Friday, January 07, 2011

எது நிரந்திர்மானது.......?

எது நிரந்தரமானது?


பகிஸ்தனில் சல்மான் தசீர் படுகொலை செய்யப்பட்டார்.அவர் ஒரு இஸ்லாமியர் அவரைக் கோன்றவன் இஸ்லாமியன்.ஆசியா பீவி என்ற பெண்ணுக்கு பாகிஸ்தான் அரசு மரணதண்டணை அளித்துள்ளது. அவர் ஒரு கிறிஸ்துவர் .சல்மான் அதனை எதிர்த்தார்.

ஒரு மதமோ அல்லது ஒரு கோட்பாடோ உருவாக வேண்டுமானால் அதனை உருவாக்க மனிதன் வேண்டுமே?மனிதனே இல்லாமல் மதமா? அப்படியானால் இத்துணை மதங்கள் .உருவக வேண்டாமே!

உண்மை வேறு விதமாக உள்ளது.

மனிதன் நிரந்தரமானவன்.மதம் என்பது அவனுக்கு ஏற்பட்ட விபத்து.

இயற்கைக்கும் தனக்கும் உள்ளதொடர்பை தேடிச்சென்றவன் கடவுள் என்ற கருத்தோடு முடித்துக் கொண்டான்.

கடவுளைத்தேடிச்சென்ற முனிவர்கள், தத்துவ ஞானிகள் மவுனமானார்கள்.அவர்கள் கடவுளைக்காணவில்லை.மனிதனையே கண்டார்கள்.

ராமகிருஷ்ணரும்,விவேகானந்தரும், வள்ளலாரும் இதனையேதான் நிலைநிறுத்தினார்கள்.

அப்படியானால் மதம் தேவையில்லையா?தேவையுள்ளவர்கள் வைத்துக்கொள்ளட்டும் அதற்காக . மற்ற மதத்தினர் மீது குரோதம் கொள்ள வேண்டாம்.எந்த ஒரு மதத்திற்கும் ஆதரவான பொக்கை அரசு கடைபிடிக்க வேண்டாம்.

அரசு விவகாரங்களில் மதம் தலையிடக் கூடாது. இதனையே- எந்த மதத்தோடும் சாராதிருக்கும் தன்மையையே- மதச்சார்பினம எனலாம்.இது என்னமோ இந்த பாரதீய ஜனதா கட்சி தோன்றியதனால் ஏற்பட்ட கொட்பாடு அல்ல. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒன்றாகும்.

கிறிஸ்து பிறந்ததும் அவருடைய சீடர்கள் அர்பணிப்பு உனர்வோடு ஐரோப்பா முழுவதும் சென்று பணியாற்றினார்கள்.நோயுற்றவர்கள்,வயொதிகர்கள்,குழந்தகள்,ஆதரவற்றவர்கள், ஆகியவர்களை காக்கும் பணிகளைசெய்தார்கள்.ரோமாபுரியில் இவர்கள் ஆற்றிய பணி மக்களைக் கவர்ந்தது.ஏற்கனவே அங்கிருந்த மதம் இதனைக் கண்டு பயந்தது.இந்த மதத்தை கொச்சையாக "பாகன்" என்று அழைபார்கள் அரசு மதமும் இதுவாகத்தான் இருந்தது.கிறிஸ்துவர்களை குறிப்பாக.இளைஞ்ர்களை பிடித்து மதவாதிகளின் தூண்டுதலால் சித்திரவதை செய்தார்கள்.

"கொலொசியம்" என்ற அரங்கில் கிறிஸ்தவர்களை இறக்கி ப்த்துநாள் பட்டினியோடு இருக்கும் சிங்கங்களை அவிழ்த்துவிடுவார்கள்.உங்கள் ஏசுபிரான் உங்களைக்காப்பாற்றட்டும் என்று ஏளனம் செய்வார்கள்.தங்களிடம் பரிவோடு இருக்கும் கிறிஸ்தவர்களை சித்திர்வதை செய்யப்படுவதைக் கண்ட ரோமாபுரி மக்கள் அவர்கள்பால் இர்க்கம் கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவமதம் அங்கு பரவியது.

ஒரு கட்டத்தில் கிறிஸ்துவமதம் அரசு ஆதரவைப் பெற்றது.நிலமை தலைகீழாக மாறியது. தங்களைச் சித்திரவதை செய்த "பாகன்"களை கிறிஸ்தவர்கள் கம்பங்களில் கட்டிவைத்து சுற்றிலும் வைக்கோல் போரை பரப்பி தீயிட்டு பொசுக்கினார்கள்.இப்படி மாறி மாறி குரோதமும் கொலைவெறியும்200 ஆண்டுகல் கிறிஸ்தவர்களாலும்,பாகன்களாலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.ரோமாபுரியில் உள்ள அறிஞர்கள், பெரியவர்கள்,தத்துவ ஞானிகள்,விஞானிகள் ஆகியோர் இந்த நிலையை மாற்ற விரும்பினார்கள்.அரசு மதத்திலும் மதம் அரசிலும் தலையிடக் கூடாது என்ற கருத்து உருவாகி மெல்ல மெல்ல வலுப்பெற்றது

. "Secularism " என்ற மதச்சார்பின்மைக் கோட்பாடு உருவாகியது.

