Monday, February 28, 2011

"நான் பாடும் பாடல்".....

சிறு கதை


" நான் பாடும் பாடல்" (காஸ்யபன்)

அலுவலகத்தைவிட்டு நலரை மணிக்கே புறப்பட்டு பஸ் பிடித்து வீட்டிற்கு வரும்போது ஐந்தரை மணி ஆகி விட்டது.தெரு முனை திரும்பும்போதே என் மகள் வீட்டு வாசலில் அவளுக்குப்பிடித்தமான பட்டுப்பாவாடையில் நிற்பது தெரிந்தது.

எனக்குப் பொறிதட்டியது.இன்று சீக்கிரமாக வந்து சினிமாவுக்குப்போகலாம் என்று கூறியிருந்தேன்.இப்போழுதுதான் ஞாபகம் வருகிறது

. "ஒரு இளம் விதவைப்பெண்ணுக்கும் ஒரு எழுத்தாளனுக்கும் ஏற்படும் நேசத்தைப் பற்றிய கதையாம். மிக நல்ல படம் என்று எல்லாரும் சொன்னார்கள்.போகலாம் என்று என் மகளின் நச்சரிப்பு தாங்காமல் கூறியிருந்தது ஞாபகம் வந்த்தது.ஆபீஸ் சந்தடியில் அத்துணையும் மறந்து விட்டது.

வீட்டில் நுழைந்ததும்தான் புரிந்தது என் குடும்பம் மட்டுமல்ல என் நண்பரின் குடும்பமும கிளம்பத் தயாராக இருந்தது.உள்ளே சென்று உடைகளக் களைந்து கைலியை உடுத்திக் கோண்டேன்.

மெதுவாக என் மகள் வந்தாள்.அவள் பின்னால் நிழலாடுவது தெரிந்தது.

"என்னப்பா! உட்ம்பு சரி இல்லயா? என்மகள் கேட்டாள்."முகம் ஒரு மாதிரி இருக்கு?"

" போண்டாடியையும் பொண்ணையும் வெளில கூட்டிண்டு போறதுன்னாலே முகம் கரிபிடிச்ச வெங்கலப் பானையாயிடும்டீ! உங்கப்பாவுக்கு!" என்றாள் வசந்தா என் மனைவி.ஆசையோடு படிக்கக் கொண்டுவந்த "கந்தர்வனின்" சிறுகதைத் தொகுப்பு கட்டிலில் இருந்தது.அதப் பார்த்தேன்.வஸந்தாவின் முக த்தையும் பார்த்தேன். பத்தாவது நிமிடம் குளித்து உடைமாற்றி "சினிமா" செல்ல நான் ரெடி..

கொல்லைப்புற கதவை பூட்டியாகிவிட்டதா என்று பார்க்கச் சென்றேன்.என் மனைவி அவசரமாக் தயரித்த காப்பியை நீட்ட்னாள்.அவள் முகத்தில் தெரிவது என்ன? பாசமா,பரிவா,வெற்றிக்களீப்பா இல்லை ஒரு சாதரணபெண்ணின் யதர்த்தமா?

டிக்கட் கிடைத்து பதிமூன்று டிக்கட் கிடைத்து படம் பார்க்க ஆரம்பித்தோம்.திருமணமான உடனேயே கணவனை இழந்தபெண். அவளுக்கு மற்றவர் காட்டும் பரிவு,ஆதரவு எல்லாமே நன்றாக இருந்தது. அவளுக்குப் பரிச்சயமாகும் எழுத்தாளன்,அவனோடு அவள் பழகும் பாங்கு,அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் இவை அத்துணயுமே அவர்கள் இருவரின் கள்ளமற்ற அன்பை முன்நிறுத்தியது. என் இதயத்தின் ஒரு மூலையில் இவர்கள் இணந்து வாழ்க்கை நடத்துவார்கள்-அப்படித்தான் நடக்கும்- நடக்கவேண்டும் என்று ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்த எழுத்தாளன் அவளிடம் அதனைச் சொல்லியே விடுகிறான்.ஆனால் அவள் மறுத்து விடுகிறாள்.

படம் விட்டு வீடு திரும்பும்போது மனம் கனத்து இருந்தது.நான் என்நண்பரின் குடும்பம் என்மகள் மனவி எல்லோரும் நடந்து வந்துகொண்டிருந்தோம்.படத்தை பற்றீ,சிவகுமரின் நடிப்பு என்று பெசிக்கொண்டே வந்த்தார்கள்.

"என்ன ஹன்ஸா! அப்பா பெசாமலேயே வரார்?" என்று நண்பரின் மனைவி என்னைப் பெச்சுக்கு இழுத்தார்.

"உங்களுக்கு இந்தப்படத்தின் முடிவைப் பற்றி என்ன தோன்றுகிறது? என்று கேட்டேன்.

"அதுல என்ன! என்னதான் இருந்தாலும் தொட்டுதாலிகட்டி அறுத்தாச்சு!அப்புறம் என்ன வேண்டியிருக்கு!அதுக்காக அவங்கூட கலயாணம்பண்ணிக்க முடியுமா?"என்றார் என் நண்பனைன் மணவி.

என் கையில் "சுரீர்" என்று வலித்தது.என் மனைவிதான் கையில் கிள்ளியிருக்கிறாள்.

வீட்டிற்குள் சென்றதும் அவளிடம் கேட்டென் " ஏன் கயைக் கிள்ளினாய்?

"கிள்ளாம என்ன பண்றது! சினிமா கொட்டகைக்குள்ள இருக்கும் போது என்ன சொன்னா தெரியுமா?

"என்ன சொன்னா?

. " இம்பிட்டுதூரம் பழகியாச்சு!ஊர் பூரா தெரியும்.எல்லருக்கும் சம்மதம்.அப்புறம் என்ன வேண்டியிருக்கு? அவங்கூட வாழவேண்டியதுதான? இந்தியப்பெண்ணாம்.-கண்ணகியாம்...நு பொரிந்து தள்ளீனா--இப்ப மாத்தியடிகிறா..."

எனக்கு பிரமிப்பா இருந்தது.ஏன் இப்படி மாறணும்.கொட்டகைக் குள்ள இருட்டாயிருக்கு--அவமட்டும்தான்--அவ்ளுக்கு அவ ஒரு பெண் என்ற முறையில் தனக்கு உள்ளே உள்ள மன உணர்வை உளைச்சளை வெளியிட முடிந்தது.படம் முடிந்து "லைட்" போட்டதும் உலகம் தெரிகிறது.அருகிலிருக்கும் கண்வர்,மாமியார்,நாத்தனார் எல்லாரும் தெரிகிறார்கள்.பெச்சு மாறுகிறது.

" நீ என்ன நினைக்கிறே?"என் மனைவியிடம்கேட்டேன்.

"நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. பெசாம் அவா ரெண்டுபெரையும் செத்துவச்சுட வேண்டியது தானே!விதவைனா அவளுக்கும் பந்தம்,பாசம்,ஆசை, நேசம் எல்லாம் கிடையாதா?"

. என் இதயத்தின் ஒரு ஓரத்தில் "மளுக்" என்று ஒரு சத்தம்கேட்டது.மன்ம் கல்லக இருகியிருந்தது.

