Monday, February 14, 2011

கபில முனிவர் கூறியது என்ன?........

கபில முனிவர் கூறியது என்ன?


சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாகக் கருதப்படுபவர் கபில முனிவர்.இந்தியத் தத்துவ ஞானிகளில் ஒருவரான அவரை மேலை நாட்டினரும் அறிந்திருந்தனர்.அவருடைய அறிவியல் ரீதியான கருத்துக்களை மேலெடுத்துச்சென்றனர்.

நம்மிடையே விஞ்ஞானி, மெய்ஞ்ஞானி என்று பிரித்துப்பார்க்கும் தன்மை பிற்காலத்தில் தோன்றியது. தத்துவ ஞானம் என்றால் என்ன?

இயற்பியல்,வானியல்,தாவர இயல் என்று பல்வேறு துறைகளுக்கும் பல்வேறு பிரச்சினைகளும்,கேள்விகளும் உண்டு.அவற்றை முறையாக ஆய்ந்து விடைகாண வேண்டும்.மின் காந்த அலைகளிலிருந்து ஒலி,ஒளி என்று ஒவ்வோரு துறைக்குமான உண்மைகளைக் கண்டறிந்து அதற்கான விதிகளைச் சொல்பவர்கள் விஞ்ஞானிகள்

இயற்கை, சமூக வாழ்க்கை,சிந்தனை,மற்றும் இயற்பியல் வானியல் என்று ஒட்டுமொத்தமான எல்லாவற்றுக்குமான, பொதுவான பிரச்சினைகள்,கேள்விகள் உண்டு. இவை அத்தனையையும் உள்ளடக்கிய நிலையில் விடைகாண முற்படுபவர்கள் தத்துவ ஞானிகள்.கபிலரும் அப்படிப் பட்டவர்தான்.

பொருள்கள் உருவானது எப்படி? என்ற கேள்வியை எழுப்பி விடை காண முற்பட்டார் கபிலர்.( விஞ்ஞானிகள் பொருளை தற்பொது பருப்பொருள் என்ரு கூறுகிறார்கள்) பொருள்கள் இருந்தால் தானே இயற்பியல்,வானியல் என்று பல்வேறு துறகள் பற்றி பகுப்பாய்ந்து அறிய முடியும்.இறுதியில் கபிலர்கண்ட முடிவு சகல துறைகளுக்கும் பொதுவான விதியாகக் கொள்ளப்பட்டது.

"நிரந்தரமானது எதுவும் இல்லை. எந்த ஒரு பொருளும் வெற்றிடத்திலிருந்து தோன்றுவதில்லை.மற்ற பொருளிலிருந்து தான் தோன்றுகிறது.அதாவது அழிந்துவிட்ட மற்ற பொருள்களிலிருந்து தோன்றுகிறது.அழிகின்ற பொருள்கள் ஒன்றுமில்லாமல் பொய்விடுவதில்லை. புதிய பொருள்கள் தோன்றுவதற்கான ஆதாரப் பொருள்களாக அவை அமைகின்றன. எதிலிருந்து புதிய பொருள்கள் தொன்றுகின்றனவோ அவை எப்போதும் இருந்து கோண்டுதான் இருக்கிறது. எனவே படைக்கப்படமுடியாத, அழிக்கப்படமுடியாத பொருள்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது" என்று கபிலர் கூறினார்

கபிலரை பொலவே பண்டய அறிஞர்களும் முடிவுக்கு வந்தனர்.கபிலர் காலத்தில் வாழ்ந்ததாகக் க்ருதப்படும் கிரேக்க அறிஞரான தாலஸ் மூலப்பொருள் எது என்றுதேடி அலைந்தார். இவர் இந்த மூலப்பொருளை தன் கண்முன் இருக்கும்பொருள்களிலேயே தேடினார்.

தண்ணீர் அல்லது ஈரம் தான் மூலப்பொருள் என்று அறிவித்தார். அனாக்கிமெனஸ் என்ற கிரேக்க அறிஞர் மூலப் பொருள் காற்று என்றார்.ஹெரக்கிளிடஸ் நெருப்பு என்றார். எம்பேடக்ளிஸ் எல்லாவற்றிர்க்கும் மூலம் காற்று,தண்ணிர்,நெருப்பு,மண் என்றார். இதற்குப்பின்னால் வந்த டெமாக்கிரிடஸ் கண்ணால் காணவோ தொட்டறியவோ முடியாத சிறிய வஸ்துக்களான அணுக்கள் என்ற நிரந்திரமாக அழிக்க முடியாத மாற்ற முடியாததிலிருந்து தோன்றியதுதான் பொருள் என்றார்.( ,ATOM என்ற கிரேக்க சொல்லுக்கு பிரிக்க முடியாத என்பது பொருளாகும்)

