Monday, January 03, 2011

தாய்தான்

சிறு கதை


தாய்தான் (காஸ்யபன்)(இளம் கிரிகெட் வீரர் மஹேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியா தோற்றபோது அவர் அவமனப்ப்டுத்த்ப்பட்டார் கட்டிக்கொண்டிருந்த வீடு செதப்படுத்தப்பட்டது.தன்னந்தனியாக இருந்த. அவர் தாய்தந்தயர் அச்சுருத்தப்பட்டனர்.அவருடைய சகொதரி மிரட்டப்பட்டார். 2007ம் ஆண்டு .தென் ஆப்பிரிக்காவில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த இறுதிபோட்டியில் இந்தியா வென்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியது இனி கதையைப் படியுங்கள்)

காம்பவுண்ட் கதவு பூட்டியிருந்தது.கோபக்காரப் போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார்.

அவர்கள் வயதானதம்பதியர்.அவ்வப்பொது யாராவது வந்து கதவைத் தட்டினார்கள்."தேவை இல்லமல் அவர்களை ஏன் சிரமப்படுத்துகிறீகள்" என்ரு கூறி போலீஸ்காரர் அவர்களை அனுப்பிவிடுவார்.

அந்த அம்மாள் வெளியில் தலையைக்காட்டவில்லை.. ஜன்னல் கதவைக் கூட சாத்திவிட்டு உள்ளேதான் இருந்தார்.

மணி மூன்றாகிவிட்டது.

"சூடாக தேநீர் தரட்டுமா?" என்றார் அம்மையார்.

"சரி"

" கொரிக்க ஏதாவது? "

நம்கீனையும் பொரியையும் கலந்து அதில் எலிமிச்சைச்சாறை பிழிந்து ஒரு தட்டில் கோண்டுவந்தார். பெரியவர் அதனை ஸ்பூனால் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.

மகனின் கொடும்பாவியை எரித்த நினைவு தட்டியது தொலைக்காட்சியில்,பத்திரிகைகளில் பார்த்தபோது பயமாக இருந்தது புதிதாக .கட்டப்படும் வீட்டையே இடிக்க வந்தார்களே.....

அன்று அவர்கள் முகத்தில் எவ்வளவு கொடூரம்-எவ்வளவு ஆவேசம்.எதிரில் உள்ளது எதுவானாலும்-உள்ளதுயாரானாலும் அழித்துவிடும் கொடூரம்.வாசலில் கதவு தட்டும் ஒசை கேட்டது. மாப்பிளை தான் வந்தர்.

"மணி நான காகிவிட்டது.நீங்கள் தனியாக இருப்பீர்களேஎன்றுதான் வந்தேன்" என்றார் மாப்பிள்ளை குப்தா.

"ஜெயந்தி எப்படியிருக்கா?"

"உணர்ச்சிப்பிழம்பாக இருக்கா"

"ஏன்?"

"நீங்க தனியாக இருப்பதால்"

ஜெயந்தியும் குப்தாவும் ராஞ்சியில் இல்லை.எண்பது மைல் தள்ளி வெளியூரில் இருக்கிறார்கள்."நான் இங்கு குழந்தகளோடுஇருக்கிறேன்.நீங்கள் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் துணையாகப் போய் இருங்கள்.என்று என்னை அனுப்பிவைத்தாள்".குப்தா கைகால் கழுவிக்கொண்டு வந்தான்.மாமியார் கொடுத்த தேநீரை அருந்திக்கொண்டே தொலைக்காட்சிப்பெட்டியைப் போட்டான்.ஆரம்பமாகப் பொகிறது.

இந்தியா "டாஸ்" வென்று ஆட ஆரம்பித்தது.

முதல் பந்தை எதிர் கொண்டது உத்தப்பாதான்.சில கணங்கள் தாமதிக்க பந்து எறியப்பட மட்டையோடு பாய்ந்து தன்னையே வீசினார்மைதானமே அதிர்ந்தது.

குப்தாவின் மாமனாரும் மாமியாரும் நெஞ்சைப்பிடித்துக்க் கொண்டார்கள்.எதிரணி வீரர்கள் கட்டிப்பிடித்து மைதானத்திலேயே கொண்டாடினர்கள்.

பிரும்மாண்டமான திரையில் அவுட் இல்லை என்று வந்ததும் மீண்டும் கரகோஷம்.

மணி எட்டேமுக்கால்.வீட்டு வாசலில் கோஷம் போடுகிறார்கள்.தெரு க்களில்,வீதிகளில் கிராமங்களில்,நகரங்களில்,மும்பை,டில்லி, சென்னயில் கோண்டாட்டம்.இந்தியா வெற்றி பெற்றுவிட்டது.

குப்தா கதவத்திறந்தார்.தம்பதியர் இருவரும் வாசலுக்கு வந்தனர்

பெரியவர் குளமான கண்களைத்துடைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு கை காட்டினார்.

அம்மையார் வெகுநேரம் வரை விம்மிவிம்மி அழுதுகொண்டிருந்தார்." தோனிதான் ஜெயிச்சுட்டானே.ஏண் அழறே" என்றார் பெரியவர்.

"மாமா! அத்தை கண்ணில் வருவது ஆனந்தக்கண்ணீர்" என்றார் குப்தா.

"இல்லை!பாகிஸ்தான் காப்டன் ஷொயிப் மாலிக்கின் தயாரை நினைத்து அழுகிறேன்"என்றார் அந்த அம்மையார்.( 14-10-2007 வன்னக்கதிரில் பிரசுரமான சிறுகதை)

4 comments:

Unknown said...

தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் மானோபாவம் உள்ளவள் தான் தாய்.

மோகன்ஜி said...

இப்படி நினைக்க ஒரு தாயால் தான் முடியும்.அற்புதம் காஷ்யபன் சார். இரண்டு வாரங்களுக்கு முன் மும்பை,பூனா வந்திருந்தேன். பெண்கள் முன்னேற்றம் பற்றிய ஒரு கருத்தரங்குக்கு..வெளிநாட்டிலிருந்தும் வந்திருந்தார்கள். மூன்று நாள் கருத்தரங்கிற்குபின் எனக்குத் தோன்றியது இந்த எண்ணம் தான்... மொழியும்,மதமும்,நாடும் கடந்து தாய்மையின் கருத்து ஒன்றாகவே இருக்கிறது. எங்கும் தாய் ஒரே வார்ப்பு தான்.

சிவகுமாரன் said...

"அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் தன நோய் போல் ஆற்றாக்கடை"
என்று அய்யன் குறிப்பிடும் அந்த பண்பு தாய்மைக்கே உரியது. அப்படிப் பார்த்தால் தாயைத் தவிர மற்ற எல்லோரும் அறிவற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
எனக்கு 1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சேம் சைடு கோல் போட்ட கொலம்பியா வீரரை சுட்டுக் கொன்ற நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

Ashok D said...

ரசித்தேன் :)