"சாப்பிட வாங்கோ! காலாகாலத்தில சாப்பாட்டுக்கடையை முடிச்சுட்டு படுக்கப் பொகணும்"

"எனக்கு ஒரு மண்ணூம் வேண்டாம்"

"இண்டர்வல்ல என்னத்தையாவது திண்ணுருப்பார்டி உங்கப்பா"

வீட்டு வெளையை முடித்துவிட்டு கட்டிலில் படுத்தாள்."லைட்" டை அணைத்துவிட்டு படுத்தேன்..தூக்கம் வரவில்லை.வெகு நேரம் மனம் சமநிலைபட மறுத்தது.

பிரிட்ஜை திறந்து குளிர்ந்த தண்ணீரைக் குடித்தேன்

கட்டிலை நெருங்கினேன்.இரவு விளக்கு வெளிச்சத்தில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள் வாய் லேசாகத் திறந் திருந்தது..ஆழ்ந்த தூக்கம். மெலிதாக குறட்டை வந்து கொண்டிருந்தது.

முகத்தைப் பார்த்தேன்.

"நான் இறந்தால் இவள் வேறு மாப்பிள்ளை தேடிக்கொள்வாளோ"

பிறகு தூக்கமே வரவில்லை.



(1987ம் ஆண்டு "செம்மலர்"இதழில் பிரசுரமான கதை)

Sunday, February 27, 2011

மொழி என்றால் என்ன?.....

மொழி என்றாலென்ன?....


கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்று கூறும் போது நம் இதயத்தில் பரவசமுண்டாகிறது.

மனித குலம் பேச ஆரம்பித்ததே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் என்று மனிதவியலார் கூறுகின்றனர்.

கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன் மனிதன் தோன்றியிருக்க முடியாது.மனிதனே தோன்றாதபோது மொழி ஏது? ஆனாலும் தமிழ் மொழி மூத்த மொழி என்று கூறும் சிறப்பு வாக்கியம் நம்மை மகிழ்ச்சியடையச்செய்வதும் உண்மை.

இலக்கியம் என்பது தனிமனித அனுபவத்தை சக மனிதர்களின் அனுபவமாக மாற்ற உதவுகிறது.இந்த அனுபவப்பகிர்வு என்பதற்கு அடிப்படை மொழி.மொழியின்றி இலக்கியம் இல்லை. மனிதன் தன் தகவல் தொடர்புக்கு கொண்டதுதான் பேச்சு மொழி (verbal language).தகவலை மொழியால் மட்டும் பரிமாறிகொள்ள முடியாத போது, அதற்கு மாற்றாக அல்லாமல், அனுசரணையாக வந்ததுதான் ஒவிய மொழி(language of Drawing) ஒவியம் கூட ஒவியனின் திறமை திறமையின்மையைப் பொறுத்து தகவல்களை கூடுதலாகவோ குறைவாகவோ வெளிப்படுத்தும். இந்த இடத்தை இட்டு நிரப்ப வந்ததுதான் புகைப்பட மொழி.(language of Photography) இதிலும் கூட குறை உண்டு. இதில் சலனம் இருப்பதில்லை.தான் பார்த்ததை பார்த்தபடியே தன் சக மனிதனுக்கு தெரியப்படுத்த மனிதன் விரும்பினான்.அதனையும் தனதாக்கிக் கொண்டான்.அப்போது கிடைத்தது தான் திரைப்படம்(language of Cinematography) இவை தகவல் தொடர்பை பரட்சிகரமாக்கி உள்ளன.

இருந்தாலும் மொழி என்றாலென்ன? என்ற கெள்விக்கு இவைவிடையாவதில்லை.நம் வீட்டில் குழந்தை ஒசையை எழுப்பி விளையடுகிறது .அர்த்தமற்ற அந்த மழலை ஓசை நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. வெளியே கொண்டு செல்கிறோம்.ஓசையை எழுப்பி விளையாடுகிறது. அது ஏதோ சொல்வது போலவும்,அதர்கு அர்த்தமிருப்பது போலவும் எதிர்ப்படும் நண்பரிடத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறோம். ரயிலைக் காட்டுகிறோம்.பிரும்மாண்டமான ஒசையோடு செல்லும் ரயிலை முதலில் பரவசத்தோடும் பின்னர் அதிர்வோடும், பயத்தோடும் குழந்தை பார்க்கிறது. "ஐ..ரயில்..ரயில்" என்று நாம் உச்சரித்தாலும் குழந்தை ஓசையை மட்டுமே எழுப்புகிறது. மறுபடியும் பார்த்தாலும் அது பாட்டிற்கு ஓசையை எழுப்புகிறது.ரயில் என்பது பற்றிய அறிவு நிலையை எட்டிவிட்டதாக நம் நினைக்கிறோம்.அதற்கு அந்த நிலை உருவாகிவிட்டதா என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.இதுவே பெசும் திறன் கொண்ட இரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தையாக இருந்தால் என்ன செய்யும். ரயில் என்று நாம் சொன்னவுடன் அதுவும் ரயில் என்று சொல்லும். ரயிலை எங்கு பார்த்தாலும் ரயில் என்று கத்தும்.அதாவது ரயில் என்ற அறிவு நிலை அதற்கு ஏற்பட்டுள்ளதை அடையாளப்படுத்தும்.

மொழி என்பது மனிதனின் அறிவு நிலைப்பட்டுள்ளதை அடையாளப் படுத்துகிறது. அதே போன்று அறிவு நிலையின் மூலம் மொழியும் அடையாளப்படுகிறது.

மனிதன் அவன் வாழும் பகுதியின் புவியியல்,வானிலை ஆகியவை அவன் வாழ்க்கைமுறையை நிர்ணயிக்கிறது.அதன்படி அவன் தன்னுடைய பழக்கவழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றை நிர்ணயித்துக்கோள்கிறான்.மொழியும் இதே தளத்தில் அவனால் கைக்கொள்ளப்படுகிறது.

எது எப்படியாயினும் அடிப்படையில் மொழி என்பது மனிதனின் அறிவு நிலைபட்டிருப்பதின் அடையாளம்தான்.அவனுடைய உணர்வு நிலையின், சிந்தனையின் மூலாதாரம் மொழியும் தெளிவான பேச்சுமாகும். ,

Friday, February 25, 2011

வெளி (SPACE) என்றால் என்ன?

" வெளி" (SPACE) என்றால் என்ன?........


நமது இந்தியத் தத்துவ ஞானிகளில் ஒரு பகுதியினர் இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்று கருதுகிறார்கள்.

நிலம,நீர் ,நெருப்பு,காற்று, வெளி,(SPACE) என்ற ஐந்தும் சேர்வதால் பொருள்கள் உருவாகின்றன என்றும் கூறுகின்றனர். இந்தப் பஞ்ச பூதங்களைப்பற்றியும் அவை எப்படி உலக ஆக்கத்தில் பங்கெடுத்துக்கொள்கின்றன என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார்கள்.

போருள்கள் பஞ்ச பூதங்களால் ஆனது என்றால் மனிதனும் அப்படித்தானா? ஆம் . காற்றும் ஒரு பொருளா? அவை எப்படி உடலை உருவாக்க முடியும்?இறந்த பிறகு மனித உடல் என்னாகிறது? அதிலிருந்து நீர் வடிந்து வெளியேருகிறது உடலின் வெப்பம் போய் குளிர்ந்து விடுகிறது.எரித்தாலும், புதைத்தாலும் உடலின் சதையும் எலும்பும் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.இழையும் மூச்சுக்காற்றும் நின்று விடுகிறது.நிலம், நீர் ,நெருப்பு,காற்று உடலிலிருந்து வேளியேறியதாலேயே அந்த உடல் உயிரற்றுப்போகிறது. அப்படியானால் அது உயிரோடு இருப்பதற்கு இந்த நான்கும் இருந்ததுதான் காரணம் என்றாகிறது.