மின் சக்திக்கும் காந்த விசைக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டது.மின்விசை இயங்கியல் (electro dynamics) உருவானது அணு என்பது மிங்காந்தப்புலன்கள்,மின் ஏற்றங்கள்,மின் அலைகள் என்பது தான் என்றால் அது பொருள் என்ற ஒன்றாக முடியுமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

ஒரு கிராம் எடையில் பத்தாயிரம் கோடியில் ஒரு பகுதி நீறை கொண்டு அதே சமயம் ஒளியின் வேகத்தில் இயங்குகிற துகள்களை ஆய்வு செய்யும் பொது அதுவே ஒரு அண்டமாக சிற்றண்டமாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள்.

இதனை நாம் உணர முடியுமா?உணர முடியாவிட்டால் அதனை பொருள் என்று எப்படிக்கூறமுடியும்? என்றும்கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவற்றைப் பற்றி இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இயற்பியலின் ஒரு கிளையாக "குவாண்டம்" தத்துவத்தை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

எதுவும் நிரந்தரமில்லை.வேற்றிடத்திலிருந்து எதுவும் உருவாவதில்லை என்கிறார் கபிலர்.

விஞ்ஞானிகள்" குவாண்டம்"தத்துவத்தில் பொருளற்ற பொருளைப் பற்றிய விஞ்ஞானத்தில் வந்து நீற்கிண்றனர்.

17 comments:

சுதர்ஷன் said...

நன்றி கபிலர் என்பவர் அறிவியலில் தேடினார் என்பதை அறிந்துகொண்டேன் ..நம் முன்னோர்கள் பலர் பலதை கூறியுள்ளனர் . நாம் அவையை தேடுவதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை .. நல்ல பதிவு :)

Pranavam Ravikumar said...

Very nice post... Just a suggession, can't see the post as background color suppresses the post color. Hope u will check that.

Warm regards..!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எப்போதுமே உலகின் பல ஆய்வுகளுக்கும் இந்தியர்கள் மொன்னோடிகளாக இருந்திருக்கின்றனர்.கபிலரைப் போலவே சித்தர்களும் மிகப் பெரும் எதிர்கால ஆரய்ச்சிகளுக்குப் பாதை வகுத்திருக்கிறார்கள்.

எந்த உபகரணங்களின் துணையுமில்லாமல் விஞ்ஞான வளர்ச்சியற்ற காலங்களில் இருந்த சாதனைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஈடாக நாம் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை.

எதையும் ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனம் இப்போதுதான் அதிகம் தென்படுகிறது.

நல்ல பதிவு. நன்றி காஸ்யபன் சார்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

முன்னோடி மொன்னோடியாகி விட்டது.திருத்தி வாசிக்கவும்.

kashyapan said...

சுந்தர் ஜி! நீங்கள் கூறியதில் பகுதியை ஏற்றுக்கொள்கிறேன். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலெயர்கள் பிடி இறுகியது, இந்திய மத்தியதர வர்க்கம் மேலை மொகத்தில் சிக்கியிருந்தது.அவர்களை மீட்க பண்டய இந்தீ யாவின் பெருமையை சொல்லி அவர்களை திருப்ப வேண்டியது அவசிய மாயிற்று. அந்த நேரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே இது நடந்தது."...சரஸ்வதி, திலகர் " ஆகியோர் இதில் உன்னிப்பாக செயல்பட்டனர் தத்துவரீதியாக சமண, பௌத்த கருத்துக்கள் உலகளாவிய வரவேற்பை பெற்றிருந்தன.நவீன கருவிகள் இல்லாமல் விஞ்ஞானத்தை எவ்வளவு வளர்க்கமுடியுமோ அவ்வளவு வளர்த்தார்கள்.அதற்காக புஷ்பக விமானமிருந்தது என்பது அபத்தமாகும்.இந்திய தத்துவம் விஞ்ஞானரீதியான ஆரம்பத்தைக் கொண்டிருந்தது.அது இந்துமதமாக ஆதிசங்கரரால் ஸ்தபனப்படுத்தப்பட்டபோது, சடங்காசாரங்கள் முன்னுக்கு வந்து விஞ்ஞானப் பார்வை பின்னுக்கு தள்ளப்பட்டது.அதன் எச்சங்களை நாம் இன்றும் அனுபவிக்கிறோம். பட்டப்படிப்பில் ஆரூடம் படித்து பட்டம் பெற பல வடமாநிலங்களில் முடியும்.அணு விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர்.முரளி மனோகர். ஜோஷி அவர்களின் ஏற்பாடு.---காஸ்யபன்

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு. நன்றி காஸ்யபன் சார்.

