றே தோன்றுகிறது. ஒரு வேளை வயிற்றுப் பிரச்சினை தீர விலைவாசியைக் குறைக்கப் போராடியவர்கள், வாகன வயிற்றுப் பசி தீர இன்றைக்குக் கொடி பிடிக்கிறோமே, இது முன்னேற்றமில்லையென்றால் வேறெது முன்னேற்றம்?

அளவோடு வாழக்கற்றால், கற்றுக் கொடுத்தால், விலைவாசி வாலைக் குழைத்து அருகில் இருக்கும்.

கொடி பிடித்தோ சட்டம் போட்டோ விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாது. மரணம், வரி, விலைவாசி, கோவில் கும்பாபிஷேகம் - இவற்றைத் தடுக்கவே முடியாது.

ஒரு சிறு சோதனை. விலைவாசி உயர்வின் விளைவுகளைச் சமாளிக்க ஒரு காப்பீடு கிடைக்கிறது என்று வைப்போம். குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் விலைவாசி உயரும் பொழுது, காபீட்டிலிருந்து ஈடு கிடைக்கும் என்று வைப்போம். மக்கள் காப்பீட்டில் முதல் போடுவார்களா? தங்கம் வைரம் வீடு கார் நிலம் வாங்குவார்களே தவிர...

இனியவன் சொல்வதை ஏற்க முடிகிறது என்றாலும், அரசாங்கத்தையும் சட்டங்களையும் நிர்ணயிக்கும் முதலாளிகள் மிகக்குறைவு என்றே நினைக்கிறேன்.

பெட்ரோல் விலை உயர்ந்ததால் பத்து வாரம் செல்போன் உபயோகிக்காமல் இருக்க யாராவது கொடி பிடிக்கிறார்களா? இந்தியாவில் பத்து நாள் செல்போன் பயன்படுத்தாது கிடைக்கும் தொகையை, நூறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய பெட்ரோல் வாங்க
உதவித்தொகையாக மக்கள் தருவார்களா? அரசாங்கமே தேவையில்லை - ஒருவருக்கொருவர் செய்யும் உதவி. செய்வார்களா?

தேவைக்கதிகமாக விரும்புவதைப் போல, முதலாளித்துவம் அத்தனை கொடிய வியாதியல்ல என்று நினைக்கிறேன். எது அதிகமான தேவை என்று மறு கேள்வி கேட்கிறீர்களா? அதற்கு நீங்களே பதில் பதிவெழுதி விடுங்கள் சார்.

வியாபாரிகள் முதலாளிகளான 'கொடுமை'யைப் பொறுக்காத நாம் கோடிக்கணக்கான முதலாளிகள் தெருப்பிச்சைக்காரர்களான கதையை மறந்து விடுகிறோமே, ஏன்? :)

முதலாளித்துவம் மோசமானதென்றால், அன்பர்களே, உங்கள் வாழ்க்கை வசதியை மேம்படுத்தப் புதிதாய் என்ன 'முதலீடு' செய்தீர்கள் என்று அடுத்த முறை கண்ணாடியில் பார்க்கும் பொழுது கேட்பீர்களா? முதலாளிகள் நமக்குள்ளே இருக்கிறார்கள்.

அப்பாதுரை said...

ரிஷபனின் பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது. அத்திப்பழத்தை பிட்டுப்பார்க்கத் துடிக்கிறோமோ?

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! உங்கள் பின்னூ ட்டத்திற்கு முன்னூட்டமாக எந்த பிண்ணுட்டமும் வரவில்லயே! சரிபாருங்களேன்---காஸ்யபன்.

அழகிய நாட்கள் said...

தோழர் காஸ்யபன்!
1960 இல் நான் பிறந்த போது ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி விற்றதாம்.
1963 என் தங்கை பகவத் கீதை பிறந்த சமயம் ஒரு ரூபாய்க்கு முக்கால்படியாக சுருங்கிப்போனதாம். அப்பா அர்ஜுனன் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தார். என்றால்...
1967 இல் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்பது எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை. என்ன கணக்கோ என்னவோ ?
ஐ மு கூ 1 இல் ஒருமுறை பெட்ரோல் விலை உயர்வை இடது சாரிகள் நிறுத்த முடிந்தது.
மற்றொரு முறை ஏற்றிய பெட் ரோல் விலை உயர்வை குறைக்கவும் முடிந்தது. இன்றைக்கு அது முடியவில்லை.....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வியாபாரிகள் விலையைத் தீர்மானித்ததை விடக் கொடுமை வியாபாரிகள் மந்திரிகளைத் தீர்மானிக்கத் துவங்கியிருப்பது.

நம் அமைப்பிலும் விதிகளிலும் மாற்றம் கொண்டுவராமல் ஆதிகாலத்தைக் கட்டித் தொங்குவதுதான் ஆபத்தின் அடையாளம்.

பாரதசாரி said...

//
இந்தியாவில் பத்து நாள் செல்போன் பயன்படுத்தாது கிடைக்கும் தொகையை, நூறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய பெட்ரோல் வாங்க
உதவித்தொகையாக மக்கள் தருவார்களா? அரசாங்கமே தேவையில்லை - ஒருவருக்கொருவர் செய்யும் உதவி. செய்வார்களா?
//

அன்புள்ள அப்பாதுரை அவர்களே,
பத்து நிமிட வருவாயை அலைபேசி நிறுவன முதலாளிகள் தியாகம் செய்தாலே, ஆயிரம் விவசாயிகளின் தேவை பூர்த்தி அடையுமோ என்று எனக்கு தோன்றுகிறது.

அன்புடன் மலிக்கா said...

//எவ்வளவு விலை வச்சாலும் வாங்கித்தான் ஆகணும் என்று மாற்றி விட்டார்கள். அதற்கு காரணம் ஆராயப் போனால் அது விலைவாசியை விட மோசமாய் இருக்கும்//

உண்மைதான்