ஐந்தாவதாக வெளி அல்லதுஇடம் என்பது எப்படி ஒரு பொருளை உருவாக்கமுடியும் என்ற முக்கியமான கேள்வியும் எழத்தான் செய்யும்.இதற்கு தர்க்கரீதியாக ஒரு அருமையான விளக்கத்தை தருகிறார்கள் நமது முன்னோர்கள்.

ஒரு அடி நீளமும் ஒரு அடி அகலமும், ஒரு அடி உயமும் கொண்ட ஒரு கலத்தை எடுத்துக் கோள்வோம்.அதில் நீர் வார்த்தால் அது ஒரு கன அடி நீராகிறது.அதற்கு மேல் ஒரு சொட்டு நீரையும் அது ஏற்றுக்கொள்வதில்லை.அப்படி நீரை வார்த்தாலும் அந்த நீர் வழிந்து விடுகிறது.அந்தக் கலத்தின் கொள்ளளவு எவ்வளவோ அவ்வளவுதான் அதனால் கொள்ளமுடியும்.அதேபோல் ஆறு அடி நீளமும் மூன்றடி அகல உயரமும் கொண்ட உடல் இந்தப் பூமியில் இருக்க இடம் அல்லது வேளி(SPACE) ஒன்று இருந்தால் தானே அது இருக்கமுடியும்.நிலம்,நீர்,நெருப்பு,காற்று ஆகியவற்றால் உருவான பொருள் இருக்க அதனை வைக்க ஒரு இடம் வெளி(SPACE) வேண்டுமே! ஆக வெளி (SPACE) என்ற ஒன்று இல்லாமல் பொருள் இருக்க முடியாதே! வெளி(SPACE)என்பதற்கு குணங்கள் உண்டுஅவை அதன் நீளம்,அகலம் உயரம் என்பவையாகும். பொருள்கல் .முன்னும் பின்னும் உயரத்திலும் நிலை கொண்டிருக்கின்றன.

நாம் எந்த திசைவழியில் அசைந்து செல்கிறோம் என்பது பிரச்சினை இல்லை.நமது ஆரம்ப நிலையிலிருந்து எவ்வளவு தூரம் பொகீறோம் என்பதும் பிர்ச்சினை இல்லை. எல்லை எதுவும் இல்லை. அதற்கு அப்பால் நாம் செல்வத்ற்குமில்லை.வெளி.(SPACE) எல்லையற்றது மட்டுமல்ல. அனந்தமானதும் கூட.

நாம் வாழும் அண்டம் எவ்வளவு பிரும்மாண்டமானது என்பதை உணர நமது பால்மண்டலம் நட்சத்திர கூட்டமைப்பு, சூரியன் ஆகியவற்றை அடக்கிய அந்த வெளியை(SPACE) கற்பணை செய்து தான் உணர முடியும்.

இந்த பிரும்மாண்டம் கூட இதனைவிட பிரும்மாண்டமன வெளி (SPACE)யின் ஒரு அங்கம்தான் என்கிறது விஞ்ஞானம். இந்த வெளி(SPACE) க்குள் விஞ்ஞானம் நுழந்து விட்டது.ஊடுருவிக் கொண்டிருக்கிறது.வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்யும் ஒளியானது,ஆயிரம் கோடி ஆண்டு களில் எவ்வளவு தூரம் சென்றிருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.இங்கு தத்துவமும் விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று கவர்ந்து,பின்னிப்பிணந்து மனித குலத்தை முன்னேற்ற வருகிறது என்பதுதான் மிக முக்கியமானதாகும்.

பாண்டியன் விரவு வண்டியில் முன்பதிவு செய்து இடம் பிடிக்கிறோம்.சிலசமயம் இடம் இல்லாமல் போய்விடலாம்.அனால் இந்த அண்டம் என்பது அப்படி அல்ல.அது மேலும் மேலும் தன்னை விரிவு படுத்திக்கொண்டே இருக்கிறது.

மனிதன் தோன்றுவதற்கு முன்பே,அவனிடத்தில் கருத்துருவாக்கங்கள் உருவாவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பூமி இருந்திருக்கிறது.இது வெளி(SPACE)யில் அண்டத்தில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து நிலை கொண்டிருக்கிறது.

இவற்றை பற்றி நினைத்தால் திகைப்பும் அதிர்வும் ஏற்படுகிறது என்பது தான் உண்மையாகும்

Monday, February 14, 2011

கபில முனிவர் கூறியது என்ன?........

கபில முனிவர் கூறியது என்ன?


சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாகக் கருதப்படுபவர் கபில முனிவர்.இந்தியத் தத்துவ ஞானிகளில் ஒருவரான அவரை மேலை நாட்டினரும் அறிந்திருந்தனர்.அவருடைய அறிவியல் ரீதியான கருத்துக்களை மேலெடுத்துச்சென்றனர்.

நம்மிடையே விஞ்ஞானி, மெய்ஞ்ஞானி என்று பிரித்துப்பார்க்கும் தன்மை பிற்காலத்தில் தோன்றியது. தத்துவ ஞானம் என்றால் என்ன?

இயற்பியல்,வானியல்,தாவர இயல் என்று பல்வேறு துறைகளுக்கும் பல்வேறு பிரச்சினைகளும்,கேள்விகளும் உண்டு.அவற்றை முறையாக ஆய்ந்து விடைகாண வேண்டும்.மின் காந்த அலைகளிலிருந்து ஒலி,ஒளி என்று ஒவ்வோரு துறைக்குமான உண்மைகளைக் கண்டறிந்து அதற்கான விதிகளைச் சொல்பவர்கள் விஞ்ஞானிகள்

இயற்கை, சமூக வாழ்க்கை,சிந்தனை,மற்றும் இயற்பியல் வானியல் என்று ஒட்டுமொத்தமான எல்லாவற்றுக்குமான, பொதுவான பிரச்சினைகள்,கேள்விகள் உண்டு. இவை அத்தனையையும் உள்ளடக்கிய நிலையில் விடைகாண முற்படுபவர்கள் தத்துவ ஞானிகள்.கபிலரும் அப்படிப் பட்டவர்தான்.

பொருள்கள் உருவானது எப்படி? என்ற கேள்வியை எழுப்பி விடை காண முற்பட்டார் கபிலர்.( விஞ்ஞானிகள் பொருளை தற்பொது பருப்பொருள் என்ரு கூறுகிறார்கள்) பொருள்கள் இருந்தால் தானே இயற்பியல்,வானியல் என்று பல்வேறு துறகள் பற்றி பகுப்பாய்ந்து அறிய முடியும்.இறுதியில் கபிலர்கண்ட முடிவு சகல துறைகளுக்கும் பொதுவான விதியாகக் கொள்ளப்பட்டது.

"நிரந்தரமானது எதுவும் இல்லை. எந்த ஒரு பொருளும் வெற்றிடத்திலிருந்து தோன்றுவதில்லை.மற்ற பொருளிலிருந்து தான் தோன்றுகிறது.அதாவது அழிந்துவிட்ட மற்ற பொருள்களிலிருந்து தோன்றுகிறது.அழிகின்ற பொருள்கள் ஒன்றுமில்லாமல் பொய்விடுவதில்லை. புதிய பொருள்கள் தோன்றுவதற்கான ஆதாரப் பொருள்களாக அவை அமைகின்றன. எதிலிருந்து புதிய பொருள்கள் தொன்றுகின்றனவோ அவை எப்போதும் இருந்து கோண்டுதான் இருக்கிறது. எனவே படைக்கப்படமுடியாத, அழிக்கப்படமுடியாத பொருள்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது" என்று கபிலர் கூறினார்

கபிலரை பொலவே பண்டய அறிஞர்களும் முடிவுக்கு வந்தனர்.கபிலர் காலத்தில் வாழ்ந்ததாகக் க்ருதப்படும் கிரேக்க அறிஞரான தாலஸ் மூலப்பொருள் எது என்றுதேடி அலைந்தார். இவர் இந்த மூலப்பொருளை தன் கண்முன் இருக்கும்பொருள்களிலேயே தேடினார்.