பாரதசாரி said...

எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றாலும், 0(பூஜ்ஜியம்) மற்றும் , அதே வடிவில் உள்ள சக்கரமும் எனக்கு இன்னும் வியப்பளிக்கிறது.
"Dual Nature of Light"ஐ மிக எளிமையாக சொன்னது மிகவும் சிறப்பாக இருந்தது பதிவில்.
மீண்டும் நன்றி ஐயா

Prem said...

You are good in making things look simpler without losing the core message. I think the rivalry between science and religion will be ongoing battle. The institutionalized Roman Catholic church has been trying so hard to control scientific innovations like CERN initiatives, Cloning, stem cell research etc. I think all religions except philosophy based religions like Buddhism will see science as a threat or will find all means to interpret it in their own way. Thanks again sir.

அப்பாதுரை said...

கபிலருக்கும் விஞ்ஞானத்துக்கும் வலிந்து தொடர்பு ஏற்படுத்துவது போலிருக்கிறதே? என் சிற்றறிவுக்குப் புரியவில்லையோ என்னவோ.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! இயற்பியல்,வேதியல்,தாவர இயல்,விலங்கியல்,உடலியல் ஆகியவற்றை பட்ட இடைநிலை படிப்புக்காக செர்ந்தேன். தேர்வு எழுத நான் லாயக்கில்ல (selection)என்று தடுத்து விட்டார்கள் அவ்வளவு கெட்டிக்காரன் நான்.எதுவும் நிரந்திர மில்லை,வெற்றிடத்திலிருந்து எதுவும் வருவதில்லை என்பது ஆரம்பம். இன்று குவாண்டம் தத்துவம் வந்திருக்கிறது. அரசியல் விஞ்ஞானம்படித்து பட்டம் வாங்கியவன். நியூயார்க்கிலீருந்து, Dual nature of light பற்றி அருமையாக எழுதியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு அது என்ன என்று புரியவில்லை. பண்டய தத்துவங்களை Glorify பண்ணூவது என்நோக்கமல்ல.குறைந்த பட்சம் என்னைத்திருத்திக் கொள்வதற்ககவாவது.எங்கு வலிந்து எழுதியிருப்பதாக தொன்றுகிறது என்பதை குறிபிடுங்களென்.---காஸ்யபன்

அப்பாதுரை said...

பண்டைய தத்துவங்களை glorify பண்ணுவதாகச் சொல்லவில்லை சார், தவறாகச் சொன்னதாக நினைக்க வேண்டாம். தத்துவம் இருந்தால் glorify பண்ணுவது பொருத்தம் தானே? கபிலரின் 'வெற்றிடத்திலிருந்து எதுவும் தோன்றுவதில்லை; ஒரு பொருளிலிருந்து இன்னொன்று உருவாகிறது' என்கிற rational சிந்தனைக்கும் அறிவியல் விளைவுகளுக்கும் இடையே leap of faith இருப்பதாகத் தோன்றியது - வேறே ஒண்ணும் இல்லை சார். உங்களைத் திருத்துவதாக நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை; நீங்கள் முன்பு சொன்னது போல் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதற்குத் தானே எழுதுகிறோம்?

சிவகுமாரன் said...

புதிய செய்திகள். நன்றி அய்யா.

raj said...

The search for Truth is still on. The topic reminds me of the novel 'Angels and Demons' by Dawn Brown. Higs boson, the God Particle, Matter, Anti-matter,the church's support for such a research and the rebellion amongst a section of the believers to topple such an attempt.
The CERN lab in Geneva is working on that.

பாரதசாரி said...

//மின் சக்திக்கும் காந்த விசைக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டது.மின்விசை இயங்கியல் (electro dynamics) உருவானது அணு என்பது மிங்காந்தப்புலன்கள்,மின் ஏற்றங்கள்,மின் அலைகள் என்பது தான் என்றால் அது பொருள் என்ற ஒன்றாக முடியுமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.//
ஐயா "Dual nature of light" - Light as energy and particle
என்பதாகும் .

kashyapan said...

What is light? energy in its Radiant form. It travels with a velocity that can only be immagined.Baratha saary! u have explained the dual nature of light.Thank u -----kashyapan.

மதுரை சரவணன் said...

அறிவியல் புதுமை நம் நாட்டில் கபில முனிவர் கூறியது கண்டு வியந்தேன். குவாண்டம் தியரி கபிலர் விளக்கம் சூப்பர்.. வாழ்த்துக்கள்

சுந்தரா said...

அறியாத பலதகவல்களை அறிந்துகொள்ளமுடிந்தது.

நன்றிகள் ஐயா.