இதற்கு நேர் எதிராக மதம் என்பது புனிதமானது என்ற Secred school of thought என்ற கொட்பாடும் எழுந்ததுஇறுதியில் அரசு என்பது மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும் என்ற . Secular school of thought வெற்றி பெற்றது

மதச்சார்பின்மை என்பது நாகரீகமான ஒரு சமூக ஒப்பந்தமாக உருப்பெற்றதுமதச்சார்பின்மை என்பது யாருடைய விருப்பத்தின் காரண்மாகவோ, பெருந்தன்மையின் காரண்மாகவோ வரவிலலை. மனிதகுலம் தன்னை நாகரீகப்படுத்திக்கொள்ள உருவான கோட்பாடாகும்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது,முஸ்லீம்கள் அதிகமக உள்ள பாகிஸ்தான் அரசு இஸ்லாமை அரசுமதமாக அறிவித்தது போல் இந்துக்கள் அதிகமாக உள்ள இந்தியாவில் இந்துமதம் அரசு மதமாக் அறிவிக்கப்படவேண்டும் என்ற கூக்குரல் எழுந்தது நமது அரசியல் நிர்ணயசபையில். விவாதிக்கப்பட்டு நமது முன்னோர்கள் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று மிகச்சரியாக அறிவித்தார்கள்

 அதனைக் காக்கும் கடமையைக் கோண்டவர்கள்.காப்பாற்றுவோம்.

8 comments:

சிவகுமாரன் said...

\\\நமது முன்னோர்கள் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று மிகச்சரியாக அறிவித்தார்கள்///
பெருமையாக இருக்கிறது. அதே சமயம் நிலைக்க வேண்டுமே என்று பயமாகவும் இருக்கிறது. இந்து மதத்தை கேவலமாக பேசிவிட்டு குல்லா அணிந்து கொண்டு கஞ்சி குடிக்கிறார்களே, இது எந்த வகையான மதச் சார்பின்மை என்று தெரியவில்லை.

hariharan said...

மதச்சார்பின்மை என்ற சொல் இங்கே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அரசு எந்தவொரு மதத்தின் பேரால் சடங்குகளையும் நம்பிக்கையையும் கொண்ரிடுக்கக்கூடாது. அண்ணா ஆட்சிபொறுப்பேற்ற சமயத்தில் தமிழகத்தில் எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்று அனுப்பியிருந்தார், அதில் அரசு அலுவலகத்தில் எந்த ஒரு மத/கட்வுளின் சின்னங்கள் இருக்ககூடாது, அரசு விழாக்களில் குறிப்பிட்ட மதசடங்குகளை பின்பற்றக்கூடாது என்பது.

சில அரசியல்வாதிகள் சிறுபான்மை ஓட்டுவங்கிக்காக சர்ச்க்கும் நோன்பு திறப்பதற்கும் செல்கிறார்கள். பெரும்பான்மை மக்களை ஓரணியில் திரட்டி ஓட்டுவாங்க பாஜக இந்து மத ஆட்சி வேண்டும் என்று சொல்கிறது.

ஒரு மதத்தின் ஆட்சி நடந்தால் நாடும் மக்களும் என்னவார்கள் என்பதற்கு பாகிஸ்தானொரு சாட்சியாக இருக்கிறது.

Pradeep said...

/*இயற்கைக்கும் தனக்கும் உள்ளதொடர்பை தேடிச்சென்றவன் கடவுள் என்ற கருத்தோடு முடித்துக் கொண்டான்.
*/
Chanceless words !!! Great!!!

kashyapan said...

தோழர் பிரதீப்! அடிக்கடி நீங்கள் பின்னுட்டம் எழுதுவதில்லை என்றாலும் நீங்கள் என் மதிப்புக்குரியவர். இடுகையின் மையக் கருத்தை "நச்' என்று பிடித்து விடுகிறீர்கள்.மனதுக்கு மிகவும் மகிழ்சி தருகிறது---காஸ்யபன்.

அப்பாதுரை said...

மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். மத சார்பில்லை என்று சொல்லிவிட்டு தேங்காய் உடைப்பதோ போப்புக்கு லைன் கட்டி நிற்பதோ அரசியல்தலைவர்களின் வழக்கம். உண்மையில் மதச்சார்பற்ற நாடு என்று எதுவுமே இல்லை - ரசியா, சைனா தவிர - என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

வியாதியை விட்டு அதன் அறிகுறியைக் குணப்படுத்தினால் என்ன பயன். தலைவலியின் காரணம் வேறு ஏதோ என்றால் தலைவலிக்கு மருந்து கொடுத்து என்ன பயன்? மதம் தலைவலி; மதம் வியாதியின் அறிகுறி.

சிவகுமாரன் said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அப்பாத்துரை. தலைவலி போக டைகர் பாமும் ஜண்டு பாமும் தான்
தடவிக்கொண்டு இருக்கிறோம் இதுநாள்வரையில்

'பரிவை' சே.குமார் said...

ஐயா,
எனது தளத்திர்கு வந்து பாராட்டியமைக்கு நன்றி.
இன்றுதான் உங்கள் தளம் அறிந்து வருகிறேன், இனி அடிக்கடி வருவேன்.
செம்மலரில் இருந்தீர்களா? நான் கல்லூரியில் படிக்கும் போது நானும் என் நண்பனும் எங்களது கல்வித்தந்தை பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் (செம்மலரில் நிறைய எழுதியிருக்கிறார்... உங்களுக்கு அவரை பரிச்சயம் உண்டா?) அவர்களின் பரிந்துரையின் பேரில் தாமரை, செம்மலர், சுபமங்களா ஆகிய இதழ்களின் ஏஜெண்டாக இருந்தோம்.

உங்கள் "எது நிரந்திர்மானது" பார்த்தேன். மிக்க நன்று.