தண்ணீர் அல்லது ஈரம் தான் மூலப்பொருள் என்று அறிவித்தார். அனாக்கிமெனஸ் என்ற கிரேக்க அறிஞர் மூலப் பொருள் காற்று என்றார்.ஹெரக்கிளிடஸ் நெருப்பு என்றார். எம்பேடக்ளிஸ் எல்லாவற்றிர்க்கும் மூலம் காற்று,தண்ணிர்,நெருப்பு,மண் என்றார். இதற்குப்பின்னால் வந்த டெமாக்கிரிடஸ் கண்ணால் காணவோ தொட்டறியவோ முடியாத சிறிய வஸ்துக்களான அணுக்கள் என்ற நிரந்திரமாக அழிக்க முடியாத மாற்ற முடியாததிலிருந்து தோன்றியதுதான் பொருள் என்றார்.( ,ATOM என்ற கிரேக்க சொல்லுக்கு பிரிக்க முடியாத என்பது பொருளாகும்)

மின் சக்திக்கும் காந்த விசைக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டது.மின்விசை இயங்கியல் (electro dynamics) உருவானது அணு என்பது மிங்காந்தப்புலன்கள்,மின் ஏற்றங்கள்,மின் அலைகள் என்பது தான் என்றால் அது பொருள் என்ற ஒன்றாக முடியுமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

ஒரு கிராம் எடையில் பத்தாயிரம் கோடியில் ஒரு பகுதி நீறை கொண்டு அதே சமயம் ஒளியின் வேகத்தில் இயங்குகிற துகள்களை ஆய்வு செய்யும் பொது அதுவே ஒரு அண்டமாக சிற்றண்டமாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள்.

இதனை நாம் உணர முடியுமா?உணர முடியாவிட்டால் அதனை பொருள் என்று எப்படிக்கூறமுடியும்? என்றும்கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவற்றைப் பற்றி இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இயற்பியலின் ஒரு கிளையாக "குவாண்டம்" தத்துவத்தை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

எதுவும் நிரந்தரமில்லை.வேற்றிடத்திலிருந்து எதுவும் உருவாவதில்லை என்கிறார் கபிலர்.

விஞ்ஞானிகள்" குவாண்டம்"தத்துவத்தில் பொருளற்ற பொருளைப் பற்றிய விஞ்ஞானத்தில் வந்து நீற்கிண்றனர்.

Sunday, February 13, 2011

உயிர் என்றால் என்ன?.....

உயிர் என்றால் என்ன?


இந்திய தத்துவ தரிசனங்களில் "உயிர் என்றால் என்ன?" என்ற கெள்வி எழுப்பப்பட்டு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த விடைகளைபற்றி புரிந்து கொள்வதற்கு முன்பு வேறு சில விஷயங்களை பரிச்சயம் செய்து கொள்வது நலம்

இந்திய தத்துவ தரிசனம் எனும்போது அது இந்து மதம் பற்றியது மட்டுமல்லாமல் மனிதகுலம் முழுமைக்குமான விசாரணைகளில் நமது முன்னோர்கள் ஆற்றிய பங்கினைச் சொல்வதாகும் நமது மரபில் இறைவனை ஏற்றுக் கொண்டவர்கள் உண்டு.இறவனை ஏற்காமல் வேதங்களை ஏற்றுக்கொண்டவர்கள் உண்டு.வேதங்களையும் இறைவனையும் ஏற்காதவர்கள் உண்டு

. அறிவினால் விசாரணையில் ஈடுபட்டவர்கள் உண்டு.எந்தப் போருளும் நிரந்தரமானதல்ல என்று கருதியவர்களும் உண்டு.

சேலை என்பது ஒரு பொருள்.அது நூலால் ஆனது.சேலையிலிருந்து நூல் பிரிந்தால் சேலை என்ற பொருள் அழி ந்துவிடும்.

நூல் பஞ்சால் ஆனது.நூலிலிருந்து பஞ்சு பிரிக்கப்பட்டால்,நூலழிந்துவிடும். பஞ்சு மெல்லிய இழைநார்களை.கொண்டது.நார்கள் பிரிக்கப்பட்டால் பஞ்சு இல்லை.

பொருள்கள் அங்கங்கள் அவையவங்களால் ஆனது.எவை அங்கங்களால் ஆனதோ அவை அழிந்துவிடும். அழியாத பொருள் உண்டா?

உண்டு. அதனை அணு என்றும் பரமாணு என்றும் அழைத்தார்கள். அணு பிரிக்க முடியாதது என்று கண்டார்கள்(!). அன்றய அறிவியல் அவர்களை அந்த நிலையில் நிறுத்தியது.

இப்படி அறிவியல் ரீதியாக சிந்தித்தவர்களில் ஒருவர்தான் யக்ஞவல்கியர் என்பவராவார்.இவர் இறைவன் இல்லை என்று வாதிட்டவர்.உயிரூள்ள பொருளுக்கும் உயிரற்ற பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?உயிர் என்றால் என்ன? என்ற கேள்விகளை எழுப்பி விடை சொன்னார்.

பொருள்கள் ஒரு குறிப்பிட்ட ரசாயனச்சேர்க்கையின் மூலம் தனக்கு வெளியே இருந்து வேறு பொருளை ஈர்த்துக்கொள்வதும் தன்னைப்புதுப்பித்துக்கொண்டு தேவையற்றவற்றை .வேளியேற்றுவதும் தனே உயிருள்ள பொறுளின் குணம்.

"அல்புமினல்" உடம்பானது,சுற்றுப்புறத்திலிருந்து சில பொருட்களை உட்கிரகித்தும்,இதற்குமுன் உட்கிரகித்த சில பொருட்களை வெளித்த்ள்ளியும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது அதாவது,உட்கொள்வதின் மூலமாகவும்.வெளித்த்ள்ளுவதின் மூலமாகவும் புதுப்பித்துக் கோள்கிறது.உயிர்போருளுக்கும், அதன் சுற்றுச்சூழ்நிலைக்கும் இடையில் தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்களே உயிர்.இது நின்று விட்டால் உயிர் நின்று விடுகிறது.பொருளின் இந்த குணம்தான் உயிர் என்றாகிறது.

இதனை யக்ஞ்யவல்கியர் தன்னுடைய ஸ்மிருதியில் குறிபிடுகிறார்.

அன்னம் நிந்தயேத்: ( உணவை வெறுக்காதே)

தத் வ்ரதம்: ( அது அளவுக்கு உட்பட்டது)

பிறாணோவா அன்னம்: ( உணவு என்பதே உயிர்)

சரீரம் அன்னதாம்: (உணவில்லாமல் உடல் இல்லை)

விஞ்ஞானப் பார்வை என்பது நமது அரசியல் சட்டத்தில் மட்டும்பொறிக்கப்படவில்லை. நம் தத்துவ தரிசனத்திலும் உள்ளது

Saturday, February 12, 2011

பிறப்பதில்லை.....


__சிறு கதை__


பிறப்பதில்லை (காஸ்யபn)



"அம்மா....நான் சுந்த்ர்....கிந்தர் யாரையும் பார்க்க விரும்பல"

"அந்த டிவி சனியனை அணைடீ"என்று அடுக்களையிலிருந்து லட்சுமி கத்தினாள்.

"டிவி,இல்லமா! நாந்தான் சொன்னேன்" என்ரு கூறிகோண்டே காபி டம்ளரோடு உள்ளே நூழைந்தாள் லட்சுமியின் மகள் சுந்தரி

சுந்தரி பங்களுரில் உள்ள விஞான கழகத்தில் பட்டம் பெற்றவள்...."உலோகங்களின் மூலகங்கள்" பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவள்.ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் விசிட்டிங் புரபசராக இருக்கிறாள்.பன்னாட்டுக் கம்பெனி ஒன்றில் கன்ஸல்டிங் பண்ணுகிறாள்.முப்பத்தி ஆறு வயது.திருமணமாகவில்லை.

உள்ளே வந்த சுந்தரியை அம்மா பார்த்துக்கொண்டு நின்றாள்.

பட்டுப் போன்ற முகத்தில் மெலிதான முதிர்வு தெரிகிறது.கட்டாக இருந்தாலும் மார்பு இறங்க ஆர்ம்பித்துவிட்டது.பெருமூச்சு விட்டாள்.

"வெள்ளிக்கிழமை நீ சும்மதன இருப்ப?"

"இல்லமா! நாக்பூர் பொறேன்" என்றாள் சுந்தரி.

"எப்ப வருவ?"

"பிளைட்கிடச்சாவேள்ளிக்கிழமை மதியம்! எதுக்காக கேக்கற?

லட்சுமியின் முகம் சுருங்கியது."எந்தலையெழுத்து!என்னசெய்ய? என்று ஆயாசத்தோடு பெருமூச்சு விட்டாள்.

"அம்மா!"என்று கூரிய சுந்தரி அம்மாவின் அருகில் வந்தாள்."ஏன் டென்ஷனாற!எனக்குஎன்ன வேணும்கிறத நான் முடிவு செய்யமுடியாதா? ப்ளீஸ் லீவ்...இட்" என்று சமாதன்ப்படுத்த முயன்றாள்.

"கிழிச்சே! உன்னை வளத்தேம்பாரு! என்னை செருப்பால அடிக்கணம்! ம்..ம்..நல்ல படிப்பு...நல்ல சம்பாத்தியம்...நல்லவாழ்க்கை கிடக்கலியே.."

"எதும்மா நல்ல வாழ்க்கை!முகந்தெரியாத மூதேவி கூட முதநாளே படுக்கணும்.ராவும் பகலுமா படிச்சு குறிப்பெடுத்து செய்த ஆராய்ச்சியைஅவன் கால்ல சமர்ப்பிக்கணம்...போதும்மா! உங்களோட போதும்!"

"நீ போண்ணாப் பொறந்தவடீ" என்று அழுத்திக்கூறினாள் லட்சுமி.

" இருக்கட்டுமா! எங்க கம்பெனி வைஸ் என்ன சொல்றான் தெரியுமா? ஃபார் ஈஸ்டுக்கு என்னை இன்சார்ஜ் ஆக்கப்போறானாம்...கம்பெனிக்காக கோடிகணக்கான டாலர் சம்மந்தமாகக் கூட முடிவெடுக்க அதிகாரம் த்றான்...அவங்கிட்ட இருக்கிற நம்பிக்கை உனக்கு எங்கிட்ட இல்லயே..? என்வாழ்க்கயை நான் முடிவு பண்ண எனக்கு தகுதி இருக்குமா...கவலைபாடாத..."

"நீ பொட்டச்சிடீ..! சுந்தரம் இல்ல" என்று கூறினாள் லட்சுமி.

சுந்தரி பெசவில்லை கையிலிருந்த காபி டம்ளரை சிங்க்ல் பொட்டாள்.

"ஏன்?கழுவி வைக்க கைவராதோ?"

"ஏன் சுந்தரம்னா கழுவ வேண்டாமோ?"

"நீ பொம்பளடீ"

"நான் அப்படி நினைக்கல"

"முப்பத்தாறு வயசு போண்ணு பெசற பேச்சா இது?"

"அம்மா! பொம்பளைங்கறது ஒரு கன்செப்ட்...அவ்வளவுதான்.."

வேண்டாம்டீ...இந்தப்பேச்சு...நாசமாயுடும்டீ!...சொன்னா கேளு.."

பெச்சு முடிந்தது.லட்சுமி குளிக்கப்பொனாள்சயன்ஸ் வோர்ல்டு பத்திரிகையை எடுத்து சுந்தாரி புரட்ட ஆரம்பித்தாள்.மதையம் பனிரெண்டுமணிக்கு சுந்தரி குளித்து சாப்பிட தயாரானாள்.

'சாப்பிடறாயாடி" அம்மா கேட்டாள்.

"சாப்பிடறேன்..அப்புறம் லேசா தூக்கம். மூணுமணிக்கு எழுபிடறயா!"

."எப்ப ஆபீஸ் போவ?"

"நாலு மணிக்கு பாஸ் வர்ரான்.டிஸ்கஷன் இருக்கு...நைட் டின்னர் டிஸ்கஷன்...ஒரு மணியாகும்மா..."

"இது நல்லதுக்கில்ல...நூறுதரம் சொல்லியாச்சு"

"சுந்தரத்துக்கிட்ட ஒருதரம் கூட சொல்லலியே"

லட்சுமியின் முகம் புடைத்தது.கோபமும் அழுகையும் தெறித்தது

சுந்தரி மெஜையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.அம்மாவையும் அருகில் உட்கார்ந்து சாப்பிடச்சொன்னாள்.லட்சுமி எதிரில் உட்கர்ந்து சாப்பிட்டுக்கொண்டே அவளை ஆதூரத்தோடு பார்த்தாள்.

"அம்மா" என்று சுந்தரி ஆரம்பித்தாள்.

"என்ன கொழந்தை?""

"எனக்கு முப்பத்தாறு வயசாறது.நான் குழந்தையில்ல"

"எனக்கு நீ எப்பவுமே குழந்தைதாண்டீ..." அம்மா கூறும் போது குரல் தழதழத்தது.சுந்தரி இடதுகையால் அம்மாவின் இடதுகையை அழுத்தினாள்.பரஸ்பரம் பற்றிகோண்டார்கள்.

"அம்மா! நான் பிறந்து சில நிமிஷம் கழிச்சு சுந்தரம்பிறந்தான்...அதனால அவன் அண்ணன் ஆனான்."

லட்சுமி பெசாமல்கெட்டுக்கொண்டிருந்தாள்.

அவனுக்குபாண்ட் சட்டை போடுவ...எனக்கும் போடுவ...எனக்கு கவுன் போடுவ...அவனுக்கும் கவுன் போடுவ எங்க ரெண்டு பேர்ட்டயும் வித்தியாசமே பாக்கல நீ..."சுந்தரி நிறுத்தினாள் ஓருவாய் சாதத்தைவாயில் போட்டுக் கொண்டு விழுங்கினாள்.டம்ளரிலிருந்து ஒரு மடக்குத்தண்ணிரை குடித்தாள்.

"ஞாபகம் இருக்காம்மா!....ஒருநாள் சுந்தரம் உங்கிட்ட ஓடியே வந்த்தான்...மூணுவயது இருக்கும்..அம்மா..அம்மா..னு.. சந்தொஷமா ஒடிவந்தான்....அம்மா...அம்மா சுந்தரியோட குஞ்சாவை காணும்னு ஆச்சரியத்தொட சொன்னான்....பளீர்னு அவன் கன்னத்துல அடிச்ச...ஆசையா அம்மாகிட்ட தான் பார்த்ததை சொல்ல வந்த குழந்தயை அடிச்ச...அவன் அழுதான்...நீ ஏன் அடிச்ச...எனக்கு புரியல..அழுகைவந்தது ...நானும் அழுதேன்...உன் போக்குல ஏதோ வித்தியாசம் ...எனக்கு புரிஞ்சும்...புரியாமலும்.."

லட்ஸ்மி வெட்டினள்.போதும்..போதும்..சாப்பிட்ட கையை அலம்பிக்கோ..நாளைக்கு உங்க அக்க வரா... அவகூட பேசிக்கோ.."

" அவ எதுக்குவரா?

"எதுக்கோ உங்கூட பெசணுமாம்"

சந்தரிக்கு புரிந்தது. பயித்தியக்காரிகள் என்று நினைத்தாள்.அனு அக்கா கல்லுரியில் பெராசிரியராக இருக்கிறாள்.கணவர் போர்ட்டி.ரஸ்டில் ஹெட்கிளார்க்..அக்கா கார் வைத் திருக்கிறாள். அவளே ஒட்டுவாள். ஆங்கிலத்தில் சிறப்பு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவள்."அறிவியல் சொற்களும் ஆங்கிலமும்" என்ற அவளுடைய புத்தகம் மிகவும் அதிகமாக விமரிசிக்கப்பட்ட புத்தகம்.ஞாயிறு அன்று அனு வந்தாள்.அம்மாவுக்கு மிக மெலிதான காஷ்மீரத்துச்சால்வை வாங்கி வந்திருந்தாள்.சுந்தரிக்கு கருநீலத்தில் ஜீன்சும் ஆகாயகலரில் டாப்பும் வாங்கி வந்திருந்தாள்.டில்லி போயிருந்தாளாம்.

"என்ன சுந்தரி! தாய்லந்து போகப்போறியாமே?"

ஆமா அக்க! இரண்டுவாரம் .பத்து நாளாவது தங்கவேண்டியதிருக்கும்,"

"தைரியம் தாண்டி!"

"ஏங்க்கா?"

"படிபுங்கரதுவேற...தைரியம் கறது வேற.."

"உண்மைதாங்க்கா"

"கொழுப்பு தான் உனக்கு"

"ஏங்க்கா?"

"நான் படிச்சாலும் கோழைதான்னு சொல்ற"பதில்சொல்லசுந்தரி அங்கில்லை.கண்ணாடிமுன்நின்று கொண்டு அனு கொண்டுவந்த ட்ரஸ்ஸை மேலே போர்திக்கொண்டு சரிபார்த்தாள்

"ஏய்! சுந்தரி! நான் பாட்டுக்கு பேசிக்கிறேன்....நீ எழுந்திருந்து போற"

"சாரி அக்கா!நீ கேட்ட கேள்விக்கு பதில் சோன்னா உனக்கு கோபம் வரும்"

"வராது கண்ணம்மா...நீஎன் செல்லத் தங்கை"

"இல்லக்கா..சில விஷயத்துலகோபம்வரும்தான்"

"சரி

விடு!மாசாமாசம் ஸ்விஸ்,ஆஸ்திரேலியா,பாரீஸ்னு சுத்திக்கிட்டு இருக்கே...என்னிக்கு குடியும் குடித்தனமுமா இருக்கப்போறே"

"அத்திம்பேர்மாதிரி குடியும் உன்னமாதிரி குடித்தனப்பாங்கா இருக்கணுமா?"

அனு விதிவிதிர்த்து நீன்றாள்."சுந்தரி! என்ன அதிகப்பிரசங்கித்தனம்" என்று கோபமாக அனு கேட்டாள்.

"விட்டுடு அக்கா! அதுக்குத்தான் பதில் பேசாமவ்ந்தேன்"

"சுந்தரி! நீ பேசரதும்சரியில்ல...செய்யரதும் சரியில்ல" என்றாள் அனு.

"சரியில்லாம எதைச்செய்யறேன்"என்று சுந்தரி கேட்டபோது"எதைச்சரியாச்செய்யறே" என்று கெட்டுக்கொண்டே அம்மா லட்சுமி வந்தாள். " என்ன? கூட்டணியா?" என்று சூழலின் இ.றுக்கத்தைகுறைக்க சுந்தரி முயன்றாள்

"அம்மா ரொம்ப வருத்தப்படறா நேத்து ராத்திரி மூணு மணிக்கு வந்தயாம்.உங்க "பாஸ்" கொண்டுவிட்டான்

அவன் திரும்பி கார்ல ஏரும்போது தள்ளாடினானாம்.! அனு குறுக்கிட்டாள்.

"நான் தள்ளாடலை அக்க.."'

"அவன் குடிச்சிறுக்கான்"என்றாள் அம்மா

" குடிச்சா எங்கூட வராதன்னு அவங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே?

சுந்தரி பதில் சொல்லவில்லை.மெதுவாக அனு அருகில் வந்தாள்.

."அத்திம்பெர் கிட்ட சொல்லியிருக்கியா....குடிக்கிறாரே...அவர் உன் புருஷன் தானே...அவன் என் "பாஸ்" ஆபீஸ் கொலீக்...அவன் நாட்டுப்பண்பாடு...நான் தலையிட வேண்டிய அவசியமில்ல...வேணும்னா ஒதுங்கிக்களாம்" என்றாள் சுந்தரி.

'ஒதுங்கிக்கோ'என்று அனு கூறியதும் சுந்தரி ஆவேசப்பட்டாள்...."ஆமா ஓதுங்கணும்...நீ ஒதுங்கறயா?...எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு....நான் எட்டாவது படிச்சிட்டிருந்தேன்...அத்திம்பேரும் நீயும் வந்தீங்க...எனக்கு பாவாடை, தாவணி எல்லாம் வங்கிட்டு வந்தீங்க...முத முதல்ல உடுத்தினதால சகஜமா இல்ல...நான் ரூமிலேருந்து வந்ததும் அத்திம்பெர் என்னை கட்டிப்ப்டிச்சார்...தூக்கிக் கொஞ்சினார்...அவருடைய உடம்பு என் மீது உறுத்துவதாக பட்டது...எனக்கு...உன் முகத்தைப் பார்த்தென்...முகம் சுளித்தாய்...அத்திம்பேர்...நான் ...பெண்..பெண்தான் ...என்று சொல்லாமல் செயல் மூலம் ...காட்டுகிறார்.உனக்கு அது பிடிக்கல...தனியாக இருக்கும் போதாவது அத கண்டிச்சியா? அதுக்கக அவர் கிட்ட இருந்து ஒதுங்கிப்பியா...?"

சுந்தரி மெதுவாக நடந்து திண்டில் அமர்ந்து கொண்டாள்.அம்ம ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள். சுந்தரி மீண்டும் பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்

"அம்மா! தோட்டத்துல கிளி இருக்குமா...அதுல ஆண்கிளினு, பெண்கிளினு உனக்கு பார்த்த உடனே சொல்லத்தெரியுமா?முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் போதுதான் அது பெண் கிளி...இப்படிக்கூட கிளிகளுக்குள்ள ஒரு புரிதல் இருக்குமா..தெரியாது...மற்றபடி கூடுகட்ட இரைதேட...ஆண்பெண் என்றா பாக்குது....மனுசன் தன் சக மனுசனை மனிதன்னு உனராதகாலம்...மிருகமாக பாவித்த ... காலம்..இருந்தது....அப்ப ஆண் பெண் பார்த்தானா...தெரியாது...பாத்திருக்க வாய்ப்பு இல்ல....அ..ம்மா! பிறக்கும்போது எல்லாருமே ஒரே உயிரினம் தான்...பெண் பிறப்பதில்லை...அக்கா! உங்களை மாதிரி உள்ளவங்க உருவாக்கிறீங்க....."

சுந்தரி திண்டில் சாய்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருக்கிறாள்.

Thursday, February 10, 2011

தெய்வமாக்கிவிட்டார்கள்......

தெய்வ மாக்கிவிட்டார்கள்!........


தெய்வம் உண்டு.என்போரும் இல்லை என்பொறும் தர்க்கவாதங்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.தொய்வில்லாத விவாதம் நடந்து கொண்டே இருக்கும்.

உண்டு என்று கருதுபவர்களிடயே.எழும் விவாதம் இன்னும் நுட்பமானது.இறைவன் என்னுள் இருக்கிறான்.உன்னுள்ளும் இருக்கிறான் நாம் அதனை உணரும் நிலைதான் தெய்வீக நீலை என்பார்கள் ஆதிசங்கரர் சொன்ன அத்வைத நிலை அது.

இல்லை.நாம் ஜீவாத்மாக்கள்.நாம் பரமாத்மாவொடு இணைவதுதான் முக்தி நிலை . என்று கூருவொறும் உண்டு.Monism, Dualism என்று சைவ, வைணவமாகி விட்டது.இரண்டு பக்கமும் தீவிரமான தர்க்கங்க்கள் எழுவதும் சமரசம் உருவாவதும் உண்டு தில்லைநடராஜருக்கும், கொவிந்தராஜப் பெருமாளுக்கும் ஒரேசந்நிதி தான் உள்ளது..

பாரதி அத்வைதத்தை எதிர்ப்பவர்.கடுமையாக எதிர்த்து,கட்டுரைகளும் பாடல்களுமெழுதியுள்ளார்".இறைவன் உன்னுள்ளும் இருக்கிறான், என்னுள்ளும் இருக்கிறான் என்கிறாயே? உன்னுள் இருக்கும் இறைவன் தானே தேள் என்ற உயிருக்குள்ளும் இருக்கிறான்.தேள் கொட்டினால் குய்யோ முறையோ என்று ஏன்அடித்துக்கொள்கிறாய் என்றுகேட்பார்..

இவை எல்லாம் முக்கியமானதல்ல.வைணவத்தில் 12 ஆழ்வார்கள் உண்டு. திவிர வைணவர்கள் பாரதியின் தலைபாகையைக் கழட்டிவிட்டு நமத்தைப் போட்டு 13 வது ஆழ்வாராக்கிவிட்டார்கள். சைவர்களும் அவர்கள் கணக்கை கூடுதலாகியுள்ளார்கள்..

சென்னை மைலாப்பூரில் அறுபத்துமூவர் திருநாள் மிகவும் சிறப்பானது.அந்த அற்பத்து மூன்று என்பதை அதிகப்படுத்தியுளார்கள். புதிதாக "நவ நாத சித்தர்" என்று ஒரு நாயனாரை சேர்த்துள்ளார்கள். இந்த உலகம் உய்ய புதிய(நவ) சொல்லை(நாதம்) கொடுத்தவர் என்கீறார்கள் தென்னாடுடைய சிவன் ஜெர்மனியில்பிறந்து, லண்டனில் பயிற்சி பெற்று "உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்"என்று கூறிய. கார்ல் மார்க்ஸ் தான் நவ நாத சித்தர்.

. 1971 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலில் தனித்து நின்றது.அப்போது தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியராயிருந காலம் சென்றல் கே.முத்தையா அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது."ஐயா! நான் நவநாத சித்தாச்ரமத்தின் தலைவர்.நானும் மார்க்ஸை ஏற்றுரக்கொள்கிறேன்.உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசமில்லை. நான் ஆன்மிக வழியிலும், நீங்கள் லௌகீக வழியிலும் செய ல்படுவோம்.இது ற்றி உங்களோடு பெச வேண்டும்" என்று அதிலெழுதியிருந்தது." இது என்னய்ய அநியாய மாயிருக்கு. இந்த கடிதத்தை பாரும்யா? என்று கே. எம்.என்னிடம் கொடுத்தார்.

இப்போது கூடல் நகர் ரயில் நிலையம் இருக்கும் தென் பகுதியில் குலமங்களம், தத்தநேரி செல்லபாதியிருந்ததுஅதன் திருப்பத்தில் சித்தாசிரமம் என்ரு ஒருபலகையும் இருந்தது.கொடீயிருந்தது. அதில அருவாள் சுத்திய்ல் ,ஒரு சிவலிங்கம் பொறிக்கப்பட்டு இருந்தது.விசாரித்ததில் தலைவர் கொட்டாம்பட்டி ஆசிரமத்தில் இருப்பதாகவும் சொன்னார்கள்

நாயன்மார்கள் எண்ணிக்கை. 65 ஆகிவிட்டது. 65வது நாயனார் பெயர் சொல்லடி நாயனார். சிவனை சொல்லால் அடித்து பூசை செய்தவர். அவர்வெறுயாரும் அல்ல தந்தை பெரியார் தான். நம் முன்னோர்கள் தீர்க்க தரிசிகள்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று குறிப்பிட்டது எவ்வளவு சரியான ஒன்று!.

Friday, February 04, 2011

எகிப்தின் குழப்பம்....

எகிப்தின் குழப்பம்


எகிப்தை ஆள்வதற்கு தெய்வ அங்கீகாரம்பெற்றவர்கள் "பாரோ" மன்னர்கள். அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு மேலை நாட்டு சாம்ராஜ்ய வாதிகள் "நைல்" நதிக்கரையை வசப்படுத்திக் கொண்டனார்.

1952ம் ஆண்டு பரூக் மன்னரை விரட்டி ஜெனரல் நகீப் ஆட்சிக்கு வந்தார். ஆனாலிந்த ராணுவப்புரட்சியை திட்டமிட்டு நடத்தியவர் குட்டி ராணுவ அதிகாரியான கர்னல் அப்துல் கமல் நாசர் என்பது பின்னால் தெரியவந்தது.நைல் நதி பாயும் பகுதி செழிபுள்ளதாகும். அந்த நதியைக் கட்டுப்படுத்தினால் எகிப்தின் வளர்ச்சி அபரிமிதமாகும் என்று கருதிய நாசர் அஸ்வான் அணை கட்ட விரும்பினார். அமெரிக்காவின் உதவியை நாடினார்.அவர் அப்போதய சோவியத்நாடு பக்கம் திரும்பிவிடக்காடாது என்று கருதிய அமெரிக்கா உதவுவதாக ஆசைகாட்டியது. அதே சமயம் எகிப்து வளர்ச்சி பெறாமல் இருக்க அணை கட்டுவதற்கு வேறுவகையில் சிக்கலை எற்படுத்தியது . பொருமை இழந்த நாசர் சோவியத்தை நாடினார்.சொவியத்நாடு உதவ முன்வந்தாலும் அதனிடம் அவ்வளவு வசதி அப்போதுஇல்லை.

பரூக் அரசர்கள் ஆண்டகாலத்தில் பிரான்சு நாடு எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டதுஅதன்படி மத்திய தரைக் கடலிலிருந்து இந்து மகா சமுத்திரத்திற்கு ஒருகால்வாயை வெட்டிதர முன்வந்தது.சூயஸ் கால்வாய் உருவானது கால்வாயின் இரண்டு பக்கமும் ப்ரன்சின் ஆளுமைக்கு உட்பட்டதாகும் என்பதும் ஒப்பந்தம்.பரூக், ,நகீப், நாசர் ஆகியொர் இந்த சர்வதெச ஒப்பந்தத்தை எற்றுக் கொண்டிருந்தனர். சூயஸ் கால்வயை அனுபவிக்கும் பிரான்சு நாட்டு கம்பெனியை நாட்டுடைமை யாக்கி அதனால் கிடக்கும் வருவாயில் அணை கட்டலாம் என்று சொவியத் நாடு சொன்ன யோசனையை நாசர் ஏற்றுக் கொணடார்.ப்ரிட்டனும் பிரான்சும் இதனை எதிர்த்து படைகளை இறக்கின பொர் மூண்டது. பிரிடிஷ் பிரஞ்சுப் படைகள் முறியடிக்கப்பட்டன.சூயஸ் கல்வாய் எகிப்தின் வசம் வந்தது. அஸ்வான் அணைகட்டிமுடிக்கப்பட்டது.

அணி செராநாடுகளின் தலவ்ர்களாக நெரு நாசர், நுக்ருமா இருந்தனர்.எகிப்தின் புக.ழ் பரவியது. அரபு மக்களின் ஆதர்சமாக நாசர் உருவானார். இதனைச் சகிக்காத பிரிட்டிஷ் அமெரிக்க அரசுகள் இஸ்ரெலைதூண்டிவிட்டு எகிப்தின் மீது போரை துவங்க வைத்தனர். தோல்வியுற்ற நாசர் நோய்வாய்பட்டு இறந்தார்.அவரரை அடுத்து அவருடைய நண்பர் அன்வர் சதாத் வந்தார். எகிப்தின் நொருங்கிய பொருளாதரதை மீட்க சதத் விரும்பினார். அமெரிக்கா இதனப் பயன் படுத்திக்கொண்டது.இஸ்ரேலோடு ஒப்பந்தம் பொட நிர்ப்பந்தம் செய்தது ஒப்பந்தம் உருவானது.இஸ்லாமிய மதவாதிகள் எதிர்த்தனர்.ராணுவத்திற்குள் ஊடுருவிய பத்துப்பேர் சதத்தை சுட்டுக்கோன்றனர். அமெரிக்காவின் உதவியொடு ஹோசினி முபாரக் ஆட்சிகு வந்தார் அவருடைய .சர்வாதிகாரம் அமெரிக்க உதவியோடு முப்பது ஆண்டுகளாக நீடிக்கிறது.

எகிப்தின் ராணுவதளபதி வஷிங்க்டன் போயிருக்கிறார்.அந்தசமயம்பார்த்து மக்கள்போராட்டம் எழுந்துள்ளது.. ராணுவம் அவருடைய உத்திரவுக்காக காத்திருக்கிறது.

ஆரம்பத்தில் மக்களுக்கும் முபாரக்குக்குமாக இருந்தது. முபாரக்கின் ஆதரவாளர்கள் கோதாவில் இற்ங்கியுள்ளார்கள். இப்போது போராட்டம் மக்களுக்கிடயை என்றாகியுள்ளது.

யார் ஜெயிப்பார்கள்?

. வழக்கம்போல அமெரிக்காதான் ஜெயிக்கும்!

Tuesday, February 01, 2011

பட்டு உடுத்த பேராசைப் பட்டொம்!

பட்டு உடுத்த பேராசைப்பட்டோம்!


பழய கோமணத்தை யாசிக்கிறோம்!

. சென்ற மாதம் ஸ்ரீலங்காவில் எழுத்தாளர்கள் மாநாடு நடந்தது. உலகந்தழுவிய அளவில் சிறுபத்திரிகையாளர்களின் மாநாடும் அங்கே நடந்தது.

வழக்கம் போல இந்தமாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கூச்சல் எழுந்தது.ஆனாலும் ஒரு ஐம்பது எழுத்தாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் திரைபடத்துறை ஒன்றும் நோருங்கி விழுந்துவிடவில்லை.பொங்கல் அன்றும், குடியரசு தினத்தன்றும் நடிகர் கார்த்திக், குட்டி நடிகைகள் ஆகியொர் தொலைக்காட்சி மூலம் தமிழனின் ஆழ்ந்த சமுகப் ப்ரஞ்ஞையை விகசிக்க வைத்தார்கள்.

கொழும்புவில் நடந்த மாநாடு பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.அங்கு சென்று திரும்பிய கவிஞர் மூலம் தகவல் அறிய விரும்பினேன்."அங்கு என்னதான்யா நடக்குது?" என்று கெட்டேன்

"அண்ணே!.ஸ்லான் தமிழர் பிரச்சினை பழசுண்ணே!"என்றார். அவர் தெற்கத்திக்காரர். இலங்கையை இப்போதும் "ஸ்லான்" என்றுதான் அழப்பார்கள்.அவர் தொடர்ந்தார்."நம்ம ஊர்லெருந்து தேயிலை பறிக்க கொண்டுபோனாங்கலாஆட்களை.அவங்க பிரச்ச்சனை முடியலண்ணே1அந்த த தொழிலாளர்கள் தொழிற்சங்கம், அப்பிடி இப்பிடின்னு போயிரப்படாதுங்கரதுக்காக அவங்களுக்கு குடியுரிமை கொடுக்காம இழுத்தடிகிறாங்க"

"யாழ்ப்பாணத்தமிழன் இந்தமலையகத்த்மிழன கண்டுக்கறது இல்ல.அவனுக தாங்கதான் சுத்த தமிழன்ங்கான்.கல்தோன்றாக்காலத்தவங்க்கான். அவங்களுக்கு நல்லபடிப்பு.கொழும்புல பெரிய வேலை உண்டும்.பக்கத்து வீட்டுக்காரன் சிங்களன்.எதுத்தவீட்டுக்காரன் முஸ்லீம். நல்லா இருக்கான்.யாழ்ப்பாணத்துல சண்டைனா இவம்பாடு ஆபத்து"

"கிழக்க முஸ்லீம்க. கந்தா,முருகா, சிவகுமரா ங்கர பெரியமனுசங்க ஏத்துக்கணும்லா! இதப்புரிஞ்சிக்கிட்ட அரசு விளையாடுது. பொதாக்குறைக்கு தமிழ்நாட்டுக்காரன் உசுப்பேத்தரான்."

தி.மு.க ஜெயிச்சா என்ன! அதிமுக ஜெயிச்சாஎன்ன! எங்க உயிர எடுக்காதீங்கடாங்கான்.மைசூர்லெருந்து தண்ணி கொண்டார முடியல. நீ எதுக்குல பஞ்சாயதுக்கு வார? ங்கான்"

"நாங்க பாட்டுல இருந்தோம். எங்க சின்னப்பயலுகள கிளப்பிவிட்டு சாகவைச்சுட்டிய. . ஆசை காட்டினிய.பட்டு உடுத்த.பேரசைபட்டோம். பழய கோமணத்தை யாசிக்கிறோம் "

.இது தாண்ணே அவங்க சொல்றது என்றார் கவிஞர். .